யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/12/15

டிசம்பருக்குள் தேர்வுகளை முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு: பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் தேர்வு முடிவு

மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.மேலும், இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.


வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இயங்கி வரும் இணைப்புக் கல்லூரிகளுக்கு நடத்தப்பட இருந்த பருவத் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதியை முடிவு செய்வது, அடுத்த பருவ வகுப்புகளை எப்படி நடத்துவது என்பதை முடிவுசெய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து இணைப்புக் கல்லூரி முதல்வர்களும் பங்கேற்றனர்.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் திருமகன் கூறியதாவது:வெள்ள பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டத் தேர்வுகளை டிசம்பர் மாதத்துக்குள் நடத்தி முடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் தேர்வுக்கான மறு தேதிகள் இறுதி செய்யப்பட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளன. மேலும், தேர்வுத் தாள் திருத்தும் பணிகளை வேகமாக நிறைவு செய்து பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்வின்போதே வகுப்புகள்:

தொடர் விடுமுறை காரணமாக அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் பருவத் தேர்வுகள் நடைபெறும்போதே, தேர்வு இல்லாதவர்களுக்கு வகுப்புகளை நடத்துமாறு கல்லூரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பொதுவாக, பருவத் தேர்வு நடைபெறும்போது வகுப்புகள் நடத்தப்படாது. ஆனால், இந்த முறை இதற்கு அனுமதித்துள்ளோம். தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வகுப்புகளை நடத்துமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடைமைகள்: பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடையிலிருந்து விலக்கு அளிக்கப்படுமா?

சென்னை அடையாறு, கூவம் ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள், ஷூக்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால், பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வதிலிருந்து மாணவ, மாணவிகளுக்குவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோட்டூர்புரம் மேம்பாலம் அருகில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அண்மையில் பெய்த பலத்த மழையால், இங்கு முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்தது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள்அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், சீருடைகள், பள்ளி ஷூக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கூறியதாவது:

அசாருதீன்: அண்ணா சாலையில் உள்ள ஆசம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கிறேன். என்னுடைய புத்தகம், சீருடைகள் அனைத்தும் வெள்ளத்தில் போய்விட்டன. பள்ளிக்குச் சீருடையில்தான் செல்ல வேண்டும்.வெள்ளத்தில் சீருடைகள் சென்றுவிட்டதை சில நாள்கள் சொல்லலாம். அதற்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆசிரியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். தற்போதையே நிலையில் எல்லா பொருள்களையும் உடனே வாங்குவது என்பது சாத்தியமில்லை என்றார்.

ருசிதா: திருவான்மியூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பிளஸ்-1 படிக்கிறேன். என்னுடைய புத்தகங்களும், சீருடைகளும் வெள்ளத்தில் சென்றுவிட்டன. சிறிது நாள்கள் காரணம் சொல்லலாம். இருப்பினும், புத்தகம் உள்ளிட்ட இழந்த அனைத்தையும் வாங்க வேண்டியது கட்டாயம் என்றார்.தினேஷ்குமார் (12-ஆம் வகுப்பு), ராஜேஷ் (9-ஆம் வகுப்பு) இருவரும் நந்தனத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் பிறந்த நாளுக்குக்கூட சீருடைதான் அணிந்து செல்ல வேண்டுமாம். புத்தங்களை எப்படியும் பள்ளியில் மீண்டும் தந்துவிடுவர் என்றாலும், சீருடைகளுக்கு என்ன செய்வது என்று இந்த மாணவர்களுக்கு தெரியவில்லை.

தலைமை ஆசிரியர் அறிவுறுத்தல்:

புத்தகங்களைவிட சில மாணவர்களுக்கு நோட்டுகள் அடித்துச் செல்லப்பட்டது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஏனென்றால், இந்த நோட்டுகளில்தான் அவர்கள் கணிதம் உள்ளிட்ட பாடங்களை எழுதிவைத்திருந்தனர். இப்போது என்ன செய்வது எனதெரியவில்லை என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.சென்னை அமைந்தகரை, ஷெனாய் நகர் உள்ளிட்ட இடங்களில் கூவம் ஆற்றின்கரையோரம் வசிக்கும் மாணவர்கள், ஷெனாய் நகர் திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். இப்பள்ளியில் பயிலும் 800 மாணவர்களில், 500-க்கும் மேற்பட்டோர் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீருடைகளோ, நோட்டுப் புத்தகங்களோ எதுவுமே இல்லை என அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜான் தெரிவித்தார். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தலைமை ஆசிரியர் ஜான் கூறினார்.இந்த மாணவர்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்பாடு செய்வதோடு, பள்ளிக் கல்வித் துறையிடமிருந்து புத்தகங்களும் பெறப்பட்டு வழங்கப்படுகின்றன. மேலும், மாணவர்களிடையே இது தொடர்பான குழப்பத்தைத் தவிர்க்க அனைத்துப் பள்ளிகளுக்கும் பொதுவான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

"வற்புறுத்தக் கூடாது'

இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
மிகப்பெரிய அளவில் மழை, வெள்ளம் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைப் பாதித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிதாக சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்படும் வரை பள்ளிகளில் அவற்றை வற்புறுத்தக் கூடாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதேபோல், தனியார் பள்ளி மாணவர்கள் புதிதாகச் சீருடைகள்வாங்கும் வரை அவர்களிடமும் சீருடைகளை வற்புறுத்தக் கூடாது என அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்

சேதமடைந்த வகுப்பறையை மூட பள்ளி கல்வித்துறை உத்தரவு

மழையால் சேதமடைந்த வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:


மழையால் சில பள்ளிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகளை துாய்மைப்படுத்தும் பணியை தலைமை ஆசிரியர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். துப்புரவு பணியாளர்களைதினக்கூலி அடிப்படையில் அமர்த்தி, பணியை முடிக்க வேண்டும்.வகுப்பறைகள், பள்ளி வளாக பகுதிகளில் 'பிளீச்சிங்' பவுடர் துாவ வேண்டும். மின்சார சுவிட்ச்கள் சரியாக உள்ளனவா, மழைநீரில் நனையாதபடி உள்ளனவா என, உறுதிப்படுத்த வேண்டும்.வகுப்பறை மேற்கூரையை ஆய்வு செய்ய வேண்டும்; மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளிகளை சுற்றிலும், பாதுகாப்பான தடுப்பு அமைக்க வேண்டும். விழும் நிலையில் மரங்கள் இருப்பின், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆபத்தான நிலையில் உயரழுத்த மின்கம்பங்கள், அறுந்து தொங்கும் நிலையில் மின்கம்பிகள் இருப்பின், அவற்றை அகற்ற வேண்டும்.

மழையால், வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், பயன் படுத்தாமல், பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும். அந்த அறைக்கு அருகே மாணவ, மாணவியர் செல்லாதபடி கவனித்துக்கொள்ள வேண்டும்.தொடர் மழையால், சுற்றுச்சுவர் அதிக ஈரப்பதத்துடன் பலவீனமாக காணப்படும் என்பதால், அதன் அருகில், 10 அடி துாரம் வரை தடுப்புஏற்படுத்தி, அப்பகுதிக்கு மாணவர்கள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தரதலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம்செய்ய வேண்டும். நோய்க்கிருமிகள் பரவாத வண்ணம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வகுப்பறைகளின் அனைத்து சுவர்களின் உறுதி தன்மையை கண்டறிய வேண்டும்.

பள்ளி கழிவறைகள் மூலம் தொற்று நோயும் பரவாமல் பராமரிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, 'குளோரின்' தெளித்து பாதுகாப்பான குடிநீர் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் சாதனங்களை பரிசோதனை செய்து நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை சுத்தம் செய்து, பாத்திரங்களை சுத்தம் செய்த பின் சமையல் செய்ய வேண்டும். இதுபோன்ற நட வடிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் தர வேண்டும்.

மேலும்,dirsedu@nic.in, dsetamilnadu@gmail.comஎன்ற இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பருவத் தேர்வு மறு தேதி: சட்டப் பல்கலை. அறிவிப்பு.

மழை, வெள்ள பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.வெள்ள பாதிப்பின் காரணமாக பிற பல்கலைக்கழகங்களைப் போல் சட்டப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.


பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ஆற்றல்சார் சட்டப் பள்ளிக்கான 3 ஆண்டு ஹானர்ஸ், 5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புத் தேர்வுகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான 3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின்www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

மழை காரணமாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைகழக B.Ed.தேர்வு ஒத்திவைப்பு - புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-


வெள்ளப்பாதிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படவிருந்த மற்றும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டிருந்த இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வருமாறு வேறு தேதிகளுக்கு மாற்றியமைக்கப்படுகின்றன. பழைய தேர்வு தேதியும், மறு தேதியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் டிச.14-இல் திறப்பு

மழை, வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வரும் திங்கள்கிழமை (டிச.14) திறக்கப்பட உள்ளன.இதையடுத்து, இந்த மாவட்டங்களில் பள்ளிகளை நடத்தப்படும் நிலையில் வைப்பதற்கான ஆயத்தப் பணிகளையும், தூய்மைப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-


பலத்த மழை காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை முடிந்து டிசம்பர் 14-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.அனைத்துப் பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து வகுப்பறை, பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி, பிற பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கழிவறைகளை பிளீச்சிங் பவுடர் தெளித்து சுத்தப்படுத்துவதோடு, கொசுமருந்து புகையும் அடிக்கப்பட வேண்டும்.அனைத்து சத்துணவு மையங்களும் பள்ளிகள் திறக்கப்படும் நாளில் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். 

அந்த மையங்களில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். சமையலுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட பொருள்களும், குடிநீரும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீரில் குளோரின் மாத்திரைகளைக் கலக்க வேண்டும்.பள்ளிகள் டிசம்பர் 14-ஆம் தேதியன்று நடத்தப்படும் நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத் தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தைப் பெற்று பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிசம்பர் 13-ஆம் தேதி அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரத்து 18 வரை நீட்டிப்பு.

தமிழக சுங்கச் சாவடிகளில் வருகிற 18 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த !ரு மாதமாக பெய்த பெரு மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.


சென்னைக்கு குடிநீர் அளிக்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள நீர் சென்னையை மூழ்கடித்தது. இதனால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சென்னைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வருவதால் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.இந்த கோரிக்கையை ஏற்று இன்றுவரை (டிச.11) கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில், இன்னும் சென்னை பழைய நிலைக்கு திரும்பாததால் மேலும் வருகிற 18 ஆம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

வாகனங்களுடன் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நிவாரண பொருள்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிகமான மழை வரும் பிப்ரவரி வரை தொடரும்: ஐ.நா. தகவல்

எல் நினோ பாதிப்பால் தென்னிந்தியாவில் மேலும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படும் என்று ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 - 2016 ஆண்டுக்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், கம்போடியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கி வரும் பிப்ரவரி மாதம் வரை தென்னிந்தியா, இலங்கை, மாலத்தீவில் சராசரிக்கும் அதிகமான மழையும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பகுதிகளில் அதிக மழை வெள்ளப்பெருக்கு ஏற்படும் வேளையில் பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக் தீவுகளில் கடுமையான வறட்சி ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.

HEREAFTER ALLTHE DEPARTMENTAL EXAMS WILL BE CONDUCTED ON LINE ONLY THROUGH PRIVATE AGENCYமூத்த தோழர்கள் கவனத்திற்கு !"இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம்செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு. 


"இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லும் மூத்த தோழர்களிடம் இதைப் பார்க்கும் இளைய தோழர்கள் எடுத்துச் சொல்லுங்கோ !ஊதியக் குழு பரிந்துரைப் படி EB CROSSING தேர்வு வச்சா கூட இனி கணினியில் தானுங்கோ !மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ!

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென்கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாத மத்தியில், காற்று வீசும் திசையின் காரணமாக மழையின் தன்மை மாறுபடும். அந்த வகையில் தற்போது வடதமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து, தென் தமிழகத்தில் தற்போது பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் குமரிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மறைந்த நிலையில், தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடதமிழகத்தில் இரு தினங்களும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.நேற்று , தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, ஸ்ரீ வைகுண்டத்தில் 9, திருச்செந்தூரில் 7, நாகை, நான்குநேரியில் -5, ராதாபுரத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

TNTET -2013:தமிழ் நாடு தகுதி தேர்வு PAPER – I & PAPER II 60 % தேர்ச்சி பெற்ற அனைத்துஆசிரியர்களின் கவனத்திற்கு...

மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத கூட்டம் 
நாள் : 20.12.2015
இடம் : சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன்பு
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....


அடுத்த இரண்டாம் கட்ட உண்ணா விரத கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம் 20 ந்தேதிநடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது…

இது போராட்டம் அல்ல உண்ணாவிரத கூட்டம என்பதை மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துகொள்கிறோம்… .
நம் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தை அணுக போகிறோம்… .
அன்று தீர்மானங்கள் நிறைவற்றப்படும்… இதுதான் மரபு….மரபை மீறி செய்யும் எந்த ஒரு முயற்சியும் பலன் தராது என்பதை அனைவரும்அறிவோம்…
அனைவரின் வேண்டு கோளிற்கிணங்கவும், அனைவரும் வசதியாக ,தவறாது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் ஞாயிற்று கிழமை பெறப்பட்டுள்ளது.. .
எனவே அனைவரும் தவறாது தன் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்…

நாம் எத்தனை பேர் பாதிக்க பட்டிருக்கிறோம் என்பதை நம் வருகையின் மூலமேஅரசுக்கு உணர்த்த முடியும்… 
நேர்மறையான செயல்பாடுகளால் அரசாங்கத்தை நாடுவோம்…
மிகவும் சிரமப்பட்டு பெற்ற அனுமதி இது...
அதை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்வோம்…
நமது நிகழ்ச்சிக்கு தகவல் தொடர்பு மிகவும் முக்கிய அம்சமாகும்…
தகவல் தெரியாத நண்பர்களையூம் ஒருங்கிணையுங்கள்…
இந்த செய்தியை முடிந்தவரை நம் அனைத்து நண்பர்களுக்கும் குறுஞ்செய்திமூலமாகவோ whatsappமூலமாகவோ பகிர்ந்து கொள்ளவும்...

இந்நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்…

தகவல்களை அறிந்துகொள்ள தொடர்புக்கு:
திருமதி. பாரதி : 94426 91704
திருமதி. லாவண்யா : 90432 66059
திருமதி. பானு : 98940 35724
திரு.சக்தி : 97512 68580
திரு.ராஜபாண்டி : 99433 73380
திரு. தினேஷ் : 99427 33221

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.