யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/1/17

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக பா.வளர்மதி நியமனம்

RTI - CPS-ல் செலுத்திய தொகையினை வரம்பைத்தாண்டி 80CCD(1B)-ல் கூடுதலாகவும் கழிக்கலாம்!

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமைஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில்காலியாக உள்ளன. இவற்றை
பதவிஉயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல்தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்புவிபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்குஅனுப்ப, மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பட்டியல்தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள்ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள்எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர்விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன்ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராயபட்டியல், மூன்று மாதங்களில் இறுதிசெய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதிபட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பெண் சான்றிதழில் ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!

‘பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்மதிப்பெண் சான்றிதழ்களில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள்மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,‘ என தேர்வுத் துறைதுணை lஇணை இயக்குனர் அமுதவல்லிஎச்சரித்தார்.

மாவட்டத்தில்அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பொதுத் தேர்வு தொடர்பானஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி தலைமை வகித்தார்.

இதில் அமுதவல்லி பேசியதாவது:

பொதுத்தேர்வில் மாணவர் பட்டியல் (நாமினல்ரோல்) தயாரித்து தேர்வுக்கு முன் அடித்தல், திருத்தல், சேர்த்தல் பணி நடக்கும். இந்தாண்டுமுதல் மாணவர் பெயர்களை தலைமையாசிரியர்தன்னிச்சையாக நீக்க முடியாது. அதற்கான’ஆப்சன்’ ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல்கடைசி வாய்ப்பிற்கு பின் மாணவர்களின் மதிப்பெண்சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது. எனவேபெயர், பிறந்த தேதி உட்படஅனைத்து விவரங்களையும் கவனமாக பதிவு செய்யவேண்டும். அதற்கு பின்னரும் தவறுஏற்பட்டால் சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். மாவட்டத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில்மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அனந்தராமன், அதிராமசுப்பு மற்றும் 196 தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர். 

இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்

கார், பைக், ஏசி, 2 சிலிண்டர்கள்வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் அரிசியை ரத்துசெய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதனால் 1.20
கோடி கார்டுதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 33, 973 ரேஷன் கடைகள் மூலம்இலவச அரிசி, குறைந்த விலையில்துவரம், உளுந்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் உணவுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த பொருட்கள்இனி மானிய விலையில் கிடைப்பதுபடிப்படியாக நிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மத்தியஅரசு நாடு முழுவதும் உணவுப்பாதுகாப்புசட்டத்தை அமல்படுத்த தீவிரம் காட்டியது. ஜெயலலிதாமுதல்வராக இருந்தபோது அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ஜெயலலிதா உயிருடன்இருந்தபோது மக்கள் நலனுக்கு எதிரானமத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புதெரிவித்தார். அந்த வகையில் உணவுபாதுகாப்பு திட்டமும் ஒன்று.
ஓபிஎஸ்ஆதரவு: ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எந்தெந்த திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தாரோ, அந்த திட்டங்களுக்கு எல்லாம்ஓபிஎஸ் தலைமையிலான அரசு தற்போது மறைமுகமாகஆதரித்து வருகிறது. அந்த வகையில் தற்போதுமத்திய அரசின் உணவுப் பாதுகாப்புதிட்டத்தில் இணைந்துள்ளது. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்பு திட்டப்படி, குடும்பத்தில் நபர் ஒருவருக்கு தலா5 கிலோ அரிசி வழங்க வேண்டும். இதுவரை ஒரு குடும்பத்தில் எத்தனைபேர் இருந்தாலும் 20 கிலோ அரிசி மட்டுமேவழங்கப்பட்டது. ஆனால் உணவு பாதுகாப்புச்சட்டப்படி ஒரு குடும்பத்தில் 6 பேர்இருந்தால் அவர்களுக்கு 30 கிலோ அரிசி வழங்கவேண்டும். இதனால் வழக்கத்தைவிட கூடுதலானஅரிசி கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம்தமிழக அரசுக்கு ஏற்பட்டது.
மக்களைகடனாளியாக்கும் முடிவு: தமிழகத்தில் வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும்அரிசியின் விலையை மத்திய அரசுஉயர்த்தியது. அதன்படி ஒரு கிலோரூ.8.30ல் இருந்து ரூ.21.40 ஆக அதிகரிக்கப்பட்டது. திடீரென இருமடங்கு விலைஉயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமைமேலும் அதிகரித்தது. தற்போது அரிசிக்காக மட்டும்தமிழக அரசு சுமார் ரூ.2,700 கோடி செலவிடுகிறது. இந்த விலையில், அரிசிவழங்குவதால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தமிழகத்தில் 60 சதவீதகுடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக பகீர்தகவல் வெளியாகி உள்ளது.
யார் யாருக்கு அரிசி கிடைக்காது ரேஷன்கடைஊழியர்கள் கூறியதாவது: ஒரு வீட்டில் 2 சிலிண்டர்கள், கார், பைக், ஏசி வைத்திருப்பவர்களுக்குரேஷன் அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளது. இதற்காகஉணவுப்பொருள் வழங்கல்துறை ரகசிய சர்வே நடத்திஉள்ளது. அதில் கிடைத்துள்ள பட்டியலைவைத்து ரேஷன் கார்டை என்பிஎச்எச்(non priority house holder), பிஎச்எச்(poor house holder) என 2 பிரிவுகளாக பிரித்துள்ளனர். சிலிண்டர், ஏசி, பைக், கார்வைத்திருப்பவர்கள் என்எச்எச் பிரிவிலும், எதுவும் இல்லாதவர்கள் பிஎச்எச்பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள். இதற்காக 3 படிவங்கள் தயாரித்து அதை எங்களிடம் வழங்கிவீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும்படிரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
முதல் படிவத்தில், குடும்பத்தில் உள்ளவர்களில் யார், யாரெல்லாம் ஆதார்கார்டு வாங்கி உள்ளனர் என்றவிவரமும், 2வது படிவத்தில் வீட்டில்ஏசி, கார், பைக், 2 சிலிண்டர்உள்ளதா என்ற விவரமும், 3வதுபடிவத்தில் இதுவரை ஆதார் கார்டுவாங்காத நபர்கள் அவர்களின் முகவரில்வசித்து வருகின்றனரா என்ற விவரமும் பதிவுசெய்யப்படுகிறது. கணக்கெடுப்பு தமிழகம் முழுவதும் மிகரகசியமாகவும், மறைமுகமாகவும் நடக்கிறது. கணக்கெடுப்பின் இறுதியில் கார், பைக், ஏசி, 2 சிலிண்டர் வைத்திருக்கும் குடும்பத்தினரை NPHல் இணைத்து அவர்களுக்குஅரிசியை ரத்து செய்ய அரசுமுடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள2 கோடி அட்டைத் தாரர்களில் சுமார்1.20 கோடி கார்டுகளுக்கு அரிசியை ரத்து செய்யஅரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னையில்  12 லட்சம்பேருக்கு அரிசி ‘கட்’

தமிழகத்தில்முதல்கட்டமாக சென்னையில் இப்பணிகள் வேகமாக நடக்கிறது. சென்னையில்உள்ள 20 லட்சம் ரேஷன் கார்டுகளில்60 சதவீதம்(12 லட்சம்) கார்டுகளுக்கு அரிசிரத்தாகும் என தெரிகிறது. அரசின்இந்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள் கடுமையாகபாதிக்கப்படுவார்கள் என்றனர். 

கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி

தமிழகம்முழுவதும் கிராமப்புற மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்குள் புதைந்து கிடக்கும்
வித்தியாசமான கண்ணோட்டத்தை செயல்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்மூலம் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

இதில் ஒவ்வொரு அரசு பள்ளியில்இருந்தும் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். எளியபொருட்களை வைத்து அறிவியல் உருவாக்கங்களைசெய்து காண்பிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பெறும்அணிக்கு தலா 1,500, 1,000, 500 பரிசு வழங்கப்படும். ஒவ்வொருமாவட்டத்திலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும்சிறுபான்மையினர் விடுதிகள் உள்ளன. இவற்றில்,
தங்கிபடிக்கும், மாணவ, மாணவியர், 10ம்வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுத்தால், அவர்களுக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்என, சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார்.அதன்படி, ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 100 மதிப்பெண்கள் எடுக்கும்மாணவ, மாணவியருக்கு, 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை மாணவ, மாணவியர், பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

CPS : மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!

தமிழக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தமுடிவு செய்துள்ளனர். இதற்காகவே தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்சங்கங்களின்
கூட்டு நடவடிக்கை குழுமீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநில மாநாடு இந்த மாதம்6-ம் தேதி முதல் 8-ம்வரை திருவண்ணாமலையில் நடக்கிறது.


மாநாட்டுக்குதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்மாநிலத் தலைவர் தமிழ்செல்வி தலைமைதாங்கினார். மாநாட்டை முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடங்கி வைத்தார். தமிழ்நாடுதலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர்கணேசன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மாநிலஅரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில்இதுவரை 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வரும்8-ம் தேதி ஒரு லட்சம்அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது.

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் மோசஸ்,

 வணிகவரித்துறை சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் உள்படபலர் கலந்து கொண்டனர்.


மாநாடுகுறித்து தமிழ்செல்வி கூறுகையில், "அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்ப்பதில்லை. புதியபென்சன் திட்டத்தை அரசு ரத்து செய்யவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு பிப்ரவரி10-ம் தேதி முதல் 19-ம்தேதி வரை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டோம்.

 இதற்கிடையில் சட்டசபையில் 110 விதிகளின் கீழ் தொகுதிப்பூதியம், மதிப்பூதியம்ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். பென்சன் திட்டத்துக்கு வல்லுநர்குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதையமுதல்வர் ஜெயலலிதா. அதில் 8 அறிவிப்புக்கு அரசாணைவெளியிடப்பட்டு விட்டது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியப்போக்குகாரணமாக சில அரசாணைகள் நிறைவேற்றப்படவில்லை.

தற்போதுசங்கத்தின் 12-வது மாநில மாநாடுதிருவண்ணாமலையில் நடந்து வருகிறது. இந்தமாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குபொங்கல் போனஸ் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து விட்டு பழைய பென்சன்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதிய ஊதியக்குழுவை அமைக்கவேண்டும். அரசுத் துறைகளில் உள்ளகாலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தைவறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாடு அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(JACTO-GEO) என்ற அமைப்பு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின்தலைவர் கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தக்கட்ட போராட்டத்தில்ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அரசு ஊழியர்கள் வட்டாரங்கள் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்துஅ.தி.மு.க அரசு இருந்துவருகிறது. அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில்காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், புதிய பென்சன் திட்டம்ரத்து செய்யப்படும், மத்திய அரசு ஊழியர்களுக்குஊதிய மாற்றம் ஏற்படும் போதுதமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியமாற்றம் ஏற்படுத்தப்படும். சத்துணவு, அங்கன்வாடியில் கடந்த 25 ஆண்டுகளாக தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும். கருணை அடிப்படையில் பணியில் சேருபவர்களுக்காக விதிகள்தளர்த்தப்படும். அரசு ஊழியர்கள் சங்கநிர்வாகிகளிடம் அவ்வப்போது கலந்து ஆலோசிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால்தான் கடந்த பிப்ரவரியில் அரசுக்குஎதிராக போராட்டத்தில் குதித்தோம். அப்போது நிதியமைச்சராக இருந்தஓ.பன்னீர்செல்வம், சங்கநிர்வாகிகளிடம் 9.2.2016ல் 2 மணி நேரம்சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவிடம்சொல்லி அரசு ஊழியர்களின் கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. தற்போதுஓ.பன்னீர்செல்வம் முதல்வராகஇருக்கிறார். இப்போது அவர் யாரிடமும்கேட்க வேண்டிய அவசியமில்லை. புதியபென்சன் திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்டவல்லுநர் குழு சங்க நிர்வாகிகளிடம்கலந்து ஆலோசித்தப் பிறகும் எந்த அறிவிப்பும்வெளியிடப்படவில்லை. முதல்வரையும், அமைச்சர்களையும் குறைச் சொல்வதைவிட சம்பந்தப்பட்டஅதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர். குறிப்பாக நிதித்துறை, நிர்வாகம், பணியாளர் சீர்திருத்தத்துறையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால்அறிவிக்கப்பட்ட அரசாணைகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. குறிப்பாக நிதித்துறையைசநிதித்துறையை சாராத பதவி உயர்வு, சீனியாரிட்டி, பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதனால் லட்சக்கணக்கானஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லைஎன்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுபோராட்ட காலங்களில் ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு இப்போதும்ஏற்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

பி.எஃப். பயனாளிகள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) கீழ் பயன்பெறும் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும், தங்களுக்கு கிடைக்கும் சேவைகள் தொடர்வதற்கு தங்களது ஆதார் அடையாள எண்ணை இந்த மாத இறுதிக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று இபிஎஃப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இபிஎஃப்ஓ அமைப்பின் ஆணையர் வி.பி.ஜாய், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இபிஎஃப்ஓ அமைப்பின் சேவைகளைத் தொடர்ந்து பெற வேண்டுமெனில் அனைத்து ஓய்வூதியதாரர்களும், சந்தாதாரர்களும் வரும் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண் அல்லது ஆதார் எண் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ள படிவத்தின் நகலை அளிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குப் பிறகு சூழலைப் பொறுத்து, கால அவகாசம் நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
நாடு முழுவதும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களும், 4 கோடி சந்தாதாரர்களும் உள்ளனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது குறித்து நாடு மழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று 120 மண்டல அலுவலகங்களுக்கு இபிஎஃப்ஓ அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

TRB:உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு!

அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
இதில் தகுதி பெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பை கடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது. அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணிநிறுத்திவைக்கப்பட்டது.அதன் பிறகு வயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

விண்ணப்பதாரருக்கான அதிகபட்ச வயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.மொத்தம் 48,286 பேர் விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.இந்தத் தேர்வுக்கான முடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய அனைவருக்குமான முடிவுகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதனுடன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.ஒரு இடத்துக்கு இருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பானது செனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத் மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.இதற்கான அழைப்புக் கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்புக் கடிதம் தனியார் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலையில் சும்மா இருக்கும் 1,080 பேர்

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில், 1,080 பேராசிரியர்கள் வேலையே இல்லாமல், சம்பளம் பெறுவதாகவும், அதனால், மாதம், 20 கோடி ரூபாய் வீணாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை, 2013 முதல், தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கே சம்பளம் வழங்க முடியாமல், நிதி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அரசின் நிதியில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில், மாதம் தோறும், 50 கோடி ரூபாய் வரை, பேராசிரியர் கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, கூடுதலாக இருந்த பேராசிரியர்கள், 367 பேர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், பல்கலையின் பல்வேறு துறைகளில், 1,080 பேராசிரியர்கள் கூடுதலாக, வேலையின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அதேபோல், பல்கலையின் பல்வேறு துறைகள் மற்றும் கல்லுாரிகளில், 4,722 ஊழியர்கள், கூடுதலாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களுக்காக, மாதம் தோறும், 19.52 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக, பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயர்கல்வித் துறை செயலர் கார்த்திக் தலைமையிலான குழு, ஆய்வு நடத்தி வருகிறது. விரைவில், சும்மா இருக்கும் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், மற்ற கல்லுாரிகளுக்கு மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC., உறுப்பின நியமன ரத்து : உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள், 11 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. பதவி இழந்த, 11 பேரும், மேல்முறையீடு செய்துள்ளனர்.
இம்மனுக்கள், நாளை, தலைமை நீதிபதி அடங்கிய, 'பெஞ்ச்' முன், விசாரணைக்கு வருகின்றன.

டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக, 11 பேரை நியமித்து, தமிழக அரசு, 2016 ஜனவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி.,யான இளங்கோவன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர், வழக்கறிஞர் கே.பாலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' 11 பேரது நியமனங்களையும் ரத்து செய்து, 2016 டிச., 22ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது; 11 பேரும், தனித்தனியாகவும் மேல்முறையீடு செய்துள்ளனர்.


மனு : இம்மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட் அடங்கிய, 'பெஞ்ச்' முன், நாளை விசாரணைக்கு வருகின்றன. இளங்கோவன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகிறார். தமிழக அரசு தரப்பிலும், 11 பேர் சார்பிலும், டில்லி மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய, உயர் நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரவரம்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள, இந்த பதவி யில் நியமிக்கப்பட்டவர்களை, ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தான் நீக்க முடியும் என, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக, சட்டத்தில் எந்த விதிமுறையும் இல்லாத போது, விண்ணப்பங்களை வரவழைத்து தான் நியமிக்க வேண்டும் என்ற நடைமுறை தேவையா; மாவட்ட நீதிபதியாக இருந்தவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது என்பதற்காக, அவர் தகுதியற்றவராக அல்லது வேறு பதவிக்கு பொருத்தமற்ற

வராகி விடுவாரா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.


'நோட்டீஸ்' : தற்போது, உறுப்பினர்கள் பதவி பெருமளவு காலியாக இருப்பதால், தேர்வாணையத்தின் செயல்பாடு, தேர்வு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, தடை விதிக்க வேண்டும் என, கோரப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்படுமா; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுமா என்பது நாளை தெரிய வரும்.

கணினி தமிழ் விருது: காலக்கெடு நீட்டிப்பு

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக, சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோரை ஊக்குவிக்க, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படுகிறது. 
விருது பெறுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். கடந்த ஆண்டுக்கான விருதுக்கு, டிச., 31 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் காணலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

CBSE, பிளஸ் 2 தேர்வு தள்ளிவைக்க ஆலோசனை

உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில், பிப்ரவரி முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில், பள்ளி ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர்.
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு, வழக்கமாக மார்ச், 1ம் தேதி துவங்கி ஏப்ரலில் முடியும்; தேர்வு முடிவுகள், மே, மூன்றாவது வாரத்தில் வெளியாகும்.

இப்போது, ஐந்து மாநில தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால், பிளஸ் 2 தேர்வை, 10 நாட்கள் தள்ளி வைக்க, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தேர்வுகளை, மார்ச் 12 முதல் துவக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் ஆசிரியர்கள் கூறுகையில், 'தேர்வை தள்ளி வைப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. தேர்வுகளுக்கு இடையே உள்ள விடுமுறை நாட்களை குறைத்தால் போதும்; தாமதத்தை சரி செய்து

விடலாம்' என்றனர். அடுத்த வாரம், தேர்வு தேதியை,

சி.பி.எஸ்.இ., அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

How to know Annual income statement pay slip, pay drawn particulars?

Income Tax Form 2016-17 (தமிழில்)

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு தீவிரம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வி ஆண்டில் காலியாக உள்ளன. இவற்றை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதற்காக, நேரடி நியமனத்தில் வந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என, இரண்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, விதிகளின்படி பணிமூப்பு விபரங்களை, வரும், 30க்குள், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பட்டியல் தயாரிப்பு பணியில் விதிமீறல்கள், பிழைகள் ஏற்படக் கூடாது எனவும், சி.இ.ஓ.,க்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டங்களில் இருந்து வரும் பெயர் விபரங்களை, தலைமை அலுவலக ஆவணங்களுடன் ஒப்பிட்டு, பதவி உயர்வுக்கான தோராய பட்டியல், மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும். மார்ச் இறுதியில், இறுதி பட்டியல் தயாராகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.