யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/9/18

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம்




நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது


மதிப்பெண் சான்றிதழ் குளறுபடியால் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாணவி ராஜேஸ்வரி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மீண்டும் சேர்க்கப்பட்டார்


 ஆனால் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான அவரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என அவர் தாக்கல் செய்த வழக்கில், தேர்வு முடிவுகளை வெளியிட்டு, சான்றிதழ்களை வழங்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தேர்வுத்துறை இயக்குனருக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டது


இதை எதிர்த்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது


இதை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன், அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அபராதம் விதித்தார்

பென்சில்



ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எனது ஓவிய ஆசிரியர் 2HB பென்சில் கொண்டு வந்து படம் வரையச் சொல்வார். அப்போது 2HB என்றால் என்னெவென்று தெரியாது. கடைக்குச் சென்று 2HB பென்சில் தாருங்கள் என்று கேட்பேன். கடைக்காரர் தரும் பென்சிலை எடுத்துப் பார்த்தால் அதில்  HB என எந்த இடத்திலும் பொறிக்கப்பட்டிருக்காது. 

கடைக்காரரிடம் இதில் HB என்று எதுவும் எழுதவில்லையே என்று கேட்டால், இது தான் 2HB பென்சில். வேணுமா? வேண்டாமா? என்று கத்திக் கொண்டே கேட்பார். 

நானும் வாங்கிக் கொண்டு வகுப்பறைக்கு  வந்தால் ஓவிய ஆசிரியை இதுவா 2HB என்று முறைப்பார். எனக்கு வரைவதில் கொஞ்சம் ஈடுபாடு குறைவாக இருந்ததால் பென்சிலோடு கொண்ட தொடர்பு வகுப்பறையிலேயே முடிந்து  போய்விட்டது. 



நடராஜ், அப்சரா, கேமல், மார்வெல், டிஷ்னி என வித விதமாக பென்சில்கள். சில பென்சில்களில் 1HB, HB2 , 4HB என சிறிய எழுத்தில் பென்சிலில் எழுதப்பட்டிருந்தது. 

கடைசியாக இந்த HB எதைக் குறிக்கிறது என தேட ஆரம்பித்தேன். அப்போது தான் HB என்பது பென்சில் பயன்படுத்தும் கிராபைட்டின்   அளவு கோல் என புரிந்து கொண்டேன். 

பென்சில் கிராபைட் மற்றும் களிமண் ஆகிய இரண்டையும் கலந்து செய்கிறார்கள்.  கிராபைட்டுடன் கலக்கும் களிமண் தான் பென்சிலின் blackness ஐ தீர்மானிக்கிறது. 

இந்த களிமண் சாம்பல் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை இருக்கிறது. அதிக blackness வேண்டுமானால் கருமையான களிமண்ணையும், குறைவான blackness வேண்டுமானால் சாம்பல் நிற  களிமண்ணையும் கிராபைட்டுடன்  கலக்கிறார்கள். 

இது போல சேர்க்கும் களிமண்ணின் விகிதம் குறைவாக இருந்தால் அது softness ஐ தரும். அதிகமாக இருந்தால் hardness ஐ தரும். 

H என்பது பென்சிலில் இருக்கும்  hardness ஐ குறிக்கிறது. B என்பது அதன் blackness ஐ குறிக்கிறது. 

HB பென்சில் என்றால் கடினத்தன்மையும் கருமை அதிகமாகவும் இருக்கும். பொதுவாக எழுதுவதற்கு HB பென்சிலை பயன்படுத்துவார்கள். 

HH என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அதிக கடினத்தன்மையோடு இருக்கும். பொறியியல் வரைபடம் வரைபவர்கள் HH பென்சிலை பயன்படுத்துவார்கள்.

BBB என்று குறிப்பிடப்பட்ட பென்சில் அடர் கருமை நிறத்தில் எழுதும்.

1H6B பென்சில் அதிக கருமை எழுதுவதற்கு மிருதுவாகவும் இருக்கும்.

6H1B பென்சில் கருமை குறைந்து சாம்பல் நிறத்திலும் அதிக கடினத்தன்மையோடும் இருக்கும்.

H ன் மதிப்பு 1, 2, 3 என அதிகரித்துக் கொண்டே போகும். அது போல B ன் மதிப்பும் 1,2,3 என அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

ஒவியர்கள், பொறியியல் வரைவாளர்கள் தங்களின் தேவைகளின் அடிப்படையில் பென்சிலை தேர்ந்தெடுப்பர். கறுப்பு வெள்ளை படம் வரையும் போது விதவிதமான  நிற பேதங்களை வேறுபடுத்திக் காட்ட விதவிதமான பென்சில்கள் தேவை.

இப்போது குழந்தைகள் நேரடியாக அலைப்பேசி அல்லது கணினியில் வரைய தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் பென்சிலால்  வரையும் போது கிடைக்கும் finishing கணினியில் வரையும் போது ஏற்படுவதில்லை.

இனி பென்சில் வாங்கும் போது எதற்காக பென்சிலை வாங்குகிறோம் என்பதை முடிவு செய்து அதற்கு தேவையான பென்சிலை கேட்டு வாங்குவோம்.

நீதிக்கதை



புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?



ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு  அதிசய ரோஜா செடிஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள்  மலர்ந்தன. அங்குவந்த  தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்கநினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும்போது அரண்மனைக் காவலர்கள்  பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம்காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களைபார்த்து "என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?" என்று கேட்டான்.

அவர்களோ! "உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை  நாங்கள்பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச்செல்கிறோம்.  வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள  திருடிய ரோஜா பூக்களைபார்" என்று அவன் கைகளை காண்பிக்கச்  செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன்  மகனைகாப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து  தான்  அணிந்திருந்தமேலாடையை கழற்றி மகன்  மேல் போர்த்திவிட்டான்.

இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும்  என்றுகூறிவிட்டுச் சென்றார்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்கதொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடிஇருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர்முன்னால் அழைத்துச்சென்றனர்.

காவலர்கள் மன்னரை பார்த்து "அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடியபோது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனைவழங்க வேண்டும்" என்று கூறினர்.

மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, "திருடிய பூக்கள் எங்கே?" என்று கேட்டார்.

காவலர்கள் மன்னரை பார்த்து, "பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசேஉள்ளது" என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, "உன் கைகளை காட்டு" என்று கூறினார்.

அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் தெனாலிமகனை பார்த்து, "நீ பறித்த பூக்கள் எங்கே?" என்று கேட்டார்

அவனோ! மன்னரைப் பார்த்து, "நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என்  தந்தைக்குஅவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி  செய்தார்கள்" என்றுகூறினான்.

மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.

தெனாலியும்  அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டேவீட்டிற்கு புறப்பட்டனர்.

குரூப் பி, சி: 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பவேறு துறைகளில் காலியாக உள்ள 1,100 பணியிடங்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின்(எஸ்.எஸ்.சி.) மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், வரும் 30-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பான அறிவிப்பை மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 130 பிரிவுகளில் (குரூப் பி, குரூப் சி) 1,136 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி. தேர்வாணையத்தின் வெவ்வேறு பிராந்திய அலுவலகங்கள் வாரியாக காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அதன்படி, வடக்கு பிராந்திய அலுவலகத்தின் கீழ் 36 பிரிவுகளில் 299 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதேபோல், அனைத்து பிராந்திய அலுவலகங்களின் கீழ் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள் எஸ்.எஸ்.சி. தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
  
விண்ணப்பதாரர்கள், ஒரே நேரத்தில் வெவ்வேறு பிராந்திய அலுவலகங்களில் வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழியாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளங்களில் (எஸ்எஸ்சி தலைமையகம்- www.ssc.nic.in, , வடக்கு பிராந்தியம்- www.sscnr.net.in) வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட தேர்வினை எழுத விரும்புவோர், வரும் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிமானியத்தைப்(Rs 25000 / Rs 50000 / Rs 75000 / Rs 100000) கீழ்காணும் இனங்களில் பயன்படுத்தலாம். (முழு விவரம் )

5-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/- 
101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-
251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-
1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-
2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.
30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.
SWACHHTA ACTION PLAN 2018-19 (SAP முழு ககாதாரத் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் பயன்படுத்துவதற்காக 10 ச
...

இனி 10,11,12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் கிடையாது.! தமிழக அரசு அதிரடி.!!

கடந்த 2 ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு கொண்டுவந்தது மாணவர்களுக்கு சுமையானாலும், இது கற்றல் திறமையை அதிகரிக்கும் என்பதால், இது அனைத்து தரப்பினரிடையும் வரவேற்பை பெற்றது.
மேலும், கடந்த கல்வியாண்டு முதல் தமிழக அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கொண்டுவரப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு புதிய வண்ணங்களில் சீருடை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கடந்த 3 தினங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. முன்னதாக இருந்த 11 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்களையும் சேர்த்து 1200 மதிப்பெண்களாக வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக 12 ஆம் வகுப்பில் எடுக்கும் 600 மதிப்பெண்கள் மட்டுமே இனி எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தற்போது தமிழக பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-
 ''அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது போல், '10, 12-ம் வகுப்புகளுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.
இதனையடுத்து, செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு நாள் அறிவிக்கப்பட்ட பின், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும்' என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.
இதனை தமிழக அரசு கவனமுடன் பரிசீலித்து, வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல்  தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என்று அரசு ஆணையிடுகிறது'' என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெற்று வந்த துணைத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தினால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள், ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டுமே எழுதமுடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலை..! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!!

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல்
துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது, கட்டிடக்கலை உதவியாளர், திட்டமிடல் உதவியாளர் ஆகிய காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது
பதவி பெயர் : Architectural Assistant/ Planning Assistant
மொத்த காலியிடங்கள்: 13
மாத சம்பளம்: ரூ.37,700 - 1,19,500
வயது வரம்பு: 18 முதல் 30.
கல்வி தகுதி: நகர திட்டமிடல் துறையில் முதுகலை பட்டம் அல்லது சிவில் என்ஜினியரிங் துறையில் பட்டம் அல்லது கட்டிடக்கலை துறையில் பட்டம் அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் என்ஜினியர்ஸில் சிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இரு தாள்கள் கொண்டது.
தேர்வு நடைபெறும் தேதி: 22.12.2018
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்.
கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 10.10.2018

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இரண்டு இணையதளங்கள்: மத்திய அரசு :

மகளிர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு இணைய தளங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். 'cybercrime.gov.in' என்ற இணைய தளம் குழந்தைகளை ஆபாசமாக காட்டுவது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டு பலாத்காரம் தொடர்பான ஆட்சேபத்திற்குரிய பாலியல் தகவல்களுக்கு எதிராக இந்த இணைய தளத்தில் மக்கள் செய்யும் புகார்கள் பெறப்படும்.



பாலியல் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தேசிய புள்ளி விவர இணைய தளத்தை, சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புக்களால் மட்டுமே அணுகமுடியும். பாலியல் குற்றங்களை திறமையாக கண்காணிப்பது மற்றும் அது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்கு இந்த இணைய தளம் திறமையாக உதவும்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மாநிலங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் ஆற்றிய உரையில் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாலியல் தொடர்பான குற்ற நடவடிக்கைகள் விசாரணையை மேம்படுத்துவது, விசாரணைக்கு உதவ நவீன தடய அறிவியல் வசதிகளை ஏற்படுத்துவது, கடுமையான தண்டனை வழங்க வகை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் மகளிர் பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, மகளிர் பாதுகாப்புக்காக பாதுகாப்பான நகர திட்டங்களும் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இன்று துவக்கப்பட்டுள்ள இரண்டு இணைய தளங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையே என்று அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கச் செய்வதை உறுதி செய்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்களை காவல்துறையினர் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றார். இரண்டு இணைய தளங்களும் திறமையாக செயல்படும் வகையில் அதன் புள்ளி விவரங்கள் தொடர்ந்து அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு சில மாநிலங்கள் அறிமுகப்படுத்தியுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சிறப்பான நடவடிக்கைகளை பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி, உறைவிடங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை துரிதமாக மேற்கொள்ள வசதியாக காவல் நிலையங்களில் தடய அறிவியல் சாதனங்கள் அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். திருமணம் முடிந்த சில காலத்திற்குள் மனைவியை கைவிடும் கணவர்களுக்கு எதிரான வழக்கில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜாக்டோ ஜியோ- அக்டோபர் 4-வியாழன் (04.10.18) தற்செயல் விடுப்பு போராட்டம் மாதிரி விண்ணப்பம்

தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது - தமிழக அரசு

தமிழக பள்ளிகளில் இனி ஆசிரியர் இல்லை என்ற நிலை இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் சாமி பார்வை செய்தார்.
முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆசிரியர்கள் பற்றைக்குறை நீங்கிவிடும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு விரைவில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்