யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/18

95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு

சென்னை:தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.


நடப்பு கல்வியாண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஐந்து பள்ளிகளை தரம் உயர்த்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மீதமுள்ள, 95 பள்ளிகளையும், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், அரசாணை பிறப்பித்துள்ளார். 

இதை பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.அரசாணைப்படி, அப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்படும். 

முதற்கட்டமாக, தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில், தலா, ஒரு முதுகலை ஆசிரியர் பணியிடம், புதிதாக ஏற்படுத்தப்படும்.இந்த பள்ளிகளில், கலை பாடப்பிரிவு துவங்கப்பட்டு, அதில், ஊரகப் பகுதிகளில் இருந்து, 15 மற்றும் நகர் பகுதிகளில் இருந்து, 30 மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியலுக்கு, தலா, ஒரு முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு ஒப்புதல் தரப்படும். 

காஞ்சிபுரம், கரூர், நாமக்கல், நீலகிரி, பெரம்பலுார், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தலா, 1; அரியலுார், கடலுார், திண்டுக்கல், துாத்துக்குடி, தலா, 2 தரம் உயர்த்தப்படுகின்றன.திருச்சி, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தலா, 3; தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு, திருவண்ணாமலை, தலா, 4 ஆகியவை தரம் உயர்த்தப்படுகின்றன.

திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கோவை, தலா, 5; வேலுார், 6; சேலம், 7 என, 30 மாவட்டங்களில், மொத்தம், 95 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
95 நடுநிலை பள்ளிகள் உயர்நிலையாக உயர்வு
தமிழகத்தில் செயல்படும், 95 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதிதாக, ஐந்து பெண்கள் உயர் நிலை பள்ளிகளும் அமைகின்றன.

திண்டுக்கல், அரியலுார், கரூர், நீலகிரி, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், தலா, 2; காஞ்சி புரம், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், விருதுநகர் மாவட்டங்களில், தலா, 3; ஈரோடு, தேனி, துாத்துக்குடி, பெரம்பலுார், கடலுார், ராமநாதபுரம் மாவட்டங்களில், தலா ஒரு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், தலா, 4; தர்மபுரி மற்றும் மதுரையில், தலா, 5; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களில், தலா, 6 என, 31 மாவட்டங்களில், மொத்தம், 95 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர, பெரம்பலுார், பண்ருட்டி, திருப்பூர் - பெருமாநல்லுார், வேலுார் - திருமால்பூர் மற்றும் விழுப்புரம் - ஜீ ஆரியூர் என, ஐந்து இடங்களில், பெண்கள் உயர்நிலை பள்ளிகள் புதிதாக அமைகின்றன. தரம் உயர்த்தப்பட்ட மற்றும் புதிதாக துவக்கப்படும் பள்ளிகளுக்காக, 500 பட்டதாரி பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என, அரசா
...

746 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் நீட்டிப்பு

சென்னை:இடப்பற்றாக்குறை உள்ள, 746 பள்ளிகளுக்கான அங்கீகாரம், அடுத்த ஆண்டு மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


பள்ளிகளின் உள்கட்டமைப்பு தொடர்பாக, கல்வியாளர் சிட்டிபாபு குழு, சில பரிந்துரைகளை அளித்தது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகள், நிலம் தொடர்பாக புதிய விதிமுறைகளை நிர்ணயித்து, 2004-ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என, ஒவ்வொரு பகுதியிலும், பள்ளிகளுக்கு குறிப்பிட்ட அளவுக்கு நிலம் இருக்க வேண்டும்.ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில், இட நெருக்கடி உள்ளதால், சிட்டிபாபு குழுவின் பரிந்துரைகளை, பல பள்ளிகளால் பின்பற்ற முடியவில்லை. மேலும், 2004ல், சட்டம் வரும் முன்னரே, பல தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த பரப்பை விட குறைந்த பரப்பில், பள்ளிகளை நடத்தி வருகின்றன. இந்த அடிப்படையில், 746 பள்ளிகளுக்கு இட பற்றாக்குறையால், அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

உடன், இப்பள்ளிகள், நீதிமன்றத்தை அணுகின. அதனால், இடப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, ஒவ்வொரு ஆண்டும், தற்காலிக அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2017 - 18க்கான அங்கீகாரம், இந்த ஆண்டு மே, 31ல் முடிந்தது. இதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு, 2019 மே வரை, தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்கி, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

G.O.NO:-167 Dt: August 07, 2018 -பள்ளிக் கல்வி – தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள், நிதி உதவி பெறும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் – உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக் கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2019 வரை நீட்டித்து – ஆணை வெளியிடப்படுகிறது_*


சுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்



2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்!!!

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் : உயர்நீதிமன்றம்.2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது
என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். 

வரும் 17ம் தேதிக்குள் அமல்படுத்த தவறினால் அனைத்து மாநில பள்ளி கல்வி செயலர்கள் ஆஜராக உத்தரவிடப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வில் எந்த மாற்றமும் இல்ல... மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி: மாற்றவில்லை;... முடிவை மாற்றவில்லை... மத்திய அரசு. நீட் தேர்வு முறையில்.


இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கூறி இருந்தார். தற்போது தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.


இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அளித்துள்ள பதிலில், 2019 ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. 2019 ல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தும் எண்ணம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை.


2019 ல் குறைந்தபட்சம் ஆஃப்லைன் (offline) முறையில் நீட் தேர்வு தொடர்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகத்துடன், மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறைக்கு அளித்த அழுத்தம் காரணம் 2019 ல் பிப்ரவரி மற்றும் மே மாதங்கள் என இருமுறை நீட் தேர்வு நடத்தும் யோசனை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், பேப்பர் - பேனா முறையிலேயே தேர்வை தொடர வேண்டும் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத்திய அரசு உத்தரவு

டில்லி:

வாகன ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜி லாக்கர் மற்றும் மொபைல் செயலி இருந்தாலே போதுமானது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தனி மனிதரின் ஆவனங்களை பாதுகாக்க 'டிஜிலாக்கர்' சிஸ்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய ஆவனங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்ள லாம். தேவையான போது இதை திறந்து ஆவனங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சேவைக்கு 'மின்பூட்டு' எனப்படும் (DIGI LOCKER) டிஜிலாக்கர் சிஸ்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தி உளளது.
அதுபோல சமீபத்தில் வாகன ஓட்டுனர் உரிமம் தொடர்பாக எம்பரிவாகன் (mparivahan app) என்ற மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் செயலிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆவனங்களை வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துஉள்ளது.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினரின் சோதனையின்போது, ஓட்டுநர் உரிம அட்டைகளை காண்பிக்க கூறுவது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் தவறுதலாக எடுத்து வர மறந்தவர்கள், அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படு கிறார்கள். டிஜிட்டல் வடிவிலான வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை போக்கு வரத்து காவல்துறையினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எழுகிறது.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.அதன் அடிப்படையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் காவல்துறையினரிடம் ஓட்டுநர் உரிமத்தினை மொபைல் செயலி மூலம் காண்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் வடிவிலான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங் களை ஏற்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரசின் அதிகரப்பூர்வ மொபைல் செயலிகளான எம்பரிவாகன் (mparivahan app) டிஜி லாக்கர் (DigiLocker) ஆகிய செயலிகளில் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வரும், 16ல் கூட்டுறவு சங்க தேர்தல்

சென்னை:'பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த, 484 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், வரும், 16ல் நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், முதற் கட்டமாக, நான்கு நிலைகளாக நடந்தது. புகார்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை உட்பட, பல்வேறு காரணங்களால், 484 சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டிருந்தது. அவற்றுக்கு தேர்தல் நடத்த, தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன்படி, நாளை, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். வாபஸ் பெற விரும்புவோர், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்குள் வாபஸ் பெற வேண்டும்.இறுதி வேட்பாளர் பட்டியல், 13ல் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு தேவைப்பட்டால், வரும், 16ல் தேர்தல் நடைபெறும். மறுநாள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
'சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல், வரும், 21ல் நடைபெறும்' என, கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் :

பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி,
 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


பள்ளிக்கல்வித் துறையில், பாடத்திட்டம் மாற்றத்தை தொடர்ந்து, நிர்வாக பணிகள், கற்பித்தல் பணிகள் போன்றவற்றையும், டிஜிட்டல் முறைக்கு மாற்ற, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.முதற்கட்டமாக, அனைத்து மாணவர்களின் 
விபரங்களையும், 'எமிஸ்' என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் இணைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்களை பயன்படுத்தி, போலி மாணவர் பதிவுகளை நீக்கவும், பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


அதேபோல், பாடத்திட்ட மாற்றத்தின்படி, 'வீடியோ' வழி பாடங்கள் நடத்தவும், 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதன் ஒரு கட்டமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிெபறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், பள்ளி கல்வியின், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்தில் இணைய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்காக ஆசிரியர்கள், 'வொர்க் பிளேஸ்' என்ற, முகநுால் பக்கத்திற்கு சென்று, அதிலுள்ள, குரூப்பில் இணைவதற்கான விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.அதிகாரிகள் அவர்களின் விபரங்களை சரி பார்த்து, குரூப்பில் இணைய அனுமதி அளிப்பர். அதன்பின், அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட குரூப்பில் இணைக்கப்படுவர்.

அதில், ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் முறை, தனித்திறன் உள்ளிட்டவற்றை பதிவு செய்யலாம். அவற்றை மற்ற ஆசிரியர்களும் பார்த்து, தெரிந்து கொள்வர்.ஆசிரியர்களின் புதிய கற்பித்தல் முறைகள், வழிமுறைகள் நன்றாக இருந்தால், அவற்றை மற்ற பள்ளிகளிலும் செயல்படுத்த, அதிகாரிகள் அறிவுறுத்துவர்.எனவே, ஒரு ஆசிரியரின் திறமை, மற்ற பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்த திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பசுமை படை நிதியை,பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட தேசிய பசுமை படை நிதியை, இந்தாண்டு முதல் பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும் தேசிய பசுமை படைகளுக்கு ஆண்டுதோறும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிதியை மத்திய சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 250 பள்ளிகள் இந்நிதியை பெறுகின்றன.


உலக சுற்றுச்சூழல், இயற்கை, ஓசோன் உட்பட உலக அளவில் கடைபிடிக்கப்படும் 16 வகை தினங்கள் மற்றும் மாணவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணிகளுக்கு இந்நிதி செலவிடப்படுகிறது.இதுவரை மாநில அளவில் 8500 பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி மாவட்ட அலுவலங்கள் (டி.இ.ஓ.,) மூலம் இந்நிதி வழங்கப்பட்டது. 
ஆனால் இந்தாண்டு முதல் நேரடியாக பள்ளிகளுக்கு வழங்க மத்திய சுற்றுச்சூழல் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், ''மாணவர்கள், பள்ளிகள் விவரங்களை கல்வி அதிகாரிகள் மூலம் சுற்றுச்சூழல் துறை பெறும் நடைமுறையில் ஏற்பட்ட தாமதம் உட்பட சில காரணங்களுக்காக இந்தாண்டு முதல் இந்நிதியைபள்ளிக்கே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதுதொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
  

7th Pay Commission - விரைவில் சம்பள உயர்வு வழங்க வாய்ப்பு???

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் சென்ற முறை அடிப்படை ஊதியத்தினை2.57 சதவீதம் மட்டுமே உயர்த்தி இருந்தனர். இந்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் தங்களது சம்பளம் போதியதாக இல்லை என்றும் வாழ்வாதாரம் .
பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அகவிலைப்படியும் போதிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் மத்திய அரசு ஊழியர்கள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தனர்.
அருண் ஜேட்லி மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருந்த போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும் முடிவை அளிக்கும் என்று தெரிவித்து இருந்த நிலையில் எந்த ஒரு சாதகமான முடிவினை எடுக்கவேயில்லை.
தேர்தல் ஆனால் 2019 ஆண்டுப் பொதுத் தேர்தல் அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களின் வாக்குகளைக் கவர சம்பள உயர்வினை ஒரு முக்கிய ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்தும் என்றும் நமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
எப்போது சம்பள உயர்வு அறிவிப்பு வரும்? மத்திய அரசு ஆகஸ்ட் 15-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பினை வெளியிடும் என்று கூறப்படுகிறது
எவ்வளவு கிடைக்கும்? தற்போது அடிப்படை ஊதியம் 18,000 ரூபாயாக உள்ள நிலையில் அது 21,000 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்றும் 3 வருடம் வரை நிலுவை தொகை அளிக்கப்படலாம் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்க்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பயன் மத்திய அரசின் சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்கப்பட்டால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்கள் பயன் அடைவார்கள். ஆர்பிஐ ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தியதால் பணவீக்கம் அதிகரிப்பது மற்றும் வீட்டு வாடகை படியையும் அரசு உயர்த்த வாய்ப்புகள் உள்ளது

இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தேதி மாற்றம்:

தமிழகத்தில் அரசு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பி.இ. கலந்தாய்வு: சேர்க்கையின்றித் தவிக்கும் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள்: 42 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின

பி.இ. பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாமல் தவித்து வருவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,76,865 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை 5 சுற்றுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வியாழக்கிழமையுடன் மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
முதல் பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்ற 10,734 மாணவர்கள் 6,768 பேரும், இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 18,513 பேரில் 12,206 பேரும், மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 25,710 பேரில் 17,152 பேர் மட்டுமே இறுதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.

1.34 லட்சம் இடங்கள் காலி:
அதன்படி, மூன்று சுற்றுகள் முடிவில் 36,126 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வையும் சேர்த்தால், மொத்தமாக 42,363 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இன்னும் இரண்டு சுற்று கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ள நிலையில், 1,34,502 இடங்கள் காலியாக உள்ளன.
திண்டாடும் கல்லூரிகள்: அண்ணா பல்கலைக்கழகம் வெளிட்டுள்ள பி.இ. காலியிட விவரங்களின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் மூன்று துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரப்பியுள்ளன.
இரண்டாம் நிலை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
மீதமுள்ள நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதும், சில கல்லூரிகளில் ஒரு இடங்கள்கூட நிரம்பாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
நிகழாண்டில் புதிதாக கலந்தாய்வில் சேர்க்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் (உற்பத்தி) பிரிவில் 117 இடங்களும், இயந்திரவியல் பிரிவில் 88 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 38 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 92 இடங்களும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 112 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றிக் காலியாக உள்ளன.
கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை பொறியியல் கல்லூரிகளில்... கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிரதான பிரிவுகளான இயந்திரவியல் பிரிவில் 180 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 181 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 73 இடங்களும் காலியாக உள்ளன. திருப்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 105 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 106 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 105 இடங்களும் காலியாக உள்ளன.
கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 149 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 71 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 72 இடங்களும் காலியாக உள்ளன.
இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் பல கல்லூரிகளில் ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
250 கல்லூரிகளில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை: இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. கலந்தாய்வின் மூன்று சுற்றுகள் முடிவில், 250 பொறியியல் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் கூட, ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. அவற்றின் இரண்டாவது, மூன்றாவது நிலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. இந்த கல்லூரிகளில் கட்-ஆஃப் 150 பெற்ற மாணவர்கள் கூட கலந்தாய்வு மூலம் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் 150 கட்-ஆஃப் பெற்ற மாணவர் நன்கொடை கொடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.
முதல் முறையாக இயந்திரவியல், கட்டடவியல் (சிவில்) பிரிவுகளில் இம்முறை மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக தகவல்தொழில்நுட்பத் துறையில் இருந்த பின்னடைவால், இந்த இரு பிரிவுகளிலும் இடங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக கல்லூரிகள் உயர்த்தியதே காரணமாகும். இம்முறை கலந்தாய்வு மூலம் 75 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்ப வாய்ப்புள்ளது. இனி, வரும் ஆண்டுகளிலும் இதே நிலைதான் நீடிக்கும். பாடத் திட்டத்தைத் தாண்டி, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கினால் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் இனி நிலைத்திருக்க முடியும் என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி.