யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

4/11/15

டெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்

'மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பீதியும் அதிகரித்துவிடுகிறது. டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது. டெங்கு காய்ச்சலை தடுக்க கீழ்க்கண்ட எட்டு வழிகளை பின்பற்றினால் 'டெங்கு' அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள முடியும்.


1. 'ஏடிஸ் எஜிப்டி' என்ற கொசுதான் டெங்கு காய்ச்சலுக்கு காரணம். இந்த கொசு அசுத்த நீர் நிலைகளில் வாழாது. நல்ல நீர்நிலைகளில் மட்டுமே வாழும். தேங்காய் ஓடுகள், சரடுகள், பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகள் போன்றவற்றின் மழை நீர் தேங்குவதால்தான், அவ்விடங்களில் டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாகின்றன. எனவே வீட்டை சுற்றி இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றுங்கள்.


2. சித்த மருத்துவத்தில் டெங்குவை தடுக்க எளிமையான் வழிகள் இருக்கிறது. நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்து கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனை பிரிவில் வாங்கி பயன்படுத்தலாம்.

3. மழைக்காலத்தில் நோய்களை தடுக்க மூலிகை டீ உதவும். சுக்கு, பனங்கற்கண்டு, துளசி, மாதுளை பழத்தோல், கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் தூள் போன்றவற்றில் என்னென்ன பொருட்கள் இருக்கிறதோ அவற்றில் கொஞ்சம் எடுத்து குடிநீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகலாம். காபி, டீக்கு பதில் வீட்டிலேயே மூலிகை டீ செய்து குடியுங்கள்.

4. டெங்குவை பரப்பும் கொசு சற்று பெரிதாக இருக்கும். இது மாலை இறங்கும் வேளையில் மற்றும் அதிகாலை வேளைகளில்தான் அதிகளவு ஊர் சுற்றுகிறதாம். எனவே தினமும் மாலை 4 மணிக்கெல்லாம் வீட்டில் உள்ள ஜன்னல்களை அடைத்து விடுங்கள். காலை ஏழு மணிக்கு மேல் ஜன்னலை திறக்கவும்.

5 வீட்டை மற்றுமல்ல மனிதர்களும் சுத்தமாக இருக்க வேண்டும். எனவே தினமும் குளிப்பது அவசியம். சளி, காய்ச்சல் இருப்பவர்கள் வேண்டுமானால் மருத்துவர் பரிந்துரைப்படி குளிக்காமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் மழைக்காலத்தில் சுடுதண்ணீரிலோ, குழாய் நீரிலோ கண்டிப்பாக குளிக்க வேண்டும். ஏனெனில் வியர்வை வாடை அதிகமாக இருக்கும் இடங்களில்தான் கொசுக்கள் தேங்குகிறது.

6. காலை, மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்து உண்ணுங்கள். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை நன்றாக கழுவி பயன்படுத்தவும். மசால் பூரி, பானி பூரி, பஜ்ஜி, சூப் போன்றவற்றை ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவதை அறவே தவிருங்கள்.

7. முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரைதான் டெங்கு பாடாய் படுத்துகிறது. ஏனெனில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது முன் கூட்டியே தெரிந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி மாத்திரை,மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.

8. வீட்டை ச்சுற்றி தண்ணீர் தேங்கவிடாதீர்கள். வீட்டுச் சுவர்களின் வெளிப்புறத்தில் டி.டி.டி மருத்துகளை தெளிக்கவும். கைகால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் வகையிலான உடைகளை அணியுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு ஆற வைத்து பருகுங்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. ஆனால் டெங்குவை நம்மால் ஒழிக்க முடியும் என்பதை மனதில் வைத்து செயல்படுவோம்.

பட்டதாரிகள் ஓட்டம்:மத்திய அரசு ஆசிரியர் பணி வேண்டாம்

கே.வி., எனப்படும், 'கேந்திரிய வித்யாலயா' மத்திய அரசுப் பள்ளிகளில் பணியாற்ற, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டாததால், இதற்கான தகுதித் தேர்வில் பங்கேற்போர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மத்திய அரசின், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


'சிடெட்' தேர்வு:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள், மாநில அளவில், ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை நடத்துகின்றன. மத்திய அரசின் சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வான, 'சிடெட்' நடத்தப்படுகிறது.இந்த ஆண்டில், இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, சிடெட் தேர்வு முடிவுகள், இரு தினங்களுக்கு முன் வெளியாயின.

6.55 லட்சம் பேர் எழுதிய அந்த தேர்வில், 1.14 லட்சம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்; இது, 17.48 சதவீதம். இதில், தமிழகத்தைச் சேர்ந்தோர் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதிலும் பலர், பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் என்பது கூடுதல் தகவல்.

பணிச்சுமை:

இதுகுறித்து கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்கள் கூறியதாவது:கே.வி., பள்ளிகளில் ஆசிரியராக சேர, சிடெட் தேர்வில் தேர்ச்சி அவசியம்; ஆங்கிலம், இந்தி போன்ற மொழிப் பாடங்களை அனைத்து ஆசிரியர்களும் எடுக்க வேண்டும்; பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதேநேரம், தமிழக பட்டதாரிகளில் பலருக்கு, இந்தி தெரிவதில்லை; இந்தி தெரியாமல், கே.வி.,யில் பணியாற்றுவது மிகக் கடினம்.

இந்தி மொழி தெரியாவிட்டால், 'பணியில் செயல்திறன் சரியில்லை' எனக் கூறி, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது இந்த பள்ளிகளில் சாதாரணம். மேலும், ஒழுங்கு நடவடிக்கையாக, வடமாநிலங்களுக்கு பணியிடம் மாற்றப்படுவர். இதுபோன்ற பிரச்னைகளால், மத்திய அரசு ஆசிரியர் பணிக்கு, தமிழக பட்டதாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும், தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வு போல் அல்லாமல், மத்திய அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதும் இன்னொரு முக்கிய காரணம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அரசுப் பணிகளுக்கு தமிழகத்தில் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்படுமா?-

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி, குரூப்-டி பணிகளுக்கு ஜனவரி முதல் நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் குரூப்-பி சார்நிலைப்பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்துசெய்யப்படுமா? என்று போட்டித்தேர்வுக்குப் படித்து வரும் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.


தேவையில்லாத சிபாரிசுக்கும், ஊழலுக்கும் வழிவகுப்பதாகக் கூறி மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வு 2016ஜனவரி முதல் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு பணிகளில் உதவியாளர், வருமானவரி ஆய்வாளர், கஸ்டம்ஸ் மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு அதிகாரி, உதவி அமலாக்கப்பிரிவு அதிகாரி, அஞ்சல்துறை ஆய்வாளர், மத்திய போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட குரூப்-பி பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வு இருக்காது.

எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு பணி உறுதியாகிவிடும்.குரூப்-பி, சி, டி பணிகளுக்கான நேர்முகத்தேர்வை மத்திய அரசு ரத்துசெய்திருப்பது தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் குரூப்-பிசார்நிலைப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வை ரத்துசெய்யுமா? என்ற எதிர்பார்ப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குப் படித்து வரும் இளைஞர்களிடையே எழுந்துள்ளது.

தமிழக அரசில் சார்நிலைப் பணிகளாக கருதப்படும் நகராட்சி ஆணையர் (கிரேடு-2), உதவி பிரிவு அதிகாரி, துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர் (கிரேடு-2), உதவி தொழிலாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,பேரூராட்சி நிர்வாக அதிகாரி (கிரேடு-2) போன்ற பதவிகள் குரூப்-பி பணிகளின் கீழ் வருகின்றன.

இதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த பணிகளுக்கான எழுத்துத்தேர்வுக்கு (மெயின் தேர்வு) 300 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றிபெற நேர்காணல் மதிப்பெண் முக்கியம் என்றாலும் எந்த பணி என்பதை முடிவுசெய்வதில் அதற்குப் பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் எழுதுவது குரூப்-2தேர்வைத்தான்.மத்திய அரசைப் போல் தமிழகத்திலும் குரூப்-பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வை அரசு ரத்துசெய்ய வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் கூறும்போது, “ஆளுமைத்திறன் அவசியம் தேவைப்படும் குரூப்-1 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு தேவைதான். ஆனால், சார்நிலைப்பணிகளுக்கு நேர்காணல் அவசியமில்லை. நேர்காணல் நடத்த வேண்டியிருப்பதால் தேவையில்லாமல் பணிநியமனத்துக்கு காலதாமதம் ஆகிறது. எனவே, மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் குரூப்-பி பணிகளுக்கு நேர்முகத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும்” என்றார்.


இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி கூறும்போது, “குறிப்பிட்ட சில பணிகளுக்கு நேர்முகத்தேர்வு தேவைதான். ஆனால், பெரும்பாலான அரசு பணிகளுக்கு நேர்முகத்தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று. நேர்முகத்தேர்வை நீக்கினால் தகுதியும், திறமையும் மிக்கவர்களின் வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்படும். எனவே, தமிழக அரசும் நேர்முகத்தேர்வை தாராளமாக ரத்துசெய்யலாம். அதேநேரத்தில் எழுத்துத்தேர்வு நேர்மையாக நடத்தப்படுவதும் உறுதிசெய்யப்பட வேண்டும். “ என்றார். “அரசு பணிக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படுவது பணம் சம்பாதிப்பதற்கும், மோசடி நடப்பதற்கும்தான் வழிவகுக்கும். எழுத்துத்தேர்வு மூலம் திறமை அடிப்படையில் பணி வழங்கிவிடலாம். நேர்முகத்தேர்வு தேவையே இல்லை” என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் வி.பாலமுருகன் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளிலும், மழை வழிபாடு நடத்த உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும், காலையில் நடக்கும் பிரேயர் கூட்டத்தில், மழை வேண்டி வழிபாடு நடத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும், ஒரு கோடியே, 11 லட்சம் மாணவ, மாணவியரும், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் உள்ளனர்.



தினமும் பள்ளியில் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில், தமிழ்தாய் வாழ்த்து, செய்திகள், பள்ளி நிகழ்வுகள், தேசிய உறுதிமொழி உள்ளிட்டவை நடைபெறும். இதில், மழை பொழிய வேண்டும் என இயற்கையை வேண்டும் வகையில், 'மழை வாழ்த்து' பாட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுநலம் கருதி, மக்கள் மழைக்காகபிரார்த்தனை செய்கின்றனர். மாணவர்களிடையே பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இயற்கையை வேண்டி மழை பொழிந்தால்தான், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பினால்தான் நீர் வரத்துபெருகும் என்பதை எடுத்துக்கூற வேண்டும்.

'மழை வேண்டி பிரார்த்திப்போம்,
மழை நீரை சேமிப்போம்,
ஏரி கிணறு, ஏரி, குளம், ஆறு நிரம்பி வழிய,மாரி அளவாய் பொழிக,
மக்கள் வளமாய் வாழ்க!'

என்ற மழை வாழ்த்தை, தினமும் காலையில் நடக்கும் பிரார்த்தனை கூட்டத்தில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: மழை பொழிய வேண்டும் எனில், மரங்கள் நிறைய நடவும், இயற்கை சூழலை கெடாமல், பாதுகாக்கவும் வேண்டும் என்பது அறிவியல் காரணம். இதற்கான விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தாமல், மழை வேண்டிய தினமும் பிரார்த்தனை செய்வோம் என்பது ஏற்க முடியாதது. காடுகளையும், இயற்கை சூழலையும், அழித்துக்கொண்டு, மழை வாழ்த்தை பாடினால் மழை வருமா என்ற மாணவர்களின்கேள்விக்கு, பதில் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இணையதளத்தில் TNPSC Group-I Hall Tickets வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.9/2015. நாள் 10.07.2015 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட group -I -2015-க்கான Preliminary Examination  08.11.2015 அன்று முற்பகல் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. 

தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நுழைவுச்சீட்டுகள் தேர்வாணைய வளைதளம் www.tnpsc.gov.in - ல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருப்பின் contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது தேர்வாணையத்தின் குறை தீர்க்கும் மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1800 425 1002 மூலமாகவோ கேட்டு தெளிவு பெறலாம்.

அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் MBC., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் MBC மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மிக பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சீர்மரபினர் மாணவியருக்கு ஆண்டுக்கு1,000 ரூபாய் வீதம், ஆறாம் வகுப்பிலிருந்து, உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
தற்போது, வருமான வரம்பை நீக்கி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவியர் அனைவருக்கும், உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, விடுபட்ட மாணவியரின் வங்கிக்கணக்கு விபரங்களை சேகரிக்கும் பணியை, விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.