யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

23/9/16

அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணிபெண்களுக்கு 6 மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேறியது.

தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துத் துறைகளிலும்பணியாற்றும் பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும்3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதங்களாக அதிகரிக்க வகை செய்யும் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.


இதன்படி,அனைத்துத் துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் மகப்பேறு கால விடுப்பு கிடைக்கும்50க்கும் மேற்பட்ட ஊழியர் பணியாற்றும் நிறுவனத்தில் குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும்பச்சிளம் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் தாய்மார்களுக்கு 3 மாதம் விடுப்பு கிடைக்கும்மசோதா நிறைவேறியதால் 10.80 லட்சம் பேர் பயன்பெறுவர்.

10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும்.
காலை, 9:15 மணி முதல், 9:25 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களில், தேர்வு எழுதுவோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 9:30 மணி முதல், நண்பகல், 12:00 வரை தேர்வு நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா?

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது. தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.

இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Cumulative Register From 1St STD To 8th STD மாணவர் திரள் பதிவேடு

புத்தகப் பையால் ஆபத்து: சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

மாணவர்கள் தோளில் தொங்கும்படி, புத்தகப் பைகளை கொண்டு சென்றால், முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்படும்' என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.


இது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவுரை:

அதிக சுமை உள்ள பள்ளி புத்தகப் பைகளை, நீண்டகாலம் மாணவர்கள் சுமப்பது, அவர்களின் உடல் நலனில் எதிர் விளைவை ஏற்படுத்தும். இளம் குழந்தைகள் வளர வேண்டிய நிலையில், அவர்களுக்கு, முதுகு தண்டுவடத்தில் வலி, தசை வலி, தோள் வலி, மயக்கம் உட்பட, பல பிரச்னைகளை ஏற்படுத்தும்
முடிந்த அளவுக்கு அன்றைய வகுப்புக்கான, பாடப் புத்தகங்களை மட்டுமே மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும். பள்ளி பயன்பாட்டு புத்தகம் மற்றும் நோட்டுகளை, பள்ளியிலேயே வைத்துக் கொள்வது நல்லது
பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு எடை குறைந்த, இரு தோள்களிலும் மாட்டக்கூடிய, பெல்ட் உடைய பைகளையே வாங்க வேண்டும்
பள்ளிக் குழந்தைகள், தங்களின் புத்தகப் பைகளில், விளையாட்டு பொருட்கள் மற்றும் தாங்கள் விரும்பும் பல பொருட்களை வைத்துக் கொள்வது வழக்கம். அதனால், எடை கூடும் என்பதால், பெற்றோர், தினமும் சோதிக்க வேண்டும்
குழந்தைகளின் தோளில், பைகள் இறுக்கமாக இருக்க வேண்டும்; அங்கும், இங்கும் தொங்கினால், தோள்களை பாதிக்கும்.இவ்வாறு அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

சென்னை: தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூனில் நடந்தது. அரசு கல்லுாரிகளில், 2,379 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; அரசு பல் மருத்துவக் கல்லுாரிகளில், 85; சுயநிதி கல்லுாரிகளில், 470 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

ஒதுக்கீடு பெற்ற, 143 பேர், இன்ஜினியரிங் உட்பட, பிற படிப்புகளில் சேர்ந்ததால், அந்த இடங்கள் காலி இடங்களாக மாறின. அவற்றுக்கும், சுயநிதி கல்லுாரிகளின், 970 பி.டி.எஸ்., இடங்களுக்கும் சேர்த்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, ஏழு சுயநிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது; இதில், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு, 593 இடங்கள் கிடைத்துள்ளன. மேலும், மூன்று சுயநிதி கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதால், மாநில ஒதுக்கீட்டிற்கு, 275 பி.டி.எஸ்., இடங்களும் கிடைத்துள்ளன. இதையடுத்து, கலந்தாய்வில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; வரும், 24ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க உள்ளது. கூடுதலாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்துள்ளது, காத்திருந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சியை
அளித்துள்ளது.

வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தேனி:உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குச்சீட்டுக்கள் பயன்படுத்தும் வாக்குச்சாவடியில் ஏழு அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தவிர்த்து ஊராட்சி, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

இதனை பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு தலைமை அலுவலர் மற்றும் 6 பேரை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. அதன்படி அடையாளம் காணும் அலுவலர், விரலில் மை வைக்கும் அலுவலர், ஊராட்சி தலைவருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான வாக்குச்சீட்டு வழங்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பொறுப்பாளர் என ஆறுபேர் நியமிக்கப்பட உள்ளனர். சில ஊராட்சிகளில் பெரிய வார்டில் இரண்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுபோன்ற வார்டு வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அலுவலருடன் 8 பேர் பணியாற்றுவர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதால், அந்த வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர், அடையாளம் காணும் அலுவலர், விரல் மை வைக்கும் அலுவலர், கன்ட்ரோல் யூனிட்
அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்களாக
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளது.

உள்ளூரில் தேர்தல் பொருட்கள் கொள்முதலில் புதிய நடைமுறை

சிவகங்கை: உள்ளூரில் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, சில விதிறைகளை கடைபிடிக்க வேண்டுமென, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு பெறுவதில் இருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை, 72 வகையான பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் படிவங்கள், உறைகள் போன்றவை மாநில தேர்தல் ஆணையமே அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் ஜெம் கிளிப், குண்டூசி, பிளேடு, சணல் கயிறு, துணி, மை குப்பி வைக்கும் கோப்பை, தள்ளுகோல், தாள், சுவரொட்டி, முத்திரை மை என, 40க்கும் மேற்பட்ட பொருட்களை உள்ளூரில் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில் கடந்த காலங்களில் விலை நிர்ணயத்தில் மாறுபாடுகள் காணப்பட்டன. இதனால் அவற்றை கொள்முதல் செய்வதில் சில நடைமுறைகளை கடைபிடிக்க தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. கொள்முதல் செய்யும் பொருட்களின் அதிகபட்ச விலையை கலெக்டர், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட கருவூல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் அடங்கிய குழுக்களே நிர்ணயிக்க வேண்டும். இந்த தொகைக்கு மிகாமல் தேர்தல் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்; இதில் எந்த குழப்பமும் இருக்க கூடாது என, ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு, 'டெங்கு, சிக் குன் குனியா' போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை

* மாணவர்கள் உணவு உண்ணும் முன், இரு கைகளையும் சோப்பால் சுத்தம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

* வகுப்பறை மற்றும் கழிவறையை சுற்றியோ, பள்ளி வளாகத்திலோ நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்; குடிநீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்
* கொசு உற்பத்தியாகும் குப்பை, பொருட்களை சேர்க்காமல், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
* மாணவர்கள், காய்ச்சி வடிகட்டிய குடிநீரையே பருக அறிவுறுத்த வேண்டும்
* காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தாவுடன், ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்து, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப்புகள்

ராமநாதபுரம்: உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, மூன்று வகையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவு: உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்.,19ல் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்குபின் செப்.,26ல் வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப் படுகிறது. இதில் சேர்க்கப்பட்டவர்களும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்.
மேலும், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களின் பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் ஆர்.டி.ஓ., அலுவலகங் களுக்கு செல்ல வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பித்தால் போதும். பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் பெயர் வார்டு மாறி இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் பிரிவு அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்ப்பவர்கள் மட்டும் ஆர்.டி.ஓ., மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு

ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.
இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை (மே, டிசம்பர்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள் தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற்கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.
மேலும் ஊரகம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் 50 சதவீதம் பெண்கள், இனசுழற்சி பட்டியல், சென்னையில் சில தினங்களாக அச்சடிக்கப்பட்டன.

பூர்வாங்க பணிகள் முடிந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், இன்று காலை முக்கிய ஆலோசனை நடக்கிறது. மாநில தேர்தல் கமிஷனர் சீதாராமன், செயலர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில் முடிவு எடுக்கப்பட்டு, தேதி அறிவிக்கப்படும்.

பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு.

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் நடந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக் கல்வித்துறையில் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து செயலாளர் சபிதா விளக்கினார்.

மேலும், தற்போது நடக்கும் காலாண்டுத் தேர்வுகள் முடிந்த பின் அறிவிக்கப்படும் விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவ மாணவியருக்கும் இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன் நாபார்டு திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டத்திலும் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

TRUST EXAMINATION 2016 - HALL TICKET DOWNLOAD

தொலைநிலைக் கல்வி மைய தேர்வு ரத்து உயர்நீதிமன்றத்தில் பல்கலை தகவல்.

மதுரை, மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ், தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், 400 மாணவர்கள் சேர்க்கை, தேர்வை ரத்து செய்யபல்கலை நிர்வாகம் பரிந்துரைத்தது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தர்மபுரி குளோபல் அகாடமி பார் மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் நவீன்குமார் தாக்கல் செய்த மனுஎங்கள் கல்வி மையம், மதுரை காமராஜ் பல்கலையால் பதிவு செய்யப்பட்டது. தொலை நிலைக் கல்வி மையம் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த 2013ல், பல்கலையுடன் ஒப்பந்தம் செய்தோம். 2015----16 கல்வி ஆண்டில் எங்கள் மையம்மூலம், 400 மாணவர்கள் தொலை நிலைக் கல்வியின் கீழ் படித்தனர்.வேலுார் மாவட்டம் திருப்பத்துாரில் ஒரு பள்ளியில், 2015 மே 17 ல் தேர்வு நடந்தது.

ஓராண்டிற்கு மேலாகியும், விடைத்தாளை மதிப்பீடு செய்யவில்லை; தேர்வு முடிவு வெளியாகவில்லை. விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, தேர்வு முடிவை வெளியிட உத்தரவிட வேண்டும், என மனு செய்திருந்தார்.நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார்.பல்கலை தேர்வு, ஒழுங்குமற்றும் மாணவர்கள் நலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, பல்கலை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.அதன் விபரம்: தேர்வு 2015 மே 16 முதல் ஜூன் 5 வரை நடந்தது. தர்மபுரி மையத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வு எழுதியதாக கூறுவதில், முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வருகிறோம். ஆகையால், 400 மாணவர்களின் தேர்வு மற்றும் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும். அவர்களை மீண்டும் பல்கலையில் எந்த படிப்பிலும் சேர அனுமதிக்கக் கூடாது. தர்மபுரி மையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டது.

பல்கலை வழக்கறிஞர், ''குழுவின் பரிந்துரை, நடவடிக்கைக்காக உயர்கல்வித்துறை செயலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,'' என்றார்.நீதிபதி செப்.,29 க்கு ஒத்திவைத்தார்.

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

அரசு ஊழியர்களின் கடித எண்கள்

         அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

       ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.

ந.க எண் = நடப்புக் கணக்கு எண்
ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்
நி.மு. எண் = நிரந்தர முடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண்
தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்
ப.வெ எண் = பருவ வெளியீடு எண்
நே.மு.க எண் = நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை விரைந்து சொல்லவேண்டும்.

இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது.

வனத்துறை தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2-வது பட்டியல் வெளியீடு.

தமிழ்நாடு வனத்துறை தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கான2-வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், வனவர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் கட்- ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட்மாதம் வேளச்சேரியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் நியமன இடஒதுக்கீடு அடிப்படையில் 2-வது பட்டியல் தயார் செய்யப்பட்டு, வனத்துறை இணையதளமான www.forests.tn.nic.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே நடைபெற்ற சான்றிதழ் சரி பார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து அசல் சான்றுகளின் நகல் களையும், வரும் 30-ம் தேதிக்குள் தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வு குழும உறுப்பினர் செயல ருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல் ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு நன்றி

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள்கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.கூட்டமைப்பு தலைவர் துளசி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்தசம்பளம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. 
புதுச்சேரியில் நிதி நிலைமை சீரமைத்த பிறகு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.இந்நிலையில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை சிறப்பு அறிவிப்பு மூலம், பட்ஜெட் கூட்டம் முடிவதற்குள் சட்டசபையில்அறிவிக்க வேண்டும் என, புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அதனை ஏற்ற முதல்வர் நாராயணசாமி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் செப்., மாதத்தில் பதிய சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.இதற்காக, கூட்டமைப்பு சார்பில், கவர்னர் மற்றும் முதல்வர் நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை 27-9-16 குள் Off line ல் பூர்த்தி செய்ய திண்டுக்கல் CEO அவர்கள் செயல்முறைகள்

3 வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளை பேச வைக்கலாம்: சென்னை பாலவித்யாலயா பள்ளியில் இலவச பயிற்சி.

மூன்று வயதுக்கு உட்பட்ட காதுகேளாத குழந்தைகளைப் பேச வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி சென்னையில் உள்ள பாலவித்யா லயா காதுகேளாதோர் பள்ளியில் இலவசமாக அளிக்கப்படுகிறது.சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் இயங்குகிறது பாலவித் யாலயா காது கேளாதோர் பள்ளி. இங்கு, காதுகேளாத குழந்தைகள்சேர்க்கப்பட்டு அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் கவுரவ இயக்குநர் சரஸ்வதி நாராயணசாமி, முதல்வர் வள்ளி அண்ணாமலை, துணை முதல்வர் மீரா சுரேஷ் ஆகியோர் கூறிய தாவது:

பெரும்பாலும் குழந்தைகள் 3-வது மாதம் முதல் 4-வது மாதத்தில் குப்புறப் படுக்க ஆரம் பிக்கும். தலையைத் தூக்கி இங்கும் அங்கும் பார்க்கும். எப்போது நாம் அதன் பெயரை அழைக்கிறோமோ அப்போது அது ஆசையுடன் சத்தம் வரும் திசையை நோக்கி எட்டிப் பார்க்கும். முதலில் சத்தத்தை உணர்ந்து கொள்ள முயற்சிக்கும். அதன்பிறகு அந்தச் சத்தம்எங் கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடிக்கும்.பின்னர் சத்தத்தை வேறுபடுத்திப் பார்த்து, அதில் இருந்து ஓர் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும். அதைத்தொடர்ந்து தானாக பேசும் கலையை குழந்தையே வளர்த்துக் கொள்ளும்.

ஆனால் இந்த திறமை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைப்பதில்லை. பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை காதுகேளாக் குறைபாடுடன் பிறக் கிறது. காது கேளாத காரணத் தால் பேசும் திறன் அந்தக் குழந் தைக்கு இருக்காது. இதை நாம் சிறுவயதிலேயே கண்டுபிடிக்க முடியும். குழந்தைப் பிறந்த உடன் பரிசோதித்துப் பார்க்கும்போது காது கேட்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம். மேலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்போதும் தெளிவாக உணர முடியும்.குழந்தைக்குக் காது கேட்கவில்லை என்பதை நாம் உணர்ந்த வுடன் கேட்கும் திறனைப் பரிசோதிக் கும் ஆடியோ வல்லுநர்களிடம் பரிசோதனைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

குழந்தைப் பிறந்து 3 முதல் 4 மாதங்களில் ஒரு தாய் தனது குழந்தையைக் கூப்பிடும்போது அது சத்தம் வரும் திசையை நோக்கி பார்க்கிறதா? அல்லது பார்க்காமல் இருக்கிறதா? என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாக குழந்தையை காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது ஆடியோ நிபுணர்களிடம் கொண்டு செல்லவேண்டும். 3 வயதுக்குள் கண்டுபிடித்துவிட்டால் குழந்தை மிக விரைவிலேயே பேசும் திறனையும் கேட்கும் திறனையும் கற்றுக்கொண்டு மற்ற குழந்தை கள் போன்று இயல்புநிலையை அடைந்து இதர குழந்தைகளுடன் சேர்ந்துகொள்ளும்.காதுகேளாத குழந்தைக்கு காது கேட்கும் கருவியை பொருத்துவது மூலமாக அது சத்தத்தை உணர்ந்து கொள்ளும். ஆனால், குழந்தை தானாக பேசுவதற்குக் கற்றுக் கொள்ள தனியாக பயிற்சி அளிக்க வேண்டும்.

இந்தச் சிறப்புப் பயிற்சியால், காதுகேளாத குழந்தை மற்றவர்கள் பேசுவதைப் போல் பேச கற்றுக்கொள்ளும். எங்கள் பள்ளியில் காதுகேளாத குழந்தைகளுக்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் இலவசமாக அளிக்கிறோம். பொது வாக, காதுகேளாத குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்கும் அனைத்துப் பள்ளிகளும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைத்தான் சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் எங்கள் பள்ளியில், பிறந்தது முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை சேர்த்துக் கொள்கிறோம். இங்கு சேர குழந்தைகளுக்குக் குறைந்தபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகள் கூட சேர்த்துக் கொள்கிறோம்.

பெரியவர்கள் பேசுவதைக் கேட்கவும் பின்னர் அதற்கு ஏற்ப பதில் அளிக்கவும் இளம் பரு வத்தில் இருந்தே இந்தக் குழந்தை களுக்குப் பயிற்சி அளிக்க ‘தவானி’ என்ற முறையைப்பின் பற்றுகிறோம். இங்கு 3 முதல் 4 ஆண்டுகள் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மூலம் குழந் தைகள் வாசிக்கவும் எழுதவும் எண்கள் அடங்கிய கணக்குகளைப் போடவும் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் 5 முதல்6 வயதுக்குள் இந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்து பொது வான பள்ளிகளில் சேர்ந்துவிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக அரசில் துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரசின் மீன்வளத்துறையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள துணை ஆய்வாளர், ஃபோர்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: துணை ஆய்வாளர் (Fisheries Department)
காலியிடங்கள்: 12
தகுதி: Fishery Science  படிப்பில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது விலங்கியல் படிப்பை முக்கியப் பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
பணி: ஃபோர்மேன்
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.3,900-34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்க்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை:http://tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.tnpsc.gov.in/notifications/2016_18_not_eng_si_of_fisheries.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

TNTET:தகுதித்தேர்வு குழப்பத்தால் தமிழகத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி மேற்கொள்ள வேண்டுமானால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு கொண்டு வந்தது.இதன் அடிப்படையில் தகுதித் தேர்வும் 3 முறை நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். 
தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வேலையில் நியமிக்கப்பட்டனர்.ஆசிரியர்கள் தகுதித் தேர்வை அரசு உதவி பள்ளியில் பணியாற்றக் கூடியவர்களும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. 2010-ம் ஆகஸ்டு மாதம் 23-ந்தேதிக்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அரசு ஆணை வெளியிட்டு இருந்தது.இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.                                                                                           இந்த நிலையில் தகுதித் தேர்வு எழுதுவதற்கு அரசு அளித்த 5 ஆண்டு காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் தேர்வு எழுத முடியாமல் சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவிக்கிறது. தகுதித் தேர்வு நடைபெறாமல்இருப்பதாலும் குறிப்பிட்ட காலம் முடிவடைவதாலும் தங்களது ஆசிரியர் பணிக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறார்கள்.இதற்கிடையில் தகுதித் தேர்வு தொடர்பாக 2 வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகின்றன. இதனால்தான் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.                                                                               இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் கூறுகையில், தகுதித் தேர்வு எழுதுவதற்கானவாய்ப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தரவேண்டும். ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

B.LIT பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபின் B.ED தேர்ச்சிக்கு ஊக்க ஊதியம் (INCENTIVE) அளிக்க கூடாது - தொடக்கக்கல்வி இயக்குனர் தெளிவுரை