துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான நேர்காணல் வருகிற 21ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது
இது குறித்து டி.என்.பிஸ்.சி. நேற்று வெளியிட்ட அறிவிப்பு
குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது
இது தொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், நேர்முகத்தேர்வுக்கான குறிப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பதாரர் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது
நேர்காணல் தேர்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும், முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது