யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/9/17

ரூ.1,307 கோடி நன்கொடை: இந்திய தம்பதி தாராளம்!!

அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக, அமெரிக்க வாழ் இந்திய டாக்டர் தம்பதி,
1,307 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

இந்தியாவை பூர்வீகமாக உடைய, கிரண் படேல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், தம்பாவில், மருத்துவ சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி, பல்லவி படேலும் டாக்டராக உள்ளார். இருவரும் சேர்ந்து, மியாமியைச் சேர்ந்த நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு, 1,307 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

பல்கலை சார்பில், தம்பாவில் புதிய மருத்துவமனை வளாகம் கட்டுவதற்காக, நிலம் மற்றும் ரொக்கத்தை அவர்கள் நன்கொடையாக அளித்து உள்ளனர்.

தமிழகத்தின் பஞ்சமில்லா பரபரப்புகளும்; பற்றி எரியும் வதந்'தீ'களும் ....

சூடான காப்பி டீ மட்டுமல்ல சூடான செய்தியும் கூட நம்மை சுறுசுறுப்பாக்கும் என்பதற்கு சமீபத்திய 
தமிழக அரசியல் சூழலை உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு நாட்டின் நிகழ்வுகள் நம்மை விழிப்படைய செய்து விறுவிறுப்பாக வைத்திருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஏறத்தாழ ஒரு க்ரைம் நாவல் படிக்கும் வாசகனைப் போல் நம் எல்லோரையுமே ஆக்கி வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசயமும் தமிழக அரசியல் போக்கும், நாளுக்கு நாள் கணிக்க முடியாத அளவுக்கு திருப்பங்களும் நகர்வுகளும் நிறைந்ததாக இருப்பதோடு, அரசியல் நோக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண டீக்கடை விவாதங்களிலும் சந்தை வியாபாரிகள் மத்தியிலும் சூடு பிடித்திருப்பதை காணமுடிகிறது.

அதேசமயத்தில் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் மீம்ஸ்களும், வதந்திகளும் வேறு தன் பங்கிற்கு மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்து அழகு பார்க்கிறது. காவல் துறை ஆணையரின் இன்றைய அறிவிப்பானது அதற்கு மேலும் வழிவகுத்தது போல் இருந்தது.

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த  உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, முக்கிய புள்ளிகளில் யாராவது மரணமா என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது. இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின.

பாதுகாப்பு வேண்டும்: பிரதமருக்கு மாணவிகள் கடிதம்!!!

பல்கலை வளாகத்துக்குள் பாதுகாப்பு வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பனாரஸ் 
இந்து பல்கலைக்கழகத்தின் மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவிக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதைக் கண்டித்து கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசிக்குச் சென்றிருந்தபோது பாதுகாப்பு இல்லை எனக் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமான மாணவ - மாணவியர் காயம் அடைந்தனர். மேலும் சில மாணவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு வேண்டி மாணவிகள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அதாவது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் பேச வாய்ப்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு, நிர்வாகத்தின் ஆதரவு, ஆண் பெண் சமத்துவம் ஆகிய அடிப்படைத் தேவைகள்தான் எங்களுக்கு வேண்டும். ஆனால், அது தவிர பெண்கள்மீது லத்தி - சார்ஜ், கண்ணீர்ப்புகை மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசுதல், பல்கலைக்கழக வளாகத்தை எரித்தல் மற்றும் 144ஆவது பிரிவுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை நடைபெறுகிறது. இதை எதையும் நாங்கள் விரும்பவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “நாங்கள் எங்கள் துணைவேந்தரிடம் பேச விரும்புகிறோம். அவரிடம் பேச இரு நாள்களாகச் சாலையில் அமர்ந்திருக்கிறோம். ஆனால், அவர் எங்களிடம் பேச தயாராக இல்லை என்று தெரிகிறது. மோடி ஜி இதுபற்றி உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூட நினைக்க முடியாது. ஏனெனில் சம்பவத்தின்போது நீங்கள் உங்கள் தொகுதியில் இருந்துள்ளீர்கள். இந்தச் சம்பவம் உங்கள் கவனத்துக்கு வரவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ஒரு மாணவி தெரிவித்திருக்கிறார்.

“எங்களுடைய கோரிக்கை எளிமை மற்றும் நேரடியானது. அதாவது துணைவேந்தர் எங்களைச் சந்தித்து பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உறுதியளித்திருந்தால் எதிர் நடவடிக்கைகள் தேவைப்பட்டிருக்காது. நாங்கள் பல்கலைக்கழகத்துக்குப் படிக்க வந்திருக்கிறோம், வன்முறையைச் சந்திக்க அல்ல” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அரசு செயலாளர்,கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு சம்பளம் வழங்கக் கூடாது-சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

B.Ed - பயிற்சிக்கு பள்ளியில் அனுமதி!!!

தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்கள், பணிபுரியும் பள்ளிகளிலேயே 
பயிற்சி எடுக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பு மட்டும் படித்துள்ளனர்.
இவர்கள், தங்களின் பதவி உயர்வுக்காக, பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., படிக்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள் மட்டும், பல்கலை தொலைநிலை கல்வியில், பி.எட்., படிக்க, அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள், அவரவர் பணியாற்றும் பள்ளியிலேயே கள பயிற்சி பெற, கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

வீடியோ விவகாரம் ; ஜெ. கூறியதையே நாங்கள் செய்தோம் - தினகரன் விளக்கம்!!!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில்
மர்மமே நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம்,  அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான். 
அந்நிலையில், ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்க்கவே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பின் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அதோடு, மருத்துவமனையில் ஜெ.வை சசிகலா வீடியோ எடுத்தார் எனவும், அந்த வீடியோ எங்களிடமே இருக்கிறது என சமீபத்தில் தினகரன் கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் ஜெயலலிதா உடல் மெலிந்து, நைட்டியில் இருந்தார். எனவே, கண்ணியம் கருதி அதை வெளியிடவில்லை என அவர் கூறியிருந்தார்.    
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : 
ஐசியு வார்டில் இருந்து சாதாரண அறைக்கு ஜெயலலிதா மாற்றப்பட்ட பின்புதான் சசிகலா அவரை வீடியோ எடுத்தார். அதுவும், ஜெயலலிதா கூறித்தான் அதை எடுத்தார். அதை ஊடகங்கள் கேட்கிறது என்பதற்காக நாங்கள் வெளியிட முடியாது.  
சசிகலா, நான் உட்பட நாங்கள் அனைவருமே ஜெயலலிதாவிற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் போலவே இருந்தோம். அவர் ஒரு துணிச்சலான பெண்மணி. ஜெயலலிதா உடனான அந்த நட்பிற்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என சசிகலா நினைத்தார். அதனால்தான் அந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை. தற்போது விசாரணைக் கமிஷன் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அதை அவர்களிடம் அந்த வீடியோவைக் கொடுப்போம்” என அவர் கூறினார்.

சலுகை விலையில் ஸ்மார்ட்போன்கள்: சாம்சங் விற்பனை யுக்தி!

                                                                                            
                                            
   சாம்சங் அதிகாரப்பூவ இணைய தளத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது
. இந்த விற்பனை வரும் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்களை தவிர்த்து ஸ்மார்ட்வாட்ச் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்ட சாதனங்களையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைத்துள்ளது.  
# சாம்சங் கேலக்ஸி S8 பிளஸ் (4ஜிபி ராம்) ஸ்மார்ட்போன் ரூ.60,900-க்கும், கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் ரூ.53,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
# சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.15,900-க்கும், 64 ஜிபி கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.   
# சாம்சங் கேலக்ஸி ஆன் 7 ப்ரோ, கேலக்ஸி ஜெ3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ரூ.7,590 மற்றும் ரூ.7,090 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  
# கேலக்ஸி ஆன் 7, கேலக்ஸி ஆன் 5 ப்ரோ, கேலக்ஸி ஆன் 5  ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.6,590, ரூ.6,490, ரூ.5,990-க்கு  விலையில் விற்பனை செய்யப்படுகிறது.  

மதுரையில் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியைக்கு கத்திக்குத்து ஆராய்ச்சி படிப்பு மாணவர் கைது!!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறையின் இணைப்பேராசிரியர்
மற்றும் துறைத்தலைவராக இருப்பவர் ஜெனீபா செல்வின் (வயது 45).

பல்கலைக்கழகத்தின் சினிமா கல்வியியல் துறையில் பகுதிநேர ஆராய்ச்சி மாணவராக இருப்பவர், குலமங்கலத்தை சேர்ந்த ஜோதிமுருகன் (32). இவர் பேராசிரியை ஜெனீபாவின் துறையில் நேர அடிப்படையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

ஜோதிமுருகனின் நடத்தை, வகுப்பு எடுப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளால் இந்த கல்வியாண்டில் அவருக்கு கவுரவ பேராசிரியர் பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர் துறைத்தலைவரான பேராசிரியை ஜெனீபாவை அடிக்கடி சந்தித்து வேலைவாய்ப்பு குறித்து வற்புறுத்தி வந்தார்.

இருப்பினும், மாணவ–மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து அவருக்கு பணி வழங்க முடியாது என ஜெனீபா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு இதழியல் மற்றும் அறிவியல் தொடர்பியல் துறைத்தலைவர் அலுவலகம் முன்பு ஜோதிமுருகன் நின்றிருந்தார்.

அப்போது, பேராசிரியை ஜெனீபா தனது அறைக்கு வந்தார். அவருடன் ஜோதிமுருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெனீபாவை குத்தினார். அவரது கழுத்து உள்பட உடலின் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவ–மாணவிகள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்தனர்.

அங்கு, கத்தியுடன் நின்று கொண்டிருந்த ஜோதிமுருகனை மாணவ–மாணவிகள் சரமாரியாக தாக்கினர். பின்னர் ஜெனீபாவை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி செய்தனர். அதன்பிறகு, பீபிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக கொண்டு போய்ச் சேர்த்தனர்.

தகவலறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆராய்ச்சி மாணவர் ஜோதிமுருகனை கைது செய்தனர்.

ஜோதிமுருகன் இதே பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி, எம்.பில்., படிப்புகளை முடித்த பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்திக்குத்து சம்பவம் நடந்த இடம் துணைவேந்தர் அலுவலகத்தின் அருகில் உள்ள தமிழ்த்துறையின் 2–வது மாடியில் அமைந்துள்ளது. சம்பவம் நடந்த போது மு.வ.அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடந்து கொண்டிருந்தது. இதனால் பல்கலைக்கழக வளாகம் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.

தகவல் அறிந்ததும், துணைவேந்தர் செல்லத்துரை ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, பேராசிரியை ஜெனீபாவை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆஸ்பத்திரியில் பேராசிரியைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையை கடந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பூரண குணமடைந்து விரைவில் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறேன்.

வேலைவாய்ப்பு கேட்ட ஆராய்ச்சி பிரிவு மாணவர் மீது பல்வேறு புகார்கள் வந்த காரணத்தால் அவருக்கு மீண்டும் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கவில்லை. அதற்காக பேராசிரியையை கத்தியால் குத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தகுதியும், திறமையும் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். இதை மாணவ–மாணவிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள், ஆபத்து இருப்பதாக தெரிந்தால் எனது கவனத்துக்கு கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவல் சுற்றறிக்கையாக அனைத்து துறைத்தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை !!

7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதைப் போல, மாநில அரசும் அமல்படுத்த வேண்டுமென அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.


இதையடுத்து, அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆராயுமாறு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான இந்தக்குழு , 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 149 சங்கங்களுடன் கடந்த மே மாதம் ஆலோசனை நடத்தி கருத்து கேட்டது. அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கும் மேற்பட்ட சங்கங்களுடன் கடந்த ஜூன் மாதம் கருத்து கேட்கப்பட்டது.

இதனிடையே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்மையில் நடத்திய வேலைநிறுத்த்தில் 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கையை பிரதானப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு தாங்கள் இறுதி செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார். முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது.

நிபுணர் குழுவின் இந்த அறிக்கையில் பிரதானமாக ஊதிய மாற்றங்கள், ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமலானால், அரசு ஊழியர்களின் ஊதியம் 25 சதவிகிதம் உயரும் என்பதால், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.