யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/3/17

அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு. 4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

அரசுபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை வெளியீடு.
4,384 பணியிடங்களை நிரப்ப சென்ற ஆண்டு நடை பெற்ற தேர்வுமுடிவுகள் நாளை வெளியிடப்படும் கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளது 

 அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு நாளை

வெளியீடு.  4,384 பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

DSE ; PAY ORDER FOR 31 TAMIL PG TEACHERS

PAY ORDER FOR 7979 BT POSTS FROM APRIL 2017 TO JUNE 2017

PENSION – New Health Insurance Scheme 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Amendment to head of account – Orders – Issued.

தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் புதிதாக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் சார்பான அரசாணை 199 நாள் 21.03.2017

ஐந்து பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் எப்படி உயரும்?!'' - கொதிக்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ஒரு வேதனையான கருத்தை பதிவு செய்திருக்கிறார். 'தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பி.எட்., எம்.எட்., படிப்புகளுக்காக, நாடு முழுக்க ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் பலவற்றிலும் அடிப்படை வசதிகள் இல்லை. அந்தக் கல்லூரிகளில் படித்த ஆசிரியர்களின் தரமும் மோசமாக இருக்கிறது. இதனால், மாணவர்கள் தங்கள் பெயரைக்கூட எழுதமுடியாத அளவுக்கு, அவர்களின் கல்வி நிலை மோசமாக இருக்கிறது' என வேதனையாகக் கூறியுள்ளார்.
நீதிபதியின் இந்தக் கருத்து மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளின் நிலை குறித்து கல்வியாளரும், பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.
"நீதிபதி என்.கிருபாகரன் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைக்கு கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த பெரும்பாலான மாணவர்கள், பின்னர் பி.எட்., எம்.எட். முடித்து, ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல தனியார் கல்வியியல் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் படிக்கும் மாணவர்கள் பலருக்கும் தரமான கல்வி சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அந்தக் கல்லூரிகளில் பயிலும் பல மாணவர்கள், கல்லூரிக்குச் சரியாக செல்லாமல், பணம் கொடுத்து வருகைச் சான்றிதழை பெறுகிறார்கள். இப்படியான மாணவர்கள் ஆசிரியர்களானப் பின்னர், அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதில்லை. இதனால், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும் தங்கள் பெயரையே எழுதத் தெரிவதில்லை. இதுதான் நீதிபதியின் வேதனையும்கூட.
2012- 13-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியான தகுதியுள்ள ஆசிரியர்கள்தான் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். விதிவிலக்காக, அரசுப் பள்ளிகளில் பணம் கொடுத்தும், மனப்பாட திறனால் தகுதியானதுமான ஆசிரியர்கள் சிலரைத் தவிர்த்து, மற்ற அனைவருமே திறமையான ஆசிரியர்கள்தான். ஒவ்வோர் ஆசிரியரும் தான் படித்த ஒரு துறை பாடத்தில்தான் திறமை மிக்கவராக இருப்பார். ஆனால், தமிழக அரசுதான் அரசுப் பள்ளிகளில் போதிய பணியிடங்களை நிரப்பாமல் இருக்கிறது. இதனால், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில் ஒரே ஆசிரியரே மாணவர்களுக்கு ஐந்து பாடங்களையும் எடுக்கும் நிலை இருக்கிறது. ஓர் ஆசிரியரால், எப்படி ஐந்து பாடங்களையும் நல்ல முறையில் கற்பித்து, திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? இத்தகைய அரசு பள்ளிகளின் தரமும் எப்படி உயரும்? என ஆவேசமாக கேள்வியை எழுப்புவதுடன் பிரின்ஸ் கஜேந்திரபாபு தனியார் பள்ளிகளில் இருக்கும் நிலையையும் கூறுகிறார்.
தனியார் பள்ளிகளிலோ குறைந்த ஊதியத்துக்குத் தகுதி குறைவான ஆசிரியர்கள் பலரை நியமிக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களுக்கு கடுமையான பணிச்சுமையும் கொடுக்கப்படுகிறது. மாணவர்களும் இத்தகைய தனியார் பள்ளிகளில் மனப்பாடம் செய்து படிப்பதற்கே தொடர்ந்து ஊக்கம் கொடுக்கப்படுகிறது. பெற்றோர்களும், தங்கள் பிள்ளை அதிக மார்க் எடுத்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்களே தவிர, பிள்ளையின் கற்றல் திறனைப் பார்ப்பதில்லை. சி.வி.ராமன், ராமானுஜம், அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை என எந்த அறிஞரையும் தனியார் பள்ளிகள் உருவாக்கவில்லை. இன்றைக்கும் சமூகத்துக்கு உதவும்படியாக பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான் என்பதை நாம் உணர வேண்டும்.
ஒருமாணவரைத் திறமையானவராகவும் எதிர்காலத்தின் நல்ல குடிமகனாகவும் மாற்றுவது, பள்ளி ஆசிரியர்களின் பணி. ஆனால், ஆசிரியர்களே வெறும் டிகிரி மட்டும் பெற்று, அந்த டிகிரிக்கு பொருத்தமான கல்வி அறிவுடன் இல்லாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய நிலை. இதனால், ஏராளமான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளின் நிலையை உடனடியாக ஆராய்ந்து, அடிப்படை வசதிகள், கல்வி கற்கும் தகுதியில்லாத கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதித் தேர்வினை நடத்தி, தகுதியுள்ள ஆசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும்" என்கிறர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

- கு.ஆனந்தராஜ்

இன்முகத்தோடு உங்கள் இல்லம் தேடி வருகிறார் தபால்காரர் இனிய அஞ்சல் சேவை உங்களுக்கு செய்ய

No automatic alt text available.

1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் ஒரே மாதத்தில் அழிப்பு: பரிசு வழங்கி மாணவர்களை ஊக்குவிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்



பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல மரங்களை ஒரே மாதத்தில் அழித்து அனைத்துத் தரப்பினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6, 7, 8, 9-ம் வகுப்புகளில் 174 பேர் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் குழுவாகவும், தனியாளாகவும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்பயனாக, இதுவரை 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்தவிழிப்புணர்வு நடவடிக்கைக்கு பள்ளித் தலைமையாசிரியர் துரைராஜ், முதுநிலை பொருளியல் ஆசிரியர் ராஜசேகரன், முதுநிலை தமிழாசிரியர் சிவக்குமார் ஆகியோர் தூண்டுகோலாக அமைந்துள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர் ராஜசேகரன் கூறியது:

சீமைக் கருவேல மரங்களை அழிப்பது தொடர்பாக பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கடந்த மாதம் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமிருந்து தலைமையாசிரியருக்கு இ-மெயில் வந்தது. இதையடுத்து, பள்ளித் தலைமையாசிரியரின் அறிவுரையின்படி நானும், ஆசிரியர் சிவக்குமாரும் சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பள்ளி இறைவணக்க நேரத்தில் மாணவர்களிடம் பேசினோம்.

வளர்ந்த சீமைக் கருவேல மரங்களை மாணவ, மாணவிகளால் வெட்ட முடியாது என்பதால், சீமைக் கருவேல செடிகளை வேருடன் பறிக்குமாறும், இதன்மூலம் ஓரிரு ஆண்டுகளில் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களே இல்லாத நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அறிவுறுத்தினோம்.
 

அதன்படி, கடந்த 20-ம் தேதி 69 மாணவ, மாணவிகள் 81,276 செடிகளையும், 21-ம் தேதி 18 மாணவர்கள் சேர்ந்து 2,479 செடிகளையும் பறித்து வந்தனர். தொடர்ந்து, பள்ளி நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஊர் முழுவதும் சீமைக் கருவேல செடிகளை அகற்றி வருகின்றனர். ஒரு மாதத்தில் இப்பகுதியில் இருந்த 1.24 லட்சம் சீமைக் கருவேல செடிகளைப் பறித்துள்ளனர்.

சீமைக் கருவேல செடிகள் ஒழிப்பு ஒருங்கிணைப்புப் பணியில் பள்ளியின் பிற ஆசிரியர்கள் சார்லஸ், அழகு சுப்பிரமணியன், முனியசாமி, சாந்தி, பவானி ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுத் தேர்வு முடிந்தபின், கோடை விடுமுறை நாளிலும் இப்பணியை தொடருவோம் என்று மாணவர்கள் உறுதியளித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் ஆர்வத்தை ஊக்குவிக்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் சொந்த செலவில் பென்சில், பேனா உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகின்றனர் என்றார்.


8,000 செடிகளை அழித்த ‘தனியொருவர்’
 

ஆசிரியர் ராஜசேகரன் மேலும் கூறும்போது, “பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் கிஷோர் மட்டும் ஒரே நாளில் தனியாளாக சுமார் 2,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துவந்தார். அவரை ஊக்குவிக்க டீ-சர்ட் பரிசு வழங்கினோம். தொடர்ந்து அவர் இதுவரை 8,000-க்கும் அதிகமான சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளார். அதேபோல, 9-ம் வகுப்பு மாணவிகள் கஜப்பிரியா, தனலட்சுமி, சவுமியா, தீபிகா, ராகவி, யுவஸ்ரீ ஆகியோர் இணைந்து 12,500 சீமைக் கருவேல செடிகளை பறித்துள்ளனர். யார் யார் எத்தனை செடிகளை பறித்து வருகின்றனர் என்று தனியாக பதிவேடு வைத்து பதிவு செய்து வருகிறோம்” என்றார்.

தொடக்கக்கல்வி - 24.3.2017 அன்று நடைபெற இருந்த உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் கலந்துரையாடல் பணிமனை ஒத்திவைப்பு

TET' தேர்வு கோடை விடுமுறையில் நடத்தப்படுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.

  இத்தேர்வு எழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால்மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை.

அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை. இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

TET தேர்வுக்கு விண்ணப்பித்தோர் 8 லட்சம் பேர்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க கடைசி நாளானநேற்று (மார்ச், 23)
வரை மொத்தம் 8 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், பி.எட்., படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 28 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வு ஏப்.,29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Lab Assistant Exam Result