யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/11/18

நீதிக்கதை

பெரிய குளம்

ஓர் ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.

வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப்பாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உணவாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.

அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.

ஒருநாள் கொக்கு தண்ணீருக்கு அருகாமையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து உண்ணவில்லை.

அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட ஒருநண்டு அதன் அருகே வந்து, "ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம்போல மீன்களைப் பிடித்துத் தின்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர்களே, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது.

கொக்கு தன் முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு, "நண்டுக் குழந்தாய், எனக்கோ வயதாகி விட்டது. இதுவரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லையெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தர மாட்டேன். ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேராபத்து ஒன்று வர இருக்கிறதே" என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.

"கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகிறது என்று கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் கேட்டது.

இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.

இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்;து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயிரும் பறி போய்விடப் போகிறதே என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது" என்று போலிக் கண்ணீர் வடித்தது கொக்கு.

கொக்கு சொன்ன தகவல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல்லாம் எட்டிவிட்டன.

அவையெல்லாம் திரண்டு கொக்கு இருக்குமிடம் வந்தன.

கொக்கு தாத்தா, எங்களுக்கு வரவிருக்கின்ற பேராபத்திலிருந்து தப்பிக் பிழைக்க வழியொன்றுமே இல்லையா? என அவை பரிதாபமாக கொக்குவிடம் கேட்டன.

"என் மீது உங்களுக்கெல்லாம் நம்பிக்கை இருந்தால் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். தொலைதூரத்தில் ஒரு காட்டின் நடுவே பெரிய குளம் இருக்கின்றது. அதிலுள்ள நீர் வற்றுவதில்லை காட்டுக்குள் இருப்பதால் செம்படவர்கள் அவ்வளவு தூரம் வரமாட்டார்கள் என் யோசனையை நீங்களெல்லாம் கேட்பதாக இருந்தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை என் முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.

எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.

கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.

மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.

கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.

ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.

கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது, இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நண்டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது.

கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென்றதும், நண்டு கொக்கை நோக்கி, "நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டது.

நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, "அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.

மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.

மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காகவே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொடுக்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக்கியது.

நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இயலவில்லை.

நண்டு அதன் கழுத்தைத் தனது கொடுக்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.

கெடுவான் கேடு நினைப்பான்.

அரசு ஊழியர் விடுப்பு : புதிய சலுகைகள் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, சில சலுகைகள் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் விபரம்:l சின்னம்மை, தட்டம்மை, பன்றிக்காய்ச்சல், பிளேக், ரேபிஸ் போன்றவை, தொற்று நோய்களாக கருதப்படுவதால், அவற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள், கூடுதல் நாட்கள், தற்செயல் விடுப்பு எடுக்க, அரசு அனுமதி அளித்துள்ளதுl சின்னம்மை மற்றும் தட்டம்மை பாதிப்புக்கு, ஏழு நாட்கள்; பன்றிக்காய்ச்சலுக்கு, ஏழு முதல், 10 நாட்கள்; பிளேக், ரேபிஸ் போன்றவற்றுக்கு, 10 நாட்கள் வரை, தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பெற, நகராட்சி, மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதார அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும்l குழந்தையை தத்தெடுக்க அளிக்கப்படும் விடுப்பு, 180 நாட்களிலிருந்து, 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதுl அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, முதல் பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இரண்டாவது பிரசவத்திற்கு, பேறுகால விடுப்பு எடுத்து கொள்ளவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவற்றுக்கான அரசாணையை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், ஸ்வர்ணா பிறப்பித்துள்ளார்.

கொடி நாள்

                                        
டிசம்பர் 7 ஆம் நாள் முப்படை வீரர் கோடி நாள் கொடி நாள் நிதிக்கு நன்கொடையினை வாரி வழங்குவீர்.

November 20 date for quiz Competitions - CEO Paper News! :

ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன?

ந.க எண், மூ.மு எண் என்றால் என்ன? - அரசு ஊழியர்களின் கடித எண்கள் விளக்கம்அரசூழியர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களென இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.   ஆகையால், இவ்விரண்டு வகையினருக்கும் கடிதவெண்கள் மாறுபடும். நம்மைப் பொறுத்தவரை மாநில அரசு ஊழியர்களின் கடித எண்கள் மிகமுக்கியமானவை என்பதால், அதுகுறித்து முதலில் தெரிந்து கொள்வது கட்டாயமாகும்.ந.க எண் = நடப்புக் கணக்கு எண்

ஓ.மு. எண் = ஓராண்டு முடிவு எண்
மூ.மு எண் = மூன்றாண்டு முடிவு எண்
நி.மு. எண் = நிரந்தர முடிவு எண்
ப.மு. எண் = பத்தாண்டு முடிவு எண்
தொ.மு எண் = தொகுப்பு முடிவு எண்
ப.வெ எண் = பருவ வெளியீடு எண்
நே.மு.க எண் = நேர்முகக் கடித எண்
இதில் நடப்புக் கணக்கு எண் மட்டுமே அதிகப் பயன்பாட்டில் இருக்கும். நேர்முகக் கடிதம் என்பது, கீழ்மட்ட ஊழியருக்கு, மேல்மட்ட ஊழியர் எழுதும் கடிதம். அதாவது, நேரடியாகப் பேசியதற்குச் சமம் என்பதால், அதற்கான பதிலை விரைந்து சொல்லவேண்டும்.
இவ்வெண்களில் எதுவொன்றும் இல்லாமல் எந்தவொரு கடிதம் யாருக்கு வந்தாலும், தனிப்பட்ட முறையில் தங்களைப் பாதிக்கும் என்பதால், சட்டத்துக்குப் புறம்பாகத் தங்களின் ஊழியப்பதிவேட்டில் பதியாமல் அரசூழியர்கள் அனுப்பிய கடிதம் என்றே பொருள். இதுவே, அவ்வூழியர் தனது ஊழியத்தில் கடமை தவறியுள்ளார் என்பதை நிரூபிக்கப் போதுமானது

உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் கொய்யாப்பழம்...!

கொய்யா பழத்தில் வைட்டமின் 'ஏ' இருப்பதால் ஆரோக்கியமான பார்வைத் திறனை மேம்படுத்தும் என்று அறியப்படுகிறது. மேலும் கண்பார்வை குறைதலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்வைத் திறனையும் அதிகரிக்கிறது. கொய்யாப்பழம் ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்துக்கு கொடுப்பதில்லை.


கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற மற்றா பழங்களுடன் கொய்யாப் பழத்தை ஒப்பிடும் போது கொய்யாவில் அதுவும் முழுக் கொய்யாப் பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையே உள்ளது. கொய்யாப்பழத்தில் விட்டமின் டி மற்றும் சி, கால்சியம் உயிர்சத்துக்கள் அடங்கியுள்ளன. வைட்டமின் 'சி' நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது. கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது. கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது.

எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும். கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் அது கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் கருவுக்கும் கண் குறைப்பாட்டை போக்க உதவுகிறது. கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9 போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.

குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது

தினமும் பீட்ரூட் ஜூஸ் அருந்துவதால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா...?

தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிலருக்கு தோலில் சில இடங்களில் நிறமாற்றங்கள் ஏற்படும். இன்னும் சிலருக்கு தோலில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும்.

பீட்ரூட் ஜூஸ் தினமும் அருந்தும் நபர்களுக்கு மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும். தலைமுடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அவற்றை நீக்க தினந்தோறும் ஒரு வேளை பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க, தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இந்த பிரச்சனை தீரும். நமது உடலில் பல இடங்களில் புற்றுநோய் ஏற்படுகிறது.அதில் ஈரல் புற்று, கணைய புற்று மிகவும் ஆபத்தான புற்று நோய்களில் ஒன்று. பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு வேளையாவது குடித்து வந்தால், இவ்வகை புற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலின் ரத்தத்தில் உள்ள கழிவுகளை தொடர்ந்து சுத்திகரிக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. பீட்ரூட் ஜூஸை அருந்துவதால் சிறுநீரகங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கிறது.

சிறுநீரும் நன்கு பிரியும். மூளை செல்களின் வளர்ச்சி குறைவதால் ஞாபக மறதி உண்டாகிறது. பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு. எனவே பீட்ரூட் ஜூஸை பருகுவது ஞாபக மறதியை போக்கும்.

தினந்தோறும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பீட்ரூட் ஜூஸை அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான எந்த நோய்களும் வராமல் தடுக்கப்படும்.

சோகத்திலும் நெகிழ்ச்சி: நிவாரணப் பொருட்கள் அனுப்பிய மாணவர்களுக்கு இளநீர் அனுப்பிய டெல்டா விவசாயிகள்

'ஜா' புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகள் சோகமான நிலையிலும், 'நாங்கள் உணவளிப்பவர்கள்'  என்பதை நிரூபித்துள்ளனர்.

'கஜா' புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.ஒட்டுமொத்த தமிழகத்துக்கே உணவு ஆதாரமாக விளங்கும் டெல்டா இப்படி உருக்குலைந்துள்ள வேளையிலும், டெல்டா விவசாயிகள் தங்களுடைய அன்பையும், ஈகை குணத்தையும் வெளிப்படுத்தி நெகிழ வைத்துள்ளனர்.

'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி திருச்சி நேஷனல் கல்லூரி மாணவ, மாணவிகள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட வாகனத்தை வெறும் வண்டியாக அனுப்ப மனமில்லாத டெல்டா விவசாயிகள், அந்த வாகனம் முழுக்க இளநீர் நிரப்பி மீண்டும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நாடியம் கிராமத்தில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையிலும், டெல்டா விவசாயிகள் உணவளிப்பவர்கள் என்று நிரூபிக்கும் இச்சம்பவத்தை நெட்டிசன்கள் பாராட்டி நெகிழ்ந்து வருகின்றனர்

ஒன்பதாம் வகுப்பில், 'ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ்' எனப்படும், தொழிற்கல்வி பயிற்சி அளிக்கப்போவது எப்போது ?

ஒன்பதாம் வகுப்பில், 'ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ்' எனப்படும், தொழிற்கல்வி பயிற்சி அளிக்க, பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டும், அடுத்த கட்ட பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.மத்திய அரசு, ஒன்பதாம் வகுப்பில், தொழிற்கல்வி பயிற்சி அளிக்க, கடந்தாண்டு உத்தரவிட்டது. அழகுகலை, தையல், மெக்கானிக்கல் போன்ற, 'ஸ்கில் டெவலப்மென்ட்' வகுப்புகள் நடத்தி, மாணவர்களுக்கு தொழிற்கல்வி குறித்த புரிதலையும், அடிப்படை பயிற்சியும் வழங்க திட்டமிடப் பட்டது.கோவை மாவட்டத்தில், ராஜவீதி துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இப்பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டன.இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு, கடந்தாண்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு பின், எவ்வித அறிவிப்பும் இல்லை. நடப்பு கல்வியாண்டு துவங்கி, ஐந்து மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இப்பயிற்சி வகுப்பு குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை.கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,'மத்திய அரசின் கல்வித்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதால், ஸ்கில் டெவலப்மென்ட் கோர்ஸ், சில மாற்றங்களுடன் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனை வகை பயிற்சிகள் வழங்குவது, பயிற்றுனர்கள் தேர்வு செய்யும் விதம், எந்த வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்' என்றனர்.

குரூப் - 2' தேர்வு விடைக்குறிப்பு கருத்து கூற இன்று கடைசி நாள் :

குரூப் - 2 தேர்வு விடைக்குறிப்பு குறித்து கருத்து தெரிவிக்க, இன்றே கடைசி நாள்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவியில், 1,199 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., வழியே, நவம்பர், 11ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 4.65 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு, நவ., 14ல், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இந்த விடை குறிப்பில் தவறான விடைகள் இருந்தால், ஆதாரத்துடன் கருத்துகளை தெரிவிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. கருத்துகளை தெரிவிக்க, முதல் முறையாக ஆன்லைன் முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, தேர்வர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாளாகும்.

டிச., 4 முதல், 'ஸ்டிரைக்' : ஜாக்டோ- - ஜியோ முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், சுப்ரமணியன், நேற்று மதுரையில் கூறியதாவது:'புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய, குழு அமைத்து, பரிசீலித்து முடிவு செய்யப்படும்' என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அதற்காக அமைக்கப்பட்ட குழு, அறிக்கை அளிக்கவில்லை. அறிக்கை அளிக்கப்படும் முன்பே, சேலத்தில், முதல்வர் பழனிசாமி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய முடியாது எனக் கூறியது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.மேலும், சம்பள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் காலம், அக்., 31ல் முடிந்து விட்டது. அக்குழு நீடிக்கப்பட்டுள்ளதா என, இதுவரை அறிவிப்பு இல்லை.
சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி ஊழியர்களுக்கு, சிறப்பு காலமுறை சம்பளத்தை ரத்து செய்து, காலமுறை சம்பளம் வழங்குவதும் தள்ளிபோகிறது.எனவே, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 25ல், மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு; நவ., 26 முதல், 30 வரை, பிரசார இயக்கம்; நவ., 30ல் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்; டிச., 4 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பான் கார்ட் மிஸ்ஸிங்... டூப்ளிகேட் பான் கார்ட் வாங்குவது எப்படி?

நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட பான் கார்ட் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்...


பொதுவாகவே அடையாள ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்து புகார் அளிப்பது சிறந்தது. பான் கார்ட் தொலைந்துவிட்டால் டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். 
டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? 
டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல் (NSDL) / யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித்துறையின் அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம். 

இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். 
என்எஸ்டிஎல் (NSDL) லிங்க்: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
யூடிஐஐடிஎஸ்ல் (UTIITSL) லிங்க்: http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp
இந்த இணையதளத்திற்குள் நுழைந்து டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களது பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையை பதிவு செய்ய வேண்டும்.

பேப்பர் லெஸ் அப்ளிக்கேஷன்: 
இந்த முறையில் விண்ணப்பத்தால் பான் கார்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு கடவுச்சொல் வரும். அதனை உள்ளிட்டு விண்ணப்பத்தை சரிபார்த்துப் பூர்த்தி செய்யவும். இதோடு, உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும். 

பேப்பர் அப்ளிக்கேஷன்:
இதில், விண்ணப்பத்தின் அடிப்படை விவரங்களை பதிவிட்டு, அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றை தேர்வு செய்து அவற்றினை பதிவேற்ற வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

CBSE Class 10 exams 2019: Here is the detail syllabus of Social Science

CBSE Class 10 exams 2019: Central Board of Secondary Education (CBSE) class 10 Social Science consists of chapters from History, Geography, Political Science and Economics. In each subject, the student has to pass separately to be able to take admission in class 11. From next year, the class 10 students need to score a minimum of 33 per cent marks in theory and practical combined. The CBSE is expected to release the datesheet for class 10 and class 12 exams 2019 next month. CBSE has released a list of vocational subjects scheduled to be conducted during this period.

CBSE 10th exams 2019: Check the detail syllabus of Geography
Resources: Types — natural and human; need for resource planning.
Natural Resources: Land as a resource, soil formation, types and distribution; changing land-use pattern; land degradation and conservation measures.
Forest and wildlife resources: Types and distribution, depletion of flora and fauna; conservation and protection of forests and wildlife.
Agriculture: Types of farming, major crops, cropping pattern, technological and institutional reforms; their impact; contribution of Agriculture to the national economy — employment and output, food security, impact of globalisation.
Water resources: Sources, distribution, utilisation, multipurpose projects, water scarcity, need for conservation and management, rainwater harvesting. (One case study to be introduced)
Mineral Resources: Types of minerals, distribution, use and economic importance of minerals, conservation
Power Resources: Types of power resources – conventional and non-conventional, distribution and utilization, and conservation.
Manufacturing Industries: Types, spatial distribution, contribution to industries to the national economy, industrial pollution and degradation of the environment, measures to control degradation.
Transport, communication and trade.
CBSE class 10 exams 2019: Here in detail, the syllabus on Economics