- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
26/3/17
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
சென்னை: அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்காக நடத்தப்பட்ட, எழுத்துத் தேர்வு முடிவுகள், நேற்று இணையதளத்தில்
வெளியிடப்பட்டன.
அதன்அடிப்படையில், காலியிடங்களுக்கேற்ப,1 : 5 விகிதாச்சாரப்படி, சான்றிதழ் சரி பார்ப்புக்கான பட்டியல், முதன்மை கல்வி அலுவலர்களால் வெளியிடப்படும்.
இப்பட்டியல், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்; நடைமுறையில் உள்ள இன சுழற்சி; விண்ணப்பதாரர்கள் அளித்த விபரம் ஆகியவற்றின் அடிப்படையில், தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!
தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை,
கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு
பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளி களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்'
வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படும்.
இதற்கு, 45.57 கோடிரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

TNTET - 2017 Special Tips: ஒரே மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் படித்து வெற்றி பெறுவது எப்படி?
One Month Schedule to get Success in TNTET - 2017
30 நாட்களில் வெற்றி பெறுவது எப்படி? வெற்றி க்கான டிப்ஸ்..
ஆசிரிய நண்பர்களே நீங்கள் இனி தான் TNTET தேர்விற்கு ஆயத்தம்
செய்ய உள்ளீர்களா..
வேலைபார்த்து கொண்டே படிக்க வேண்டுமா?
இதோஉங்களுக்காக டிப்ஸ் மற்றும் காலஅட்டவணை
நீங்கள் செய்ய வேண்டியவைகள் இதோ....

லஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்; கேரள அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி
திருவனந்தபுரம் : 'லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கேரள
அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அரசு துறைகளில், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு உள்ளதாக, அம் மாநில உள்துறை அமைச்சர் ஜலீல் கூறினார்.
அவர்கூறியதாவது: மக்களுக்கு இலவச சேவை செய்வதாக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கருதுகின்றனர். மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில், சம்பளம் பெறுபவர்கள் தான் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.
அதனால் தான், வேலை பார்ப்பதற்கு லஞ்சம் கேட்கின்றனர்; இதை ஒழிப்பது தான் அரசின் லட்சியம். லஞ்ச ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்து கண்துடைப்பு ஏற்படுத்தும் முறை மீது நம்பிக்கை இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால், உடனே பணியில் இருந்து நீக்கிவிட முடிவு செய்துள்ளோம்.
அரசுஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஜாதி மற்றும் மதம் தடையாக இருக்காது. இதை எல்லாம் முன்வைத்து, குற்றவாளிகளை காப்பாற்ற நினைத்தால், அது நடக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு...விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு சைதை
துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது | ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை, சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது. இதுகுறித்து மனிதநேய மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இலவச பயிற்சி சைதை துரைசாமியை தலைவராகக் கொண்டு இயங்கும் மனிதநேய பயிற்சி மையம், மத்திய-மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் பல்வேறு தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இவ்வாறு அளிக்கப்பட்ட இலவச பயிற்சிகளில் கலந்துகொண்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகள் முதல் பல்வேறு வகையான பணிகளில் 2,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். தற்போது இந்த மையம் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளின் முதல்நிலை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை உடனடியாக தொடங்கி 2018-ம் ஆண்டு மே மாதம் வரை நடத்த இருக்கிறது. நுழைவுத்தேர்வு இந்த பயிற்சிக்கான தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக, மனிதநேயம் தமிழகத்திலுள்ள 32 மாவட்டத்தின் தலைநகரங்களில் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி நடைபெறும். நுழைவுத் தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படும். இந்த தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் எல்லாதரப்பு மாணவர்களும் எழுதும் வகையில், அடிப்படை பொதுஅறிவு சார்ந்தவையாகவே இருக்கும். இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு அதிகபட்ச கூடுதல் திறமை தேவையில்லை. மாணவர் தேர்ந்தெடுப்பில் மாவட்ட வாரியாக ஒதுக்கீடு உண்டு. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே இடம் வழங்கப்படும். ஆனால், அந்த மாணவ-மாணவியர்களும் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம். கடைசி தேதி இந்த பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், www.sai-d-ais.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளப் பயிற்சிக்காக ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21.4.2017 ஆகும். 22.4.2017 முதல் அனைத்து மாணவர்களும், நுழைவுத் தேர்வுக்கான தங்களின் அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் தங்களது சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெறவேண்டும். அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற முடியாதவர்கள், தங்களது புகைப்படம் உள்ள அடையாள அட்டையை அனுமதி சீட்டுடன் கொண்டுவர வேண்டும். இதுவே அனுமதிச் சீட்டாகும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 2435 8373, 9840106162. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறையில் TET நடத்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும்,
ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.
இத்தேர்வைஎழுத காத்திருக்கும் பலர், தற்போது, தனியார் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
தேர்வு காலம் என்பதால், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் மும்முரமாக உள்ளனர். இதனால், இவர்களால் மாலை வெகு நேரத்திற்கு பின்பே, வீடு திரும்ப முடிகிறது; தேர்வுக்கு தயாராக நேரம் கிடைப்பதில்லை.
குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்கள், வீட்டு வேலையிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தினமும் ஒரு மணி நேரம் கூட, தேர்வுக்கு தயாராக முடிவதில்லை. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் சிலருக்கோ, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான், வேலையில் தொடர முடியும் என்ற நிலை.இதனால், முழு நேர பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பிற தேர்வர்களுடன் போட்டியிட முடியாமல் தவிக்கும் பெண் ஆசிரியர்கள், தேர்வை கோடை விடுமுறைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.
மேலும், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, தேர்வர்கள் வரிசையில் காத்து நின்றும், 'ஜெராக்ஸ்' எடுக்க அலைந்தும் நேரத்தை வீணடிக்க வேண்டியதாயிற்று.இதை தவிர்க்க, 'டி.என்.பி.எஸ்.சி., போல், ஆன்லைன் வாயிலாகவிண்ணப்பிக்கும் நடைமுறையை, அடுத்தாண்டு முதலாவது அமல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்
சிறுகணல்
1. ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
2. 1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை
ஆசிரியர்களுக்கும்,
3. CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய் வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம் ஆசிரியர்களுக்கும்,
- “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக் குழுக்கள் கடந்து, முகம் & முகவரி கடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும் கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்ட நீங்கள் மட்டும் ஓர் அணியில் இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
- உங்கள் வாய்மை வழிகாட்டி,
ம. சேவியர் ஜோசப் கென்னடி,
துணைப் பொதுச் செயலாளர்,
தமிழக ஆசிரியர் மன்றம்.
உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத் தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய் முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடி உங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக் கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
· அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும் அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.
· அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்று பிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?
· உங்கள் வலியும், வேதனையும் நீங்கப் போவதும் இல்லை.
· இதனால் அவர்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !
· இந்த நிதர்சனத்தை நீங்கள் அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல் என்று எண்ண வேண்டாம். அதையும் தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும் !
“பாதிக்கப்பட்ட மூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்து நான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக் கேட்டாக வேண்டும்.”
1. மாநில அரசின் அனைத்து வகை ஊதிய விகித நிலையினருக்கும் (ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூட வழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டு உங்களுக்கு மட்டும் வழங்காதது;
i. சமூக நீதிக்கு எதிரானது
ii. நியாயமற்ற செயல்
- என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?
2. அப்படியானால், செய் அல்லது செத்துமடி என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்த அநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய் உறுதியேற்கிறீர்களா?
3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-ஐ கொடுக்காமல் இரத்து செய்வது,
i. தவறு
ii. அநீதி
iii. எந்த விதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
iv. OPS என்பது எனது வாழ்வுரிமை,
v. அது கொடுபடா ஊதியம்,அதை அடையாமல் நான் ஓயமாட்டேன்
- என்று உறுதியாய் சபதம் ஏற்கிறீர்களா?
4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,
i. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச் சரிசெய்வோம்,
ii. CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில் நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன் என்று உறுதி கொண்ட நெஞ்சினராய் இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டி சொல்வதை மனதில் போட்டு வீருநடை போடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக் குழுவை உருவாக்குங்கள்.
5. அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும் கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கி வையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும் சொல்லுங்கள்.
6. முழு ஆண்டு விடுமுறையைப் போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறு செய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும் தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவது மட்டுமே இலக்காக இருக்கட்டும்.
7. இடம், சென்னைக் கடற்கரையை மக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது திண்டுக்கல் மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோ அல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாக ஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.
8. அங்கே, வாயில் கருப்புத்துணி கட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப் புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.
9. அரசு உட்பட, யார் யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தை உணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரை வாருங்கள் என்று பொது அழைப்பு மட்டும் விடுங்கள்.
10.
i. இப்போராட்டத்தால், மாணவர்கிளின் கல்வி பாதிக்கப் போவதில்லை.
ii. அரசு எந்திரம் முடங்கப் போவது இல்லை.
iii. பொதுமக்களுக்கு இடையூறு இல்லை.
ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!
Ø செய்வீர்களா ? அல்லது
Ø அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா ?
சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!
- இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி !
இவண்,
ம. சேவியர் ஜோசப் கென்னடி.
துணைப் பொதுச் செயலாளர்,
தமிழக ஆசிரியர் மன்றம்.திண்டுக்கல்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)