யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/11/15

திருச்சி மாவட்டம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 ( புதன்கிழமை ) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ந.க.எண்.25202/2015/இ4    தேதி.16.11.2015
உள்ளூர் விடுமுறை - திருச்சி மாவட்டம் -  ஸ்ரீரங்கம் வட்டம் -  அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு  வருகிற 18.11.2015 (புதன்கிழமை ) நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


விடுமுறைக்கு பதிலாக வருகிற டிசம்பர் மாதம்  (05.12.2015) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது

கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நிகழாண்டிலேயே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி பாடப் பிரிவு இல்லாத 800க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், அந்த பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர். மாவட்டத் தலைவர் தேனரசு, செயலர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்

மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்

மதுரை;பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன. அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில் தத்தளிக்கின்றனர்.இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:
இது முற்றிலும் வருவாய்த்துறைக்கு உட்பட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் விவரப் பட்டியல், கல்வி உதவி தொகைக்கான வங்கி கணக்கு எண்கள், நலத்திட்ட விவரம் என பல்வேறு
பதிவேற்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மூவகைச் சான்றிதழ் பணிகளை தாலுகா அலுவலகங்களில் செயல்படும் 'இ சேவை' மையங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,
என்றனர்.

பத்தாவது நாளாக பள்ளிகள் மூடல்: பல்கலை தேர்வுகள் மீண்டும் ரத்து

தொடர்ந்து, 10வது நாளாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, 6ம் தேதி சனிக்கிழமை முதல், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து, 11ம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கனமழை காரணமாக கடலுார், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், 11ம் தேதி பள்ளிகளை திறக்க முடியவில்லை; திறந்திருந்த பள்ளிகளும், பாதியில் மூடப்பட்டன.இதையடுத்து, தொடர் மழை பெய்ததால், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.இன்றும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு டிசம்பர் முதல் வாரத்தில், அரையாண்டுத் தேர்வு; மற்ற வகுப்புகளுக்கு இரண்டாம் பருவ தேர்வு நடக்கவுள்ள நிலையில், தொடர்ந்து, 10வது நாளாக, பள்ளிகள் இயங்கவில்லை.

இன்றும் நாளையும்...:
சென்னை பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லுாரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள், இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.அண்ணா பல்கலை தேர்வுகள், நாளை வரை, ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 19ம் தேதி முதல், 21ம் தேதி வரையான தேர்வுகளும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலை பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.சட்டப் பல்கலையிலும், நாளை வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 500 பள்ளிகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்களை பறிகொடுத்து இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத வகையில் பருவமழை கொட்டி தீர்த்தது. 


அதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 400 கிராமங்கள், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கனமழைக்கு இதுவரை கடலூரில் 55பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதில் 15 ேபர் பள்ளி மாணவ, மாணவிகள். திடீர் வெள்ளத்தில் சிக்கிய மாணவ, மாணவிகள் தங்கள் உடமைகள், பாட புத்தகங்களை பறிகொடுத்து விட்டு பெற்றோருடன் ஓடி உயிர் தப்பினர். பலர் பாட புத்தகங்களை எடுத்து சென்றபோது மழையில் நனைந்து வீணாகின.  சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இழந்துள்ளதாக கல்வியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச கணினிகளும் சேதமடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. 100க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழையால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்கள் குறித்து பள்ளி கல்வித்துறை கணக்கெடுத்து வருகிறது. விழுப்புரத்தில் கிராமங்கள் துண்டிப்பு: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த  கல்வராயன்மலை அடிவாரத்தில்  உள்ள கல்படை ஆற்று பாலத்தில் நேற்றுமுன்தினம் மாலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதையடுத்து அவ்வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெள்ளம்  காரணமாக மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம், மாயம்பாடி, பொட்டியம் ஆகிய 4   கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்க சட்டம் அமல்படுத்த நீதிபதிகள் ஆய்வு கமிட்டி : ஐகோர்ட் முடிவு

கட்டாய தமிழ் மொழி பாடப் பிரச்னைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அமைப்பின் பொதுச் செயலர், டாக்டர் சாதிக், தாக்கல் செய்த மனு:தெளிவான வழிமுறைகள்தமிழ்மொழி கற்றல் சட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. '1 முதல், 10ம் வகுப்பு வரை, கண்டிப்பாக தமிழ் மொழியை, ஒரு பாடமாகக் கற்க வேண்டும்' என, அந்த சட்டம் வரையறுத்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த, தெளிவான வழிமுறைகள் மற்றும் விதிகளை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு, 2014 மே மாதம், மனு அனுப்பினோம்; எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது, கல்வித் துறை அதிகாரிகள், '10ம் வகுப்பு வரை, தமிழை கட்டாயமாக கற்பிக்க வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். மேலும், '2016 மார்ச் மாதம் நடக்கும் பொதுத் தேர்வில், தமிழ் பாடம் கட்டாயம் இருக்கும்' எனவும் கூறுகின்றனர். அதிகாரிகளிடம் இருந்து உத்தரவுகள் எதுவும் வராததால், இதுவரை, தமிழ் பாடத்தை எங்கள் பள்ளிகளில் கற்பிக்கவில்லை. மேலும், தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ் மொழி கற்றல் சட்டத்தை அமல்படுத்தினால், மற்ற மொழிகளை கற்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்கள், படிப்பை பாதியில் விட்டுவிட வேண்டிய நிலை ஏற்படும். நாங்கள், தமிழ் மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால், 'சிறுபான்மை மொழிகளையும் கற்பிக்க வேண்டும்' என விரும்புகிறோம்.எனவே, நாங்கள் அனுப்பிய மனுவை பைசல் செய்யவும், அதுவரை, பள்ளி கல்வி உத்தரவுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்று, பல மனுக்கள், உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தாக்கல் செய்த பதில் மனு:பொதுத் தேர்வு

தமிழ் ஆசிரியர்களை ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு, பள்ளி நிர்வாகத்துக்கு உள்ளது. 2006 - 07 முதலே, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் மொழி கற்றல் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தை, பொதுத் தேர்வில் எழுத வேண்டிய விவகாரத்தில், மனுதாரர்கள் விதிவிலக்கு கோர முடியாது.

சட்டம் அமலுக்கு வந்து, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தமிழ் பாடத்துக்கு விதிவிலக்கு கோருபவர்களின் பிரச்னையை, உரிய அதிகாரி ஆய்வு செய்ய வேண்டும். 2016 மார்ச் மாதம், பொதுத் தேர்வு வருவதால், இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும்.

எனவே, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது உகந்ததாக இருக்கும் என, நாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து ஆலோசித்து, ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். விசாரணை, நவ., 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

குரூப் - 2ஏ' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை

பருவ மழையால், மின்வெட்டு பிரச்னை மற்றும் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, குரூப் - 2ஏ தேர்வுக்காக, விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அரசின் பல துறைகளில், குரூப் - 2ஏ பிரிவில் அடங்கிய பதவிகளில், காலியாக உள்ள, 1,947 இடங்களுக்கு பணி நியமன தேர்வு, ஜனவரி, 24ம் தேதி நடக்க உள்ளது. 

விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம், நவ., 18ம் தேதி முடிகிறது. ஆனால், 10 நாட்களாக மழை கொட்டுவதால், பல மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் தேர்வு எழுத விரும்புவோர், மழை வெள்ளப் பாதிப்பால் மறு கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் மின் வினியோகம் மற்றும் இணைய செயல்பாடு பாதிப்பால், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியவில்லை. இ - சேவை மையங்களிலும் மின் வினியோக பாதிப்பு மற்றும் இணைய பிரச்னையால் நிரந்தரப்பதிவு செய்யவோ, விண்ணப்பிக்கவோ முடியவில்லை. எனவே, விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க, டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

CPS ன் கோர முகம்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த
மாரியம்மாள் கணவர் திரு. குருசாமி அவர்கள் CPS ல் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதிய பலன்களை பெறமுடியாத நிலையிலே மரணம் அடைந்து விட்டார். குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மாரியம்மாள் உடல் நலம் குன்றி போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.
இன்னும் எத்தனைn உயிர்களை CPS காவு வாங்க உள்ளதோ? சிந்தனை செய்வீர்.
எங்கெல்ஸ்.