யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/18

தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..

Add caption

Add caption
 







வங்கக் கடலில் புதிய புயல்..?? அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.


இந்த நிலையில் , வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குமரிக்கடல் , மன்னார் வளைகுடா , தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .


இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.


இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..


டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள் அனுப்பி வைக்க SCERT திட்டம் :

கல்விச் சேவைகளை பரிமாறிக் கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை, அந்தமான் நிகோபார் கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி), அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் திறன்மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய அடைவுத் தேர்வுகளின் முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாணவர்களுக்கு குறைதீர் பயிற்சிஅளிக்க உதவுதல், பாடநூல்கள் தயாரித்தல் ஆகிய பணிகளில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக தக்க ஆதரவு வழங்கப்படும்.
இணைய வளங்களைப் பகிர்ந்தளிக்க... அந்தமான் நிகோபார் தீவுகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடுமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ள பாடங்கள் சார்ந்த காணொலிக் காட்சிகள் மற்றும் விரைவுத் துலக்கக் குறியீடுகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணைய வளங்கள்ஆகியவைகளைஅவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்யும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கத் தேவையான கருத்தாளர்கள் மற்றும் பாட வல்லுநர்கள்,தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக, அவ்வப்போது, தேவையின் அடிப்படையில் அனுப்பிவைக்கப்படுவர். தேவைப்பட்டால் அங்குள்ளஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வரவழைக்கப்பட்டும் பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தில் எஸ்சிஇஆர்டி இயக்குநர் க.அறிவொளி, அந்தமான் பள்ளிக் கல்வித்துறை அதிகாரி மேமன் தாமஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு: டிச.11 முதல் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கடந்த நவ.26-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2019 ஜனவரி 1 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தின் மூலம் டிச.11, 12, 13 ஆகிய மூன்று நாள்களுக்கு மட்டும் www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு(Nodal Centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாகச் செலுத்தலாம்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் டிச.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

இந்த விவரம் உங்களுக்காக Case No. 23928 of 2018 court No.1 Advocate Name : Mr. Shaji Chellan Advocte Chamber No. 88 ஜாக் டோ - ஜியோ ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது. நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும். visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும். Voter Id. ஆதார் Id Pan Card etc., படம் 1. Department ID படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம் படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass


ஜாக்டோ - ஜியோ வழக்கு: நீதிமன்றத்தை நேரடியாக பார்வையிட விரும்புகிறீர்களா?

இந்த விவரம் உங்களுக்காக
Case No. 23928 of 2018
court No.1
Advocate Name : Mr. Shaji Chellan
Advocte Chamber No. 88
ஜாக் டோ - ஜியோ
ஜாக் டோ - ஜியோ வழக்கு 10.12.2018 பிற்பகல்
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் கோர்ட் எண் 1 இல் விசாரணைக்கு வருகிறது.
நீதி மன்றத்துக்குள் நுழைய துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும்.
Department ID இல்லையென்றால் visitor pass வாங்க வேண்டும்.
visitor pass வாங்க ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.
Voter Id.
ஆதார் Id
Pan Card
etc.,
படம் 1. Department ID
படம் 2. visitor pass வாங்க விண்ணப்பம்
படம் 3. நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட visitor pass

சிந்தனையாற்றலுடன் மாணவர்களை உருவாக்க பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி 10ம் தேதி தொடங்குகிறது :

சிந்தனையாற்றலுடன் செயல்திறன்மிக்க மாணவர்களை உருவாக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி சிறப்பு பயிற்சி தொடங்குகிறது.இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:வகுப்பறை செயல்பாடுகளை மாற்றியமைத்து சிறந்த சிந்தனையாற்றலுடன் செயல்திறன் மிக்க மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது மேம்பட்ட கற்றலுக்கு வழிவகை செய்யும் கற்றல் விளைவுகள் மற்றும் தேசிய அடைவு ஆய்விற்கு பிந்தைய செயல்பாடுகள் சார்பாக மாவட்ட கருத்தாளர்களுக்கான மாநில அளவிலான இரண்டு நாள் பயிற்சி சென்னையில் நடக்க உள்ளது. 2வது கட்டமாக தொடக்கநிலை வகுப்புகளுக்கும் மாநில அளவிலான மாவட்ட கருத்தாளர் பயிற்சி வரும் 17ம் மற்றும் 20ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இதற்கிடையில் மாநில அளவிலான பயிற்சியில் கலந்து கொண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்களை மட்டுமே கருத்தாளர்களாக கொண்டு மாவட்டங்களில் ஒன்றிய அளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10ம் தேதி முதல் நடத்த வேண்டும். இந்த பயிற்சியும் 2 நாட்கள் நடத்த வேண்டும்.பயிற்சியை திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களில் ஒரு சுற்றும், புதன் வியாழன் ஆகிய இரு நாட்களில் மற்றொரு சுற்றும் என தொடர்ந்து நடத்தி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சியினை 2வது பருவத்தேர்வு நாட்களிலும் தொடர்ந்து நடத்திட ஏதுவாக தலைமையாசிரியர்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது ஒரு ஒன்றியத்தில் ஒரு பாடம் வீதம், 5 ஒன்றியங்களில் இப்பயிற்சியினை தனித்தனியாக பாடவாரியாக நடத்த வேண்டும். ஒரு சுற்றிற்கு ஒரு பாடத்திற்கு 50 ஆசிரியர்கள் என எண்ணிக்கையில் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கஜா புயல் பாதிப்பிற்கு உள்ளான மாவட்டங்களில், ஒன்றியங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பயிற்சியினை நடத்துவதற்கு ஏதுவாக முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன முதல்வர் தக்க நடவடிக்கையினை சூழலுக்கு தகுந்தவாறு முடிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியிருந்தது.

விரைவில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க புதிய வசதி..!

ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி
மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி விரைவில் ஸ்மார்ட்ஃபோன் மூலம் பணம் எடுக்கும் முறையை வங்கிகள் அறிமுகம் செய்ய உள்ளன.
ஆம், விரைவில் ஏடிஎம் மையங்களில் ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் யூபிஐ செயலியில் உள்ள QR குறியீட்டை ஸ்கான் செய்து பணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் சம்மந்தப்பட்ட வங்கிகளின் யூபிஐ செயலி அல்லது மொபைல் வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கணினி திரையில் தோன்றும் QR குறியீட்டினை யூபிஐ செயலி மூலம் ஸ்கேன் செய்து அதற்கான பாதுகாப்பு பின் எண்ணை உள்ளீட்டு வங்கி கணக்கை அணுகி அதில் உள்ள பணத்தினை எடுத்துக்கொள்ள முடியும். வங்கிகள் இந்தப் புதிய சேவையினை அறிமுகம் செய்ய பெரிய செலவுகள் எதுவும் ஆகாது.

யூபிஐ செயலியினை உருவாக்கிய இந்திய தேசிய கொடுக்கல் நிறுவனம் (NPCI - National Payments Corporation of India) இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த முயற்சிக்கு எப்போது அனுமதி கிடைக்கும் மற்றும் செயல்பாட்டிற்கு வரும் என்ற விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உங்களுக்கு சர்க்கரை நோய் வருமா? வராதா ? தெரிந்து கொள்ளுங்கள்!

இளம்வயது சர்க்கரை நோய் ஆண், பெண் இருபாலரையும் சமமாகவே பாதிக்கிறது. முதிர்வயது சர்க்கரை ஆண்களை விட பெண்களைச் சற்றே அதிகமாகப் பாதிக்கிறது.

ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது. கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மது கல்லீரலைப் பாதிப்பதால் குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படுவதும், தேவைக்கு ஏற்ப இரத்தத்தில் சேருவதுமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.

ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. பெண்கள் மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது. இந்தக் கால கட்டத்தில் உடலில் நிகழும் பல வகையான இயக்க நீர் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம் :

பொதுத்தேர்வு எழுத, வயது பற்றாக்குறை உள்ள மாணவர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில், தடை ஆணை பெற விண்ணப்பிக்கலாம்.பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 14 வயது கொண்டவர்களாக இருக்க வேண்டும். வயது குறைவாக உள்ள மாணவர்கள், தடை ஆணை பெற்றால் தான் தேர்வு எழுத முடியும். இதற்கு, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, பெற்றோர் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
இத்தடை ஆணையை, மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம் என, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அமுதவல்லி அறிவித்துள்ளார்.பொதுத்தேர்வு எழுதும் நாளில், 14 வயது கொண்டவர்கள், ஓரிரு மாதங்கள் குறைவாக உள்ளவர்கள், தடை ஆணை பெறலாம். இதற்கு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில், விண்ணப்பிக்க வேண்டும்.

ஏழாவது ஊதியக்குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட திரு.சித்திக்(IAS) தலைமையிலான குழுவின் அறிக்கை இன்றோ அல்லது நாளையோ அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்!!


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்தி அசத்திய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்: இரா.வனஜா:

அன்னவாசல்,டிச.7: இலுப்பூர்கல்வி மாவட்டம் அன்னவாசல்  அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆண்டாய்வு நடைபெற்றது..

ஆண்டாய்வின் போது புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா திடீரென 6 ஆம் வகுப்புக்குள் சென்று  அறிவியல் பாடத்தில் காற்று என்கிற தலைப்பில் பாடம் நடத்தினார்..பாடம் நடத்தும் பொழுது இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்டு உற்சாகப்படுத்தினார்..மாணவர்களும் ஆர்வமாக பதில் அளித்தனர்..

ஆண்டாய்வின் போது முதன்மைக்கல்வி அலுவலக பணியாளர்கள் இருவர்,மாவட்ட கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் என மூவர் அலுவலக பதிவேடுகள் சரியாக உள்ளதா என சரிபார்ப்பார்ப்பார்கள் அதனை முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு செய்வார் .அத்துடன் மாவட்ட கல்வி அலுவலர்,பள்ளி துணைஆய்வாளர்,தலைமையாசிரியர்கள்,ஆசிரிய பயிற்றுநர்கள் அடங்கிய குழுவினர்கள்  ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மேற்பார்வை செய்வதையும்   ஆய்வு செய்வதோடு, தலைமைஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் 11 ,12 ஆம் வகுப்பு   மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதையும் ஆய்வு செய்வார்.ஆனால் இன்று யாரும் எதிர்பாராத வகையில்  திடீரென ஆறாம்  வகுப்பிற்குள் சென்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாடம் எடுத்தது கண்டு அப்பள்ளி தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..

 பின்னர் முதன்மைக் கல்வி அலுவலர்  பாடம் நடத்தும் முறை குறித்தும் அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டினை அதிகரிக்கவும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டுச் சென்றார்..

ஆய்வின் போது இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,பள்ளி துணைஆய்வாளர் கி.வேலுச்சாமி,மருதாந்தலை பள்ளி தலைமையாசிரியர் பாரதி விவேகானந்தன்,அன்னவாசல் பள்ளி தலைமையாசிரியர் சுவாமிநாதன்,மாங்குடி தலைமையாசிரியர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.