யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/1/17

TRB : இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர். அவர்களில், ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் அழைக்கப்பட்டனர்.ஜன., 19, 20ல், சென்னை, தாம்பரம், ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில், 385 பேர் பங்கேற்றனர்; 20 பேர் வரவில்லை. அவர்களுக்கு, பிப்., 2ல், நுங்கம்பாக்கம், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில், காலை, 10:00 மணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், உமா அறிவித்துள்ளார்.

TNPSC:குரூப் - 2 பதவி : பிப்., 3ல் கவுன்சிலிங்

அரசு துறையில், குரூப் - 2 பதவிக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கும் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.
அரசு துறையில் காலியாக உள்ள, குரூப் - 2 பிரிவில், நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகளுக்கு, 2012ல் தேர்வு நடந்தது.இதில், தேர்வு பெற்ற வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணி ஒதுக்கீடு நடந்து வருகிறது. அதன்படி, தேர்ச்சி பெற்று, இதுவரை பங்கேற்காதவர்களுக்கு, பிப்., 3ல், கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவு எண்ணை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், தேர்வர் கள் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.
அதில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 2 முதல், 24ம் தேதிக்குள், செய்முறை தேர்வு, கேட்டல், பேசுதல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். தனி தேர்வர்களுக்கு, பிப்., 23 முதல், 25க்குள் நடத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படுமா? - நிதியமைச்சகம் பதில்!

  ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும் என்ற மாநில முதலைமைச்சர்களின் குழு பரிந்துரை தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.


இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் முதலமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் மோடியிடம் செவ்வாய்க்கிழமை அன்று அளிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிக்க வேண்டும், கடன் அட்டை மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் வரிவிதிப்பு ரத்து, டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரிச்சலுகை மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1000 மானியம் உள்ளிட்ட பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.

இதில் ரூ.50,000 க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு வரி விதிப்பு என்ற விஷயம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சகம் மாநில முதலைமைச்சர்களின் குழு அளித்த பரிந்துரை அறிக்கையானது கவனமாக பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகு முடிவு எடுக்கப்படும். தற்போது இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று தந்தி டிவிக்கு பேட்டியளித்தார்.