யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/12/16

தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்துமறைந்துவிட்டால்

நகம் கடிப்பது மனநிலை பாதிப்பா

நகைச்சுவை

நன்றி மறந்த சிங்கம்

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள்

நாம் மாற வேண்டும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை

பாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்

புகழ்பெற்ற கல்லறை

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதிய கல்விக்கொள்கை - ஒரு தேன் தடவிய விஷம்

பூண்டை வறுத்து சாப்பிட்டால்

மகிழ்வித்து மகிழ்

மனிதனின் சுயநலத்தால் 60

மனைவியை மடக்க சில யோசனைகள்

மூணே மூணு வார்த்தை

விளக்கு ஏற்றும் திசைகளும்

வென்னீர் மகத்துவம்

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்

ஜன., 1 முதல் 'ஹால்மார்க்' குறைப்பு:நகை வாங்கும் பொதுமக்களே உஷார்

தங்க நகை விற்பனையில், ஜன., 1 முதல் ஹால்மார்க் அளவை, ரிசர்வ் வங்கி குறைப்பு செய்துள்ளதால், தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளில், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்மேளனத்தின் மாநில தலைவர் ஸ்ரீராம், சேலத்தில் அளித்த பேட்டி:பணப்புழக்ககெடுபிடி காரணமாக, தமிழகத்தில் தங்கம் விற்பனையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்கம் விற்பனையில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், அதே நேரம், பொதுமக்களுக்கு தரமான தங்கம் கிடைக்கும் வகையிலும், ரிசர்வ் வங்கி, ஹால்மார்க் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மதிப்பீடு

பல ஆண்டுகளாக, ஹால்மார்க்கில், 22, 20, 18, 16, 14 என, பல்வேறு தரத்தில் தங்கம் மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், வரும் ஜன., 1 முதல், 22 காரட், 916 கே.டி.எம்., 18 காரட், 750 கே.டி.எம்., 14, காரட் 565 கே.டி.எம்., ஆகிய மூன்று தரம், அளவுகளில் மட்டுமே தங்கத்தை மதிப்பீடு செய்ய ஹால்மார்க் மதிப்பீட்டாளர்கள், தங்க நகை வியாபாரிகளுக்கு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.பொதுமக்கள் தங்கம் வாங்கும் போது, அவற்றின் தரத்தை பரிசோதித்து வாங்க வேண்டும். தரம் குறித்து தெரிவிக்காத வியாபாரிகள் மீது புகார் அளிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள தங்க நகை வியாபாரிகள், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், உற்பத்தி, சேதாரம், செய்கூலி, தள்ளுபடி உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். இதில், எள்ளளவும் உண்மை இல்லை. தங்கம் நிர்ணயம் செய்யப்படும் விலையில், அவர்கள் சலுகை அளிப்பது இல்லை. மாறாக, அதற்கான பிற தயாரிப்புகளை சுட்டிக்காட்டி, தள்ளுபடி செய்வதாக அறிவிப்பது, உண்மைக்கு புறம்பானது.

இதற்கு முடிவு கட்டும் வகையில், தமிழகம் முழுவதும் தங்கத்தின் விலையை, எங்கள் சம்மேளனம் நிர்ணயம் செய்து,அறிவிக்கதங்கத்துக்கான கொள்முதல் கெடுபிடி, இருப்பு தங்க ஆபரணத்துக்கான கெடுபிடி ஆகியவற்றால், இத்தொழில் கடும் நசிவை சந்தித்து வருகிறது.ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம், பொதுமக்களிடம் பணம் கையிருப்பு ஆகியவற்றை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி, தங்கம் வாங்கும் பொதுமக்கள், அதன் தரத்தை, ஹால்மார்க் அடிப்படையில் உறுதி செய்த பின் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'8' போடும் அமைப்பில் 'சென்சார்'டூ - வீலர் உரிமத்தில் புதிய முறை

இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, '8' போடும் அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தப்பட உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள, '8' அமைப்பில் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்; தரையில் கால் ஊன்றாமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகள் உண்டு.
மோட்டார் வாகன ஆய்வாளர் பார்வையிட்டு உரிமம் அளிப்பார். இந்நிலையில், '8' அமைப்பில், 'சென்சார்' கருவி பொருத்தி உரிமம் அளிக்கும் புதிய முறை விரைவில்வர உள்ளது. அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த அமைப்பில் பொருத்தப்படும், 'சென்சார்' கருவி, வாகனங்களின் போக்கை துல்லியமாக கணக்கிடும். இதை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்யும் அதிகாரி, அந்த மென்பொருள் பரிந்துரைப்படி உரிமம் அளிப்பார். இது குறித்து, புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு நடக்கிறது. விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு :தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள், இன்று முதல் வரும், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசுதேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு சென்று, இன்று முதல் வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கானல் நீரா கேந்திரிய வித்யாலயம்?

துறைமுகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்துள்ள முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலயம் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களிடையே மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களில் வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்கள்பணிமாறுதல் பெற்று செல்லும்போது அவர்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, கேந்திரிய வித்யாலய பள்ளிகளை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மத்திய அரசு நடத்தி வருகிறது. கடந்த 1963ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மத்திய கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தில் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுகிறது. கேந்திரிய வித்யாலய பள்ளிகள் இந்தியாவில் மட்டுமன்றி காத்மாண்டு, மாஸ்கோ, தெஹ்ரான் போன்ற இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.ஹிந்தி, ஆங்கிலப் பாடத்திட்டத்துடன், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சம்ஸ்கிருதம் கட்டாயமாக சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும் அங்கு கேந்திரிய வித்யாலய பள்ளிகள்இருந்தால் குழந்தைகளின் கல்வியில் சிக்கல் எதுவும் ஏற்படுவதில்லை என்பதே இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும்.பொதுவாக கேந்திரிய வித்யாலய பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களை கருத்தில்கொண்டு அங்கு பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் தொடங்கப்படுகிறது.மத்திய அரசுப் பணியாளர்களை போல மாநில அரசுப் பணியாளர்களும் தங்களது குழந்தைகளை கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றியுள்ள அண்டை மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் இரண்டு கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், திருநெல்வேலி, நாகர்கோவில், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் உள்ளன.ஆனால், தூத்துக்குடியில் துறைமுகம், ரயில் நிலையம், விமான நிலையம், கடல்சார் பயிற்சிக் கல்லூரி, மத்திய தொழில்பாதுகாப்புப் படை, வணிகவரி அலுவலகம், மீன்வளக் கல்லூரி, பழையகாயல் ஜிர்கோனியம் வளாகம், முத்தையாபுரம் கனநீர்ஆலை, சுங்கத்துறை அலுவலகம் என மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்து காணப்பட்டும் இம்மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கஇதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.இந்நிறுவனங்களில் பணிபுரியும் மத்திய அரசின் பணியாளர்கள் கேந்திரிய வித்யாலய பள்ளி இல்லாததால் தங்கள் குழந்தைகளை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்ட தனியார் பள்ளிகளில் படிக்க வைத்து வருகின்றனர். அவர்களில் திடீரென இடமாறுதலில் செல்லும் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கேந்திரிய வித்யாலய பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதையை மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை அறிவித்தார்.இதற்கு இடம் ஒதுக்க தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாகம் முன்வந்தது. ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலய பள்ளி என்பது கானல் நீராகவே உள்ளது.

இப்பள்ளிகளில் கட்டணம் குறைவு என்பதாலும், சுமார் 20 சதவீதம் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்பதாலும் பொதுமக்களும் கேந்திரிய வித்யாலய பள்ளியை எதிர்நோக்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களைக் கொண்ட தூத்துக்குடியில், கேந்திரிய வித்யாலய பள்ளி அமைவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்: மாற்றுத்திறனாளி, கற்றல்குறைபாடுள்ள மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல்அவதி.

அரசு மருத்துவமனைகளில் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் மாற்றுத்திறனாளி மற்றும் கற்றல் குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாமல் அவதிப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் கற்றல் குறைபாடுடைய மாணவ, மாணவியர் தங்களால் சுயமாகத் தேர்வு எழுத முடியாத சூழலில், பதிலித் தேர்வர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதும் வசதியை அரசு வழங்கியுள்ளது. இத்தகைய மாணவ, மாணவியர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மூலம் பள்ளி நிர்வாகம் மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். இதற்காக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் குழுக்கள் உள்ளன.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டீன் தலைமையிலும், மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரி தலைமையிலும் மருத்துவக்குழு செயல்படும். வாரம் ஒரு நாள் கூடும் இந்த மருத்துவக்குழு முன்பாக மாணவ, மாணவியர் நேரில் ஆஜராக வேண்டும். மாணவர்களின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர் மற்றும் சுயமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மனநலப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அங்கு உளவியல் மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை, எழுத்துத் தேர்வு உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தி அவர்களது மூளைத்திறன் இயங்கும் தன்மை குறித்து ஆய்வு செய்வர்.பரிசோதனை அடிப்படையில் மருத்துவக்குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைப்பர். அந்த சான்றிதழ் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். தாமாகத் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு பதிலித் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்கள்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் வாரத்திóல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கி விடுவதால் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்துக்குள் மருத்துவச் சான்றிதழைப் பெற்று பள்ளி நிர்வாகத்திடம்மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் சான்றிதழ்களை பள்ளிகள் ஏற்றுக்கொள்வது இல்லை.

இந்நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மண்டல மருத்துவக் குழுவிடம் ஆஜராகி சான்றிதழ் பெறவேண்டிய நிலை உள்ளது.இங்கு கற்றல் குறைபாடுடைய மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வுகள் உள்ளிட்ட பரிசோதனைகள் 6 நாள்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தங்கள் பெற்றோருடன், மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் வரவேண்டும். ஆண்டு தோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசோதனைகளுக்காக இங்கு வருகின்றனர். சான்றிதழ் வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்த பின்னரும் அலுவலக ஊழியர்கள் அலைக்கழிப்பதாக பெற்றோர்புகார் தெரிவிக்கின்றனர்.இதுதொடர்பாக பெற்றோர் கூறியது: மாவட்ட மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இருப்பது இல்லை. குறிப்பாக கண், மனநலம், மூளை, நரம்பியல் குறைபாடுடைய மாணவர்களை அழைத்துச் செல்லும்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குசெல்லுமாறு பரிந்துரைக்கின்றனர்.

 அங்கு சென்றால் மருத்துவ பரிசோதனைக்கு குறைந்தது ஒரு வாரமாவது அலைக்கழிக்கின்றனர். பின்னர் சான்றிதழ் பெறுவதற்கு ஒரு மாதம் ஆகிவிடுகிறது. இதில் சில மருத்துவர்கள், பரிசோதனையே செய்யாமல் மாணவர்கள் நன்றாக இருப்பதாகக் கூறி நிராகரித்து விடுகின்றனர். இதனால் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.ஏற்கெனவே ஒரு வாரம் வேலைகளை விட்டு விட்டு, தொலைதூரப் பகுதிகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள்போக்குவரத்து, உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக சில ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே மாணவர்களை அலைக்கழிக்காமல் மருத்துவப் பரிசோதனைகளை ஓரிரு நாளில் முடிக்க வேண்டும். மேலும் மாவட்ட மருத்துவமனைகளிலேயே அனைத்து பிரிவுகளையும் ஏற்படுத்தும் பட்சத்தில் மாணவர்கள் வெளி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்றனர்.மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 4,400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏராளமான மாணவர்கள் மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு வரிசை அடிப்படையில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. தகுதி இல்லாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன்செயல்பட வேண்டியுள்ளது. மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையும் உள்ளது. ஆனாலும் மாணவர்களுக்கு விரைவில் சான்றிதழ் வழங்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அனுமதிப்பது வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும்

பி.இ படித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பதுமேலும் வேலையில்லா பட்டதாரிகளை அதிகரிக்கும் என வேலையில்லா பட்டதாரிஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு பி.எட், கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி  ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூரில்நடைபெற்றது.

1992-ம் ஆண்டு  முதல் தற்போது வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டபட்டதாரிகள் கணினி அறிவியல் பி.எட். முடித்துள்ளதாகவும், அதற்கு அரசு முறையாகஅங்கீகாரம் வழங்கவில்லை என்றும், தமிழக அரசு நடத்தும் எந்தொரு ஆசிரியர்நியமனத் தேர்விலும், கணினி அறிவியல் பி.எட். படித்தவர்களுக்கு தேர்வுகள்எழுதும் வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்தனர்.மேலும் இதே போன்று டி.இ.டி, டி.ஆர்.பி போன்ற தேர்வுகளிலும்புறக்கணிக்கப்படுவதை அரசு நிறுத்த வேண்டும்.உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பி.எட் படிப்பு தகுதிஎன்று நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில் கணினி ஆசிரியர்களை இதிலும்புறக்கணிப்பு செய்கின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிற பாடப்பிரிவுகளுக்கு இணையாககணினி அறிவியலும் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதற்கான ஆசிரியர்கள் நியமனம்செய்யப்படாமல் காலியாக உள்ளது.சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ள நிலையில் பி.இபடித்தவர்களுக்கு பி.எட் படிக்க அரசு அனுமதித்திருப்பது மேலும் வேலையில்லாபட்டதாரிகளை அதிகரிக்கும் வாய்ப்பாகவே  அமையும் என கூட்டத்தில்தெரிவிக்கப்பட்டது.கடந்த நவ.11-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களிடம் காலிப்பணியிடம் குறித்துஅறிக்கை கோரப்பட்டுள்ளது. எனவே வறுமையில் வாடும் தங்களுக்கு வேலை வாய்ப்பைவழங்க வேண்டுமென வேலையில்லா பட்டதாரிகள் ஆசிரியர் சங்கத்தினர் அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளியின் சார்பாக INSPIRE விருது திட்டத்திற்கான போட்டி.

மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல், அறிவியல் படைப்புகளை உருவாக்குதல் மற்றும் தனித்திறன் வெளிப்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்படும் நிலையில்
, ஆர்வமுள்ள மாணவர்கள் அதிக அளவில் பங்குபெறச் செய்திட முனைப்புடன் செயல்படுமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களும்கேட்டுக்கொள்ளப்படுவதுடன், இதில் தனிக்கவனம் செலுத்தி தங்கள் பள்ளியின் சார்பாக INSPIRE  விருதுதிட்டத்திற்கான போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் விவரங்களை உடனடியாக இணைய தளத்தில் (http://www.inspireawards-dst.gov.in) பதிவேற்ற அறிவுறுத்தப்படுகிறது.

NMMS தேர்வுக்கு நமது மாணவர்களை எவ்வாறு தயார்படுத்துவது?

1) மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் உள்ள அச்சத்தை போக்கி மனதளவில் மாணவனை தயார்படுத்துதல் மிக அவசியம்.

2) நாள்தோறும் தேர்வு பாடப் பகுதிகளில் அதிக பயிற்சிஎடுத்து கொள்வது சிறப்பு.

3) Mental Ability, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் கால அட்டவணை ஒன்று தயார் செய்து அதன் படி சரியாக திட்டமிட்டு படிப்பது நிச்சயம் வெற்றியைத் தரும்.

4) மாணவர்களுக்கு OMR Sheet -ல் விடை குறிப்பிடும்முறையை கற்றுக் கொடுத்து மாதிரி OMR Sheet பிரதிகளை மாணவர்களிம் கொடுத்து பயிற்சி பெற செய்வது அவசியம். இது தேர்வு சமயத்தில் விடையளிக்கும் போது ஏற்படும் தடுமாற்றத்தையும், பதற்றத்தையும் குறைக்கும்.

5) அதிக அளவில் மாதிரி தேர்வுகளை (குறிப்பிட்ட கால அளவுக்குள்) எழுதி பார்க்க வேண்டும்.

6) Mental Abilit தேர்வில் கேட்கப்படும் 90 வினாக்களுக்கு விடையளிக்க 90 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையளிக்க மாணவர்கள் சிரமப்பட நேரிடும். இதை தவிர்க்க Mental Ability பகுதிகளில் பல்வேறு short Cut யுத்திகளை கையாண்டு விடையளிக்க பழக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலான வினாக்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட நான்கு Option களை பயன்படுத்தியே விடைகளை விரைவாக கண்டறிய முடியும்..

7) சில சமயங்களில் , மாணவர்கள் சரியான விடை தெரிந்திருந்தும் விடைத்தாளில் தவறாக குறிப்பதும் உண்டு. இதை தவிர்க்க ஒவ்வொரு முறையும் சரியான வினா எண்ணிற்கு உரிய விடையை தான் பதிவு செய்கிறோமா என்ற கவனத்துடன் செயல்பட பயற்சி அளிக்க வேண்டும் ...

8) வரலாறு பாடத்தில் இடம்பெறும் ஆண்டுகள், அறிவியல் பாடத்தில் இடம்பெறும் அறிவியல் பெயர்கள் மற்றும் வேதி குறியீடுகள், கணித பாடத்தில் சூத்திரங்கள் போன்றவற்றை தனி காகிதத்தில் சுருக்கமாக குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும்.. இது தினந்தோறும் பயிற்சிக்கும், தேர்வுக்கு முந்தைய நாள் நினைவு கூர்தலுக்கும் உறுதுணையாக இருக்கும்...

முயற்சி + பயிற்சி = வெற்றி என்ற எண்ணம் எப்போதும் மாணவர்கள் மனதில் இருக்கட்டும்...

தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், பயிற்சி தரும் ஆசிரிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...தொய்வில்லாமல் பணியை தொடர்வோம்

டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி.

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய கட்டுப்பாட்டினை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளைப் போல, வங்கிகளில் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

அதன்படி, பழைய ரூபாய் நோட்டுகளை அதிகபட்சமாக ரூ.5000 வரை மட்டுமே வங்கியில் டெபாசிட்  செய்ய முடியும். டிசம்பர் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று அதிரடி கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி ஊழியர்களின் மூலமாக, கருப்புப் பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்படுவதைத் தடுக்க, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம், கருப்புப் பணம் தனிநபர் மற்றும் போலி வங்கிக் கணக்கிகளில் டெபாசிட் செய்யப்படுவது தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.

புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்: ரிசர்வ் வங்கி.

புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: -
புதிய ரூ.50 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும், அதன் வரிசை எண்ணில் "L" என்ற எழுத்து பொறிக்கப்பட்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்து இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து 40 நாட்களை கடந்தும் நாட்டில் பணத்தட்டுப்பாடு சீரடையாத நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால்  நிலைமை கொஞ்சம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அந்த நோட்டுகள் சீராக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

+2,பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களே உஷார்.... பெயர், பிறந்த தேதியை சரி பாருங்க: கல்வித் துறை அறிவுரை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்கள், மதிப்பெண், டிசி உள்ளிட்ட வற்றில் இடம் பெறும் பெயர், இனிஷியல், பிறந்த தேதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை திருத்தம் செய்வதற்கான கடைசி வாய்ப்பை தேர்வுத் துறை வழங்க உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 8ம் தேதியும் தொடங்க உள்ளன. இத்தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயாரித்தனர். அவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியல்கள் தற்போது தேர்வுத்துறையில் உள்ளது. அவற்றின் அடிப்படையில் கடந்த 16ம் தேதி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் இனிஷியல் பிரச்னை, பிறந்த தேதி, வயது, ஊர், பெற்றோர் பெயர் உள்ளிட்டவற்றில் சில சந்தேகங்கள் இருப்பதாக தேர்வுத்துறை கருதுகிறது.

அதனால் பள்ளிகள் மூலம் வரப் பெற்ற மாணவர்கள் பட்டியல்களை திரும்பவும் பள்ளிகளுக்குஅனுப்பி உரிய முறையில் திருத்தம் செய்ய தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.இதற்கான அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருத்தம் செய்ய இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்பதால், மாணவர்கள் தங்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரே பாடத்திட்டம் வருமா?

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அந்த பாடத் திட்டத்தில் நடத்தப்படுகிறது.சி.பி.எஸ்.இ., மாணவர்கள், இத்தேர்வில் அதிகமாக பங்கேற்கின்றனர்; அவர்களுக்கு எளிதாக உள்ளது.
ஆனால், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு இத்தேர்வு கடினமாக உள்ளது.இதற்கு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்து, அதன் பின், 'நீட்' தேர்வு நடத்தினால், நியாயமான போட்டியாக இருக்கும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பணி

சிண்டிகேட் வங்கியில் 2017-2018-ஆம் ஆண்டிற்கா 400 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 400

பணி: Probationary Officer (PO)

தகுதி: 01.10.2016 தேதியின்படி 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42020

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவதாகம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2016

எழுத்துத் தேர்வு நடைபெறுவதற்கான கடைசி தேதி: 26.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.syndicatebank.in/RecruitmentFiles/PGDBF_ADVERTISEMENT_2017-18-12122015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிவிந்துகொள்ளவும்.

3ம் பருவப்பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்குள் வினியோகிக்க உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு பாடப்புத்தக சுமையை குறைப்பதற்காக முப்பருவ முறை நடைமுறையில் உள்ளது. இதையடுத்து பாடப்புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான இரண்டு பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு தற்ேபாது இரண்டாம் பருவத் தேர்வுகள் நடக்கின்றன. இந்நிலையில், வரும் 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது. ஜனவரி மாதம் தான் பள்ளிகள் இயங்கும் என்பதால் 3ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். முன்னதாக 52 தலைப்புகளில் சுமார் 6 கோடி இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகங்களை பெற்று 22க்கும் மேற்பட்ட கிடங்குகளில் வைத்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களுக்கு புத்தகங்கள் சென்று சேரவேண்டிய நிலை உள்ளது. இரண்டு நாட்களில் முழுமையாக புத்தகங்கள் சென்று சேர்ந்துவிடும். ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது அனைத்து மாணவர்களுக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 28ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்ப மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

’செமஸ்டர்’ கட்டணம்; கல்லூரிகள் கெடுபிடி

தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பணத் தட்டுப்பாடு காரணமாக, ’செமஸ்டர்’ கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.


தனியார் கலை, அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளில், ஒவ்வொரு செமஸ்டரிலும், தனியாக கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 


இந்த ஆண்டில், இரண்டாவது செமஸ்டருக்கான கட்டணம், டிச., 1 முதல் வசூலிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான கல்லுாரிகள், டிச., 15க்குள் கட்டணம் செலுத்த, காலக்கெடு விதித்துள்ளன. 40 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளதால், மாணவ, மாணவியர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். 


தற்போது ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டில், இந்த தொகையை, வங்கிகளில் எடுக்க முடியாமல், பெற்றோர் தவிக்கின்றனர்; கல்லுாரிகளில் காசோலைகள் வாங்கவும் மறுக்கின்றனர். இதை கண்டு கொள்ளாத கல்லுாரி நிர்வாகங்கள், கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியரை, கல்லுாரியை விட்டு வெளியே அனுப்புவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. 


எனவே, கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்லுாரி இயக்குனர் ஆகியோர் தலையிட்டு, மாணவ, மாணவியருக்கு, ஜன., வரை அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆராய்ச்சி ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லை!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், சமூக சூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்து விழிப்புணர்வு இல்லாததால், தமிழகத்திலிருந்து இந்த விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ், திருமணம், குழந்தை பேறு, விபத்து, உள்ளிட்ட சமூகசூழல்கள் காரணமாக ஆராய்ச்சி படிப்பை தொடரமுடியாத பெண்களுக்கு ஆராய்ச்சிகளை தொடரமூன்றாண்டு கால ஊக்கத்தொகை, அறிவியல்மற்றும் தொழில்நுட்ப துறையின் மூலம்வழங்கப்படுகிறது. 

இந்த ஊக்கத்தொகைக்கு தேர்வு பெறும் பெண்கள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், ஆராய்ச்சி படிப்புகளைதொடரவும், மாதம் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, மூன்று பிரிவுகளின் கீழ் பலஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. முதுநிலை பட்டம் பெற்ற பெண்கள் சமூக காரணங்களால் படிப்பைதொடர முடியாமல் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்சம் முதுநிலை முடித்து, இரண்டு ஆண்டுகள் இடைவெளியும், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கானகட்டுரையும் சமர்ப்பித்தால் போதுமானது. தமிழகத்தில், இதுபோன்று படிப்பை தொடர முடியாத பல பெண்கள்இருப்பினும், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஊக்கத்தொகை சார்ந்த விழிப்புணர்வு இல்லை. 

ஆனால், வடமாநிலங்களில் இதுகுறித்த விழிப்புணர்வுடன் அதிகப்படியான விண்ணப்பங்கள்சமர்ப்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை பிரிவில்,விண்ணப்பிப்பவர்களின் பங்கு மிகவும் சொற்ப அளவில் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் வேதனைதெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, அரசு கல்லுாரி பேராசிரியர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர் ரவி கூறியதாவது: 

ஆராய்ச்சி என்ற பிரிவின் கீழ், பெண்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. எம்.பில்., பி.எச்டி., போன்றஆராய்ச்சி படிப்பை அதிக அளவில் மாணவர்களே மேற்கொள்கின்றனர். திருமணம், மகப்பேறு போன்ற சமூககாரணங்களால் ஆராய்ச்சிகளில் பெண்கள் சாதிக்க முடிவதில்லை. இதன் காரணமாகவே, மத்திய அறிவியல்மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ், பெண் ஆராய்ச்சியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 

தமிழகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வும், விண்ணப்பிப்பவர்களும் மிகவும் குறைவு. 27 முதல் 55க்குள்வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்கவேண்டும். இதுகுறித்த, விபரங்களுக்கு, 97897 74351 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு

2016 - 17ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி வட்டி 8.80%ல் இருந்து 8.65% ஆக குறைக்கப்பட்டுள்ளது.