யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/12/18

பாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை!

சென்னை, 'டிப்ளமா' இன்ஜி., மாணவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுக்கு பின், தகுதி தேர்வு நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, டிப்ளமா சான்றிதழ் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த தகவல், உண்மைக்கு மாறானது என, ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் துணை தலைவர், புனியா வெளியிட்ட அறிவிப்பில், 'டிப்ளமா மாணவர்களுக்கு, கல்லுாரி தேர்வுகளை தவிர, வேறு எந்த தேர்வும் புதிதாக நடத்தப்படாது' என, தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர் நிதியுதவி இரு மடங்காக உயர்வு

சென்னை :கடலோர காவல் படை வீரர்கள், பணியின் போது இறந்தாலோ, காயமடைந்தாலோ, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவது போல், நிதியுதவி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிதியுதவி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டுள்ளது.எல்லை பாதுகாப்பு பணி வீரர்கள், எதிரிகள் தாக்குதலில் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின், கார்கில் நிதியிலிருந்து, நிதியுதவி வழங்கப்படுகிறது. அதேபோல், காயமடைந்தோருக்கும் வழங்கப்படுகிறது.வீர மரணமடையும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு, இதுவரை, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 20 லட்சமாக உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், முழுமையாக ஊனமடைந்த, இரண்டு கைகளை இழந்த, பார்வை இழந்த வீரர்களுக்கு, இதுவரை, ஏழு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், ஒரு கை இழந்தாலோ, ஒரு கண் இழந்தாலோ, ஐந்து லட்சம் ரூபாயை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது.அதேபோல, கடலோர காவல் படையினர், பணியின் போது இறந்தாலும், ஊனமடைந்தாலும், ராணுவ வீரர்களுக்கு வழங்குவது போல, நிதியுதவி வழங்கவும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம், 'ஸ்டிரைக்'

சென்னை மத்திய தொழிற்சங்கங்கள், அடுத்த ஆண்டு, ஜனவரி, 8, 9ம் தேதிகளில், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.மத்திய போக்குவரத்து தொழிற்சங்கங்களான, தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சங்கங்களின் ஆலோசனை கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது.
இதில், ஜன., 8, 9ம் தேதிகளில், வேலை நிறுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.இது குறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:மத்திய அரசு நிறைவேற்ற உள்ள, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில், பஸ்களின் எண்ணிக்கையை குறைப்பதை கைவிட வேண்டும். பணியாளர் எண்ணிக்கையை குறைத்து, தனியார் மயமாக்குவதை தவிர்க்க வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 8, 9ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், நாங்கள் ஈடுபட உள்ளோம்.அதற்கான ஆயத்த கூட்டங்கள், இன்று முதல், தமிழகம் முழுவதும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு!!!

நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், 'டிஸ்மிஸ்'

அனுமதி இன்றி, விடுப்பு எடுக்கும் ஆசிரி யர்களையும், நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களையும், பணி நீக்கம் செய்ய, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வி துறையில், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களில் சிலர், உரியஅனுமதியின்றி, நீண்ட கால விடுப்பு எடுத்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் பணியில் சேர்கின்றனர்.நீண்ட விடுப்பில் இருக்கும் சிலர், திடீரென இறந்து விடுகின்றனர்.அவர்களின் குடும்பத்தினர், தங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பண பலன்கள் கேட்டு, அரசிடம் விண்ணப்பிக்கின்றனர்.

ஆனால், அரசு வேலையே செய்யாமல், ஒழுங்கீனமாக நடந்தவர்களுக்கு, எதற்கு நிதியுதவி என, நிதித்துறையில் கேள்வி எழுப்பப்படுகிறது.'சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்டு, உரிய காலத்தில், ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது' என்றும், நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரி களுக்கு, பள்ளி கல்வி செயலகம், அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், கூறியிருப்பதாவது:

அனுமதியின்றி விடுப்பில் உள்ளவர்கள் மற்றும் ஒழுங்கீன அரசு பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மீது, காலதாமதம் இன்றி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், வேலையேசெய்யாதவர்களுக்கு, அரசின் இழப்பீடு வழங்க வேண்டிய தேவை ஏற்படாது. எனவே, வேலைக்கு வராதவர்கள் மீது, பணி நீக்கம் உள்ளிட்ட, ஒழுங்குநடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடையை போல் அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். 

 ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

 ஒன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சீருடையை ேபான்றே அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் சீருடை வழங்கப்படும்.தனியார் பங்களிப்பு நிதி மூலம் 122 பள்ளிகளில்ஸ்மார்ட்  வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.

புதிதாக தொடங்கப்பட உள்ளஎல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி கற்றுத்தரப்படும்.  கோபி அருகே உள்ள கொளப்பலூரில் அரசு சார்பில் புதிய டெக்ஸ்டைல் பார்க் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும். கோபி தொகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 1,840 வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும் 2,800 வீடு  கட்ட ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

வருகைப்பதிவு, செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை கல்வித்துறை பட்டியலிடுகிறது.

கிராமப்புற பள்ளிகளில், 'நெட்வொர்க்', பிரச்னையால், மாணவர்களின் வருகையை, ஆன்லைனில் பதிவு செய்வது சிக்கலாகியுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு பள்ளிகள் உள்ளன.

*அரசு பள்ளி மாணவர்களின் வருகையை, 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் நடைமுறை செப்., மாதம் முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

*வகுப்பு ஆசிரியர்கள், அவர்களது, 'ஆன்ட்ராய்ட்', மொபைல்போனில், வருகை பதிவு செயலியை பதிவிறக்கம்செய்து, அதில், மாணவர்கள் வருகையை பதிவிட வேண்டும்.

*கிராமப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், 'ஆன்ட்ராய்ட்' மொபைல்கள் வைத்திருந்தாலும், 'நெட்வொர்க்' பிரச்னையால், பலரும் சாதாரண 'மொபைல்போன்'களை பயன்படுத்துகின்றனர்.

*தற்போது, கல்வித்துறை உத்தரவால், 'நெட்வொர்க்', இல்லாத பள்ளிகளில், 'ஆன்லைன்' வருகை பதிவுக்கு ஆசிரியர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

*பள்ளிகள் அமைந்திருக்கும் கிராமங்களில், 'நெட்வொர்க்', இருக்கும் இடங்களுக்கு சென்று, செயலியில், வருகையை பதிவேற்றம் செய்கின்றனர்.

*இப்பிரச்னை இருக்கும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வேறு ஆலோசனையும் வழங்கப்பட்டது.

*வீட்டில் 'ஆன்லைன்' செயலியை துவக்கிக்கொண்டு, பள்ளிக்கு வந்தவுடன் வருகை பதிவு செய்துகொள்ளலாம்.

*மீண்டும் 'நெட்வொர்க்', உள்ள இடத்துக்கு செல்லும்போது வருகைப்பதிவை தானாக பதிவாகிவிடும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

*ஆனால், பலரும் இதனை முயற்சி செய்தும், நேரம் மாறி காட்டுவதாகவும், சில நாட்களில், பதிவு ஆகாமல் போய்விடுவதாகவும் ஆசிரியர்கள் புகார் கூறுகின்றனர்.தற்போது, கல்வித்துறை 'ஆன்லைன்' வருகைப் பதிவை தீவிரமாக கண்காணிக்கிறது.

*இப்பிரச்னையால் வருகைப்பதிவு, இப்பதிவை செய்ய முடியாத பள்ளிகளின் பெயர்களை தொடர்ந்து கல்வித்துறை பட்டியலிடுகிறது.

*இத்தகைய வருகை பதிவு செய்வதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணாமல் கல்வித்துறை பள்ளிநிர்வாகங்களை புகார் கூறுவதால், ஆசிரியர்கள் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளனர்.

பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக்கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை:

பிளாஸ்டிக் தடை எதிரொலியாக பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1 முதல்பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலுக்குவருகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள்  நடத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக்  டப்பாக்களில் எடுத்து வரக்கூடாது.

மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும்1ம் தேதி முதல், பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் இல்லாத, பசுமை  வளாகமாக மாற்ற வேண்டும் என தலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறையிலும் மாணவர்கள் பள்ளி செல்ல வேண்டும்!...

அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது!
தமிழக பள்ளிகளில் நடைபெற்று வரும் அரையாண்டு தேர்வு வரும் 22-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், வரும் 23 முதல் 31-ஆம் தேதி வரை உள்ள விடுமுறை நாட்களில் NEET சிறப்பு வகுப்புகளை நடத்த தமிழக பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திலுள்ள 413 மையங்களிலும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளை கருத்தில்கொண்டு செய்முறை வகுப்புகள் மற்றும் மீதம் இருக்கக்கூடிய பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுந்த கால அட்டவணையை தயார் செய்து, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் எனவும் NEET சிறப்பு வகுப்புகள் நடத்தும் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவித்து கடிதத்தில் கையெழுத்து பெற்று வரவேண்டும் எனவும் பள்ளிக்கல்வி துறை குறிப்பிட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகளின் போது அரையாண்டு தேர்வுக்கான திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத ,வாசிக்க தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும்: அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி

புதுக்கோட்டை மாவட்ட த்தில்  எழுத ,வாசிக்க தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும்: அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குநர் செ.அமுதவல்லி

புதுக்கோட்டை,டிச.21: புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்,ஆங்கிலம் எழுத ,வாசிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையினை உருவாக்க வேண்டும் என அரசுதேர்வுத்துறை இணைஇயக்குநர்(பணியாளர்தொகுதி) செ.அமுதவல்லி பேசினார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  அரசு தேர்வுத்துறை இணைஇயக்குநரும்(பணியாளர்தொகுதி), மண்டல ஆய்வு அலுவலருமான செ.அமுதவல்லி தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்துஅரசு தேர்வுத்துறை இணைஇயக்குநரும்(பணியாளர்தொகுதி) ,மண்டல ஆய்வு அலுவலருமான செ.அமுதவல்லி பேசியதாவது: பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை தினமும் காலை,மதியம்  இருவேளைகளிலும் மாணவர்களின் வருகைப்பதிவினை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்..மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள்,குறிப்பேடுகள் ,மாணவர்களின் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.கல்வித் துறையின் சார்பில் கேட்கப்படும் புள்ளி விபரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் உடனுக்குடன் வழங்கிட வேண்டும்.மாணவர்களின் நலன் கருதி மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறுந்தகவலில் அனுப்ப தலைமையாசிரியர்களை  வட்டாரக்கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள மாணவர்கள்  தமிழ்,ஆங்கிலம் எழுத ,வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்,கணிதத்தில் அடிப்படை செயல்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  இரா.வனஜா,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு ) கு.திராவிடச் செல்வம்,மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள்,வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் துறை உதவிஇயக்குநர் அலுவலகத்தையும், புதுக்கோட்டை வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யும் அலுவலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்..ஆய்வின் போது   புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா,மாவட்டக்கல்வி அலுவலர்கள் இலுப்பூர் க.குணசேகரன்,புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம், அரசுத்தேர்வுகள் துறை உதவிஇயக்குநர் அ.பிச்சைமுத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர்  சி.பழனிவேலு உள்ளிட்ட பலர்  உடன் இருந்தனர்.

முன்னதாக திருக்கோகர்ணம் அரசினர் மேல்நிலைப்பள்ளி,திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
<img src="http://feeds.feedburner.com/~r/kalvikural/CPsd/~4/atfXKXZTChI?utm_source=feedburner&utm_med
...

கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி:

கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 50 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இணைய தேடுபொறியான, 'கூகுள்' நிறுவனம், பள்ளி மாணவ - மாணவியரிடையே, 'அனிமேஷன்' செய்ய தேவையான அடிப்படை குறித்து, ஆண்டுதோறும், ஆன்லைன் தேர்வு நடத்துகிறது.ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம் நடைபெறும் இத்தேர்விற்கு, நாடு முழுவதும் ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், 50 பேர் பங்கேற்றனர்.கடந்த நவம்பரில் நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகள், இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இதில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து பங்கேற்ற, 50 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட இப்பள்ளியில் பயிலும், ஏழைமாணவர்கள், 'கூகுள்' நிறுவன தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், "பன்னிரெண்டாம் வெறுப்பு முடிந்தவுடனே மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்குமாறு புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க இருக்கின்றோம். இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்க இருக்கின்றோம். அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார்.

இப்பாடத்திட்டம் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு புதிய வகையான சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு: ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு!

நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் மட்டும் 3,400 பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை இயக்ககத்தின்கீழ் 27,895 ஆரம்பப் பள்ளிகள், 9,134 நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 28 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், 1.12 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழக அரசு சார்பில் பல இலவச திட்டங்கள் அறிவித்தும் ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிவில் பயணித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாத ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாநிலத்தில் 3,400 தொடக்கப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். இதையடுத்து முதல்கட்டமாக 10 மாணவருக்கும் குறைவாக உள்ள 1,324 பள்ளிகளை அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க திட்டமிட்டு பள்ளிக் கல்வித் துறை செயலாற்றி வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியதாவது:சமகிர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு வழங்கும் முறை மாற்றி அமைக்கப்பட்டது. 15-க்கும் குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படாது. அதாவது பலவீனமான கட்டிடங்கள்மற்றும் மாணவர், ஆசிரியர் பற்றாக்குறையுள்ளபள்ளிகளை, அருகே உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது.இதனால் நாடு முழுவதும் 2.8 லட்சம் பள்ளிகள்மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழ கத்தில் மட்டும் 3,400 பள்ளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட் டுள்ளது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக முதல்கட்டமாக 10-க் கும் குறைந்த மாணவர்களை கொண்ட 1,324 பள்ளிகளை, அருகே உள்ள மற்ற பள்ளிகளு டன் இணைக்க அரசு முடிவு எடுத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராபர்ட் கூறியது:

கல்வித்துறையை சேவை யாகப் பார்க்க மத்திய, மாநில அரசுகள் தவறி வருகின்றன. சேர்க்கை குறைவதற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்யாமல், பள்ளிகளை மூடுவதால் எதிர்காலத்தில் கல்வி முழுவதும் தனியார் வசம் சென்றுவிடும். பள்ளியில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத் தினாலே மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.அதற்கு மாறாக இலவச கட்டாய கல்வித் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை அரசே சேர்க்கிறது. இதற்காக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ரூ.200 கோடி செலவாகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில்முறையான ஆய்வகம், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள்கூட கிடை யாது. தனியார் பள்ளிக்கு தரும் நிதியை, அரசுப் பள்ளிக்கு பயன்படுத்தினால் சேர்க்கை அதிகரிக்கும்.தொடக்கப் பள்ளிகள் மூடப் பட்டால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இது தவிர தொடக்கக் கல்வி இயக்குநர கத்தையும் கலைத்துவிட்டு பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தொடக்கக் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

2018-19தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கான ஊதிய ஆணை வெளியீடு

MPART வழிமுறைகள் தமிழில்... செயல்திட்டம் செய்வது எப்படி? பார்க்க /பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇

கடற்படையில் செய்லர் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு:

இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி: Sailor (Senior Secondary Recruit (SSR))
காலியிடங்கள்: 2500
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.
இந்திய கடற்படையில் காலியாக காலியாக உள்ள 2500 செய்லர் பணிக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Sailor (Senior Secondary Recruit (SSR)) காலியிடங்கள்: 2500 சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100 வயதுவரம்பு: 01.08.1998க்கும் - 31.07.2002க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். தகுதி: கணிதம், இயற்பியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி: குறைந்தபட்சம் 157 செ.மீ உயரமும், மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தகுதி: 7 நிமிடங்களில் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும். மேலும் கடற்படை வீரருக்கு ஏற்ற ஆரோக்கியமான உடற்தகுதி மற்றும் தெளிவான பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற் தகுதி திறன் தேர்வு, மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும். ஆங்கிலும், அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.12.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.