யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/12/17

பள்ளி மாணவர்களுக்கு, ‘ஹெல்ப்லைன்’ தயார் : 14417 எண்ணில் உளவியல், தேர்வு ஆலோசனை!!!

பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு வழிகாட்டுதல், உயர்கல்வி சந்தேகம், உளவியல் ஆலோசனைகள் வழங்க, ‘ஹெல்ப்லைன்’ திட்டம், சில வாரங்களில் அறிமுகம்
ஆகிறது.

14417 என்ற எண்ணில், இந்த ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, 2016 வரை, மிக மோசமான நிலையில், எந்த முன்னேற்றமும் இன்றி இயங்கி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, சமூக ஆர்வலர்களும், ஆசிரியர் சங்கத்தினரும் பாராட்டும் பல திட்டங்கள்


அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டம் தயாரிப்பு, போட்டி தேர்வுக்கு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், ‘ரேங்கிங்’ முறை ரத்து திட்டங்களின் வரிசையில், மாணவர்களுக்கான, ‘ஹெல்ப்லைன்’ திட்டம் அறிமுகம் ஆகிறது. இன்னும் சில வாரங்களில், தமிழக முதல்வரின் வழியே இந்த திட்டம் துவங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில், 14417 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண், இயங்கும். பள்ளி மாணவர்களின் தேர்வுக்கான சந்தேகங்கள், தேர்வு குறித்த தகவல்கள், நுழைவு தேர்வு தொடர்பான விளக்கம், உயர்கல்விக்கு செல்வதற்கான வாய்ப்புகள், பள்ளிகளில் உள்கட்டமைப்பு பிரச்னை, ஆசிரியர், மாணவர்களுக்கு இடையிலான சர்ச்சைகள் என, அனைத்து பிரச்னை குறித்தும், புகார்களை தெரிவிக்கலாம்.அதேபோல், கல்வி தொடர்பான ஆலோசனைகளையும் கேட்டு பெறலாம்.மதிப்பெண் பிரச்னை, தேர்வு பயம், பெற்றோரின் அழுத்தம், ஆசிரியர்களின் நெருக்கடிகளை சமாளிக்க, மாணவ, மாணவியருக்கு உளவியல் மற்றும் ஒழுக்க நெறி ஆலோசனைகளும் வழங்கப்படும்.இதற்காக உதவி மையத்தில், உளவியல் நிபுணர்கள், 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுஉள்ளது.

இன்று 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

வணக்கம். ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை 3.00 மணிக்கு (8.12.17) மதுரை அரசு ஊழியர் சங்கத்தில் ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம்
நடைபெற உள்ளது. எனவே அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும், உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண் ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ_ஜியோ

புத்தக பூங்கொத்து பதிவேடு - படிவம்

இரண்டே நாட்களில் பான் கார்டு பெறுவது எப்படி?

உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லைஎன்றாலும்


பான்கார்டு வைத்திருப்பது நல்லது.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரிசெலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10இலக்க எண்ணெழுத்தாகும். பான் கார்டினை அடையாளஅட்டையாகவும் பயன்படுத்தலாம்.
முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினைபெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டேநாட்களில் பான் கார்டு பெறவழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுஎப்படி என்று இங்குப் பார்ப்போம்.
1.என்எஸ்டிஎல் https://tin.tin.nsdl.com/ இணையதளத்தில் உள்நுழைக.

என்எஸ்டிஎல் இணையதளத்தில் உள்நுழைந்த பிறகுஉங்களுக்கான படிவத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர்இணையம் அல்லது ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிக்கவேண்டுமா என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலமாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதுதேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம்.
2. எந்த படிவம் என்பதைத் தேர்வு செய்யவும்
வழிகாட்டுதல்களை வாசித்த பிறகு என்ன படிவம் என்பதைத்தேர்வு செய்ய வேண்டும் பின்னர் தேவையான விவரங்களைப்படிவத்தில் உள்ளிடவும்.
3. விண்ணப்பத்தை எப்படிச் சமர்ப்பிப்பது?
படிவத்தை முழுவதுமாக நிரப்பிய பிறகு, தேவையானஆவணங்களைப் பதிவேற்றவும். ஆப்லைன் மூலம்விண்ணப்பிக்க விரும்புபவர்களும் பதிவிறக்கிய படிவத்தைஅச்சிட்டு அதில் விவரங்களை நிரப்ப வேண்டும். பின்னர்தேவையான விவரங்களை இணைக்க வேண்டும்.
4. விண்ணப்பத்தின் நிலை கண்டறிக
விண்ணப்பத்தைப் பதிவேற்றிய பிறகு உங்களுக்கு ஒப்புகை எண்ஒன்று கிடைக்கும், அதைவைத்துக்கொண்டுhttps://tin.tin.nsdl.com/pantan/StatusTrack.html என்ற இணைப்பிற்குச் சென்று உங்கள்விண்ணப்பம் என்ன நிலையில் உள்ளது என்றுசரிபார்த்துக்கொள்ளலாம். இப்படிச் செய்யும் போது உங்களுக்குஎப்போதும் போல பான் கார்டினை பெற 15 முதல் 20 நாட்கள் வரைஆகும். எனவே இங்குத் தெரிவினை பார்த்துத் தேர்வு செய்யவேண்டும்.
5. 48 மணி நேரத்தில் பான் கார்டு

படிவத்தினை சமர்ப்பித்த பிறகு நீங்கள் சரிபார்ப்பு முறை படிகளைசெய்ய வேண்டும். உங்களுக்கு வரி செலுத்தும் அளவிற்குவருமானம் இல்லை என்றாலும் பான் கார்டு வைத்திருப்பதுநல்லது.

அரசு ஊழியர்களுக்கு நிகராக ஓதுவார்களுக்கு சம்பளம் ஐக்கோர்ட் உத்தரவு!!!

தமிழாசிரியர் ஊக்க ஊதிய உயர்வு குறித்த CM CELL Reply




RTI-HRA-மாநகராட்சி வீட்டு வாடகைப்படியை 16 கி.மீ ஆர எல்லை பெற்று அரசாணை அடிப்படையில் சம்பந்தப்பட்ட சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரே வழங்கலாம்




Income tax கட்டும் மாதாந்திர சம்பளம் பெறுவோர் கவனிக்க

நாம் மாதம் பெறும் மொத்த சம்பளத்தொகைக்கு அனுமதிக்கப்பட்ட கழிவுகள் போக பிப்ரவரி மாதம் income tax கணக்கிட்டு tax தொகையை சம்பளத்தில் பிடிக்கும் வகையில் ஓர் இன்கம் டாக்ஸ் கணக்கிட்டு படிவம்
தருகிறோம்.அவர்களும் அத்தொகையை ஊதியத்தில் பிடித்தபின் மீதி ஊதியம் வழங்குகின்றனர்.இம்முறை சரியா? தவறா? என படித்த நாமே அறிவதில்லை.

👉இன்கம் டாக்ஸ் விதிகள் கூறுவதென்ன

👉ஆண்டு வருமான அடிப்படையில் வரி கணக்கிட்டுநாம் அட்வான்ஸ்டு டாக்ஸ் செலுத்த வேண்டும் .

👉எப்போது செலுத்த வேண்டும், எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?அதற்கு விதிமுறை உள்ளதா?

👉ஆம் நம்து மொத்த வரித்தொகையில்

1.ஜூன் 15 க்கு முன்னதாக 15%

2. செப்டம்பர் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 45%

3.டிசம்பர் 15க்கு முன்னதாக மொத்தத்தில் 75%

4. மார்ச் 15 க்கு முன்னதாக மொத்தத்தில் 100 % அதாவது வரி முழுமையான அளவில் செலுத் வ்வாறு செலுத்தும் போது தான் நாம் சரியாக வரி கட்டுகிரோம் என பொருள் கொள்ளப்படும்.

👉இவ்வாறு செலுத்தாவிடில் நாம் irregular tax payer list ல் வைக்கப்படுவோம்.

👉அதனால் என்ன விளைவு? நாம் இவ்வாறு செலுத்தாத தொகைக்கு வட்டி அபராத வட்டி செலுத்திதான் செப்டம்பர் 30க்குள் வருமானவரி க்கணக்கு தாக்கல் செய்யமுடியும்.

👉எவ்வளவு வட்டி( அபராதம்) தெரியுமா ரூ 10000 முதல் 50000 வரை டாக்ஸ் அமொண்ட் எனில் 500 முதல் 2500 வரை வரும்.அதாவது ரூ 50000 வரை 5% வட்டி,அதற்கு மேல் எனில் 6 முதல் 10% வட்டியாக வசூலிக்கப்படும்.

👉 மார்ச் 15 க்குமேல் செலுத்தப்படும் வரிக்கு 10 முதல் 20 சத்வீதம் வரை வட்டி வசூலிக்க வாய்ப்புண்டு.

👉மாத ஊதிய தாரர்கள் என்ன செய்ய வேண்டும் நாம் கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி வரி அடைவு வரும் வகையில் மாத ஊதியத்தில் இன்கம்டாக்ஸ் பிடித்தம் செய்யலாம்

👉அல்லது சலான் மூலம் அட்வான்ஸ் டாகஸ் என கொடுக்கப்பட்ட தேதிக்குல் நமது பான் கணக்கில் வங்கியில் செலுத்தலாம் அல்லது அத்தகைய கணக்கிட்டின் படி அட்வான்ஸ் டாக்ஸ் தொகையை இண்டர் நெட் பாங்கிங் மூலம் நேரடியாக நமது பான் என்னிலே செலுத்தலாம். ஆக

👉விழிப்படைவோம்.


👉நமது பான் என்னிலே உடனேஅட்வான்ஸ் இன்கம்டாக்ஸ் இண்டர்நெட் பாங்கிங் மூலம் செலுத்தி அபராதம் மற்றும் irregular tax payer என்ற அப வாதத்தையும் தவிர்ப்போம்

EMIS NEWS

தற்போது  எமிஸ் வலைதளம் 
செயல்படவில்லையா கவலை வேண்டாம்.
காரணம்  மாணவனது போட்டோவை அப்லோடு செய்யும் வகையில் சர்வர் தயார்செய்யம்  பணி நடைபெறுகின்றது. போட்டோக்களை ஸ்மார்ட்போன் மூலம் அப்படியே மாணவனைபடம் பிடித்து ஏற்றும் வகையில்   ஸ்மார்ட் போன் ஆன்ராய்டு App தயார் செய்யப்பட்டு வருகின்றது எனவே எமிஸ் வலைதளம் திங்கள் முதல் ,வலைதளம் மற்றும், Cellphone அப்ளிகேஷன்  என இரு வழியிலும் செயல் பட உள்ளது.பதட்டமில்லாமல் திஙகள்  முதல் போட்டோக்களையும் ,மற்ற பதிவுகளையும்  பதிவேற்றலாம்.