யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/3/17

ஜியோ பிரைம் VS ஜியோ - எது பெஸ்ட்

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள்
என்ன ? சாதரன வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் சலுகைகள் மற்றும் பிளான் விபரங்களுடன் ஒப்பீட்டு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

ஜியோ பிரைம் VS ஜியோ
ஜியோ4ஜி சேவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பிரைம் உறுப்பினர் திட்டத்தின் கீழ் ரூ.99 ரீசார்ஜ் செய்யும் பிளான் இன்று முதல் ஜியோ இணையதளம் ,மைஜியோ ஆப் மற்றும் ரீசார்ஜ் மையங்களில் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ரூ. 99 கொண்டு ரீசார்ஜ் செய்யவில்லை எனில் என்ன நடக்கும் ? உங்கள் ஜியோ கட்டணம் எவ்வளவாக இருக்கும் என அறிந்து கொள்ளலாம்.
முன்பு ஜியோ அறிமுகப்படுத்தி திட்டத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல்அடிப்படை ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம். அதுவே நீங்கள் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் எனில் இரு மடங்கு கூடுதல் சலுகையை பெறலாம்.

நீங்கள் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர் எனில் உங்களுக்கு ரூ. 499 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2 GB அதிவேக டேட்டா அதன் பிறகு 128 Kbps  வேகத்தில் பொதிகளை பெறலாம் . நீங்கள் ஜியோ வாடிக்கையாளர் மட்டும் என்றால் 28 நாட்களுக்கு வெறும் 5 ஜிபி டேட்டா மட்டுமே பெறலாம். மற்ற விபரங்களை படங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கான தகுதி காண் (weitage mark) முறையை ரத்து செய்யக் கோரிக்கை:

தமிழகஅரசு நீட் (NEET) தேர்வினால் ஏழைகள் & கிராமத்தினர்
பாதிக்கபடுகிறார்கள் என்று ரத்து செய்தது.

அதேபோல் TET தேர்விலும்
தகுதிகாண் முறையினால்
பெருமளவில் தமிழக மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களின் நிலை:


 * அன்று அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியரின் பற்றாகுறை.    
*அப்பொழுது  சாப்பாட்டிற்கு கூட வழிஇல்லை, ட்யூசன் சென்றும் படிக்க முடியாதநிலை.
*செய்முறை மதிப்பெண்கள் மிக குறைவு.
*அன்று காலை மாலை வகுப்புகளும் இல்லை.
*90% அரசு பள்ளிகளில் 10,12ம் வகுப்பு, மாணவர்களின் முதல் மதிப்பெண்கள்  350, 750 மட்டுமே. இம்மதிப்பெணணுக்கும் கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிபாருங்கள்.
*அன்று தேர்வு எழுதும் போதும் வினாத்தாள் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
*நகரங்களில் சென்று படிக்கவும் போதிய வசதி இல்லை.
*பெருமளவு பெற்றோர் படிக்கவில்லை வீட்டுப்பாடம் செய்ய இயலாதநிலை.
* நோட்டுப்புத்தகம் கூட வாங்க முடியாத நிலை.
*கிராமப்புற மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று சிறுகசேமித்த அப்பணத்தின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி், கல்வி பயின்றுள்ளனர்.
*முக்கியமாக ஒன்று  'இன்று பள்ளிக்கு படிக்க செல்கிறார்கள், ஆனால் அன்று நாங்கள் பட்டினி என்னும் பசிப்பிணியை போக்க' பள்ளிக்கு சென்றோம்.

*இன்று இருக்கும் சமச்சீர் கல்வியும் அன்று இல்லை.

*இன்னும் கொடுமை என்னவெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பாடங்கள் இப்போது இல்லை. நாங்கள் TET தேர்விற்கு எல்லாமே புதியதாக படிக்க வேண்டிய கட்டாயநிலை.

*ஆனால் தற்போது சமச்சீர் படித்திருப்பவர்களுக்கு இதுவும் சாதகமாகவே அமைந்துள்ளது.
*இப்போது படிப்பவர்களுக்கு TET ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ! ஆனால் அப்போது .......?

*இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் மட்டுமே பெரும்பாதிப்படைவர்.
பள்ளித்தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன, என்று  TET தேர்வை கொண்டு வந்த அரசு, மீண்டும் பள்ளி மதிப்பெண்களை கணக்கில் கொள்வது எந்த விதத்தில் ஞாயம் ஆகும்.

*மாவட்ட தேர்ச்சி விகிதத்திற்காக,   தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைகள் சொல்லி கொடுப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக மாணவர்களே கூறுவது அதிர்ச்சியல்ல அனைவருக்கும் தெரிந்த அவளநிலை.
இப்படிபட்ட நிலை அன்று இல்லை.

தகுதிகாண் நடத்துவதன் மூலம் நாங்கள் TET தேர்வில் 150 க்கு 100மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை,
 *ஆனால் தற்போது படிக்கும் மாணவர்கள் தகுதிகாண் மூலம் TET தேர்வில் 90 விட குறைவான மதிப்பெண்கள் மட்டும் எடுத்து, சுலபமாக தகுதி பெற்று விடுகிறார்கள்.

*அன்று பல கடினமான சூழ்நிலைகளில் கல்வி கற்றனர்.

*தற்போது எல்லாேமே மாறிவிட்டன.
 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.
தமிழகஅரசின் பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.


*பனிரெண்டாம் வகுப்பில்  மதிப்பெண்கள்
90% :
அன்று 650/1200  கீழ், முதல் மதிப்பெண் 750.
இன்று 1000/1200 , முதல் மதிப்பெண்1199.

*தகுதி காண் மதிப்பெண்களை கொண்டுவந்த கல்வியாளர்களை தயவாய் கேட்டுக்கொள்வது, இதன் மூலம்  பல ஆயிரகணக்கான குடும்பங்கள் மற்றும் சந்ததிகள் சமூகத்தில் மேலே எழமுடியாமல் பாதிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

*ஏழைகளை நினைத்துப்பாருங்கள்.

மேற்கூரிய அனைத்தையும்
கருத்தில் கொண்டு  தமிழகஅரசு தகுதிகாண் முறையை ரத்து செய்ய வேண்டும்.

*தகுதிகாண் முறை குறித்து ஆலோசனை  நடைபெறுகிறது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

*எங்கள் வாழ்வு தமிழக அரசு கையில்


*ஏழைகள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உடனடிநடவடிக்கை எடுக்குமாறு  மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

IGNOU - GENUINENESS CERTIFICATE FEE HIKE Rs.100/- to 200/-

இக்னோ உண்மைத்தன்மை சான்று கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வால் ரூபெல்லா தடுப்பூசிக்கு சிக்கல்

திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி ஒன்று முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்தனர்.இது குறித்து அரசு விளக்கம் தந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.கிராம புற பள்ளிகளில் இன்னும் பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால், மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுபட்ட பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.
பொதுத் தேர்வால் சிக்கல் : தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. மார்ச் 8ல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால் தேர்வு மையம் உள்ள பள்ளிகளில் காலையில் மாணவர்கள் நுழைய முடியாது. பகல் 2 மணிக்குத்தான் மாணவர்கள் வருவார்கள். தேர்வு நடக்கும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினரும் நுழைந்து தடுப்பூசி வழங்க முடியாது. இந்த சிக்கலால் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளால் பள்ளிகளில் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இந்நிலையில் மார்ச் 14 வரை இந்த திட்டத்தை நீட்டித்தும் பயனில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம், என்றார்

பள்ளி குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, கல்வி நிறுவனங்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில், குழந்தைகள் கடத்தல், பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, பள்ளிகளில், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நர்சரி பள்ளிகளில் படிக்கும், 10 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், அவர்களை தனியாக விடக்கூடாது என்றும், பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தனியார் பள்ளிகளில், ஒவ்வொரு வகுப்பிலும் பெற்றோரை அழைத்து, ஆலோசனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளை, பெற்றோரே வந்து அழைத்து செல்ல வேண்டும்; தினமும் ஒரு உறவினர், நண்பர் என, யாரையாவது பள்ளிக்கு அனுப்பி, குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது; ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் குழந்தைகள் என்றால், அதன் டிரைவர் பற்றிய முழு தகவலையும், பெற்றோர்
உறுதி செய்ய வேண்டும் என, பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 

பிளஸ் 2 தேர்வு துவங்கியது : அரசு பள்ளி தேர்ச்சி அதிகரிக்குமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 'இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.பிளஸ் 2 தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில், 407 உட்பட மொத்தம், 2,434 மையங்களில் தேர்வு நடந்தது. அனைத்து மையங்களிலும்,
மாணவ, மாணவியர், காலை, 9:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர்; முதலில், பிரார்த்தனை நடந்தது. பின், தேர்வு நடைமுறைகள் குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்வு துவங்கியதும், மாணவர்கள் முன்னிலையில், வினாத்தாள் கட்டு, 'சீல்' உடைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. நேற்று, மொழி பாடத்திற்கான முதல் தாள் தேர்வு நடந்தது. அதாவது, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச், மலையாளம், ஹிந்தி, உருது, அரபிக், சமஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் ஆகிய, 10 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பணிகளை, அமைச்சர் செங்கோட்டையன், செயலர் சபிதா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில், மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறுவர்,'' என்றார்.

'நீட்' தேர்வு விலக்கு கிடைக்குமா? : அமைச்சர்களுக்கே குழப்பம்

நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக உள்ளனர்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதால், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களுக்கும், நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது. வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்க்க, மே, 7ல், 'நீட்' தேர்வு நடக்கிறது.


இதற்கான விண்ணப்ப பதிவு, ஜன., 31ல் துவங்கி, மார்ச், 1ல் முடிந்தது. ஆனால், தமிழகத்தில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, ''நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகவே உள்ளனர்,'' என்றார். 'தேர்வு உண்டா' என, தெரியாததால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பதில் அளிக்காமல் மவுனமாக உள்ளார். எனவே, தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு, விலக்கு கிடைக்காதோ என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதில், தெளிவான நிலை தெரிந்தால் தான், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியும் என்றும், பெற்றோர் தெரிவித்துஉள்ளனர்.

சாம்சங் உடன் இணைந்து 5ஜி சேவை. ஜியோவின் அடுத்த அதிரடி..

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி இலவச சேவையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ஏர்டெல் உள்பட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டு வரவில்லை.
இந்நிலையில் ஜியோவின் அடுத்த அதிரடியாக அதிவிரைவில் 5ஜி சேவை தொடங்கவுள்ளதாக வெளிவந்துள்ள அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் கதிகலங்கி உள்ளன.
ஜியோவின் 4ஜி இலவச சேவையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதுப்புது வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டு வரும் நிலையில் ஜியோ நிறுவனம், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உடன் இணைந்து, 5ஜி சேவையை இந்தியாவில் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின்படி 5ஜி சேவைக்குத் தேவையான ஸ்மார்ட்ஃபோன்களை சாம்சங் தயாரித்து வழங்கவுள்ளதாகவும், மற்ற சேவைப் பணிகளை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ஜியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளதால் ஜியோ வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

முந்தைய TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம்! - பள்ளி கல்வி அமைச்சர்

காலி ஏற்படும் 3 ஆயிரம் ஆசிரிய பணியிடங்களில், முந்தைய TNTET  தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணி நியமனம் செய்யமுதல் அமைச்சரிடம் கலந்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் திரு. செங்கோட்டையன் அறிவித்தார்

கற்றல் கையேடு +12