யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/3/17

ஆசிரியர்களுக்கான தகுதி காண் (weitage mark) முறையை ரத்து செய்யக் கோரிக்கை:

தமிழகஅரசு நீட் (NEET) தேர்வினால் ஏழைகள் & கிராமத்தினர்
பாதிக்கபடுகிறார்கள் என்று ரத்து செய்தது.

அதேபோல் TET தேர்விலும்
தகுதிகாண் முறையினால்
பெருமளவில் தமிழக மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களின் நிலை:


 * அன்று அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியரின் பற்றாகுறை.    
*அப்பொழுது  சாப்பாட்டிற்கு கூட வழிஇல்லை, ட்யூசன் சென்றும் படிக்க முடியாதநிலை.
*செய்முறை மதிப்பெண்கள் மிக குறைவு.
*அன்று காலை மாலை வகுப்புகளும் இல்லை.
*90% அரசு பள்ளிகளில் 10,12ம் வகுப்பு, மாணவர்களின் முதல் மதிப்பெண்கள்  350, 750 மட்டுமே. இம்மதிப்பெணணுக்கும் கீழ் உள்ளவர்களின் நிலையை எண்ணிபாருங்கள்.
*அன்று தேர்வு எழுதும் போதும் வினாத்தாள் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
*நகரங்களில் சென்று படிக்கவும் போதிய வசதி இல்லை.
*பெருமளவு பெற்றோர் படிக்கவில்லை வீட்டுப்பாடம் செய்ய இயலாதநிலை.
* நோட்டுப்புத்தகம் கூட வாங்க முடியாத நிலை.
*கிராமப்புற மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு சென்று சிறுகசேமித்த அப்பணத்தின் மூலம் குடும்பத்தை காப்பாற்றி், கல்வி பயின்றுள்ளனர்.
*முக்கியமாக ஒன்று  'இன்று பள்ளிக்கு படிக்க செல்கிறார்கள், ஆனால் அன்று நாங்கள் பட்டினி என்னும் பசிப்பிணியை போக்க' பள்ளிக்கு சென்றோம்.

*இன்று இருக்கும் சமச்சீர் கல்வியும் அன்று இல்லை.

*இன்னும் கொடுமை என்னவெனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பாடங்கள் இப்போது இல்லை. நாங்கள் TET தேர்விற்கு எல்லாமே புதியதாக படிக்க வேண்டிய கட்டாயநிலை.

*ஆனால் தற்போது சமச்சீர் படித்திருப்பவர்களுக்கு இதுவும் சாதகமாகவே அமைந்துள்ளது.
*இப்போது படிப்பவர்களுக்கு TET ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ! ஆனால் அப்போது .......?

*இதனால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் மட்டுமே பெரும்பாதிப்படைவர்.
பள்ளித்தேர்வில் முறைகேடுகள் நடக்கின்றன, என்று  TET தேர்வை கொண்டு வந்த அரசு, மீண்டும் பள்ளி மதிப்பெண்களை கணக்கில் கொள்வது எந்த விதத்தில் ஞாயம் ஆகும்.

*மாவட்ட தேர்ச்சி விகிதத்திற்காக,   தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைகள் சொல்லி கொடுப்பதும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக மாணவர்களே கூறுவது அதிர்ச்சியல்ல அனைவருக்கும் தெரிந்த அவளநிலை.
இப்படிபட்ட நிலை அன்று இல்லை.

தகுதிகாண் நடத்துவதன் மூலம் நாங்கள் TET தேர்வில் 150 க்கு 100மதிப்பெண் எடுத்தாலும் வேலை கிடைப்பதில்லை,
 *ஆனால் தற்போது படிக்கும் மாணவர்கள் தகுதிகாண் மூலம் TET தேர்வில் 90 விட குறைவான மதிப்பெண்கள் மட்டும் எடுத்து, சுலபமாக தகுதி பெற்று விடுகிறார்கள்.

*அன்று பல கடினமான சூழ்நிலைகளில் கல்வி கற்றனர்.

*தற்போது எல்லாேமே மாறிவிட்டன.
 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, தமிழகஅரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது.
தமிழகஅரசின் பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.


*பனிரெண்டாம் வகுப்பில்  மதிப்பெண்கள்
90% :
அன்று 650/1200  கீழ், முதல் மதிப்பெண் 750.
இன்று 1000/1200 , முதல் மதிப்பெண்1199.

*தகுதி காண் மதிப்பெண்களை கொண்டுவந்த கல்வியாளர்களை தயவாய் கேட்டுக்கொள்வது, இதன் மூலம்  பல ஆயிரகணக்கான குடும்பங்கள் மற்றும் சந்ததிகள் சமூகத்தில் மேலே எழமுடியாமல் பாதிக்கப்படும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

*ஏழைகளை நினைத்துப்பாருங்கள்.

மேற்கூரிய அனைத்தையும்
கருத்தில் கொண்டு  தமிழகஅரசு தகுதிகாண் முறையை ரத்து செய்ய வேண்டும்.

*தகுதிகாண் முறை குறித்து ஆலோசனை  நடைபெறுகிறது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

*எங்கள் வாழ்வு தமிழக அரசு கையில்


*ஏழைகள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு உடனடிநடவடிக்கை எடுக்குமாறு  மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக