யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/9/17

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக ஆயிரம் மையங்கள்'

பொதுத்தேர்வுக்கு கூடுதலாக, 1,000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபியில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதல் மையங்கள் அமைக்கப்படும்; ௧௦ கி.மீ.,க்குள் மையங்கள் இருக்கும். அதன்படி, நடப்பாண்டில், 1,000 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும்.
இதனால், தேர்வு சமயத்தில், மன உளைச்சல் இருக்காது. 'நீட்' தேர்வை பொருத்தவரை, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்பது தான், மாநில அரசின் கொள்கையாக உள்ளது. மத்திய அரசின், எந்த பொதுத்தேர்வையும் சந்திக்கும் அளவுக்கு, மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அடுத்த மாதம் முதல் வாரத்தில், இதற்கான பணி துவங்கும். தமிழகத்தில் கற்றல் குறைபாடு, மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், அக்.,௧௫ முதல் வகுப்பறைகளில், பயிற்சி அளிக்கப்படும். ஐ.ஏ.எஸ்., பயிலும் மாணாக்கர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, 32 நுாலகங்களில், பயிற்சி அளிக்கப்படும். தற்போது, இதற்காக பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, 2.17 கோடி ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர் தேர்வு நடைமுறை: மத்திய மனித வளத்துறை, தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த மனு விவரம்: நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 23 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐஐடி), 31 தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (என்.ஐ.டி), 7 இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) இயங்கி வருகின்றன. இந்தக் கல்வி நிறுவனங்களில் 50 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகள் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதில்லை.
மேலும் இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை. ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயிப்பதில் பல்வேறு முரண்பாடுகளும் உள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர்களை நியமிக்கும் இந்தக் கல்வி நிறுவனங்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பான 35 வயதை தளர்த்துவது இல்லை. இந்தக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றும் வகையில் கல்வித் தகுதி, வயது வரம்பு ஆகியவற்றை மாற்றியமைக்க நிபுணர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். 
இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்குத் தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை வரும் அக். 13- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை பிரிப்பது எப்போது: 10 ஆண்டுகளாக கிடப்பிலுள்ளது திட்டம்

மதுரை:மதுரையில் அதிக எண்ணிக்கையில் பள்ளிகள் கொண்ட மதுரை கல்வி மாவட்டத்தை (டி.இ.ஓ.,) இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மதுரையில் 1939ல் உருவாக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை முதன்மை கல்வி அலுவலகம், 1985ல் திண்டுக்கல், 1997ல் தேனி முதன்மை கல்வி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன. 
இதையடுத்து மதுரை வருவாய் கல்வி மாவட்டம் அளவில் உள்ளதை நிர்வாக வசதிக்காக 13.2.1995ல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், 29.8.1960ல் உசிலம்பட்டி டி.இ.ஓ., 14.9.1985ல் மேலுார் டி.இ.ஓ., மற்றும் 8.2.1995ல் மதுரை டி.இ.ஓ., அலுவலகங்களாக பிரிக்கப்பட்டன.மதுரை நகர் வளர்ச்சியடைந்ததன் காரணமாக பள்ளிகளின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தன. தற்போது மூன்று கல்வி மாவட்டங்களில் மொத்தமுள்ள பள்ளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மதுரை டி.இ.ஓ.,வின் கீழ் செயல்படுகின்றன. அதாவது 534 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 220க்கும் மேற்பட்ட பள்ளிகள் மதுரை டி.இ.ஓ.,விற்கு உள்ளது.அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். அதேநேரம் உசிலம்பட்டி - 121, மேலுார் -189 பள்ளிகள் உள்ளன. ஆனால் மூன்று டி.இ.ஓ., அலுவலகங்களிலும் பணியாளர்கள் ஒரே விகிதத்தில் தான் உள்ளன.
இதனால் பள்ளி ஆய்வுகள் அதிகாரிகளுக்கு சவாலாகவும், நிர்வாக ரீதியிலான பணிகள் அலுவலர்களுக்கு சுமையாகவும் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தான் பத்து ஆண்டுகளுக்கு முன் பாண்டுரங்கன் சி.இ.ஓ.,வாக இருந்தபோது மதுரை டி.இ.ஓ., அலுவலகத்தை இரண்டாக பிரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் பெரிய ஒன்றியங்களான அலங்காநல்லுார், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் மதுரையின் கீழ் உள்ளன. மாணவர்கள் எண்ணிக்கையும் இங்கு அதிகம். இதை இரண்டாக பிரித்தால் மட்டுமே கற்றல் கற்பித்தல், பள்ளி ஆய்வுகள் பணிகள் சீராகவும், நிர்வாக பணிகள் சிறப்பாக மேற்கொள்ள முடியும்," என்றார்.

ஊதிய மாற்று அறிக்கை மீது அக்.15-க்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி ஊதிய மாற்று அறிக்கையைப் பெற்று அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என அரசுப் பணியாளர் சங்க கூட்டுக் குழு மாநில சிறப்புத் தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்க கூட்டுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை குறித்தும், நீதிமன்ற வழக்குகள் குறித்தும், அரசின் அணுகுமுறை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஓய்வூதியம் இல்லாத அனைத்துத் துறைகளுக்கும், அரசுத்துறை சார்ந்த பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 
அரசின் அணுகுமுறை, நீதிமன்ற வழக்குகள், கோரிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும். மேலும், தமிழக முதல்வர் அறிவித்தவாறு ஊதியமாற்று அறிக்கையைப் பெற்று அறிக்கை மீது சங்கங்களை அழைத்துப் பேசி அக். 15-ஆம் தேதிக்குள் அமல்படுத்திட வேண்டும். இதே கோரிக்கையுடன் ஓய்வூதியர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.
அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், தோழமை சங்கங்களை ஒன்றிணைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பு உருவாக்கப்படும். அக். 15-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில், திருச்சியில் அக். 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜாக்டோ-ஜியோ மாநில பேரவை கூட்டத்தில் போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்