யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/6/17

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட
அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.


*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்

*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.

*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை

* 28/01/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்


* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்

பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை
விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.

இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.

மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில்
மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி
மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


'அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை.

எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது.

எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.


இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயோமெட்ரிக்' பதிவு பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம்
சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.

சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர்
8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாறுதல்கள் புதிதாக நோட்டுகளில் 2017-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது.

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்