யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/9/16

ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,


''ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14-ம் தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறைக்குப் பதில் அக்டோபர் 8-ம்தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் உள்ளூர் விடுமுறை நாளான 14-ம் தேதி அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் தேர்வு செய்ய தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தயாராகிவருகிறது.

காவல் துறையில் 1,20,996 போலீஸார் பணிபுரிய வேண்டிய நிலையில், சுமார் 99 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 2ஆம் நிலை,முதல் நிலைக்காவலர், தலைமைக் காவலர்கள் மட்டும் 92,614 பேர் இருக்க வேண்டும். ஆனால், 77,750 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். சுமார் 22 ஆயிரம் போலீஸார் பணியிடங்கள் காலியாக உள்ளன.


 மேலும், மக்கள்தொகைக்கு ஏற்றப்படி, காவல் துறையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளன.

 இதையடுத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியன பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பணி நெருக்கடியால் காவலர்கள் தற்கொலை செய்துகொள்வது, உடல்நலம் பாதிக்கப்பட்டு விருப்ப ஓய்வில் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறத் தொடங்கின.

  இந்த நிலையில், காவல் துறைக்கு 13,137 காவலர்களை தேர்வு செய்வதற்கும், சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு காவலர் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யும்படி டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டார்.

 இதன் தொடர்ச்சியாக, தீயணைப்பு, சிறை, காவல் துறைகளில் சுமார் 15 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதற்கான அறிவிப்பு ஒரிரு நாள்களில் வெளியாகும் என்றும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்வு முறை:
முதலில் நடக்கும் எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில், தேர்வாகிறவர்கள் உடல் தகுதி தேர்வுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 15 மதிப்பெண்களுக்கு நடைபெறும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறகிறவர்களுக்கு காவலர் பணிநியமனம் கடிதம் வழங்கப்படுகிறது.

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.

பணியிடங்கள் காலி

ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு முன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 என வட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.

சங்கங்கள் எதிர்ப்பு

இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வு செய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டு நிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2014-15 கலந்தாய்வு காரணமா?

இப்பிரச்னை குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 2014-15 கல்வியாண்டு நடந்த கலந்தாய்வில் தென் மாவட்ட அரசு பள்ளிகளில் பணியிடம் இல்லாத நிலையிலும் உருவாக்கப்பட்டு அரசியல், அதிகாரிகள் 'சிபாரிசு' அடிப்படையில் நுாற்றுக்கணக்கான இடமாற்றம் நடந்தன. அப்போது ஒரு மாறுதலுக்கு 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டும் எழுந்தது.ஒரே பணியிடத்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு கூட உத்தரவு வழங்கி குழப்பம் ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் தென் மாவட்டங்களில் தற்போது 'சர்பிளஸ்' ஆசிரியர்அதிகரித்துள்ளது. அப்போது இருந்த அதிகாரிகள் சிலரின் நடவடிக்கையால் இப்போது வட மாவட்டங்களில் கல்வித்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது, என்றனர்.
Related Posts Widget

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வு

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.09.2016 | விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 5.45 பி.ப.| தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை. NOTIFICATION DOWNLOAD


List of Current Notifications
S No.Advt. No./ Date of NotificationNotificationOnline RegistrationDate of ExaminationActivity

FromTo
1

01.09.2016
Deptl.Exam Dec '2016

7-வது சம்பள கமி‌ஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: !

சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது,  ‘’கடந்த 25.7.16 அன்று சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடுமுறை போக 22 நாட்கள் சட்டமன்ற கூட்டம் நடந்திருக்கிறது. இதில்

மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள் பள்ளியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் ,அரசு உத்தரவு !

TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க  8-ந் தேதி கடைசி நாள் என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதால் இணையதளம் சரியாக வேலை செய்யாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பல்வேறு அரசு அலுவலகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு வாரியமம்மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் அதே போல குரூப் 4 தேர்வை இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு மாதம் முன்பு இந்த அறிவிப்பு வெளியானது.


இணையதளத்தில் தடை:

கடந்த ஒரு மாதமாக விண்ணப்பிக்க காலம் இருந்த போதிலும் கடைசி நாட்களில் விண்ணப்பிக்க காத்திருந்த இளைஞர்கள் கடந்த 2 நாட்களாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய செல்கின்றனர். ஆனால் ஒரே நேரத்தில்லட்சக்கணக்காண இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய முயற்சி செய்வதால் சம்மந்தப்பட்ட இணைய தளத்தில் தடை ஏற்பட்டுசரிவர இயங்கவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாததால் தவிக்கின்றனர். அதனால் மாற்று இணையதள முகவரி கொடுத்தாலோ அல்லது விண்ணப்பம் செய்ய கால நீடிப்பு செய்தாலோ விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் விண்ணப்பம் செய்ய வசதியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு

சென்னை: 'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில், மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கோட்டையில், பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:ஆசிரியர்களின் எதிர்காலத்தை பாதிக்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். வரலாறு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின்போது கடைபிடிக்கப்படும், 'கிராஸ் மேஜர்' முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, வரலாறு படித்தவர்களுக்கு மட்டுமே, பதவி உயர்வு வழங்க வேண்டும். நீதி போதனை வகுப்புகளை கொண்டு வர வேண்டும்.கடந்த, 1977 முதல், இடைநிலை ஆசிரியர்களாக இருப்போரை, பட்டதாரி ஆசிரியர்
களாக, பணி வரன்முறை செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையில், மாணவர் நலன் பாதிக்காமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மனு அளித்துள்ளோம்; தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.