யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/5/17

6 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் !!

ஐ.டி. நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்குள் 6 லட்சம் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது._

_பெங்களூருவைச் சேர்ந்த ஹெட் ஹண்டர்ஸ் என்ற முன்னணி நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மிகாந்த், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்த ஆண்டு 56 ஆயிரம் ஐ.டி. பணியாளர்கள் 
வேலைஇழக்க இருப்பதாகத் தெரிவித்தார். உண்மையில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் பணியாளர்கள் முதல் 2 லட்சம் பணியாளர்கள் வரையில் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும், இதன் மூலம் 5 லட்சம் முதல் 6 லட்சம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்._

_மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளாத ஐ.டி. ஊழியர்களே பணியிழக்க நேரிடும் என்றும் லக்ஷ்மிகாந்த் தெரிவித்துள்ளார்._

இணைய உலகை அச்சுறுத்தும் ‘ரான்சம்வேர்’ வைரஸ்: செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என்ன??

சமீபத்தில் உலகம் முழுவதும் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை சர்வர்களை பதம்பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழி முறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.), உருவாக்கிய, இணையவழி தாக்குதல் ‘டூல்’களை 
(கருவிகளை) கொண்டு, உலகின் சுமார் 100 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால், இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து, ரஷியா என கிட்டத்தட்ட 100 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. இங்கிலாந்தில் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘மால்வேர் டெக்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், ஓரளவு இந்த வைரஸ் தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னுமொரு இணைய தாக்குதல் நடத்தப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதாக அவர்கள் கணித்துள்ளனர். அந்த தாக்குதல் அனேகமாக இன்று நடைபெறலாம் எனவும் அவர்கள் யூகித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதில்,

1. கணினியின் இயங்கு தளமான (ஆபரேடிங் சிஸ்டம்) விண்டோஸ் பழைய வெர்சனாக இருந்தால் அதை தற்போது உள்ள புதிய வெர்சனுக்கு (விண்டோஸ் 10) ஏற்றது போல அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

2. ஒருவேளை நீங்கள் பழைய ஆபரேடிங் சிஸ்டமை (விண்டோஸ் XP, 7, விஸ்டா) பயன்படுத்தி வந்தால், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அதற்கான அவசர பாதுகாப்பு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

3. கணினியில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் உள்ளிட்ட முக்கிய சாப்ட்வேர்களை தற்போது வரை சரியான அப்டேட்களை செய்து கொள்ள வேண்டும்.

4. கணினியில் இணைய வசதிகளை கொண்டிருக்கும் பட்சத்தில் முக்கியமாக பயர்வால் (firewall) வசதியை கண்டிப்பாக ஆக்டிவ் செய்ய வேண்டும். ஆக்டிவாக இருந்தாலும் இணைய வழி ஊடுருவலை தடுக்கும் வகையில் பயர்வால் அமைப்புகளை (setting) மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்வரில் இருந்து தகவல்களை அனுப்பும் அமைப்பை தற்காலிகமாக செயலிழக்க செய்யுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

6. கணினியில் உள்ள தேவையான தகவல்களை பேக்அப் (Backup) செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தகவல்கல் இழப்பை தடுக்கலாம்.

7. முன் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் இ-மெயில் தகவல்களை திறந்து வாசிக்க முயற்சிக்க வேண்டாம். விளம்பரம் உள்ளிட்ட தேவையற்ற இ-மெயில்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது.

கணினியை ஆன் செய்வதற்கு முன்பாக செய்ய வேண்டியவை:

1. கணினியின் சர்வர் மற்றும் நெட்வொர்க் ஸ்விட்சுகளின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

2. வை-பை இணைப்பு, லேன் (LAN) இணைப்பு, ரூட்டர்கள் ஆகியவற்றை துண்டித்து ஆப் செய்து வைக்க வேண்டும்.

3. ஸ்மார்ட் டி.வி, டேப்லட், மொபைல் போன்கள் ஆகியவற்றையும் ஆப் செய்து வைக்க வேண்டும்.

4. கணினி, மொபைல் ஆகியவற்றில் ப்ளூ டூத், ஹாட்ஸ்பாட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம்.

5. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறிது நாட்களுக்கு இணைய இணைப்பை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

மேற்கண்ட அனைத்தையும் செய்யாமல் உங்களது மொபைல், கணினி, ஸ்மார்ட் டி.வி, டேப்லட் ஆகியவற்றை ஆன் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கல்வித்துறைக்கு வெளிச்சம் பாய்ச்சும் பள்ளிகல்வித்துறை செயலாலர் திரு. உதயசந்திரன் !!

எப்பொழுது வரும், எப்பொழுது வருமென்று விடியலுக்காய் ஏங்கித் தவம் கிடந்தவா்களுக்கு, பள்ளிக் கல்விச் செயலராய் பொறுப்பேற்ற நாள் முதல் நன்னம்பிக்கை முனையாக  நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்.  உயா்திரு. த.உதயசந்திரன் இ.ஆ.ப அவா்கள்.

 பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு இம் மேமாதத்தில் தலைசிறந்த எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், சிந்தனையாளர்கள் போன்ற ஆளுமைகளைக் கொண்டு பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளைப் பயனுற வழங்குதல், தமிழ் விக்கிப் பீடியாவை முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளுதல், பாடத்திட்டம் மாற்றப் பரிசீலனை, ஆசிரியா்கள் சங்கப்  பொறுப்பாளா்களுடன் கலந்துரையாடல், தினந்தோறும் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் நிகழ்த்த வலியுறுத்தல், ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கும் தனித்தனியே பத்திரிகைகளைத் துவக்குதல், பொதுத் தோ்வு முடிவுகளில் தரவரிசை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளின் தரமுயா்த்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல், கல்வி அதிகாரிகளைத் தானே நேரடியாகக் கண்காணிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள் மூலம் வரும் கல்வியாண்டை வளமான கல்வியாண்டாக வளா்ச்சிப் பாதையில் செலுத்திட செயல்திட்டங்களை வகுத்து வருகிறார்..

56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை பறிபோகும் அபாயம்" : என்னதான் காரணம்?

இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளன.
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன. அதாவது கிட்டத்தட்ட 56,000பேருக்கு லே ஆஃப் கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும். லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக, பிரஷர்ஸ் எனப்படும் புதிய, சம்பளம் குறைவாக பெறக் கூடிய பொறியியல் பட்டதாரிகள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.

இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் ”பக்கெட் 4 ”என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.ஆனால் இந்த வேலை நீக்க நடவடிக்கைகள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடியது எனவும் பெர்பார்மென்ஸ் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறும் எனவும் ஐடி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் முன்னேறி வரும் தொழில் நுட்பம் மற்றும் வியாபார நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள, இந்த லே ஆஃப் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது என இந்திய ஐ.டி நிறுவனங்கள் காரணம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.17-இல் (உள்ளூர் வரி தவிர்த்து) இருந்து ரூ.68.26-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் ரூ.60.71-இல் இருந்து, ரூ.58.07-ஆக விலை சரிந்துள்ளது.
இதேபோல், தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.09-இல் இருந்து ரூ.65.32-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.57.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் தற்போது ரூ.54.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.72க்கும், டீசல் ரூ.60.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.21-க்கும், டீசல் ரூ.57.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைந்ததால், இந்த விலைக் குறைப்பை நடைமுறைப்படுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FLASH NEWS : போக்குவரத்து ஊழியர்கள் மீது "எஸ்மா" சட்டம் - ஐகோர்ட் உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.


பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒத்தக்கடையை சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் சட்டவிரோதம் ஆனது. உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மாணவர் சேர்க்கை தொடர்பாக தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடன் சென்னையில் இன்று (16.05.2017) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முக்கிய முடிவுகள்!!.

1. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த முடிவு. இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளையும் ஈடுபடுத்த முடிவு.

2. தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் பதிவுத்தாள் (RECORD SHEET) பதில் மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படும் ( ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு).

3. வரும் ஆண்டுமுதல் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் சிறப்பான திட்டமிடலுடன் வழங்கப்படும்.

தகவல்:-பெ.பரமசாமி,
மாநில தலைவர்.
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை.

தமிழகத்தில் 7வது ஊதியக்குழு இன்று கூடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது

**7வது ஊதியக்குழு பரிந்துரை ஆலோசனைக்கூட்டம் நிதித்துறை கூடுதல் செயலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது.

**இதில் தமிழக அரசின் தற்போதைய ஊதியம்,ஓய்வூதிய விகிதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

**மேலும் வரும் மே 26,27 மற்றும் ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட  மற்றும் அங்கிகரிக்கப்படாத அலுவலர் மற்றும் ஓய்வூதிய நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.