யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/18

உபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா?

150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் போதும் என்ற கணக்கீட்டில் மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 5 வகுப்புகள்  உள்ளன.

ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன.
ஒருஆசிரியர் 4 பாடங்கள் வீதம் 28 பாடவேளைகள்  பாடம் நடத்துவார்.
தலைமையாசிரியர் ஒரு பாடத்திற்கு 7 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.
ஆக மொத்தம் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் சேர்ந்து 21 பாடங்கள் நடத்துவர்.

மீதமுள்ள 4 பாடங்களுக்கான (4 x 7 = 28) பாடவேளைகளை மாணவர்களுக்கு யார் நடத்துவார்?
நகர்ப்புறங்களை விட்டு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.
மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது.
அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இல்லை.

கல்வி இணைச்செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளி மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை.
மேலும் பள்ளிசார்ந்த எல்லா வகையான (அலுவலகப்பணி, கருவூலகப்பணி, கடிதங்களை நேரில் கல்வி அலுவலங்களில் ஒப்படைத்தல் பணி, இன்ன பிற) பணிகளையும் இவ்வாசிரியர்களே செய்யவேண்டும்.
அதனால் மாணவர்களின் கற்றல் பணியில் தொய்வு ஏற்படுகிறது
எனவே, மாணவர்கள் கல்வி கற்கும் பணி தொய்வடையாமல் இருக்க வேண்டும் எனில்
150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்களும்,
ஒருதலைமையாசிரியரும்,
ஒருஉடற்கல்வி ஆசிரியரும்,
ஒருஇளநிலை உதவியாளரும்,
ஒருஆய்வக உதவியாளரும்,
ஒருஅலுவலக உதவியாளரும்,
ஒருஇரவுக்காவலரும் கட்டாயம் தேவை.
ஏழைகிராமப்புற மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் கோரிக்கையை, தேவையை, அவசியத்தை இவ்வரசு பரிசீலிக்க வேண்டும்.
சிவ. ரவிகுமார்
99944453649

FLASH NEWS - Direct Recruitment of Special Teachers 2012-2016 Result published

முதல் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்துக்கள் அட்டை QR code வடிவில்

அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கிடையாது

கர்நாடகாவில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து வரும் நிலையில்,


 இந்த ஆண்டு 2,429 புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இதையடுத்தே மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருகிறது. ஆரம்பத்தில், அரசுப் பள்ளி இல்லாத பகுதிகளில் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளியில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை மாநில அரசு பரிசீலித்தது. ஆனால், தனியார் பள்ளிகள் துவக்குவதை தடுத்து, அரசுப் பள்ளிகளை பலப்படுத்த புதிய முடிவை எடுத்துள்ளது.

புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், நவீன வசதிகளுடன் கூடிய அரசுப் பள்ளிகளைத் துவக்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா?

150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்

பணியிடங்கள் போதும் என்ற கணக்கீட்டில் மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 5 வகுப்புகள்  உள்ளன.
ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன.
ஒரு ஆசிரியர் 4 பாடங்கள் வீதம் 28 பாடவேளைகள்  பாடம் நடத்துவார்.
தலைமையாசிரியர் ஒரு பாடத்திற்கு 7 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.
ஆக மொத்தம் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் சேர்ந்து 21 பாடங்கள் நடத்துவர்.
மீதமுள்ள 4 பாடங்களுக்கான (4 x 7 = 28) பாடவேளைகளை மாணவர்களுக்கு யார் நடத்துவார்?
நகர்ப்புறங்களை விட்டு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.
மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது.
அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இல்லை.
கல்வி இணைச்செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளி மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை.
மேலும் பள்ளிசார்ந்த எல்லா வகையான (அலுவலகப்பணி, கருவூலகப்பணி, கடிதங்களை நேரில் கல்வி அலுவலங்களில் ஒப்படைத்தல் பணி, இன்ன பிற) பணிகளையும் இவ்வாசிரியர்களே செய்யவேண்டும்.
அதனால் மாணவர்களின் கற்றல் பணியில் தொய்வு ஏற்படுகிறது
எனவே, மாணவர்கள் கல்வி கற்கும் பணி தொய்வடையாமல் இருக்க வேண்டும் எனில்
150 மாணவர்கள் வரை பயிலும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆசிரியர்களும்,
ஒரு தலைமையாசிரியரும்,
ஒரு உடற்கல்வி ஆசிரியரும்,
ஒரு இளநிலை உதவியாளரும்,
ஒரு ஆய்வக உதவியாளரும்,
ஒரு அலுவலக உதவியாளரும்,
ஒரு இரவுக்காவலரும் கட்டாயம் தேவை.
ஏழை கிராமப்புற மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் கோரிக்கையை, தேவையை, அவசியத்தை இவ்வரசு பரிசீலிக்க வேண்டும்.
சிவ. ரவிகுமார்
99944453649

பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி :

பள்ளி மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  திட்டமிட்டு  வருகின்றனர். 
சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 36 உயர்நிலைப் பள்ளிகள், 1 உருது  உயர்நிலைப்பள்ளி, 1 தெலுங்கு உயர்நிலைப்பள்ளி, 92 நடுநிலைப் பள்ளிகள் (தமிழ், தெலுங்கு மற்றும் உருது) 122 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 30  மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 98,857 மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர். 4,041 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு  போட்டிகளை மாணவ, மாணவிகளுக்கு கற்று தர ஒரு பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 
இருப்பினும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவ, மாணவிகள் விளையாட்டை விதிப்படி  முறையாக கற்று கொள்ள முடிவதில்லை. மேலும், கிரிக்கெட், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள்,  போதிய இட வசதியும் இருப்பதில்லை.இதனால்,  மாணவ, மாணவிகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதில்லை. இந்த குறையை போக்கும்  வகையில் பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முடிவு  செய்துள்ளனர். முதற்கட்டமாக, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு ஆடுகளத்தை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. 
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை  மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளோம். கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். முதற்கட்டமாக, நுங்கம்பாக்கம்  ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச கிரிக்கெட் பயிற்சி தொடங்க உள்ளது. மாணவர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து சென்னை  முழுவதும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கிரிக்கெட் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் கோரி வழக்கு :

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ேக.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நீட் தேர்வில் தவறான 49 வினா-விடைகளுக்குரிய 196 மதிப்பெண்களை வழங்க வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, ‘‘தேர்வு முடிந்ததும் ‘கீ ஆன்சர்’ கூட முறையாக வெளியாகவில்லை. வினா - விடைகள் தவறாக மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மாணவர்களால் சுலபமாக புரிந்து கொள்ள முடியாது,’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.டி.செல்வம், ‘‘தமிழக மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் தான் ஏற்கனவே தேர்வு எழுத சென்றனர். எந்த மன நிலையில் தேர்வெழுதியிருப்பார்கள்? இதில், தவறான மொழிமாற்ற வினா-விடைகளை அவர்களால் புரிந்து ெகாள்ள முடியுெமன எப்படி அரசு தரப்பால் யூகிக்க முடிகிறது,’’ என்றார்.அப்போது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேல், ‘‘ஏற்கனவே தேர்வு முடிவுகள் வௌியிடப்பட்டு விட்டன. தேர்வின்போது வினாத்தாளில் ஏதேனும் தவறு இருந்தால், ஆங்கிலத்தில் சரியாக இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆங்கில வினா-விடைகள் சரியாகவே உள்ளன,’’ என்றார்.
இதையடுத்து, ‘‘தமிழக மாணவர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலர், சிபிஎஸ்இ தலைவர், நீட் தேர்வுக்கான துணைச் செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில்மனுவை பொறுத்து இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்,’’ எனக்கூறிய நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஜூன் 27க்கு தள்ளி வைத்தனர்.
பீகாரில் எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்
விசாரணையின்போது மூத்த வக்கீல் கூறுகையில், ‘‘பீகார் மாநிலத்தில்  35,641 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். ஆனால், 37,899 பேர் தேர்ச்சி  பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக  உள்ளனர். நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே, நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க  வேண்டும்’’ என்றார்.

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு :

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடிய, விடிய உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கும் வகையில், ஷாமியான பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தினமும் சட்டசபைக்கு செல்லும் சாலை வழியில் இந்த போராட்டத்தை நடத்தினர். ஆனாலும் அரசு சார்பில் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. 
அரசிடம் நிதியில்லாததால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேட்டி அளித்தார். சட்டசபையில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக பேசியபோது கூட, ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்துவிட்டது.அரசு எப்படியும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கும் என்று நம்பிய நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்றும் 2வது நாளாக எழிலகத்தில் இரவு முழுவதும் விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தனர். 
முன்னதாக உண்ணாவிரதம் இருந்த பலரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் சங்கத்தை சேர்ந்த டெய்சி மற்றும் அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மோசஸ் உள்பட 4 பேர் நேற்று திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக நிர்வாகிகள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில், இன்று 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மேலும் பலரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், போராட்ட இடத்துக்கு இன்று காலை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். 
நிர்வாகிகள் மாயவன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அரசு கண்டுகொள்ளாவிட்டாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

நீட்' தேர்வு பயிற்சிக்கு புதிய நிறுவனம் தேர்வு?

'நீட்' நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு, புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி மேல்நிலை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற, அரசின் சார்பில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.இதற்காக, சென்னையை சேர்ந்த, 'ஸ்பீட் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பயிற்சி திட்டத்துக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி, 72 மையங்களில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நீட் பயிற்சி தரப்பட்டது. 


அதேபோல், பிளஸ் 2 தேர்வு முடிந்ததும், சென்னையில், ஐந்து இடங்களில், தங்கும் வசதியுடன், ஒரு மாத சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த, நீட் தேர்வில், அரசின் சிறப்பு பயிற்சி பெற்ற, 4,000 பேரில், ஏழு பேர் மட்டுமே, 306 முதல், 392 வரையில், மதிப்பெண் பெற்றுள்ளனர். 37 பேர், 200 முதல், 295 வரை மட்டுமே மதிப்பெண் பெற்றுள்ளனர். 

மொத்தம், 20 கோடி ரூபாய் செலவு செய்தும், மிக குறைந்த எண்ணிக்கை மாணவர்களே, மருத்துவ படிப்பு வாய்ப்பை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், வரும் ஆண்டில், ஸ்பீட் நிறுவனத்துக்கு பதிலாக, நீட் பயிற்சியில் நல்ல அனுபவம் உள்ள நிறுவனத்தை தேர்வு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத், பெங்களூரு, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில், பிரபலமாக உள்ள, நீட் பயிற்சி நிறுவனங்களிடம் பேசி, அவற்றில் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்யவும், பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான, 'டெண்டர்' விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாள் பயிற்சி : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்

புதிய பாடத்திட்டத்தில் உருவான பாடங்களை மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பள்ளிக் கல்வித்துறையில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் முதன்மைக் கல்வி அலுவலகங்களை காலி செய்து சொந்த கட்டிடத்தில் இயங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலருக்கான சொந்த கட்டிடம் எழும்பூர் மகளிர் மேனிலைப் பள்ளியில் கட்டப்பட்டது.


நேற்று அந்த அலுவலகத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது: சென்னை சைதாப்பேட்டையில் பனகல் மாளிகையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த முதன்மைக் கல்வி அலுவலகம் இனி சொந்த கட்டிடத்துக்கு மாற்றியதால் அதற்கான நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தலாம்.



சிஏ படிப்புக்கான கருத்தரங்கம் நாளை மறுதினம் நடக்கிறது. அதில் 16 மாவட்டங்களை சேர்ந்த 500 பேர் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் விரைவில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு சிஏ படிப்பு தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியும். மாணவர்களின் திறன் சார்ந்த பயிற்சியை புதியதாக  பாடத்திட்டத்தில் இணைக்க இருக்கிறோம்.

இது போல இன்னும் பல மாற்றங்கள் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். புதிய பாடத்திட்டத்தின் படி 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2016 டிசம்பர் அல்லது ஜூன் 2017 இல் பி.எட் முடித்தவர்கள் மட்டும் Convocation பெறுவதற்கு..

11ஆம் வகுப்பு புதிய புத்தகங்கள் PDF LINKS

பொதுத்தமிழ்

ENGLISH
 உயிரியல் விலங்கியல் 1
தாவரவியல்
பொருளியல்
வேதியியல்
இயற்பியல் 
வணிகவியல்

வரலாறு
புவியியல்
கணினி அறிவியல்
வணிக கணிதம்
கணிதவியல்
உயிரியல் தாவரவியல்
உயிரியல் விலங்கியல் 2
விலங்கியல் 2
விலங்கியல் 1

சென்னை மாணவர்கள் 10 பேருக்கு ரூ.1 கோடி சம்பளத்துடன் வேலை:

சென்னை ஐஐடியில் படிக்கும் 10 மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளத்துடன் 
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது.
நடப்பு ஆண்டில் சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் முக்கியப் பணிகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
 மைக்ரோசாப்ட்,, ரூபாக், உபெர், இண்டீட், இன்டெல் போன்ற பல நிறுவங்கள் அவர்களுக்கு வேலை தர முன்வந்துள்ளன.

சென்னை ஐஐடி நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவுக்கு 256 நிறுவனங்கள் 968 பணி வாய்ப்புகளுடன் வந்தன. அவற்றில் 19 வெளிநாட்டு பணி வாய்ப்புகளும் அடங்கும்.

இந்த ஆண்டு முதல் முறையாக ஆப்பிள் நிறுவனமும் கேம்பஸ் இன்டர்வீயூ மூலம் மாணவர்களை பணிக்குத் தேர்வு செய்ய வந்திருந்தது.
இந்த இன்டர்வியூவுக்கு பதிவு செய்திருந்த மாணவர்கள் மொத்தம் 1,100 பேர்.

இவர்களில் 837 பேர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர். 70% மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம்.
 கடந்த ஆண்டில் 817 பேருக்கு வேலை வாய்ப்பு அமைந்துள்ளது.
அதிகபட்சமாக சிட்டி நிறுவனம் 25 பேருக்கு வேலை வழங்கியுள்ளது.

 இதற்கு அடுத்து, இன்டெல் (20), ஈ.எஸ்.எல். (19), பிளிப்கார்ட் (18) மற்றும் ஹெச்.சி.எல். (17) ஆகியவையும் அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுத்துள்ளன.

பிரபலமான நிறுவனங்கள் தவிர 38 ஸ்டார்ட் அப் நிறுவங்கள் 83 பேருக்கு வேலை வழங்கியுள்ளன.aaaaaaaa

இந்தி தெரியாவிட்டால் மத்திய அரசு வேலை இல்லை!

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணியில் சேருவதற்கு இந்தி கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசின் விளம்பரம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்த விளம்பரத்தில், கொல்கத்தாவில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு இந்தி மொழி குறித்த அடிப்படை அறிவைக் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். அரசின் கொள்கையின்படி இந்த நிறுவனங்களிலுள்ள ஊழியர்கள் கட்டாயம் தேசிய மொழியை(இந்தி) தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரசு ஒரு மொழிதான் தேசத்தை ஒருங்கிணைக்க முடியும் என்று நம்புகிறது. அதனால் இது போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்தியைத் தெரிந்திருப்பது கட்டாயமாகிறது. இதுதான் தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான முதல் நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் நிதியினால் இயங்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள் திருவனந்தபுரத்திலும், திருப்பதியிலும், புனேவிலும், போபாலிலும், கொல்கத்தாவிலும், பெர்ஹம்பூரிலும், மோஹலியிலும் உள்ளன.

இந்தி திணிப்பை நாள்தோறும் பல துறைகளிலும் மேற்கொண்டுவரும் மத்திய அரசு அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் இத்திட்டத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, பெங்காலி மொழிக்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் அமைப்பு ஒன்றை நடத்திவரும் கார்கா சட்டர்ஜி கூறுகையில், “இந்தி ஆசிரியர்களுக்கு இந்தி கட்டாயம் என்பது புரிந்து கொள்ளக்கூடிய நடவடிக்கையாகும். ஆனால், மற்ற மாநிலங்களில் இந்தியைக் கட்டாயமாக்குவது என்பது திணிப்பு என்பதைத்தான் தவிர வேறு என்ன நடவடிக்கை?” என்று கேட்டுள்ளார்a