யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/3/18

அரசு பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகள்:பாதுகாப்பு உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு, அரசு உதவிபெறும், அனைத்து தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு, பாதுகாப்பான சூழல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களைக் கொண்டு குழு அமைக்க வேண்டும்.

இக்குழுவினர், அனைத்து பள்ளிகளிலும், திறந்த வெளிக் கிணறுகள், மின் இணைப்பு செல்லும் பகுதி, கழிவுநீர் கால்வாய் குழிகள், மூடிய நிலையிலும், குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்காத வகையில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள, ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஆய்வின் போது, பாதுகாப்பில்லாத வகையில், கழிவுநீர் தொட்டிகள், மின் இணைப்புகள், கிணறுகள் பள்ளிகளில் காணப்பட்டால், முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கலங்கடித்தது பிளஸ் 2 கணிதம்; மனப்பாட மாணவர்களுக்கு, 'செக்'

பிளஸ் 2வுக்கு, நேற்று நடந்த கணித தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததால், 200க்கு, 200 மதிப்பெண் எடுப்போர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.



நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய கணித தேர்வின் வினாத்தாள், சராசரி மாணவர்களால், அதிக மதிப்பெண் எடுக்க முடியாத வகையில் அமைந்து உள்ளது. மொத்தம், 200 மதிப்பெண்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண்ணில், 40 கேள்விகள்; ஆறு மதிப்பெண்களில், 10 கேள்விகள் மற்றும், 10 மதிப்பெண்களில், 10 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். 

அவற்றில், 10 மதிப்பெண் கேள்விகள் மட்டும், மாணவர்களுக்கு எளிதாக அமைந்திருந்தன. மற்ற கேள்விகளுக்கு விடை எழுத, மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டது.அதாவது, 40 ஒரு மதிப்பெண் கேள்விகளில், 30 கேள்விகள், பாடத்தின் பின்பக்க கேள்வி பட்டியலில் இருந்தும்; 10 கேள்விகள், 'கம் புக்' எனப்படும், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் புத்தகத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன.

அவற்றில், அனைத்து கேள்விகளுக்கான விடைக்குறிப்புகளும், புத்தகத்தில் இருப்பதை போல இல்லாமல், வினாத்தாளில் வரிசை மாற்றி கேட்கப்பட்டிருந்தன. அதனால், மனப்பாடமாக விடைகளை படித்திருந்த மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்ய திணறினர்.

அதேபோல, ஆறு மதிப்பெண்களுக்கான பிரிவில், ஒரு கேள்விக்கு, கட்டாயமாக பதில் எழுத வேண்டும். இந்த பிரிவில், 'சாய்ஸ்' அடிப்படையில், 15 கேள்விகளில், ஒன்பது கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும். அவற்றில், ஐந்து கேள்விகள் மட்டுமே, மாணவர்கள் விடை எழுதுவதற்கு எளிதாக இருந்தன.

இது குறித்து, சென்னை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி, கணித ஆசிரியர், ராஜ் கூறியதாவது: ஏற்கனவே அமலில் உள்ள, 'ப்ளூ பிரின்டில்' இருந்து மாறாமல், வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆறு மதிப்பெண் மற்றும், 10 மதிப்பெண்களில், தலா, ஒரு கேள்வி, மாணவர்களின், 'சென்டம்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் வகையில், புதிய கேள்வியாக இடம்பெற்றன. 

பெரும்பாலான கேள்விகள், இதுவரை, பொதுத் தேர்வுகளில் கேட்கப்படாதவையாக இருந்தன.மாணவர்களின் மனப்பாட கல்வியை மாற்றும் வகையில், ஒரு மதிப்பெண் கேள்விகள் இருந்தன. அந்த கேள்விகளின், விடைக்குறிப்புகளில் தவறு இல்லை. 

ஆனால், புத்தகத்தில் உள்ளது போன்று இல்லாமல், வரிசை முறை மட்டும் மாறியிருந்தன. வினாத்தாளை பொறுத்தவரை, மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில், தரமாக இருந்தது. பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள், 'சென்டம்' பெறுவதில் சிரமம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.



விலங்கியலும் கடினம்!



பிளஸ் 2 விலங்கியல் தேர்விலும், சில கடினமான கேள்விகள் இடம் பெற்றுள்ளன.பிளஸ் 2 தேர்வில், நேற்று விலங்கியல் பாட தேர்வும் நடந்தது. விலங்கியல் வினாத்தாளில், பல கேள்விகள் சிந்தனை திறனை சோதிக்கும் வகையில் இருந்தன. ஒரு மதிப்பெண் கேள்விகளில், 6, 7, 23 ஆகிய கேள்விகளுக்கு, விடைகளை கண்டுபிடிக்க, மாணவர்கள் சிரமப்பட்டனர். ஐந்து மதிப்பெண்களில், 'கார்போஹைட்ரேட்ஸ்' வகைகள் குறித்த கேள்வி இடம்பெற்றது. இதற்கு, நீண்ட பதிலை எழுத வேண்டியிருந்ததால், மாணவர்களுக்கு நேர பற்றாக்குறை ஏற்பட்டது.

இது குறித்து, சென்னை, எம்.சி.டி.எம்.முத்தையா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விலங்கியல் ஆசிரியர், சவுந்தரபாண்டியன் கூறுகையில், ''பெரும்பாலான கேள்விகள், பல முறை கேட்கப்பட்டவை. அதனால், வினா வங்கியை படித்தவர்களும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலை பின்பற்றியவர்களும், அதிக மதிப்பெண் பெற முடியும். 10 மதிப்பெண்களுக்கான பிரிவில், 65 மற்றும், 70ம் எண் கேள்விகள், மாணவர்களை சிந்தித்து, பதில் எழுத வைப்பதாக இருந்தன,'' என்றார்.



23 பேர், 'காப்பி'



நேற்றைய தேர்வில், 23 மாணவர்கள் காப்பியடித்து பிடிபட்டனர். அவர்களில், 18 பேர் கணித தேர்விலும், ஐந்து பேர் விலங்கியல் தேர்விலும் சிக்கினர். அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், எட்டு மாணவர்களும், ஏழு தனித்தேர்வர்களும் பிடிபட்டனர். திருச்சியில், ஏழு பேர், சேலத்தில் ஒருவர் சிக்கியதாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Vikatan முக்கிய செய்திகள் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் தகுதி, கல்லூரி பேராசிரியர்களுக்குத் தேவையில்லையா?

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் எந்தவித தகுதித்தேர்விலும் தேர்வு பெறாதவர்களே நியமிக்கப்படுகிறார்கள். `இது எந்த வகையில் நியாயம்?' என, தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்று வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அண்மையில் வெளியிட்டது. இதில், அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் காலியாக உள்ள 1,883 பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்காக ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும், ஜூலை மாதத்தில் பணி நியமனங்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை எதன் அடிப்படையில் மேற்கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


தனியார் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர் செல்வகுமார், ``மத்திய அரசுப் பள்ளிகளிலும், மாநில அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியராகச் செயல்பட, ஆசிரியர் தகுதித் தேர்வில் (சிடெட்/டெட்) தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமித்து வருகிறது தமிழக அரசு. ஆனால், அரசு கலைக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், அரசு பல்கலைக்கழகங்களிலும் உதவி பேராசிரியர் பணிக்கு எந்தவித தகுதித் தேர்வையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், கடந்த 25 வருடங்களாக யூஜிசி மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் தகுதித்தேர்வு நடத்தப்பட்டுவருகிறது.
மற்ற மாநிலங்களில் யூஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்கும்போது, தமிழகத்தில் மட்டும் நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், தங்களுக்குச் சாதகமான விதிமுறையைப் பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமித்துவருகிறார்கள். ஒருமுறை ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்லும்போது, விண்ணப்பம் செய்பவர்களே ஆராய்ச்சி இதழை ஆரம்பித்து அதில் கட்டுரைகளை வெளியிட்டதாக கணக்கு காண்பித்தும், புத்தகங்களை வெளியிடாமலேயே `புத்தகங்களை வெளியிட்டோம்' என்று சொல்லி அதிக மதிப்பெண் பெற்று வேலைக்குச் சேர்ந்துவிடுகின்றனர்.
பலரும் பணி அனுபவத்தையும், பகுதி நேரத்தில் பெற்ற முனைவர் பட்டத்தையும் வைத்து தனித்தனியே மதிப்பெண்ணைப் பெற்று வேலையில் சேர்கின்றனர். இதனால் முழு நேர ஆய்வுப்பணி பெற்று முனைவர் பட்டம் பெற்றவர்கள் கடைசிவரை அரசு கலைக் கல்லூரியில் வேலை பெற முடிவதில்லை. இதைத் தடுக்கும் வகையில், பகுதி நேரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தால், பணி அனுபவத்துக்கு மதிப்பெண் வழங்கலாம் அல்லது முனைவர் பட்டத்துக்கு என்று மதிப்பெண் வழங்க வேண்டும்" என்றார்.


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணி வாய்ப்பைப் பெற்று, தற்போது அரசுக் கல்லூரியில் பணியாற்றிவரும் உதவி பேராசிரியர் ராஜாசிங், ``பணி நியமனம் செய்யும்போது நடத்தப்படும் நேர்முகத்தேர்வு நேர்மையாக நடத்த வேண்டும். நேர்முகத்தேர்வுக் குழுவில் இருப்போர்க்கு வேண்டியவர்களாக இருந்தால் எளிமையான வகையில் கேள்விகளும், மற்றவர்களுக்குக் கடினமான வகையில் கேள்விகள் கேட்கப்படுவதும் நடக்கின்றன. இந்த வேறுபாட்டை களையும் வகையில், என்னென்ன பிரிவிலிருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என்ற முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். கற்பித்தல் முறை, பாடத்திட்டம், பணி அனுபவம், ஆராய்ச்சி சார்ந்த விஷயங்கள், மாணவர் உளவியல் என்ற பிரிவுகளில் கேள்விகள் கேட்கலாம். நேர்முகத்தேர்வில் பென்சில் மூலம் மதிப்பெண் போட்டுவிட்டு பிறகு மாற்றும் முறையையும் ஒழிக்கப்பட வேண்டும்.
பகுதி நேரத்தில் பணியாற்றியிருப்பவர்கள் அதிக மதிப்பெண் பெறுவதும், முழு நேர ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதையும் மாற்றியமைக்க வேண்டும். நெட் மற்றும் செட் தேர்ச்சி பெற்றவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். முதுநிலைப் பட்டம் பெற்று முனைவர் பட்டமும் பெற்றிருந்தால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலை கிடைக்கும் என்றால், செட்/ நெட் தகுதித் தேர்வை நடத்தவேண்டிய அவசியமில்லை. சரியான விதிமுறையைக் கடைப்பிடிக்கும்போது மட்டுமே உயர்கல்வி மேம்படும்" என்றார்.


முனைவர் செல்வகுமார், ``ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும்போது 34 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதில் ஏழரை ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு 15முனைவர் பட்டம் பெற்றிருந்தால் 9 மதிப்பெண், நெட் அல்லது செட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் எனப் பிரித்து தனித்தனியே வழங்கப்படுகிறது.
இதில் செட்/நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று முனைவர் பட்டமும் பெற்றிருந்தால் இரண்டுக்குமான மதிப்பெண்ணையும் சேர்த்து (9+6=15) வழங்க வேண்டும். அனுபவத்தைக் கணக்கிடும்போது, முனைவர் பட்டம் பெற்ற பிறகு அல்லது நெட்/செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு எவ்வளவு வருடம் பணியாற்றியிருக்கிறார்களோ அதைக் கணக்கில் எடுத்துக்கொண்டும், முழுநேர ஆய்வுப் பணியை மேற்கொண்டவர்களுக்கும், பகுதி நேரத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் வேறுபடுத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். இதைப்போலவே, பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்தவர்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கலாம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு கலைக் கல்லூரிகளுக்கு மட்டும் உதவி பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால், அரசு கல்லூரிகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்லூரியை நடத்துபவர்களே ஆசிரியர்களை நியமித்துக்கொள்கின்றனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளை நடத்தவும், கல்லூரியின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும், அங்கு பணியாற்றுபவர்களுக்கும் அரசே சம்பளம் வழங்கும் நிலையில், கல்லூரிப் பேராசிரியர்களை மட்டும் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக்கொள்ளலாம் என்பது நியாயமற்ற செயல். இதையும் அரசு கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள 160 அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், 16 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கும் பொதுவான ஒரு விதிமுறையை வகுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்றார் செல்வகுமார்.
விதிமுறைகளைத் தெளிவாக வகுத்து தமிழக அரசு கல்லூரி பேராசிரியர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இதை அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் தொடரும் வகையில் தேர்வுசெய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்குமா உயர்கல்வித் துறை?

சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு இயற்பியல் பொதுத்தேர்வு கடினம்: இணையதளம் மூலமாக மாணவ-மாணவிகள் கோரிக்கை!!!

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்த 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நடந்த இயற்பியல் பொதுத்தேர்வு கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.


இந்தியா முழுவதும் 12-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 7-ந் தேதி இயற்பியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக வினாத்தாளில் ‘சி‘ பிரிவில் இடம்பெற்று இருந்த 3 மதிப்பெண் கேள்விகளுக்கு யோசித்து பதில் அளிக்கும் வகையில் கடினமாக இருந்தது. மேலும், கடந்த 5-ந் தேதி ஆங்கில தேர்வை எழுதிய மாணவர்களுக்கு, இயற்பியல் தேர்வுக்கு முறையாக தயாராவதற்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. ஒருநாள் விடுமுறைக்கு பின்னர் மாணவ-மாணவிகள் இயற்பியல் தேர்வு எழுதினார்கள்.

கருணை அடிப்படையில்...

இந்த நிலையில், சி.பி.எஸ்.சி. மாணவ-மாணவிகள் தங்களுக்கான இயற்பியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததை வெளிப்படுத்தும் வகையிலும், இயற்பியல் விடைத்தாளை ஆசிரியர், ஆசிரியைகள் கருணை அடிப்படையில் திருத்த வேண்டும் எனவும், கடந்த முறை பின்பற்றிய மிதமான திருத்தம் முறையை அவர்கள் இந்த ஆண்டும் கையாள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை அவர்கள் ch-a-n-ge.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த இணையதளத்தில் இதுவரை மொத்தம் 81 ஆயிரத்து 501 பேர் சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர். 

அபராத தொகையை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராத தொகை விதித்து வந்தது. தற்போது அந்த அபராத தொகையை குறைத்துள்ளது. இவ்வாறு இல்லாவிடில், வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதம் + ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். ஆனால், தற்போது இந்த அபராத தொகை 75% வரை குறைக்கப்பட்டுள்ளது. மாநகரங்களுக்கு ரூ.15, சிறு நகரங்களுக்கு ரூ.12, கிராமங்களுக்கு ரூ.10 + ஜிஎஸ்டி வரி இனி வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண குறைப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்குச் சிறை!

ஹைதராபாத்தில் ஓட்டுநர் உரிமம் பெறாமல் சிறுவர்களை கார், இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு மூன்று நாள்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஹைதராபாத் நகரில் கடந்த சில மாதங்களாக ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்குவோர் மீது போலீஸார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் ஏ.வி.ரங்கநாத், “ஹைதராபாத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வந்தன. அதிலும் குறிப்பாக 14 வயது முதல் 16 வரையிலான சிறுவர்கள் பைக் மற்றும் கார்களை உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி விபத்துகளில் சிக்குகிறார்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் ஐந்து சிறுவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதையடுத்து, இவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதித்த பெற்றோர்களைத் தண்டித்தால் விபத்துகள் குறையும் என திட்டமிட்டோம். இதையடுத்து உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 69 சிறுவர்கள் சிக்கினார்கள்.

இவர்களின் பெற்றோர்களுக்கு உரிய அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, கவனக்குறைவாக வாகனத்தைக் கையாளுதல், உரிமம் இல்லாதவர்கள் வாகனத்தைக் கையாள அனுமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இவர்களுக்கு நீதிபதி ஒரு நாள் முதல் மூன்று நாள்கள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதித்தார். இதற்கு முன் கடந்த இரண்டாண்டுகளாகப் பெற்றோருக்கு அபராதம் விதித்தும் எந்தவிதமான பலனும் இல்லை என்பதால், சிறை தண்டனை விதித்தோம். இதன்படி கடந்த ஒரு மாதத்தில் 69 சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் நலக் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்

மேலும், “எங்களின் இந்த நடவடிக்கைக்குப் பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோரை கைது செய்வதைப் பார்க்கும் பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை எடுக்க அஞ்சுகிறார்கள். இதனால், கடந்த ஒரு மாதமாக விபத்துகள் குறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

பள்ளி வாகனங்களுக்கான வழிமுறைகள்!!!

பெரும்பாலான மாணவர்கள் பள்ளி வாகனத்தில் செல்வது அனைவருக்கும் தெரிந்தது. சில நேரங்களில் இந்த பயணம் பாதுகாப்பற்றதாக மாறி விடுகிறது. ஏனெனில், பள்ளி பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையைக் கொண்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி, பள்ளி பேருந்துகளுக்கான விதிமுறைகள் மற்றும்

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வி துறை 2018 மார்ச் 9 ஆம் தேதி பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மறுபடியும் வழங்கியுள்ளது.

சமீப காலமாக அதிகளவில் விபத்துகளும், அதன்மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். 2012 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு படிக்கும் சுருதி என்ற மாணவி பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையின் மூலம் விழுந்து உயிரிழந்தார். இந்த மாணவியின் உயிரிழப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு பயணத்துக்காகச் சிறப்பு வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டன.

தற்போது, அந்த வழிமுறைகளில் கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு மறுபடியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பள்ளி வாகனத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை நடத்துநர்களாக பணி அமர்த்த வேண்டும். குறிப்பாக , அவரிடம் நடத்துநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பேருந்தில், முதலுதவி பெட்டி மற்றும் தீ அணைப்பான் போன்றவை இருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அடுத்தது, பள்ளி வாகனத்தில் கீழே இறங்க 250 மி.மீ. தூரத்துக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது.

பள்ளி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். அவர்களின் திறமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுநர்கள் கண்டிப்பாக தினசரி குறிப்பு புத்தகம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே வெளியாவதை தடுக்க பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுகளில் ஜிபிஎஸ் கருவி: மேற்கு வங்க அரசு அதிரடி!!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே 
வெளியாவதை தடுக்க, ஜிபிஎஸ் மைக்ரோசிப் பொருத்தப்படுகிறது. அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் முறைகேடு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுத்தேர்வு நடைமுறையே சீர்குலைகிறது. பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியாவதை தடுப்பதற்கான அதிரடி நடவடிக்கையை மேற்கு வங்க அரசு எடுத்துள்ளது. இதன்படி, பள்ளிகளுக்கு அனுப்பப்படும் வினாத்தாள் கட்டுகளில் ‘ஜிபிஎஸ்’ வசதி கொண்ட மைக்ரோசிப் பொருத்தப்படுகிறது.*

*இது தொடர்பாக மேற்கு வங்க மேல்நிலை பள்ளி கல்வி வாரியத் தலைவர் கல்யாண்மாய் கங்குலி அளித்த பேட்டியில், ‘‘வினாத்தாள் பாதுகாப்பாக கட்டப்பட்ட பிறகு, ஜிபிஎஸ் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட உறைக்குள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். இந்த உறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. வினாத்தாள் உறையின் சீல் உடைக்கப்பட்டதும் அது பற்றிய தகவல் உடனடியாக கல்வி வாரிய அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள சர்வருக்கு வந்துவிடும். அதன் மூலம், வினாத்தாள் உறையை பிரித்தது யார் என்ற தகவலும் அங்குள்ள பட்டியல் மூலமாக சரிபார்க்கப்படும். இதன் மூலம், வினாத்தாள் முன்கூட்டியே கசிவதும், முறைகேடுகள் நடப்பதும் தடுக்கப்படும்’’ என்றார்.*

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட்* வாங்கும் வழி முறைகள்!!!

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும்
நாம் *கடிதம், புகார் கடிதம்,* போன்ற எந்த

 வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகள்

அரசு ஆணை எண்: 114

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்.அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும்.அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும்.

வக்கீலை தாக்கி செல்பி எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் செயலை மன்னிக்க முடியாது - ஐகோர்ட்டு கருத்து

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ்
ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் ஆஜராகி ஒரு கோரிக்கை முன்வைத்தார்.

அவர், ‘தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் போலீஸ் நிலையத்துக்கு வக்கீல் பெரியசாமி என்பவர் தன்னுடைய கட்சிக்காரருடன் புகார் செய்ய சென்றுள்ளார்.

அந்த புகாரை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம், வழக்குப்பதிவு செய்யவில்லை. அந்த புகாரை பெற்றுக் கொண்டு ரசீது (சி.எஸ்.ஆர்.) தரும்படி கேட்ட வக்கீலை கொடூரமாக சப்-இன்ஸ்பெக்டர் அடித்துள்ளார்.

பின்னர், அந்த வக்கீலை செல்போனில் ‘செல்பி’ எடுக்கச் சொல்லியுள்ளார். அந்த ‘செல்பி’ படத்தில் முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் வக்கீல் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னர், அவரை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் நின்றபடி ‘போஸ்’ கொடுத்துள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

அந்த ‘செல்பி’ படத்தை நீதிபதிகளிடம், மோகன கிருஷ்ணன் கொடுத்தார். அந்த படத்தை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு பிளீடர் ராஜகோபாலனிடம், இந்த படத்தை காட்டிய நீதிபதிகள், ‘என்ன இது? இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது.

வக்கீலை தாக்கியது மட்டுமல்லாமல், செல்பி போட்டோவையும் சப்-இன்ஸ்பெக்டர் எடுப்பாரா? சப்-இன்ஸ்பெக்டர் செயலை மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்கிறோம். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும்’ என்று கூறினார்கள்.

விடைபெறுகிறது 12ஆம் வகுப்பு 200 மதிப்பெண்கள் | சந்தோசத்துடன் வழிஅனுப்புவோம் :

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் தனக்கென  ஒரு தனி இடத்தை பிடித்து,
12 ஆம் வகுப்பு ஆசிரியர், மாணவ மாணவியரின் இலட்சிய கனவான 200/200 மதிப்ப்பெண்களைத் தாங்கி, புரிந்தவருக்கு உற்ற தோழனாகவும், புரியாதவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி,  மற்ற பாட ஆசிரியர்களிடமிருந்து வேறுபடுத்தி இப்பாட ஆசிரியரின் முக்கியத்துவத்தை இதுநாள் வரை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டிய கணித பாட 200/200 கேள்வித் தாள் பல்வேறு காரணங்களால் தன்னுடைய பணியினை 12.03.2018 அன்றோடு முடித்துக்கொள்கிறது, ( அடுத்த மார்ச் முதல் 100 மதிப்பெண்)

கணித ஆசிரியராய் 
இது நாள் வரை  வாழ்வின் ஒவ்வொரு நாளும்  கண்முன் தோன்றி  வாழ்க்கையோடு ஒன்றி  வாழ்ந்த  உன் நினைவுகள் அவ்வளவு எளிதில் எந்த கணித ஆசிரியராலும்  மறக்க இயலாது 

நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கின்றோம்.

அடுத்த ஜூனில் நீ மீண்டும் வரக்கூடாது.
இதுநாள் வரை உன்னோடு வாழ்ந்திட்ட உன் கணித ஆசிரியர்கள் அனைவருக்கும்100% தருவாய் எனவும் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட நிறைய மாணவ மாணவிகள் 200/200 பெற்றிட வாழ்த்தி உன்னை நன்றியோடு வழி அனுப்பி வைக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்
அனைத்து கணித ஆசிரியர்கள்


கி.பக்தவச்சலம்
மு.ஆ.( கணிதம்)
அ.மே.பள்ளி
நிம்மியம்பட்டு
வேலூர் மாவட்டம்a

ஒரு முக்கிய அறிவிப்பு.......! 01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PICME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ அல்லது *102 என்ற இலவச எண்ணிற்க்கு போன் செய்தோ அந்த நம்பரை பெற்று பிரசவம் பார்க்கும் மருத்துவமணையில் கொடுத்தால் மட்டுமே பிறந்த பதிவு Birth Certificate கிடைக்கும்.


இதன் முழு விளக்கமும் ஆஸ்பத்திரியிலோ ஆரம்ப சுகாதார நிலையத்திலோ மக்களுக்கு தெரிவிக்காமல் பிறந்த பதிவுக்கு PICME ID, RCH NO அவசியம் என்று சுருக்கமாக எழுதி இருக்கிறார்கள்.

இப்பொழுது பிரச்சினை என்னவென்றால்

இந்த வருடத்திலிருந்து தான் இந்த நடைமுறை இருக்கிறது என்பதால் இந்த வருடத்தில் பிறக்கும் குழந்தைக்கு பிறந்த பதிவு எடுக்க ஆஸ்பத்திரியில் PICME ID, RCH NO கேட்கிறார்கள் இப்பொழுது நாம் ஆரம்ப சுகாதார நிலையமான (பால்வாடி) யில் PICME ID, RCH NO நாம் கேட்போம். அதற்கவர்கள் ஆறுமாதத்திற்கு முன் நாங்கள் இதைப் பற்றி அறிவித்தோம். அப்பொழுது கருவுற்றிருந்த தாய்மார்கள் பதிவு செய்தவர்களுக்கு பச்சை நிற அட்டை வழங்கியிருந்தோம். அப்பொழுது பதிவு செய்யாமல் விட்டவர்களுக்கு PICME ID, RCH NO வழங்க எங்களால் வழங்க இயலாது என்கிறார்கள்.

PICME ID, RCH NO இருந்தால் மட்டுமே ஆஸ்பத்திரியில் பிறப்பு பதிவதாக சொல்கிறார்கள்.

எனவே நடைமுறை சிக்கலுக்கு தீர்வு காண்பதோடு .........

இனி வரும் காலங்களில் தாய்மார்கள் கருவுற்ற 45 வது நாளிலோ அல்லது ஆறாவது மாதத்திலோ அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலயத்தில் (பால்வாடி) யில் பதிவு செய்து அட்டையை பெற்று மாதம் மாதம் செக்கப் செய்தால் (நாம் தனியார் ஆஸ்பத்திரியில் செக்கப் செய்தாலும்) அரசாங்க சலுகைகள் நம் பேங்கு அக்கவுன்டுக்கு வருவதோடு *PICME ID, RCH NO யும் நாம் இலகுவாக பெற முடியும்.

தேவையான ஆவணங்கள்

பேங்கு பாஸ் புக் நகல் 1
போட்டோ 2
ஆதார் நகல் 1

இது நம்  சமூகத்திற்கு முழுவதும் சென்று சேருமாரு அனைத்து சமூக தலங்களிலும் பகிரவும்.

பி.எப்.பணம் எடுக்க ஏப்ரல்1 முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம்!!

நல்ல குடி நீர் என்பதற்கும்,சுத்தமான குடி நீர் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உணர வேண்டும்...அவசிய பதிவு.அவசியம் படியுங்கள்:

குடி தண்ணீரை RO பில்டர் செய்யக் கூடாது. ஏன்???.நம் வீடுகளில் ஆர்.ஓ.சிஸ்டம் எனும்தண்ணீரைச் சுத்தம் செய்வதற்குசாதனங்களை வைத்திருக்கிறோம். இந்த R.O சாதனத்தில் மூன்றுமாதத்திற்குப் பிறகு அந்த பில்டரைவெளியில் எடுத்துப் பார்த்தால்வெள்ளையாக இருந்த வாட்டர் பில்டர் ஒரு மஞ்சள் நிறம் அல்லது பச்சை நிறத்தில் தூசுகளோடு இருக்கும்.
அதை உதறி தட்டினால் அதிலிருந்து
மரத்தூள் போன்ற தூசுகள் கீழே கொட்டும்.