யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/3/18

பள்ளி வாகனங்களுக்கான வழிமுறைகள்!!!

பெரும்பாலான மாணவர்கள் பள்ளி வாகனத்தில் செல்வது அனைவருக்கும் தெரிந்தது. சில நேரங்களில் இந்த பயணம் பாதுகாப்பற்றதாக மாறி விடுகிறது. ஏனெனில், பள்ளி பேருந்துகள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இது பெற்றோர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையைக் கொண்டு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டப்படி, பள்ளி பேருந்துகளுக்கான விதிமுறைகள் மற்றும்

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிக் கல்வி துறை 2018 மார்ச் 9 ஆம் தேதி பள்ளி வாகனங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மறுபடியும் வழங்கியுள்ளது.

சமீப காலமாக அதிகளவில் விபத்துகளும், அதன்மூலம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம். 2012 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பு படிக்கும் சுருதி என்ற மாணவி பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையின் மூலம் விழுந்து உயிரிழந்தார். இந்த மாணவியின் உயிரிழப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு பயணத்துக்காகச் சிறப்பு வழிகாட்டு முறைகள் வழங்கப்பட்டன.

தற்போது, அந்த வழிமுறைகளில் கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு மறுபடியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பள்ளி வாகனத்தில் பயிற்சி அளிக்கப்பட்ட ஊழியர்களை நடத்துநர்களாக பணி அமர்த்த வேண்டும். குறிப்பாக , அவரிடம் நடத்துநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பேருந்தில், முதலுதவி பெட்டி மற்றும் தீ அணைப்பான் போன்றவை இருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அடுத்தது, பள்ளி வாகனத்தில் கீழே இறங்க 250 மி.மீ. தூரத்துக்கு மேல் உயரம் இருக்கக் கூடாது.

பள்ளி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். அவர்களின் திறமை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுநர்கள் கண்டிப்பாக தினசரி குறிப்பு புத்தகம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக