யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

13/3/18

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட்* வாங்கும் வழி முறைகள்!!!

ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும்
நாம் *கடிதம், புகார் கடிதம்,* போன்ற எந்த

 வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகள்

அரசு ஆணை எண்: 114

அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்.அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும்.அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது. [அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள். இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக