யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

27/1/17

உடல்திறன் சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிப்பு

அரசு பொதுத்தேர்வு எழுத, ஒரு மணி நேர சலுகை பெறும் மாணவர்கள், உடல்திறன் சான்றிதழ் பெற, கடுமையாக அலைக்கழிக்கப்படுகின்றனர். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2 மற்றும் 8ம் தேதிகளில் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், 7,000 மையங்களில் நடைபெறும் இத்தேர்வில், 20 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். பிளஸ் 2 தேர்வு, மூன்று மணி நேரமும்; 10ம் வகுப்பு தேர்வு, இரண்டரை மணி நேரமும் நடக்கும்.


இதில், சாதாரண மாணவர்கள் தவிர, 'டிஸ்லெக்சியா' என்ற கற்றல் திறன் குறைவான மாணவர்கள், மூளை வளர்ச்சி பாதிப்புள்ள சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் போன்றோருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சலுகை அளிக்கப்படும்.

இந்த சலுகையை பெற, சம்பந்தப்பட்ட மாணவர்கள், தமிழக சுகாதாரத் துறையின் அரசு உடல்திறன் சோதனை கமிட்டியிடம் இருந்து சான்றிதழ் பெற்று, தேர்வுத் துறையிடம் வழங்க வேண்டும். 

இதற்கு பெரும்பாலான பள்ளிகள், மாணவர்களுக்கு உதவுவதில்லை. அதனால், சலுகை பெற விரும்பும் மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், அரசு மருத்துவமனையில், பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. உடல்திறன் தேர்வு கமிட்டி, வாரம் ஒரு நாள் மட்டுமே கூடும் என்பதால் அதுவரை மாணவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளது.

மேலும் மருத்துவமனையில் மாணவர்கள் யாரை அணுக வேண்டும்; எந்தவிதமான ஆவணங்கள் எடுத்து செல்ல வேண்டும்; உடல்திறன் ஆய்வு கமிட்டியினர் கூடுவது எப்போது என, மாணவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை. 
'உடலளவில் பாதிக்கப்பட்டோரை, பள்ளிக்கல்வித் துறை, தேர்வுத்துறையும் அலைக்கழிப்பதால் மனதளவில் மேலும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து, உடல்திறன் சான்றுக்கான சிறப்பு முகாம்களை நடத்தலாம்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

NEET Exam 3 முறை மட்டுமே எழுதலாம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை 3 முறை வரை எழுதலாம் என யூஜிசி தெரிவித்துள்ளது.       

டில்லியில் நேற்று நடந்த யூஜிசி ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீட் தேர்வு எழுத குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும்.


பொது பிரிவு மாணவர்கள் 25 வயது வரையிலும், இடஒதுக்கீடு மாணவர்கள் 30 வயது வரையிலும் நீட் தேர்வை எழுதலாம். தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வயது வரம்பிற்குள் 3 முறை நீட் தேர்வு எழுதலாம். யூஜிசி.,யின் இந்த முடிவுக்கு மகாராஷ்டிரா மருத்துவ கல்வி மற்றுமண் ஆராய்ச்சி இயக்குனரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

INCOME TAX - 2016-17 FORMS AND EXCEL FILE ...

ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி  நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து
நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, அவர் கூறியதாவது:

ஏற்கனவே நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிக அளவில் உள்ளனர். அதனால் தகுதித் தேர்வு நடத்த தேவை இருக்காது என்று எண்ணினோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால், இந்த ஆண்டு, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடக்கும்.


இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும். இது தவிர, மேனிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம் மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இந்த ஆண்டு இரு தேர்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
அறிவிப்புகள் வெளியாகின.

இதனால் பலர் எந்த தேர்வுக்கு படிப்பது என்று குழப்பத்திற்கும் உள்ளாகினர்.

சிலநாட்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மிகவும் சின்சியரா படித்தவர்கள் பிறகு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு படித்தனர். பிறகு மீண்டும் டெட் தேர்வுக்கு படித்தனர்.
இந்த2017 ஆம் ஆண்டில் மீண்டும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.


இந்தஆண்டு இரு தேர்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது.
‎Thanks to-Mr.Alla Baksh‎ 

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப்
பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு மே மாதம்மேலும் 1500 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர்.அவற்றையும் சேர்த்து 3300  முதுநிலை பட்டதாரி
ஆசிரியர்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும் நடக்கும்.ஆகையால் 3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு வரும்

TNTET-Instruction for applying TET Duplicate Certificate & Application

உதவித்தொகை பெற நாளை எழுத்து தேர்வு

அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு
உதவித்தொகை திட்டத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டு, "ஸ்காலர் ஷிப்' வழங்கப்படுகிறது.
இத்தேர்வெழுத, ஏழாம் வகுப்பில், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சத்துக்கு, 50 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், 5,223 பேர், நடப்பு ஆண்டுக்கான "ஸ்காலர் ஷிப்' பெறுவதற்கான எழுத்து தேர்வை எழுதவுள்ளனர். இத்தேர்வு, நாளை நடைபெறுகிறது. மாவட்டத்தில், 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மாதம், 500 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும்.

1ம் வகுப்பு முதல் கணினி சொல்லிக்கொடுங்க.. அரசு பள்ளி மாணவர்களும் திறன் பெறட்டும்

சென்னை: அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பும் முதல் 12ம் வகுப்பு வரை கணினிப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்று கணினி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். மேலும், அச்சடிக்கப்பட்டு குடோனில்
கிடக்கும் 6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள கணினி பாடப் புத்தகத்தை மாணவர்களிடம் வழங்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 1992 ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கணினி பட்டப்படிப்பை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் கணினி ஆசிரியர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 11 ஆயிரம் பேரும், பெண்கள் 29 ஆயிரம் பேரும் இருக்கிறார்கள். இவர்களது ஒரே கோரிக்கை தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று அரசு பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் திட்டத்தில் கணினியையும் சேர்க்க வேண்டும் என்பதுதான்.

ஏற்கனவே, சமச்சீர் கல்வித் திட்டத்தில் 6 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை கணினியை ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. என்றாலும் அதற்கான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு வழங்காமல் அந்தப் பாடத்தை நடத்தாமல் உள்ளது தமிழக அரசு. இதுகுறித்து மேலும் பல தகவல்களை ஒன் இந்தியாவிடம் பகிர்ந்து கொள்கிறார் வெ.குமரேசன்.

குடோனில் கணினிப் புத்தகம்

சமச்சீர் கல்வியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டு பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டுள்ளன. என்றாலும் அவற்றை மாணவர்களுக்கு இதுவரை வழங்காமல் குடோனிலேயே குப்பை போல கிடக்கிறது. இதற்கு காரணம் அவற்றை சொல்லித் தர அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் இல்லை.

900 கோடி எங்கே?

கணினி பாடத்திற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு 900 கோடி ரூபாய் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலமாக ஒதுக்கியுள்ளது. ஆனால் அந்த பணத்தை செலவு செய்யக் கூட தமிழக கல்வித் துறைக்கு தெரியவில்லை. அது அப்படியே மத்திய அரசிற்கு திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர வேண்டிய தரமான கணினிக் கல்வி மறுக்கப்படுகிறது.

கணினி ஆய்வகங்கள்

தமிழகத்தில் 21 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினியை வழங்கியுள்ளது. என்றாலும் பள்ளிக் கூடங்களில் கணினிப்பொறி ஆய்வகங்கள் முறையாக இல்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் அமைத்துக் கொடுத்தால்தான் மாணவர்கள் திறம்பட கற்க முடியும். வெறும் மடிக்கணினியை கொடுத்து என்ன பயன்?

கணினி ஆசிரியர்கள்

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் இருக்கிறது. என்றாலும், அந்தப் பாடங்களை நடத்துவதற்கு முறைப்படி கணினி பிரிவில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. அதே போன்று கடந்த பத்து வருடங்களாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடப்பிரிவு சுத்தமாக இல்லை. அங்கேயும் கணினி அறிவியல் பாடப்பிரிவு கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இணையாக வளர..

தமிழக அரசு கணினி கல்வியில் தனி கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் கணினி அறிவைப் பெறுவது போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் பெற முடியும்.

கட்டாயக் கல்வி

தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் கணினிக் கல்வி கட்டாயக் கல்வியாக உள்ளது. வரும் கல்வியாண்டில், ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு குடோனில் தூங்கிக் கொண்டிருக்கும் கணினிப் பாடப் புத்தகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கணினி கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்று குமரேசன் கூறியுள்ளார்.

அரசு கேபிள் 'டிவி' கட்டணம்நேரடியாக செலுத்த 'மொபைல் ஆப்'

அரசுகேபிள், 'டிவி' சந்தாதாரர்களிடம், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 'மொபைல் ஆப்' மூலம் நேரடியாக செலுத்தும்
திட்டம், விரைவில் அறிமுகம் ஆகிறது.  இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர் குமரகுருபரன் கூறியதாவது:

தமிழகத்தில், 2011 முதல், அரசு கேபிள், 'டிவி' புனரமைக்கப்பட்டு, சென்னையை தவிர, மற்ற இடங்களில் அறிமுகமானது. பின், சென்னையிலும் சேவை துவங்கியது.

பொதுமக்களுக்கு மாத சந்தா, 70 ரூபாயாக நிர்ணயித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்; 2011 நவ., 11ல், அது அமல்படுத்தப்பட்டது. அதில், 20 ரூபாய் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு தரப்படுகிறது; அதற்காக ரசீது வழங்கப்படுகிறது.

எனினும், சில ஆப்பரேட்டர்கள், நிர்ணயித்த கட்டணத்தை விட, அதிகமாக வசூலிப்பதாக, பொது மக்கள் புகார் கூறுகின்றனர். அதனால், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும், சந்தாதாரர் செலுத்துவதற்காக, ஒரு பிரத்யேக, 'மொபைல் ஆப்' உருவாக்கப்பட்டு வருகிறது. அதை, 'ஆண்ட்ராய்டு போன்' மூலம் பதிவிறக்கம் செய்து, மாத கட்டணத்தை, அரசுக்கு நேரடியாக செலுத்தலாம்.
இதற்காக, சந்தாதாரர்களின் விபரம் தொகுக்கும் பணி நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி விதிகளின்படி, ஆப்பரேட்டர்களுக்கு, வங்கி மூலம் கமிஷன் அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

லாபத்தில் அரசு கேபிள்!

மற்றநிறுவனங்கள், மாத வாடகையாக, 150 ரூபாய் வரை வசூலிக்கும் நிலையில், குறைந்த கட்டணம் வசூலிக்கும் அரசு கேபிள், 'டிவி'யும் லாபம் பார்க்க துவங்கியுள்ளது. 2011 - 12ல், 23 லட்சம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய இந்நிறுவனம், அடுத்தடுத்த ஆண்டுகளில், 5.2 கோடி; 12.02 கோடி; 18.46 கோடி; 34.95 கோடி ரூபாய் என, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச்சில் நீக்கம்!

வங்கிகளிலும் ஏ.டி.எம்-களிலும் மக்கள் பணம் எடுப்பதற்கு விதிக்கப்படிருக்கும் கட்டுப்பாடுகள் பிப்ரவரி மாத இறுதியில்
தளர்த்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  நாட்டில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் கள்ள நோட்டுகளை ஒழித்துக்கட்டவும் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாதவைகளாக பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன. இந்நோட்டுகளை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, அவை அடிக்கடி மாற்றப்பட்டும் வந்தன.

கடைசியாக, ரிசர்வ் வங்கி விதித்திருந்த கட்டுப்பாட்டின்படி, ஒரு நாளைக்கு ஏ.டி.எம்-களிலிருந்து 10,000 ரூபாய் மட்டுமே அதிகபட்சமாக எடுக்க முடியும் என்று அறிவித்திருந்தது. முன்னதாக ஒரு நாளில் 2,500 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்றும், பின்னர் இந்த வரம்பை 4,500 ரூபாயாக உயர்த்தியது என்பதும் நினைவுகூரத்தக்கது. மேலும், தற்போது ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.24,000 மட்டுமே எடுக்க இயலும்.


இந்நிலையில், பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா வங்கியின் நிர்வாக இயக்குநரான ஆர்.கே.குப்தா கூறுகையில், “என்னைப் பொருத்தவரையில் நோட்டுகள் எடுப்பதற்கான வரம்புகள் பிப்ரவரி மாத முடிவிலோ அல்லது மார்ச் மாத மத்தியிலோ நீக்கப்படும். இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறேன். இதன்மூலம் நாட்டில் நிலவும் பணத்தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்” என்று கூறினார்.

SSA SPD Proceedings regarding PINDICS - QMT dated 24/1/2017.

10 ரூபாய் நாணயங்கள் எப்படி இருந்தாலும் செல்லபடியாகும் - ரிசர்வ் வங்கி

தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.

டெல்லி: பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 10 ரூபாய்
நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. அவை பல்வேறு வடிவங்களில் இருப்பதால் போலி நாணயங்கள் புழக்கத்தில் உள்ளதாக ஒருவித அச்சம் பரவியது. இது குறித்து பலமுறை ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 10 ரூபாய் நாணயங்கள் பழையது, புதியது என எந்த வடிவத்தில் இருந்தாலும் செல்லும் என்று மீண்டும் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளைவிட நாணயங்கள் நீண்ட காலத்திற்குப் புழக்கத்திலிருக்கும் என்பதால் ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை வெளியிடப்படுகின்றன. கடந்த 2010 ஜூலை 15 ஆம் தேதி புதிதாக ரூபாய் சின்னம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் அந்த குறியீட்டுடன் தயாரிக்கப்பட்டன. ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலிருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், இரண்டுமே சட்டப்படி செல்லுபடியாகும். மேலும் இத்தகைய நாணயங்கள் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனவேபொதுமக்கள் இதுகுறித்து வரும் வதந்திகளை புறக்கணித்து, 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பெட்டிக்கடைகள், சிறு வியாபாரிகள் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்து வருகின்றனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி அதிக அளவில் பத்து ரூபாய் நாணயங்களை மக்களுக்கு வழங்கியது. இப்போது அவற்றை செலவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருவதால் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறது.