யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/7/18

Primary  teacher  training
I'st  batch- 13.07.2018 & 14.07.2018.
2'nd batch - 16.07.2018 & 17.07.2018.
3'rd batch - 18.07.2018 &19.07.2018.
4'th batch -20.07.2018 &21.07.2018.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தின் முக்கிய அம்சங்கள்



லோக் ஆயுக்தா என்றால் என்ன?

பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு.

எத்தனை உறுப்பினர்கள்?
ஒரு தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நான்கில் 2 பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். 

உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
முதலமைச்சர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர்கள் ஆளுநரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படுவார்கள்.

யார் லோகாயுக்தா தலைவர்/உறுப்பினர் ஆக முடியும்?

பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி 
(அல்லது) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி
(அல்லது) ஊழல் தடுப்பு/பொது நிர்வாகத்தில் 25 ஆண்டு அனுபவம் கொண்ட நபர்

வேறு ஏதாவது வரையறைகள் உண்டா?
எந்த குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக இருக்க கூடாது
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடாது
அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டவராக இருக்க கூடாது
வேறு எந்த ஆதாய பதவிகளையும் (Office of Profit) வகிக்கக் கூடாது
45 வயதிற்கு குறைவாகவோ 70 வயதிற்கு மேலோ இருக்க கூடாது

உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
5 ஆண்டுகள்.

லோக் ஆயுக்தா அமைப்பில் வேறு யாரேல்லாம் இருப்பார்கள்?
லோக் ஆயுக்தா செயலாளர் மற்றும் விசாரணை இயக்குனர் : அரசு கொடுக்கும் அதிகாரிகள் பட்டியலிலிருந்து லோக் ஆயுக்தா தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இவர்கள் தவிர, இந்த அமைப்பு தடையின்றி செயல்படுவதற்கு தேவையான அலுவர்களை மாநில அரசு கொடுக்க வேண்டும்

லோக் ஆயுக்தா யாரையெல்லாம் விசாரிக்கலாம்?
இன்னாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்
இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்
இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
மாநில அரசு ஊழியர்கள்
அரசால் நிர்வகிக்கப்படும் அல்லது அரசின் நிதி பெறும் அமைப்புகள் / வாரியங்கள் / சங்கங்கள் / தன்னாட்சி அமைப்புகள்
இவர்கள் தவிர, பொது ஊழியர்களை ஊழல் செய்ய தூண்டும் அல்லது துணை போகும் எந்த நபரையும் விசாரிக்கலாம்.

வேறு என்னென்ன அதிகாரங்கள் உண்டு?

எந்த விசாரணையும் தொடங்கும் முன் யாரிடமும் முன் அனுமதி பெற தேவையில்லை
விசாரணையின் தேவைக்கேற்ப மாநில அரசின் எந்த அலுவலரையும் பயன்படுத்திக்கொள்ளலாம்
யாரை வேண்டுமானாலும் நேரில் வரவழைத்து விசாரிக்கலாம்
எந்த ஆவணத்தையும் கொடுக்கும்படி அரசிடம் கோரலாம்

எதையெல்லாம் விசாரிக்கக் கூடாது?

இந்திய பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள்
பொது ஊழியர்களின் பணி நியமனம், பணி மாறுதல், பணி நீக்கம், பணி ஓய்வு
வழங்கப்படும் வெகுமதிகள் மற்றும் பரிசுகள்
உள்ளாட்சி நிதி தணிக்கையாளரின் கீழ் வரும் நபர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
லோக் ஆயுக்தா அனுமதியுடன் பொது விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட விஷயங்கள்
லோக் ஆயுக்தா அமைவதற்கு முன்பு தொடங்கப்பட்ட விசாரணைகள்
துன்புறுத்தல் அல்லது தேவையற்ற கால தாமதத்தை தவிர, வேறு எந்த காரணத்திற்கும் அரசு ஏற்படுத்திக்கொள்ளும் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாது.
தானாக முன்வந்து (suo motu) புகார்களை பதிவு செய்ய முடியுமா? 
சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

வரும் புகார்களை எப்படி விசாரிப்பார்கள்?

புகார்களை விசாரணை செய்ய லோக் ஆயுக்தாவிற்கு தனி விசாரணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும். அது செயல்பாட்டிற்கு வரும் வரை மாநில அரசே விசாரணையில் உதவும். அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான புகார்களை இந்த விசாரணைப்பிரிவு புலனாய்வு செய்யும். அதிகாரிகளுக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையால் விசாரிக்கப்படும். 

விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?

அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம்.  அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுந்தாது.

விசாரணை முடிந்த பின் என்ன நடக்கும்?

விசாரணைப்பிரிவு / லஞ்ச ஒழிப்புத்துறை தன் விரிவான அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை ஆராய்ந்து புகார் சரியானதா இல்லையா என லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். புகாருக்கு உள்ளானவரும் தன் வாதங்களை வைக்க வாய்ப்பு வழங்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர் மீது அதிகாரம் கொண்ட அமைப்பிற்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்யும். 

நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

அரசு ஊழியருக்கு தமிழக அரசு, 
சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர்,
அமைச்சர்களுக்கு முதலமைச்சர்,
முதலமைச்சருக்கு ஆளுநர்.

புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டால்?
தவறான / அற்பத்தனமான புகார்கள் கொடுப்பவர்களுக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் விதிக்கலாம்
போலி புகார் அளித்தவர் பாதிக்கப்பட்ட பொது ஊழியருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும்
நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு இது பொருந்தாது

லோக் ஆயுக்தாவிற்கு எதிராகவே புகார் வந்தால்?
அதை லோக் ஆயுக்தா விசாரிக்காது. லோக் ஆயுக்தா உறுப்பினர்களை பணி நீக்கம் செய்ய தனி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அது என்ன விதிகள்?
நீதிபதிகளை பணிநீக்கம் செய்வது போன்ற நீண்ட நடைமுறை :
45 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்துடன் புகார் கொடுக்கப்பட வேண்டும். 
ஆளுநர் உத்தரவின் பேரில் புகாரை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.
நிரூபிக்கப்பட்டால், பணி நீக்க ஆணையை ஆளுநர் வெளியிடுவார்.

"தனியார் பள்ளிகளை மிஞ்ச ப்ளான் ரெடி..." செம்மயா செக் வைத்த செங்கோட்டையன்!

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளில் உள்ள முக்கிய தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத் திட்டங்களை இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தனியார் பள்ளிகளை விஞ்சும் நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் +2 புதிய பாட மாற்றம் ஒரு வரலாற்றைப் படைக்கும் பாட மாற்றமாக அமையும். இந்தியாவில் 80 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தின் இந்த எண்ணிக்கை 1.60 லட்சமாக உள்ளது.



இதை மாற்றும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்களை அடிப்படையாகக் கொண்டு திறன் பயிற்சி எனப்படும் புதிய பாடத்திட்டத்தை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12 பாடத் திட்டங்கள் இணைக்கப்படும். இதனால், படித்து முடித்தவுடனேயே அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வியாக அது மாற்றப்படும்.

மாணவர்களுக்கு 500 இடங்களில் சிஏ பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அந்தவகையில், தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும்.



நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே நேரத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காக 412 நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் இருந்து பயிற்சிகள் தொடங்கும். சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 80 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

வேளாண் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது: வழக்கம்போல பி.எஸ்சி. வேளாண்மை படிப்புக்கு கடும் போட்டி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக திங்கள்கிழமை தொடங்கிய ஆன்லைன் கலந்தாய்வில் பி.எஸ்சி. வேளாண் படிப்புக்கான பெரும்பாலான இடங்கள் முதல் நாளிலேயே நிரம்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் பூர்த்தியாகின. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. பல்கலைக்கழக வரலாற்றிலேயே மாணவர்கள் நேரில் வராமலேயே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும். எனவே, குளறுபடிகள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருப்பினும் ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது முதல் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கலந்தாய்வுக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் பிற்பகலுக்குள் அது சரி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு என்றாலும் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில்தான் இடங்களைப் பூர்த்தி செய்ய முடியும். இடங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கும் மாணவர்கள் அதை 11-ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 12-ஆம் தேதி எத்தனை காலி இடங்கள் உள்ளன, அவற்றுக்கு 2-ஆம் கட்ட கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்படும். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பி.எஸ்சி. வேளாண்மைப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதிலேயே மாணவர்கள் ஆர்வம் காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

ம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு: நீட் கட்-ஆஃப் என்ன?

பயிற்சிக்கு பாடநூல் கொண்டுவராத ஆசிரியர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை! -CEO PROCEEDINGS

அடுத்தாண்டு அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு:

புதிய பாடத்திட்டம் இந்தாண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் பாடங்கள் மாற்றியமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது  :

தமிழகத்தில் இனி வேலையின்மை என்ற நிலையை மாணவர்களுக்கு உருவாக்குகின்ற வகையில் பணிகள் நடைபெறுகிறது :

  வரும் கல்வியாண்டில் +2 புதிய பாடமாற்றம் ஒரு வரலாற்றை படைக்கும் பாடமாற்றமாக அமையும்.

தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு முடிவு பட்டதாரிகளும் ஆசிரியர் பயிற்சியில் சேர அனுமதி 17–ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர சமீப காலமாக மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. எனவே ஆசிரியர் பயிற்சி முடித்த பலர் வேலைவாய்ப்பு இன்றி சிரமப்படுகிறார்கள். எனவே ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர பிளஸ்–2 முடித்த மாணவ, மாணவிகள் 821 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதில் கலந்தாய்வு நடத்தப்பட்டதில் 413 பேர் மட்டுமே ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததால் அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி பட்டதாரிகளும் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து பயில அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் சேர்ந்து பயில விரும்புவோர் நாளை(புதன்கிழமை) முதல் (www.tnscert.org) என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வருகிற 17–ந்தேதி கடைசி நாள் ஆகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மாணவர்களை துன்புறுத்தியதாக கூறி ஆசிரியரிடம் ரூ1 லட்சம் கேட்டு மிரட்டிய போலி நிருபர்கள் 2 பேர் கைது,

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இருக்காது: சி.பி.எஸ்.இ.,

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் என்.சி.இ.ஆர்.டி., தரும் புத்தகங்களை மட்டுமே பயன்படுத்தக்கோரி வழக்கு தொடப்பட்டது. இதுகுறித்த விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு இரண்டு வாரங்களுக்குள் சுற்றறிக்கையாக அனுப்பப்படும் என சி.பி.எஸ்.இ., உத்திரவாதம் அளித்தது. தொடர்ந்து இந்த வழக்கை இரு வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்தி வைத்தது.