யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/6/17

எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி: ஜூன் 23-க்குள்விண்ணப்பிக்கலாம்:

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் உதவித்தொகையுடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஜூன் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
''தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள பல்வேறு பயிற்சிகளை மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேலைவாய்ப்பு இயக்குநரகம்வழங்கி வருகிறது. இந்தப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுவதுடன் பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.அந்த வகையில் பொது ஆங்கிலம், பொது அறிவு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து ஆகிய பயிற்சிகள் 11 மாத காலப் பயிற்சியாகவும், கம்ப்யூட்டர் மென்பொருள் பயிற்சி ஒரு ஆண்டு கால பயிற்சியாகவும் வழங்கப்பட உள்ளன.

 இவற்றுக்கானபயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம்.பயிற்சி பெறுவர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.500 பயிற்சிக்காலம் முழுவதும் வழங்கப்படும். பொது ஆங்கிலம்,பொது அறிவு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சிக்கு வயது வரம்பு 27. அத்துடன் 10-ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு அதற்குச் சமமான கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.ஒரு ஆண்டு கால கம்ப்யூட்டர் 'ஓ லெவல்' மென்பொருள் பயிற்சிக்கு வயது வரம்பு 18 முதல் 30 வரை ஆகும். அத்துடன், 10-ம் வகுப்பு அல்லது 12 – ம் வகுப்பு அதற்குச் சமமான கல்வித் தகுதி அல்லது தொழில்கல்வி (ஐடிஐ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 23 -ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையிலுள்ள தேசிய வேலைவாய்ப்பு மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலரை அணுகலாம் அல்லது 044-24615112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலையில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பல்கலை பதிவாளர் ஆறுமுகம் செய்திக்குறிப்பு:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2017 - 18ம் கல்வியாண்டில், அனைத்து பாடப் பிரிவுகளுக்கும்,'ஆன்லைன்' மூலம் விண்ணப்பம் பதிவு செய்ய, ஜூன் 14 கடைசி நாள் என நிர்வாகம் அறிவித்திருந்தது.மாணவர்கள் நலன் கருதி, கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இதில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு வகுப்புகள் எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்.டபிள்யூ., - எம்.எச்.எஸ்.எஸ்., - எம்.ஆர்.எஸ்., - எம்.எஸ்சி., மரைன் சயின்ஸ் - நர்சிங் - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., ஆகிய வகுப்புகள். பி.பிஎட்., - எம்.பிஎட்., எம்.பி.டி., - சர்டிபிகேட் புரோகிராம் இன் டென்டல் மெக்கானிக்ஸ், டிப்ளமா இன் ஜெனரல் நர்சிங் மிட்வைப்ரி, பொறியியல் பிரிவில் பி.இ., - பி.இ., பார்ட் டைம் - எம்.இ., - எம்.டெக்., - எம்.பார்ம்., மற்றும் அனைத்து இசைப் பிரிவு வகுப்புகள்.

ஆதாரை இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு செல்லாது: மத்திய அரசு அறிவிப்பு

டிசம்பர் 31ஆம்தேதிக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் வங்கிக் கணக்கு செல்லாது. ரூபாய் 50
ஆயிரத்திற்கும் மேலாக உள்ள பணபரிவர்த்தனைக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Flash News: PGTRB - 2017 Exam Hall Ticket Published by TRB

7 th PAY COMMISION படி தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

எங்க பள்ளியை விட்டு அவர் போகக்கூடாது!’ அரசுப் பள்ளி ஆசிரியரை வழியனுப்ப மறுக்கும் கிராமத்தினர்

ஓர்ஆசிரியருக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பதுமாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தருகிறஅன்பும் மரியாதையும்தாம்அப்படியான அங்கீகாரம்
அரசுப் பள்ளி ஆசிரியர் வசந்த் அவர்களுக்குக்கிடைத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்அரசுப்பள்ளி என்றாலே மாணவர்களுக்குத் தேவையானவிஷயங்களில் குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.அதையே காரணமாக கூறிவசந்த் தன் பணியின்கடமையிலிருந்து விலகி விடவில்லைதன் சக்திக்குமீறியும் அந்தப் பள்ளிக்கு அவர் செய்தது ஏராளம்அவரிடம்பேசியபோது,

"ரொம்ப அழகான பள்ளி இதுஅதைஇன்னும் அழகாகவும்கற்பதற்கும் சிறப்பானதாக மாற்ற வேண்டும் எனநினைத்தேன்பள்ளிக்குத் தேவையானவற்றைப்பட்டியலிட்டேன்தமிழ்நாடு அரசின் சிறப்பானதன்னிறைவுத் திட்டத்தில்பள்ளியின் தேவைக்கானதொகையில் மூன்றில் ஒரு பங்கை நாம் செலவிட்டால்மீதத்தை அரசு அளித்துவிடும்எனவே அதற்கானதொகையைச் சேகரிக்கத் தொடங்கினேன்.

அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இன்றுஉலகம் முழுவதும்பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர்அவர்களுக்குஇதுபோன்ற பள்ளிகளுக்கு உதவ வேண்டும் எனும்எண்ணம் இருப்பதைத் தெரிந்துகொள்ள என் நண்பனே ஓர்உதாரணம்அவனிடம் பள்ளியைப் பற்றிக்கூறிக்கொண்டிருந்தபோது, 50 ஆயிரம் ரூபாய் தந்துஆச்சர்யப்படுத்தினான்முழுமதி அறக்கட்டளை எனும்அமைப்பு வெளிநாட்டில் இயங்கி வருகிறதுஅதுஒருலெட்சத்துக்கும் அதிகமான தொகையைத் தந்தனர்.இவற்றை வைத்து, 1,69.000 ரூபாயை தமிழக அரசுக்குஅனுப்பினோம்.
எங்களின் இந்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது.தமிழக அரசு ஒதுக்கிய சுமார் 5 லட்சம் நிதியால் 23கம்ப்யூட்டர்களும் அவற்றிற்கு 46 நாற்காலிகளும் எங்கள்பள்ளிக்குக் கிடைத்தனமூன்று இன்வெர்ட்டர்பேட்டரிகளும் வாங்கினோம்இரண்டு வகுப்பறைகளைஏஸியாக்கினோம்தமிழக அளவில் ஒரு நடுநிலைப் பள்ளிஇவ்வளவு வசதிகள் இருக்குமா என்பது சந்தேகம்தான்.இவற்றையெல்லாம் செய்ததற்கு முதல் காரணம்எங்கள்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வியைக் கற்கவேண்டும் என்பதற்காகத்தான்ஏனெனில்,  பணம்கொடுத்துஇவற்றைக் கற்றுக்கொள்ளும் நிலையில்பொருளாதார நிலையில் அவர்கள் இல்லை." என்று சமூகஅக்கறையோடு பகிர்ந்துகொள்கிறார் வசந்த்.
பள்ளிக்கான பொருள்களின் தேவைகளைப் பூர்த்திசெய்பவராக மட்டும் ஆசிரியர் வசந்த் விளங்கவில்லை.மாணவர்களின் நடத்தையைச் சீர்செய்வதுமெள்ள கற்கும்மாணவர்களிடம் தனிக்கவனம் எடுப்பது என அனைத்துவேலைகளையும் சுயஆர்வத்தின் அடிப்படிப்படையில்செய்தவர்ஏறக்குறைய கீழப்பாலையூர் பள்ளியின்தேவைகளை நிறைவேற்றிய வசந்த் எடுத்த முடிவுபலருக்கும் ஆச்சர்யமானது.

கீழப்பாலையூரிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர்தொலைவிலுள்ள கீரனூர் பள்ளிக்கு பணி மாறுதலில்சென்றுவிட்டார்அதற்கு அவர், "ஒரு பள்ளியின்தேவைகளை நிறைவேற்றியாச்சுஅவற்றைக் கொண்டுஇங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பாக மாணவர்களுக்குவழிக்காட்டுவார்கள் என்பது தெரியும்அதனால் வேறொருபள்ளிக்குச் சென்று இதேபோல வேலைகளைச் செய்யலாம்என்பதால் இந்த முடிவு எடுத்தேன்என்கிறார் வசந்த்.

பள்ளி

பணிமாறுதல் கிடைத்துகீரனூர் பள்ளியில் வேலைகளைத்தொடங்கியும் விட்டார்பள்ளியின் முன்புறம் குண்டும்குழியுமாக இருந்ததை மணல் அடித்து சமப்படுத்தும் வேலைமும்மரமாக நடந்து வருகிறதுஇந்த நிலையில் வசந்தின்மொபைலுக்கு கீழப்பாலையூரிலிருந்து ஏகப்பட்டஅழைப்புகள்அப்படி அழைத்தவர்களில் ஒருவர்தான்பால்ராஜ்வசந்திடம் படித்துவிட்டுதற்போது டிப்ளமோபடித்திருக்கிறார்.

"வசந்த் சார் எங்க பள்ளியை விட்டுப் போனதே தெரியாது.இந்த வருஷம் ஸ்கூல் திறந்ததும் சார் வரலைனு பசங்கசொன்னாங்கசரிஎதுக்காச்சும் லீவு போட்டிருப்பாங்கனுநினைச்சிட்டிருந்தோம்இப்ப விசாரிச்சப்பதான் அவர் வேறபள்ளிக்கூடத்துக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறதுஅவர்எங்க ஊருக்கே திரும்பவும் வரணும் சார்எங்க பள்ளியைவிட்டு அவரை அனுப்ப மாட்டோம்அதுக்காக ஸ்டிரைக்பண்ணக்கூட நாங்க ரெடியாயிட்டோம்." என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் பால்ராஜ்.
 
முருகன் என்பவரின் மகன்கள் கீழப்பாலையூரில்படித்தவர்கள்அவர் பேசும்போது, "என்னோட பசங்கஅவர்கிட்ட நல்லா படிச்சாங்கஇப்ப ப்ளஸ் டூ படிக்கிறாங்க.ஒவ்வொரு நாளும் சாரைப் பத்தி சொல்லிகிட்டேஇருப்பாங்கஇப்படி தீடீர்னு எங்க வூரு ஸ்கூலை விட்டுவேற ஊருக்குப் போவாருனு எதிர்பார்க்கலஎன்னசெஞ்சாவது அவரை இந்த ஸ்கூலுக்கே அழைச்சிட்டுவந்துடணும்னு உறுதியாக இருக்கோம்என்றார் முருகன்.

பால்ராஜ்முருகன் மட்டுமல்ல கீழப்பாலையூரின்பொதுமக்கள் அனைவரும் வசந்த் திரும்பவும் தங்கள்ஊருக்கே ஆசிரியராக வர வேண்டும் என்கிற முடிவோடுஇருக்கிறார்கள்இதற்கான வேலைகளை நிச்சயம்செய்வோம் என்கிறார்கள்ஆனந்திடம் இது குறித்துகேட்டபோது,


"என் மேல் இவ்வளவு அன்பு வெச்சிருக்காங்கனு நினைச்சுசந்தோஷப்பட்டாலும்கீரனூர் ஸ்கூலிலும் என்னைஆர்வமா வரவேற்றாங்கதிரும்பவும் கீழப்பாலையூருக்குவர்ற சூழல் வந்தா கீரனூர் பசங்கஏமாற்றமடைஞ்சிடுவாங்கஎனக்கு என்ன செய்யறதுன்னேதெரியலஎன்கிறார்.