யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/1/18

IGNOU -B.ED Entrance Test September 2017 Results published held on 24.09.2017

உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை தேசிய அளவைவிட தமிழகத்தில் அதிகம்.!!!

பிச்சைக்காரர்களைப் பிடித்துக் கொடுத்தால் ரூ 500 பரிசு என காவல்துறை அறிவிப்பு,

ஹைதராபாதில் பிச்சைக்காரர்களை அப்புறப்படுத்த தெலுங்கானா அரசு நடவடிக்கை எடுத்துவரும்
நிலையில், பிச்சைக்காரரைப் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் பரிசு என காவல்துறை அறிவித்தது. 2 ஆயிரத்துக்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் சிக்கியதால் சன்சல்குடா, சாரபள்ளி சிறைகள் நிரம்பி வழிகின்றன.*

*✍சிறையில் அவர்களை தனித்தனியே அடைத்து வைத்திருப்பதாகவும், பிச்சைக்காரர்களின் குடும்பத்தினர் தலையிட்டு சிலரை விடுவித்துச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.*

*✍இரண்டாவது முறையாக பிச்சைக்காரர்கள் சிக்கினால் அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்து போலீசார் பலரை விரட்டி விடுகின்றனர். ஆரோக்கியத்துடன் உள்ள பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.*

ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் பயிற்சி!!!

தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், 
எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில், பாடங்கள் வரைபடம் வாயிலாக, கற்பிக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், படைப்பாற்றல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் பயிற்சி வழங்க, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, ஒரே கட்டமாகவும், ஆறு முதல் எட்டு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரு கட்டங்களாகவும் பயிற்சி நடத்தப்படுகிறது.

இதை, ஜன., 25க்குள் நடத்தி முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலாவுக்குகட்டுப்பாடு விதிப்பு!!

உயரதிகாரிகளின் முன்அனுமதியின்றி, ஆபத்தான இடங்களுக்கு
மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்லக்கூடாது; விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,’ என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில், ஆறு முதல் ஒன்பது வகுப்பு மாணவர்களை, கல்வி சுற்றுலாஅழைத்து செல்வது வழக்கம்.ஒவ்வொரு ஆண்டும் இது வழக்கமாக நடைபெறும் என்ற போதும், மாணவர் பாதுகாப்பு கருதி, பல்வேறு உத்தரவுகளை கல்வித்துறை, அவ்வப்போது பிறப்பிக்கும்.சில தினங்களுக்கு முன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் மூலம் தலைமைஆசிரியருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்,’பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல வேண்டும் எனில், அந்த இடம், நாட்கள் உள்ளிட்ட விவரங்களை, உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற வேண்டும்.

குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கும், இடம் பற்றி முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். மாணவியரை, பெண் ஆசிரியர்களுடன் அழைத்து செல்ல வேண்டும். ஆபத்தான, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக்கூடாது,’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 9 துணை கலெக்டர்கள் மாற்றம்!!!

நாடு முழுவதும் வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் : மத்திய அரசு

டெல்லி : நாடு முழுவதும் பேருந்துகள், வாடகை கார்கள் உள்ளிட்ட
வாகனங்களில் ஏப்ரல் 1 முதல் ஜி.பி.எஸ் கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு!!

*நடந்து முடிந்த பார்லி. குளிர்கால கூட்டத்தொடரில்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ஐகோர்ட் நீதிபதிகளின் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இ்ந்நிலையில் நீதிபதிகளுக்கு இணையாக தலைமை தேர்தல் ஆணையர்களுக்கும் சம்பளம் உயர்த்துவதற்கான மசோதா வரும் 29-ம் தேதி பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு சிறப்பு பயிற்சி -அமைச்ர் செங்கோட்டையன் பேட்டி!!!

அலுவலகப் பணிக்கு செல்லும் ஆசிரியர்களால் அரசுப்பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு!!!

ஐடியா - வோடஃபோன் இணைந்து சேவை!!!

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வருகிற 
ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் சேவை வழங்கவுள்ளன.

இந்தியாவின் தொலைத் தொடர்புச் சந்தையில் ஏர்டெலைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் ஒன்றிணைந்து சேவை வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட காலமாகவே இருந்து வந்த நிலையில், இவ்விரு நிறுவனங்கள் இணைந்து ஏப்ரல் மாதம் முதல் சேவை வழங்கவுள்ளன. இவ்விரு நிறுவனங்கள் இணைந்து புதிதாக உருவாகும் நிறுவனமானது உலகளவில் இரண்டாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும், இந்திய அளவில் மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாகவும் திகழும். 4 கோடி வாடிக்கையாளர்களுடன், இந்தியாவின் நெட்வொர்க் வாடிக்கையாளர் சந்தையில் 35 சதவிகிதப் பங்கையும், வருவாய் அடிப்படையில் 41 சதவிகித சந்தைப் பங்கையும் இப்புதிய நிறுவனம் கொண்டிருக்கும்.

இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 2016 செப்டம்பர் மாதத்தில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நெட்வொர்க் நிறுவனம் இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தையில் நுழைந்த பிறகு கடுமையான போட்டி நிலவி வருகிறது. துவக்கத்தில் இலவசமாகவும் பின்னர் குறைந்த கட்டணத்திலும் டேட்டா உள்ளிட்ட சலுகைகளை ஜியோ வழங்கி வருவதால் அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜியோவுக்குப் போட்டியாகப் பிற நிறுவனங்களும் கட்டணச் சலுகைகளை அறிவித்து வருவதால் அந்நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன. இச்சூழலைச் சமாளிக்கவே ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைய முடிவெடுத்தன என்பது நினைவுகூரத்தக்கது.

ராணுவக்கல்லூரியில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு; மார்ச் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர்வதற்கு (ஆண்கள் மட்டும்) வருகிற 31-3-2018க்குள் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 1-1-2019 அன்று 11½ வயதுக்கு குறையாமலும் 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். அதாவது 2-1-2006க்கு முன்னரும் 1-7-2007க்கு பின்னரும் பிறந்திருக்கக்கூடாது. மாணவர்கள் 1-1-2019ல் இக்கல்லூரியில் சேரும்போது 7-ம் வகுப்பு படிப்பவராக அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.


1-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 12 மணிவரை ஆங்கில தேர்வும், அன்று பிற்பகல் 2 மணிமுதல் 3-30 மணி வரை கணித தேர்வும் நடைபெறும். 2-6-2018 அன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை பொது அறிவு தேர்வு நடைபெறும். (மேற்கண்ட கணிதம் மற்றும் பொது அறிவு தேர்வுகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதலாம். எழுத்து தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு 4-10-2018 அன்று நடைபெறும். புதுச்சேரி மாணவர்களுக்கு தேர்வு மையம் குறித்த தகவல் இணை இயக்குனர் அலுவலக தேர்வு பிரிவால் அஞ்சல் வழி மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது www.ri-mc.gov.in என்ற வலைதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை புதுவை அண்ணா நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்துக்கு வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.

மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

DEE - Swatch Bharath Mission - Sanitation - competition -reg Director Proceedings & Govt Letter:

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முதல் கட்டமாக ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும்.

இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும்.


அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.


மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


தற்போது 9ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


முக்கிய அறிவிப்பாக, அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும் என மத்திய கல்வி ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 001062/எப்/ஜி/எச்/17 நாள்: 17.01.2018

இறுதி கற்பிப்பு மான்ய பட்டியல் சரிபார்த்தல்  நடைபெறும் நாட்கள்

23.01.2018 முதல் 25.01.2018 முடிய

29.01.2018 முதல்  31.01.2018 முடிய
மற்றும் 01.02.2018

மொத்தம் 7 நாட்கள்

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்புவது பற்றிய பட்டதாரி ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு :

ஆ.வ.அண்ணாமலை, மாநில சிறப்புத்தலைவர்,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,விழுப்புரம் கைபேசி எண், 9443619586.
அன்பார்ந்த பட்டதாரி ஆசிரிய பெருமக்களே வணக்கம். பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை சார்நிலைப் பணிவிதிகளைப் பின்பற்றாமல் மேல்நிலைப் பணிக்குச் சென்று பணப்பலன் பெற்றுவிட்ட பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தாரை வார்த்து வழங்கிக்கொண்டு வந்தது. இது சார்நிலைப் பணி விதிகளுக்கு முரணானது என நீதிமன்றத்தின் மூலம் தற்காலிகமாக தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் கொண்ட சிலர் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடுகின்றனர். அதாவது பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உ.நி.ப.த.ஆசிரியராக பதவி உயர்வில் சென்றால் தான் பட்டதாரிகளுக்கு மு.க. ஆ. பதவி உயர்வு கிடைக்கும் இல்லையேல் பதவி உயர்வு வாய்ப்பே இல்லை என கூப்பாடு போடுகிறார்கள். உதாரணமாக 500 ப.உ.பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணப்பலன் இல்லாத பதவியான  உ.நி. ப.தலைமை ஆசிரியர்களாக  மீண்டும் பணி மாறுதலில்  வருவதால் ஏற்படும் 500 PPG காலிப் பணியிடங்களில்  250  PPgபணியிடங்களில் மட்டும் தான் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல முடியும்.
மீதியுள்ள 250  Ppg பணியிடங்கள் நேரடி நியமனம்மூலம் தான் நிரப்பமுடியும். எனவே 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்வது சிறந்ததா அல்லது 250 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் செல்வது  சிறந்ததா என்பதை பட்டதாரி ஆசிரியர்களின் சிந்தனைக்கு  விட்டுவிடுகிறேன். பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை  யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பணி விதிகளின்படி தான் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அதை யாராலும் தடுத்து நிறுத்தி விடமுடியாது. உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு 100% பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் அவரவர் சார்ந்துள்ள அமைப்பின் மூலம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்துமாறு பணிவோடு வேண்டுகிறேன்.நன்றி.இவண், ஆ.வ.அண்ணாமலை, மாநில சிறப்புத்தலைவர்,பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,விழுப்புரம் கைபேசி எண், 9443619586

அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே என்பது வெறும் கோரிக்கை மட்டுமல்ல. அது நம்முடைய தார்மீக உரிமை.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள்... தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்ந்தோர் பட்டியலில் 70 சதவீதம் பேர் முதுகலையாசிரியர்களே உள்ளனர். இதே நிலை நீடித்தால் ஆண்டுதோறும் அவர்களுக்கே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சென்று கொண்டிருக்கிறது.

பதினைந்து ஆண்டு காலம் பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலைக் கல்வித் தொகுதியிலேயே 6-10 வகுப்புகளைக் கையாண்டுக் கொண்டு பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியரும், இடைநிலைக் கல்வித் தொகுதியில் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே பணியாற்றி முதுகலையாசிரியராகப் பதவி உயர்வு பெற்று பணப்பலனை அனுபவித்தவரும் ஒன்றாகி விட முடியாது.

முதுகலையாசிரியராகப்  பதவி உயர்வில் சென்றவர்களுக்கு அத்துடன் அவர்களின் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. அவர்கள் எந்தத் தேதியில் முதுகலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தாரோ, அந்தத் தேதி முதலே அவர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கும் தகுதியாகிறார்.

தற்போதுள்ள நிலைப்படி ஒரே சமயத்தில் இரண்டு பதவி உயர்வுகளைப் பெறும் அதிர்ஷ்டம் இந்த பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு.

இரண்டு பதவி உயர்வில் எது சுலபமானது அல்லது எது இலாபகரமானது என்று ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் பாக்கியசாலிகள் இவர்கள் மட்டுமே.....

பதவி உயர்வு பெற்ற முதுகலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியருக்குண்டான உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வினை ஆண்டுதோறும் 70 சதவீதத்திற்கும் மேல் கபளீகரம் செய்வது மட்டுமல்லாமல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
1. மேல்நிலைக் கல்வித் தொகுதியில் ஒட்டு மொத்தமாக நேரடி நியமனம்  மற்றும் பதவி உயர்வு மூலமாக 24000 முதுகலையாசிரியர்கள் உள்ளார்கள் என்ற புள்ளி விவரம் காண்பிக்கப்பட்டு கருணாகரன் கமிட்டி மூலம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் முதுகலை ஆசிரியர்களுக்கான விகிதாச்சாரத்தை 5ல் இருந்து 7 ஆக உயர்த்தி அரசாணை எண் 720 ஐத் திருத்தம் செய்யப்படக் காரணமாக இருக்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தால், நாங்கள் முதுகலை ஆசிரியராக வந்தாலும் , உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியாகிறோம். எனவே, மேல்நிலைக் கல்வித் தொகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு எமக்குத் தேவையில்லை எனக் கூறி கடிதம் கொடுத்திருப்பார்களேயானால், முதுகலையாசிரியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டு அவர்களின் விகிதாச்சாரத்தை 5ல் இருந்து மூன்றாகக் குறைத்திருக்கலாம். ஆனால், இரண்டு வரும்போது எது சிறந்ததோ, அதை எடுத்துக் கொள்ள வசதியாக இரண்டையுமே தக்க வைக்கத்தான் நினைக்கிறார்கள்.

அடுத்ததாக இவர்கள் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகக் கல்வியாண்டின் துவக்கத்திலேயே பதவி உயர்வில் சென்று விடுவதால், அவர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் அனைத்தும் நேரடி நியமனத்திற்கே சென்று விடுவதால் அதிலேயும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

ஆக இவர்களால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விலும், முதுகலையாசிரியர் பதவி உயர்விலும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

நண்பர்களே.....இனி வரும் காலங்களில் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் ஆண்டுக்கு 100 கூட வராது. ஏனெனில், நடுநிலை பள்ளிகளில் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் தரம் உயர்த்தப்பட வாய்ப்புகள் மிகக் குறைவு.

ததற்போது உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியில் சென்றுள்ளவர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மிகக் குறவாகவே கிடைக்கும். ஏனெனில் விகிதாச்சாரம் குறைக்கப் பட்டுவிட்டது. ஆக பதவி உயர்வில் அதிகம் பேர் செல்லாமல் அப்படியே இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் இளம் வயதினர் ஏராளமானோர் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு விருப்பக் கடிதம் கொடுத்து விட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் இனி வருங்காலங்களில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் உருவாவது மிகக் குறைவாக இருக்கும்.

காலியாகும் 100 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 30 இடங்களும், முதுகலையாசிரியர் பதவி உயர்வில் ஆண்டுக்கு ஒட்டு மொத்தமாக 500 இடங்களும் கிடைக்கப் பெற்றால், காத்திருக்கும் 65000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள்........

நாம் யாருடைய உரிமையையும் பறிக்கவில்லை. விதிகளுக்குப் புறம்பாக ஒரு கூட்டம் பெரும்பாலானவர்களின் உரிமையை கபளீகரம் செய்வதை எக் காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எமது நோக்கம்.

மேற்கண்ட நியாயங்களின் அடிப்படையில்தான் ஓர் இயக்கம் போராடி வருகிறது. பெரிய பெரிய பட்டதாரி ஆசிரியர் இயக்கங்கள் இந்த யதார்த்தமான உண்மையைப் புரிந்து கொண்டு  பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.
பெரிய இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பதும், பட்டதாரி ஆசிரியர் உரிமைக்கு எதிராகச் செயல்படுவதும் வேடிக்கையாக உள்ளது. எனவே இனி வருங்காலங்களிலாவது அவ்வியக்கங்கள் புரிந்து செயல்படவேண்டும் என காத்திருக்கிறோம்.