யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/7/17

தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல்... பதறியடித்து ஓடி வந்த அரசு அதிகாரிகள்...!

அவிணாசி பள்ளி மாணவர்கள்திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ளது கைகாட்டிப்புதூர். இவ்வூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், போதிய அளவிலான ஆசிரியர்கள் இல்லாததால், தங்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதாகக்கூறி அப்பள்ளி
மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட கைகாட்டிப்புதூர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான ஏழை மற்றும் நடுத்தர வீட்டுக் குழந்தைகள் இங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில்தான் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், கடந்த சில வருடங்களாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், இப்பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முறையான கல்வி அளிக்க முடியாமல் திணறி வருகிறது பள்ளி நிர்வாகம்.

''தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டாலும், யாரும் சரியாகப் பாடமும் நடத்துவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெரும்பாலும் பள்ளியின் தலைமை ஆசிரியரே அனைத்து வகுப்புகளுக்கும் சென்று பாடம் எடுக்க வேண்டிய நிலைமைதான் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வருகிறது'' என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களும் பலமுறை மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் மாவட்டக் கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதமாகியும் இன்றளவும் இப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்யப்படாததால், கொதித்தெழுந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர்.
 அவிணாசி பள்ளி மாணவர்கள்

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்,  ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களின் பள்ளி சீருடை அணிந்தவாறு சாலையில் அமர்ந்து, "எங்களின் பள்ளிக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்" என்ற முழக்கத்துடன் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிராஜ், சம்பவ  இடத்துக்கு விரைந்து வந்தார். அவருடன் வருவாய்த் துறையினரும் இணைந்துவந்து மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசெல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு போராட்டக்காரர்கள் உடன்படாததால், மீண்டும் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலரும் சம்பவ இடத்துக்கு வந்து தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட, இறுதியில், 'கைகாட்டிப்புதூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு வருகிற திங்கட்கிழமைக்குள் நிரந்தரமாக இரண்டு ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். தேவைப்பட்டால் மேலும் ஓர் ஆசிரியரை பணியமர்த்தவும் ஏற்பாடு செய்கிறோம்' என்று உத்தரவாதம் அளித்த பிறகே சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர் மாணவர்கள்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அரசுபள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

சங்கத்தினருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான உயர்நீதிமன்ற கருத்தை எதிர்த்து ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ள போராட்டத்திற்கு நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆண்டில் பாதி நாட்கள் பணிக்கு வருவதில்லை என கூறிய அவர் அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களின் அங்கீகாரங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்

Flash News:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு.

TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி: விரைவில் போட்டித் தேர்வு

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக
அரசு அனுமதி அளித்துள்ளது.
இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
 பள்ளிக்கல்வித் துறையில் 2007-08 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 525 பள்ளிகளில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டன. தற்காலிக ஏற்பாடாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு அவை செயல்படுகின்றன. எஞ்சிய 240 பள்ளிகளில் கணினி அறிவியல்பாடப்பிரிவு இல்லை.அப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர போதிய மாணவர்கள் முன்வரும் நிலையில், நிதி ஆதாரம் இல்லாததால் பாடப்பிரிவு தொடங்க இயலவில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் தெரிவித்துள்ளார்.
 மேற்கண்ட 765 பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு வசதியாக, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி ஒப்புதல் அளிக்குமாறும் அரசிடம் கோரியுள்ளார்.பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வியை சீரிய முறையில் செயல்படுத்த வசதியாக, 765 பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிஆர்பி மூலம் விரைவில் தேர்வு

பி.எட். முடித்த பி.இ. (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) பட்டதாரிகள் கணினி அறிவியல் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையவர்.கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

SSA - SPD PROCEEDINGS- PAT Test- குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் அடைவு ஆய்வு -சார்பு

உலக மக்கள் தொகை தினம்- ஜுலை11- உறுதிமொழி

11.07.2017 அன்று ஜாக்டோ - ஜியோ கூட்டம் - அனைத்து சங்கத்திற்கும் அழைப்பு கடிதம்



TNTET 2017 : தவறான பதில் , உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வந்தே மாதரம் வங்க மொழியில் முதலில் எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதா என்று அட்வகேட் ஜெனரல்
தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டதாரி ஆசிரியரான கே.வீரமணி தாக்கல் ெசய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டேன். அதில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இருந்தது. கேள்விக்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என்ற 4 பதில்கள் இருந்தன. கேள்விக்கு சரியான பதிலாக வங்கமொழி என்று எழுதினேன். ஆனால், எனது பதில் தவறு என்று கூறி எனக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்துவிட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் நான் 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். தேர்வில் வெற்றி பெற 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். வந்தே மாதரம் எந்த மொழி என்ற கேள்விக்கு நான் சரியான பதில் எழுதியுள்ளதால் அதற்கு ஒரு மதிப்பெண் தந்தால் நான் தகுதித் தேர்வில் தேர்ச்சி ெபற்றிருப்பேன். பிஎட் படிப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் வங்கமொழியில்தான் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்று உள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் மட்டும் சமஸ்கிருதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வந்தே மாதரம் வங்கமொழியில் எழுதப்பட்டுள்ளது என்ற எனது பதிலுக்கு ஒரு மதிப்பெண் தருமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்தமனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பக்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரத்தை வங்க மொழியில்தான் முதலில் எழுதினார் என்று வாதிட்டார். கூடுதல் அரசு பிளீடர், சமஸ்கிருதத்தில்தான் முதலில் வந்தே மாதரம் எழுதப்பட்டது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வந்தே மாதரம் எந்த மொழியில் முதலில் எழுதப்பட்டது, வங்க மொழியிலா அல்லது சமஸ்கிருதத்திலா என்று அட்வகேட் ஜெனரல் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

தவறுகளை சுட்டிக்காட்டினால் போராட்டம் அறிவிப்பதா? ஆசிரியர் சங்கங்களுக்கு ஐகோர்ட் கடும் எச்சரிக்கை

மாணவர்களுக்கு தரமான கல்வியைத் தராத ஆசிரியர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் போராட்டம் நடத்த திட்டமிடுவதா என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அப்படி போராட்டம் நடத்த அறிவித்தவர்களை நீதிமன்றத்தில்
ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில், ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து, அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரைணக்கு வந்தபோது, மாணவர்களின் கல்வித் தரம் உயர அரசிடம் இந்த நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.

நீதிபதி அளித்த உத்தரவில், “ கடந்த 2012 ஜூலை 17ம் தேதி அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அரசு ஏன் கட்டாய உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளுக்கு ஜூலை 14ம் ேததிக்குள் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.  இந்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் படித்த 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேர் தோல்வி அடைந்ததை எதிர்த்தும், அந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

  இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பள்ளிக்கே ஒழுங்காக செல்வதில்லை. இதுகுறித்து எனக்கு 1500க்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்துள்ளன.  பள்ளி நாட்களான 165 நாட்களில் 65 நாட்கள் மட்டுமே ஒரு ஆசிரியர் பள்ளிக்குச் சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படி பள்ளிக்குச் சென்றால் அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியுமா?  சம்பளம் மட்டும் அதிகம் வாங்குகிறார்கள். கடமையை செய்யாமல் அவர்கள் சாப்பிடுவது எப்படி ஜீரணிக்கும். ஒரு சில பள்ளிகளில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே படிக்கிறான்.  அதற்கு அந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள், 2 பணியாட்கள். இவர்களால் எப்படி கல்வி தரத்தை உயர்த்த முடியும்.

 மாணவர்கள் நலன் கருதி நீதிமன்றம் கேள்விகளை எழுப்பினால் அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா? பெற்றோர்கள், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கற்று தருவதை விட்டுவிட்டு சிறு வயதிலேயே குழந்தைகள் செல்போன், இன்டர்நெட்டில் விளையாடுவதை ரசிக்கிறார்கள்.  மாணவர்களை 8ம் வகுப்பு வரை பெயிலாக்க கூடாது என்ற சட்டம் உள்ளதால் அதுவரை அந்த குழந்தைகளை பற்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலைப்படுவதில்லை. 9ம் வகுப்புக்கு அந்த மாணவர் வரும்போது, அவர்கள் மீது எல்லா கல்வி சுமையையும் சுமத்துகிறார்கள். இதுபோன்ற தவறுகள் நடைபெறுவதை நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதற்கு எதிராக போராட்டத்தை அறிவிப்பதா?


அந்தஆசிரியர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட  வேண்டி வரும்” என்று நீதிபதி கூறினார்.  மேலும், ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 42 பேரின் தேர்ச்சி தொடர்பான வழக்கை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கிறேன். அப்போது, ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு

வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்,
மறைந்த காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காமராஜரின் ஆட்சி, அவரது எளிய வாழ்க்கை, அவரது கல்வி வளர்ச்சி பணிகள் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல, மாணவர்கள் மத்தியில் போட்டி நடத்தி, பரிசு வழங்கவும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கல்வி வளர்ச்சி நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், வரும்,  தேதி சனிக்கிழமை, ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.