யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/7/18

'டிப்ளமா' ஆசிரியர் படிப்புக்கு மவுசு குறைந்தது : 713 பேருக்கு நாளை, 'ஆன்லைன்' கவுன்சிலிங்

தமிழக பள்ளிக்கல்வித்துறையின், டி.எல்.எட்., என்ற, 'டிப்ளமா' ஆசிரியர் படிப்புக்கான போட்டி, வெகுவாக குறைந்துள்ளது. மொத்தமுள்ள, 1,050 இடங்களுக்கு, 831 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கமாக இயங்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் நடத்தப் படுகின்றன. மாவட்ட அளவில், 12; வட்டார அளவில், ஏழு மற்றும் அரசின் நேரடி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், எட்டு என, 27 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், 32; சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 243 என, தனியாக, 275 நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.ஐந்து ஆண்டுகளாக, ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான மவுசு, மாணவர்கள் மத்தியில் கடுமையாக குறைந்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலானோர், பட்டப்படிப்பு, டிப்ளமா, இன்ஜினியரிங் போன்றவற்றில் சேர்கின்றனர். ஆசிரியராக பணியில் சேர, பட்டம் முடித்து, பி.எட்., படிப்பதால், டி.எல்.எட்., என்ற டிப்ளமாவில் சேர, ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், இந்த ஆண்டு, தாங்களே மாணவர்களை சேர்ந்து கொள்ள, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மற்ற, 27 அரசு நிறுவனங்களுக்கு மட்டும், எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பங்கள், ஜூன், 30 வரை பெறப்பட்டன. மொத்தம், 1,050 இடங்களுக்கு, 831 மட்டும் விண்ணப்பித்தனர். அவர்களில், 713 பேர் மட்டுமே, படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, நாளை ஆன்லைன் வழி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. கவுன்சிலிங்குக்கான தகவல்கள், இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி தெரிவித்தார்.
பி.எட்., படிக்க 6,700 பேர் ஆர்வம் : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, பி.எட்., கவுன்சிலிங்கில் பங்கேற்க, 6,700 பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். விண்ணப்ப பரிசீலினை, நாளை துவங்க உள்ளது. தமிழக அரசு, கல்லுாரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டில், 14 அரசு கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, 21 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், பி.எட்., படிப்பிற்கு, 1,753 இடங்கள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இம்மாதம் மூன்றாம் வாரம் நடக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான, விண்ணப்ப வினியோகம், ஜூன், 21ல் துவங்கி, ஜூன், 30ல் முடிந்தது. மொத்தம், 6,700 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் அவகாசம், நேற்று முன்தினம் மாலை முடிந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் ஆய்வு பணி, நேற்று துவங்கியது. நாளை முதல், விண்ணப்ப பரிசீலினை துவங்க உள்ளது. இந்த பணிகளை, சென்னையில் உள்ள, லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி, பேராசிரியை தில்லை நாயகி தலைமையிலான, மாணவர் சேர்க்கை கமிட்டி மேற்கொண்டுள்ளது.
மேல் படிப்புக்கு வாய்ப்பு : டி.எல்.எட்., என்ற டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோர், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுகின்றனர். ஆசிரியர் பணிக்காக, மற்ற பட்டதாரிகளை போல், 'டெட்' தேர்வில் மட்டும், தேர்ச்சி பெற வேண்டும். டிப்ளமா முடித்தோர், பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம். இந்த வசதிகள் இருந்தும், பலர் டிப்ளமா படிக்க ஆர்வம் காட்டவில்லை.
- நமது நிருபர் -

பள்ளிகளில் 'நீட்' தேர்வு பயிற்சி; தமிழக அரசு தடை

தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் வழியாக 'நீட்' தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது' என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை:

● தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் சட்டத்தில் உள்ள விதிகளை பல பள்ளிகள் மீறுவது தெரிய வந்துள்ளது. சட்ட விதிகளின்படி தனியார் கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் சேவை அடிப்படையில் மட்டுமே கல்வி நிறுவனத்தை நடத்த வேண்டும். லாப நோக்கில் நடத்த அனுமதி இல்லை.

● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1974ன் படி,பள்ளி வளாகங்களில் அங்கீகரிக்கப்பட்ட பாடத்தில் வகுப்பு நடத்தவும், முதன்மை கல்வி அதிகாரி அனுமதிக்கும் தேர்வுகளை நடத்தவும் மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஆசிரியர் கல்வித்தகுதி :

● இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் பிரிவு - 23 ஒன்றாவது உட்பிரிவின்படி, பள்ளி வளாகத்தில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில் கல்வித்தகுதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதி இல்லாதவர்களை பயிற்சி வகுப்பு நடத்த ஈடுபடுத்தினால் அது விதி மீறிய செயல்.

● தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகார ஒழுங்குமுறை சட்டம் 1973ல் பிரிவு - 3ன்படி,அங்கீகாரம் அளித்த படிப்பை தவிர வேறு பாடங்களை பயிற்றுவிப்பது விதிமீறல். மாணவர்களின் விருப்பத்தை மீறி டாக்டர், இன்ஜினியர், ஆடிட்டர் என ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி மட்டும் கற்பித்தல் பணியை ஊக்குவிக்க கூடாது.

இதே சட்டத்தில் விதி - 9 பிரிவு - 2ல் உள்ளவாறு, எந்த ஒரு கல்வி நிறுவனமும் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் கட்டணமோ அல்லது நன்கொடையோ வசூலிக்க கூடாது. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் போது இந்த நிபந்தனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

புகார் என்ன?

சில தனியார் பள்ளிகளில்,போட்டி தேர்வுகளை சந்திக்கசிறப்பு பயிற்சி தருவதாக வணிக ரீதியிலான தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பள்ளி வேலை நேரங்களில்கற்பித்தல் பணிகள் நடத்தப்படுகின்றன.

இந்த செயல் பள்ளி வளாகத்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன், அரசு அங்கீகரித்த பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவதையும் சீர்குலைக்கிறது. சில பள்ளிகளில் நுழைவு தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி தருவதாக கூறி ஆறாம் வகுப்பு முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில் ஆசிரியர் பணிக்கு தேசிய கல்வி கவுன்சில் விதிக்கும் கல்வித்தகுதி இல்லாதவர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மாணவர்களுக்கு பாட சுமை, மன அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ள நிலையில், வணிக ரீதியில் தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் இந்த பயிற்சி,பள்ளிகள் இடையே லாபநோக்கத்திலான ஆரோக்கியமற்ற போட்டியை ஏற்படுத்திஉள்ளது.

வழக்கமான கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கும் தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. பள்ளிகளில் பாடம் நடத்துவது, பயிற்சி அளிப்பது, தேர்வுக்கான வழிமுறைகளை விளக்குவது போன்றவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளதால் அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.

'நீட்' பயிற்சிக்கு தடை :

● இதன்படி தனியார் பள்ளிகள் அரசின் உத்தரவுகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். பள்ளி வேலை நாட்களில், பள்ளி வளாகத்தில் தனியார் நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்கள் வழியாக வணிக நோக்கில் சிறப்பு பயிற்சி அளிக்க கூடாது.

● பள்ளியில் எந்த மாணவரையும், 'சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர வேண்டும்' என கட்டாயப்படுத்த கூடாது. தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிக்க கூடாது. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது

● எந்த பாடத்திட்டத்தில் பள்ளிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டதோ அந்த அனுமதியின் படி பிளஸ் 1, பிளஸ் 2வில் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பாடங்களை நடத்த வேண்டும்

● இந்த உத்தரவுகளை மீறும் பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து செய்வது உட்பட நடவடிக்கை எடுக்கப்படும். முதன்மை கல்வி அதிகாரிகள்ஆய்வு செய்து, விதிமீறுவோரை கண்டறிய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.அரசின் பயிற்சி நடக்குமா?
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சி விதியை மீறுவதாக இருக்காதா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசின் 'நீட்' தேர்வு பயிற்சி தொடர்ந்து நடத்தப்படும். அரசு மற்றும் உதவி பள்ளிகளில் பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் 'நீட்' தேர்வு பயிற்சியை நடத்தவில்லை; விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்தப்பட்டது. மாணவர்கள் அவர்களாகவே பதிவு செய்து தங்கள் விருப்பத்தின்படி வந்தவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாறாக பள்ளிகளில் ஒரு பாடப்பிரிவில் படித்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி வேலை நேரங்களில் 'நீட்' பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் எந்த மாணவரிடமும் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. எனவே சட்டத்திற்கு உட்பட்டு இந்த பயிற்சி தொடரும். இவ்வாறு கூறினர்.

சி.பி.எஸ்.இ.,க்கும் பொருந்தும் :
பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது: சில பள்ளிகளில் 'நீட், ஜே.இ.இ.,' பயிற்சி என்ற பெயரில் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான இலக்கை நோக்கி படிப்பதில்லை. அனைவரும் நுழைவு தேர்வு பயிற்சிகளில் சேர வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் பாடத்திட்டம் அல்லாமல் தமிழகத்தில் இயங்கும் சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட மற்ற பாடத்திட்ட பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அந்த பள்ளிகளும் பாடத்திட்டத்தை தவிர்த்து பள்ளி வேலை நேரங்களில் தனியார் நிறுவனங்களின் போட்டி தேர்வு பயிற்சி அளிக்க கூடாது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார சட்ட விதிகள் இந்த பள்ளிகளுக்கும் பொருந்தும்; அவர்களுக்கு தனியாக எந்த சலுகையும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - 

காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்

நாமும் தெரிந்துகொள்வோம்

1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.


3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.

4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட்டும்,கார்களில் செல்லும் நான்கு பேரும் சீட் பெல்ட் போட வேண்டும் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!



இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைகடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயண பாதுகாப்பு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி இனி பின்பக்க சீட்டில் அமர்ந்து இருப்பவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் ஆகும். மேலும் கார்களில் செல்லும் நான்கு பேரும் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும். வானங்களில் முன்பக்க விளக்கின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும். அதேபோல் உயரதிகாரிகள், காவலர்களும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை சரியாக நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி வரும் 27ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது


புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது- திண்டுக்கல் எங்கெல்ஸ்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் 01.04.2006க்கு பிறகு சேர்ந்த கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் தங்களின் ஓய்வூதிய பங்களிப்புத் தொகையில் நிபந்தனைகளின் அடிப்படையில் 25% திரும்ப பெற்றுக் கொள்ள கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.*

*குறைந்தபட்சம் இந்த திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.*

*இந்த நடைமுறை அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த பணிக்காலத்தில் மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்படும்.*

*சில குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை சிறப்பு நேர்வுகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்*

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

JD / DEO பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த தலைமையாசிரியர்கள் பெயர் பட்டியல் அனுப்பு இயக்குநர் உத்தரவு.





பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவில் உள்ள சிக்கல்கள்.

முறைகேடுகளையும் நேர விரயத்தையும் தடுக்க COMPUTER BASED EXAMINATION தேர்வு நடத்த TNPSC திட்டமிட்டுள்ளது,

உடற்கல்வி வருடாந்திர செயல் திட்ட அட்டவணை- 2018- 2019

Attendance App - தற்காலிகமாக நிறுத்தி வைப்பு, EMIS ID CARD PHOTO பதிவேற்றம் செய்யக் கூடாது மற்றும் EMIS DATA பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அறிவுரைகள் - SPD PROC

சரியாகப் படிக்காதவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது: தனியார் பள்ளிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்

சரியாகக் கற்காத மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக் கூடாது என்பது உள்பட தனியார்
பள்ளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
 இதற்கான சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
 தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. பாலியல் தொல்லையில் இருந்து மாணவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
 தனியார் பள்ளிகளில் நல்ல அறிவுடைய பாடத்திட்டம் சார்ந்தவை, இணையான பாடத் திட்டம் சார்ந்தவை மற்றும் பிற பாடத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 விடைத்தாள் மதிப்பீடு: அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துவதற்காகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காகவும் தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் அதனுடைய கட்டடங்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும். அரசின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகள், விடைத்தாள்கள் மதிப்பீடு போன்ற பணிகளுக்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை மாற்றுப் பணிக்காக அனுப்பிட வேண்டும்.
 அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புகள் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி ஆகியன மேற்கொள்ளப்படும். தேவைப்படும்பட்சத்தில், தனியார் பள்ளிகளைச் சேர்ந்தவர்களை அதில் ஈடுபடுத்த அனுப்பிட வேண்டும்.
 கட்டணத்தை முறைப்படுத்த...தனியார் பள்ளிக் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டு அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தைத் தவிர வேறு எந்தப் பெயரிலும் கட்டணத்தை பெறக் கூடாது.
 சரியாகப் படிக்காதவர்கள்: தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் யாரையும் சரியாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி பொதுத் தேர்வுகள் எழுதுவதில் இருந்து தடுக்கக் கூடாது. தனியார் பள்ளிகளுக்குள் நலன்களைக் கெடுக்கும் வகையிலான போட்டிகளை நடத்தக் கூடாது.
 வெளிப்படையான சேர்க்கை: தனியார் பள்ளி ஒவ்வொன்றிலும் கல்வி ஆண்டின் சேர்க்கையைத் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தபட்சம் 30 நாள்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேர்க்கை குறித்த அறிவிப்பை, பள்ளியின் அறிவிப்புப் பலகையிலும், இணையதளத்திலோ அல்லது தகவல்களைத் தெரிவிக்கும் பள்ளி தொடர்பான பிற அம்சங்களின் வாயிலாகவோ வெளியிட வேண்டும்.
 பெற்றோர்-ஆசிரியர் சங்கம்: அரசுப் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளிலும் கல்வி மற்றும் கற்பித்தல் சூழலின் தரத்தை மேம்படுத்தவும், அதில் பெற்றோரை பங்கெடுக்கச் செய்யவும் பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும்.
 அனுமதி பெறாமல் மூடக் கூடாது: தனியார் பள்ளியையோ அல்லது பள்ளியில் தொடங்கப்படும் பாடப் பிரிவையோ உரிய அரசு அமைப்பின் ஒப்புதலைப் பெறாமல் மூடக் கூடாது. அவ்வாறு மூடும் போது படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உரிய தகுந்த ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
 ஆசிரியர்களுடன் ஒப்பந்தம்: தனியார் பள்ளியைச் சேர்ந்த நிர்வாகக் குழு தேவைப்படும் ஆசிரியர்களை பணியமர்த்தம் செய்யலாம். இவ்வாறு நியமனம் செய்யப்படும் பணியாளருடன், பள்ளி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்கெனவே பணியிலுள்ள பணியாளருடன் சட்டம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் ஒப்பந்தத்தைச் செய்து செயல்படுத்திட வேண்டும் என்று சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 தங்கம் தென்னரசு கேள்வி: இந்த மசோதா தொடர்பான விவாதம் வியாழக்கிழமையே விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மசோதாவில் உள்ள அம்சங்களை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாமல் நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்களாக மாறி வருகின்றன. அதைத் தடுப்பதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும். மேலும், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்துமா என்று கேள்வி எழுப்பினார்.
 இதற்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகள் ஒருமுறை மட்டுமே தடையின்மைச் சான்றிதழ் பெற்றால் போதும் என இருந்தது. இப்போது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசிடம் இருந்து தடையின்மைச் சான்று பெற வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
 விடுமுறை நாள்களில்: தனியார் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். மட்டுமே நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி நாள்களில் பயிற்சி அளித்தால் அவர்களுக்கான உரிமைகள் ரத்து செய்யப்படும் என்றார்.a

10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் இடைப்பருவ தேர்வு அறிவிப்பு!!

பள்ளிகளுக்கு புதிய கட்டடம் - பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாவட்டங்களிலும்,
பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.




  சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சக்கரபாணி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள, மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, கலையரங்கம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, அரசு முன் வருமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அந்த பள்ளியில், போதிய வசதி உள்ளது.
சக்கரபாணி: அந்த பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.நான்கு வகுப்பறை உடைய கட்டடம் பழுதடைந்துள்ளது. ஒரு கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.அதற்கு பதிலாக, 12 வகுப்பறைகள் உடைய, புதிய கட்டடம் கட்ட வேண்டும். கூடுதலாக, ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

  சக்கரபாணி: அனைத்து பள்ளிகளுக்கும், தேவையான கட்டடம் கட்டித்தர வேண்டும். 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்?
அமைச்சர் செங்கோட்டையன்: அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாயிலாக, பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்யவும், பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்டவும் உத்தரவிடப் பட்டுள்ளது.'நீட்' தேர்வு குறித்த புள்ளி விபரம் தற்போது இல்லை. இந்த ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள், இந்த மாதத்தில் துவங்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டில் பாடங்கள்; கற்பிக்கும் ஆசிரியர் பயிற்றுனர்

ராமநாதபுரம் : அனைவருக்கும் கல்வி இயக்க
ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், தனது சொந்த செலவில் ஸ்மார்ட் போர்டு வாங்கி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.



ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்தவர் உலகராஜ். அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனரான இவர், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற இசை மூலம் மாணவர்களை கவரும் வகையில் ஏற்கனவே பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

  தற்போது, தனியார் பள்ளிகளில் பயன்படுத்துவது போன்ற ஸ்மார்ட் போர்டு கல்வியை அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கி வருகிறார். 'இன்ராக்டிவ்' என்ற கருவி மூலம், புரஜெக்டர் உதவியுடன் ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் நடத்தி வருகிறார். இதில், பென் டிரைவ் பயன்படுத்தியும் பாடங்கள் நடத்தலாம்.
இதேமுறையில் வேலுார் மாவட்டம் வாணியம்பாடியில் ஆசிரியர் அருண்குமார் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். இதை அறிந்த உலகராஜ் அவரிடம் சென்று இதனை கற்று வந்துள்ளார். இதற்காக ரூ.80 ஆயிரம் சொந்த செலவில், புரஜெக்டர், லேப்டாப் , இன்ட்ராக்டிவ் கருவி, ஸ்பீக்கர், ஸ்கிரீன் உள்ளிட்ட உபகரணங்கள் என வாங்கியுள்ளார்.
ஒவ்வொரு அரசுப் பள்ளிகளுக்கும் சென்று இந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார். ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஸ்மார்ட் போர்டில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். லேசர் பேனாவை மாணவர் கையில் கொடுத்து ஸ்கிரீனில் எழுதப்படும் ஆங்கில வார்த்தையை அப்படியே எழுத வேண்டும். அந்த மாணவர் சரியாக எழுதும் வரை கற்றுக்கொடுக்கப்படுகிறது.

  இதனால், கூடுதல் பயிற்சி கிடைக்கும். சரியாக எழுதியதும் வாழ்த்துக்கள், சிறப்பு, நன்று, என அறிவிப்பு வருவதுடன், மத்தாப்பு கொளுத்துவது போல், கைதட்டல், கை கொடுப்பது, டாடா காட்டுவது போல் திரையில் வரும். இதை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவர்கள் எளிதல் உற்சாகத்துடனும், கற்றலில் ஈடுபாட்டுடன் கல்வி கற்க முடிகிறது, என்றார் உலகராஜ்.

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க, மாணவர்களுக்கு தோப்புக்கரணப் பயிற்சி!!!

வகுப்பறையில் சுறுசுறுப்பாக இருக்க,
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தோப்புக்கரணம் போட்டு, பயிற்சி அளிக்கப் படுகிறது.

  ஈரோடு, கோபி கல்வி மாவட்டத்தில், வேங்கம்மையார் நகரவை உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியை அலமேலு தலைமையில், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். 6 - 10ம் வகுப்பு வரை, 155 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
காலை, 9:30 மணிக்கு, பள்ளி துவங்கியதும், மாணவர்கள் சுறுசுறுப்பாக இருக்க, தோப்புக்கரணம் பயிற்சி அளிக்கின்றனர். ஒவ்வொரு மாணவரும், 10 தோப்புக்கரணம் போடுகின்றனர்.ஆசிரியர்கள் கூறியதாவது:அனைத்து பயிற்சிக்கும் முன்னோடியாக, தோப்புக்கரணம் திகழ்கிறது. இதை செய்வதால், அனைத்து நரம்பு மண்டலத்துக்கும், சீரான ரத்த ஓட்டம் கிடைத்து, மாணவர்கள் சுறுசுறுப்படைவர். காதை பிடித்து, உட்கார்ந்து எழும்போது, மூளை நரம்புகள் துாண்டப்படும்.இதனால், மூளை செயல்பாட்டை ஒருநிலைப்படுத்த முடியும்.
ஆட்டிசம் குறைபாடு தவிர்க்கப்படும்; கற்றல் குறைபாடு நிவர்த்திஆகும்.
தொடர் பயிற்சியால், வகுப்பு துவங்கும் முன்பே, அவரவர் வகுப்பறையில், மாணவர்கள், தாங்களாகவே ஆர்வமாக தோப்புக்கரணம் போடுகின்றனர். உடல்நிலை சரியில்லாவிடில், கட்டாயப் படுத்துவதில்லை. இதேபோல், நகம் வெட்டுதல், கைகளை சுத்தமாக கழுவுதல், என சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதனால், எங்கள் மாணவர்களுக்கு, தலைவலி, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் அறிகுறி ஏற்படுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணங்களின் போது, டிக்கெட் பரிசோதகரிடம், அசல் ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை காண்பிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. 'மத்திய அரசின், 'டிஜி லாக்கர் மொபைல் செயலி' மூலம் ஆவணங்களை காட்டினாலே போதுமானது' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயிலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணம் செய்யும்போது, தங்களுடன், அசல் அடையாள அட்டை ஒன்றை, பயணியர் வைத்திருக்க வேண்டும் என்ற விதிஉள்ளது. ஆனால், பயணத்தின்போது, அசல் அடையாள அட்டை தொலைந்து விடுமோ என்ற பயம், பலருக்கும் உண்டு.

இந்நிலையில், பயணத்தின்போது ஆதார் அல்லது வாகன ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் பயணியர், இனி அதை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 'அரசு அடையாள அட்டைகளை டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கும், 'டிஜி லாக்கர்' என்ற மொபைல் செயலி மூலம், ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை, டிக்கெட் பரிசோதகரிடம் காட்டினாலே போதும்' என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.