யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/11/18

நீதிக்கதை

 விடா முயற்சி

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

மாணவர்களை நல்வழிப் படுத்துவதற்காக ஆசிரியர்கள் கண்டிக்கும்போது பெற்றோர் கேள்வி எழுப்பக்கூடாது- உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்!!!

Breaking News - கஜா புயலுக்கு ஒரு நாள் ஊதியம் - அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு  தலைமைச்செயலக ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் அந்தோனிய சாமி வெளியிட்டுள்ளார். 

இவ்வாறு செய்தால் உங்கள் வாட்ஸ்ஆப்-க்கு ஆபத்துதான்!! அதிரடி எச்சரிக்கை!

நம்மிடையே சமூக வலைத்தளங்கள் என்பது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் பேஷ்புக், வாட்ஸ்ஆப் போன்றவை பிரபல நிறுவனங்களாக உள்ளது.

நாளுக்கு நாள் பேஷ்புக், வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சமூக வலைத்தளங்கள் என்பது நற்காரியங்களை செய்வதில் முக்கிய பங்கு வகித்தாலும் தீமையும் துணையாக இருப்பது தவிர்க்க முடியாத செயலாக உள்ளது.இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் சில விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் நீங்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது.

1. ஆபாசமிகுந்த, தீங்கு ஏற்படுத்தும் மற்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பக்கூடாது.

2. மனதை பாதிக்கச் செய்யும் தகவல்கள், வன்முறை குற்றங்கள், அச்சுறுத்தும் விதமான பேச்சுக்கள் அடங்கிய செய்திகளை பரப்பக்கூடாது.
3. மற்றவர் பெயரில் பொய் கணக்கு தொடங்கி, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பக்கூடாது.
4. வாட்ஸ்ஆப் செயலிக்கு என உருவாக்கப்பட்டுள்ள ப்ரோகிரேமில் மாற்றத்தை ஏற்படுத்துவது செயலில் ஈடுபட்டால் அந்நிறுவனம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

5. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, மால்வார் போன்ற கேஜெட்டுகளை அழித்துவிடும் வைரஸுகளை பரப்புவதும் கூடாது.

6. பயனர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு சர்வரில் சென்று சேரும். அதை ஹேக் செய்யவோ அல்லது உளவு பார்த்தாலோ, வாட்ஸ்ஆப் உங்களை தடை செய்யலாம்.

7. ப்ளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்ஆப் பிளஸ் என்ற செயலியை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் அது வாட்ஸ்ஆப் செயலியே அல்ல.

8.பல நபர்கள் உங்களை பிளாக் செய்து வந்தால், தானாகவே உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கு அழிந்து விடும்.

இவ்வாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

விரைவு தகவல் குறியீட்டுடன் மாணவர் அடையாள அட்டை:

கூடுதல் தனி ஊதியம் ரூபாய் 750 பிடித்தம் செய்யப்படும் CM cell reply

Flash News : 3 மாவட்டங்களுக்கு 20.11.2018 விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்  மாவட்டம்  பள்ளிகளுக்கு மட்டும்   நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு
நாகை மாவட்டம்  பள்ளி கல்லூரி  நாளை  20.11.2018 விடுமுறை அறிவிப்பு

விண்வெளியில் இந்திய வீரர்கள் நடத்தப்போகும் 10 சோதனைகள்; இஸ்ரோ அதிரடி!

பிரதமர் நரேந்திர மோடி, ஒரு மனிதரை விண்வெளிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவித்த 90 நாட்களுக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (இஸ்ரோ), குறைந்த பூமி கோளப்பாதையில் (LEO) இந்திய விண்வெளி வீரர்களை கொண்டு நடத்தப் போகும் ஆய்வுகளின் சுருக்கமான பட்டியலை வெளியிட்டு உள்ளது.

உயிரியல் காற்று வடிகட்டிகள் மற்றும் பயோ சென்சர்கள், மற்றும் உயிர் ஆதரவு மற்றும் உயிரியல் கழிவு மேலாண்மை ஆகியவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்களை கண்காணிப்பதற்கான மைக்ரோ-உயிரியல் பரிசோதனைகளுக்கான மருத்துவ உபகரணங்களை பரிசோதனை என குறைந்தபட்சம் 10 பரிசோதனைகளையாவது நிகழ்த்திவிட வேண்டும் என்று இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.



10 என்றால் 10 பகுதிகளில் மட்டும்மல்ல, இன்னும் நீளும்!

நாங்கள் ஆர்வமாக உள்ள 10 பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளோம், அதற்காக இந்த பகுதிகளில் மட்டும் தான் சோதனைகளை செய்வோம் என்று அர்த்தமில்லை" என்று ஒரு ஐஎஸ்ஓ அதிகாரி கூறியுள்ளார். "மேலும், இந்த பட்டியலிடப்பட்டுள்ள பகுதிகளில் நடக்கும் குறிப்பிட்ட சோதனைகளுக்காக இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து உதவிகளை பெறுவோம்," என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

உள்ளீடுகள் தேவைப்படுகிறது!

சமீபத்தில், குறைந்த பூமி கோளப்பாதை (லியோ) அடிப்படையிலான மைக்ரோ-ஈர்ப்பு சோதனைகளுக்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டதும், "இஸ்ரோ ஒரு மனித விண்வெளித் திட்டத்தைத் திட்டமிடுவதுதால், குறைந்த பூமி கோளப்பாதையில் உள்ள நுண்ணிய ஈர்ப்பு மண்டலத்தில் சோதனைகளை நடத்த, தேசிய அறிவியல் சங்கத்திலிருந்து உள்ளீடுகள் தேவைப்படுகிறது," என்று இஸ்ரோ கூறி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம்!

குறைந்த பூமி கோளப்பாதையின் மைக்ரோ ஈர்ப்பு தளங்களில் நிகழ்த்தப்பட உள்ள குறிப்பிட்ட சோதனைகள் ஆனது சாத்தியமான குறுகிய காலத்திற்கான - ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் - செயல்பாடுகளை கொண்டதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அல்லது, விஞ்ஞானிகள் நுண்ணிய ஈர்ப்பு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அல்லது தேவைப்படும் ஒரு முற்றிலும் புதிய கருத்தையும் முன்மொழியலாம் என்றும் அறிவித்துள்ளது.

பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும்!

மேலும், சோதனைக்காக முன்மொழியப்பட்ட சுற்றுப்பாதையானது பூமிக்கு சுமார் 400 கிமீ உயரத்தில் உள்ள பூமியின் எல்லைக் கோளப்பாதை ஆகும் என்றும், சோதனைகள் நடத்தப்படும் உறைவிடம் ஆனது, சாதாரண அறை வெப்பநிலை (தற்காலிகமாக 0-4 டிகிரி செல்சியஸ்) மற்றும் அழுத்தம் நிலைகளை (தற்செயலாக கடல் மட்டத்தில் ஒரு வளிமண்டல அழுத்தத்தை சுற்றிய) கொண்டிருக்கும், அதாவது பூமியில் இருப்பது போன்ற அனுபவத்தை வழங்கும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

பயணம் தொடங்கும் போதும், திரும்பும் போதும்!

இருப்பினும், உறைவிடத்திற்கு வெளியே வைக்கப்பட வேண்டிய பேலோடுகள் ஆனது இயல்பான விண்வெளி சூழலுக்கு உட்பட்டிருக்கும். அதாவது - வெப்பம், வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவைகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதால், சோதனைகளுக்காக வடிவமைக்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆனது தொடக்கம் மற்றும் திரும்பும் போது ஏற்படும் அதிர்வு மற்றும் ஒலியியல் சுமைகளை தாங்க கூடியதாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.

தேவைப்பட்டால் தரையில் இருந்து கட்டளைகள்!

இந்த சோதனைகளுக்காக இஸ்ரோ இரண்டு விதமான பேலோடுகள் / கருவிகளை - உள் மற்றும் வெளிப் -த் திட்டமிடுகிறது. இதன் வழியாக தொலைதூர சோதனைகளை நடத்துவதற்கான விருப்பமும் கிடைக்கும். தேவைப்பட்டால் அவர்கள் தரையில் இருந்து கூட கட்டளைளை நிகழ்த்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் செலவு மதிப்பீடு என்ன?

இதற்காக உருவாக்கம் பெறும் மனித விண்வெளி வானூர்தி திட்டம் ஆனது, சுமார் 10,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு இஸ்ரோ ஆய்வகங்களில், பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் துணை அமைப்புகள் சார்ந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயுட்காப்பு மற்றும் மனித-மதிப்பீட்டு முறைமைகள் போன்ற பல முக்கிய துறைகளிலும் வேலைகள் நடைபெறுகின்றன. இதற்கான ராக்கெட் (லான்ச் வெயிக்கில்) சார்ந்த பணிகள் அடுத்த சில மாதங்களில் பிரதான கவனத்தினை பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்

ஆன்லைனில்' ஆசிரியர் பயிற்சி: 'கூல்' எனப்படும் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டம் அறிமுகம் :

ஆசிரியர் பயிற்சியை, 'ஆன் லைன்' எனப்படும் இணையம் மூலம் பெறும் வகையில், 'கூல்' என பெயரிடப்பட்டு உள்ள, திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை, கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கல்வி முறையை முழுவதும், 'டிஜிட்டல்' மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதற்கான திட்டங்களை, 'கைட்' எனப்படும், கேரள கல்வியியல் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது, கூல்
எனப்படும், ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர் பயிற்சி பெறுவோர், 45 மணி நேர கம்ப்யூட்டர் பயிற்சியை பெறுவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந் நிலை யில், கூல் எனப்படும் ஆன்லைன் திறந்தநிலை கல்வி பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்ய உள் ளோம். இந்த பயிற்சியில், ஆசிரியர்கள், மாணவர் கள், பொதுமக்களும் பங்கேற்கலாம். முதல்கட்ட மாக, ஆசிரியர்களுக் கான பயிற்சி வகுப்புகள், அடுத்த மாதம் துவக்கப்பட உள்ளன.

இந்த பயிற்சியில் சேருவதற்கு, 5,000ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.முதல்கட்டமாக, 2,500 பேருக்கு, ஆறு வார பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி வகுப்பில், அடிப்படை கம்ப்யூட்டர் பயன்பாடு, படங்களை திருத்துவது, வீடியோவை திருத்துவது, மலையாளத்தில், 'டைப் பிங்' செய்வது, இன்டர்நெட் பயன்படுத்துவது,

கல்வியியல் தொடர்பான இணைய பக்கங் களை எப்படி பயன்படுத்துவது போன்ற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியை மேற்கொள் வோருக்கு, சான்றிதழ் அளிக்கப்படும். அடுத்த கட்டமாக, மாணவர் கள், பொதுமக்களுக்கான பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்

12ஆம் வகுப்பு முடித்தவுடன் வேலைவாய்ப்பு: பாடத் திட்டம் மாற்றம்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் :

பனிரெண்டாம் வகுப்பு படித்து முடித்தவுடனேயே வேலைவாய்ப்புப் பெறக்கூடிய வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

செங்குந்தர் கல்விக் கழகத்தின் பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது. செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்விக் கழகத் தலைவர் ஆர்.எம்.சண்முகவடிவேல் தலைமை வகித்தார். கல்விக் கழகச் செயலாளர் எஸ்.சிவானந்தன் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நினைவு வளைவைத் திறந்து வைத்துப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல வரும் கல்வி ஆண்டு முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குத் தனியார் கல்வி நிறுவனங்களை மிஞ்சும் அளவில் சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் 4 சீருடைகள் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் சரியாக கற்க முடியவில்லை எனில் யூடியூப் மூலமாக மீண்டும் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஆன்லைன் மூலமாக 26 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 413 தேர்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 3 மாதங்கள்தான் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு 8 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியின் மூலமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1,000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். தமிழகத்தில் 1.60 லட்சம் பேர் பொறியியல் படித்தவர்களும், அகில இந்திய அளவில் பல லட்சம் பேரும் வேலைஇன்றி உள்ளனர். இந்த நிலையை மாற்றும் வகையில் 12ஆம் வகுப்பு முடித்தாலே வேலை கிடைக்கும் எனும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தமிழக அரசு பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கவுள்ளது என்றார்.
தொடர்ந்து, பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசு வழங்கிப் பேசினார்.
இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செங்குந்தர் கல்விக் கழக நிறுவனர்களின் உருவப் படங்களைத் திறந்துவைத்தார்.
இதையடுத்து, பவள விழா மலரை அமைச்சர்கள் வெளியிட்டனர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன், சூர்யா கல்லூரித் தலைவர் ஆண்டவர் ராமசாமி, மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், சிவகுமார் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கே.சி.பழனிசாமி, மனோகரன், ஜெகதீஷ், கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
மீனாட்சி சுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என்.மோகன்ராஜ் நன்றி கூறினார்
எந்த ஒரு அரசு பள்ளியையும் மூடும் எண்ணம் இல்லை,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோட்டில், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள எந்த அரசு பள்ளியையும் மூடும் எண்ணம், அரசுக்கு இல்லை. அதேநேரம், சில பள்ளிகளில் ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள் உள்ளனர். அதுபோன்ற பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்கள் சம்பளம், பிற பணியாளர்கள், பராமரிப்பு செலவு, மாணவர்களுக்கான செலவை பற்றி சிந்திக்க வேண்டி உள்ளது.அதுபோன்ற பள்ளிகளில், கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசை குறை கூறி வரும் அமைப்புகள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்தவும் பாடுபட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி பவள விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயில, மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், வருமாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கான வகுப்புகள் கூடுதலாக்கப்படும். மாநில அளவில் ஆண்டுக்கு, 1.60 லட்சம் இளைஞர்களும், தேசிய அளவில், 80 லட்சம் இளைஞர்கள் வரை, பி.இ., படித்துவிட்டு, உரிய வேலை கிடைக்காமல் சிரமத்தில் உள்ளனர். அதுபோன்ற நிலையை, தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் மாற்றும்.நடப்பாண்டு, எட்டு வாரங்களுக்கு மேல், 'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படும். தற்போது, அதற்கான பயிற்சி துவங்கி விட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான, 3,744 இடங்களில், 1,000க்கும் மேற்பட்ட இடங்களை, அரசு பள்ளி மாணவர்கள் கைப்பற்றுவர்.இவ்வாறு, அவர் பேசினார்.

புயலால் சேதமடைந்த பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்: கே.ஏ. செங்கோட்டையன் :

கஜா புயலால் சேதமடைந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு  பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
ஈரோட்டில் பள்ளி விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. தமிழக அரசைப் பொருத்தவரை எந்தப் பள்ளியையும்  மூடும் எண்ணம் இல்லை.
அதே நேரத்தில் பள்ளிகளில் 2, 3 மாணவர்கள் இருந்தால் அதன் நிலை என்ன என்பதை அரசு ஊழியர் சங்கங்கள்தான் எங்களுக்குக் கூற வேண்டும்.  ஓர் ஆசிரியருக்கு எவ்வளவு செலவு ஆகிறது, அங்குள்ள பல்வேறு பணியாளர்களுக்கு எவ்வளவு செலவு ஆகிறது, 2 மாணவர்கள் படித்தால் ஓர் ஆண்டுக்கு ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு என்பதை அவர்கள்தான் கூறவேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் ஏழை, எளிய குழந்தைகளை அழைத்து வந்து படிக்க வைக்க வேண்டும். அதற்கான ஆக்கத்தையும், ஊக்கத்தையும் செய்ய இந்தச் சங்கங்கள் முன்வர வேண்டும்.
கஜா  புயலால் ஒரு சில இடங்களில் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. நிவாரணப் பணிக்காக தஞ்சை மாவட்டத்துக்கு என்னை முதல்வர் நியமித்துள்ளார். அங்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் எவ்வளவு பாடப் புத்தகங்கள் சேதம் அடைந்திருந்தாலும் அதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
சேத விவரங்கள் எவ்வளவு  என்பதை  நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர்தான் கூற முடியும் என்றார்

நீட்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்னும் 10 நாளே அவகாசம் :

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும், 10 நாட்களே அவகாசம் உள்ளது.பிளஸ் 2 முடிக்கும், மாணவ - மாணவியர், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற, தனியார் கல்வி நிறுவனங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, சிறப்பு பயிற்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசே பல லட்சம் ரூபாய் செலவு செய்து, சிறப்பு பயிற்சி வழங்குகிறது. அடுத்த ஆண்டு, மே, 5ல் நடக்க உள்ள, நீட் தேர்வுக்கு, நவ., 1ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்கியது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும், 10 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், கடைசி நேர பிரச்னைகளை தவிர்க்க, பதிவுகளை விரைந்து முடிக்குமாறு, மாணவர்களை தேசிய தேர்வு முகமை வலியுறுத்தியுள்ளது

கஜா'வால் பாதித்த பள்ளிகள்: சீரமைக்க சிறப்பு குழுக்கள் :

கஜா' புயலால் பாதிக்கப்பட்ட, பள்ளி கல்வி கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் தாக்கிய, கஜா புயல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், நாகை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளது.தனியார் நிறுவனங்கள், வீடுகள் மட்டுமின்றி, மின் கட்டமைப்புகள், சாலைகள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில், பள்ளி, கல்லுாரி களில், உள் கட்டமைப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.பல இடங்களில், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவற்றில் ஜன்னல்கள், மேற்கூரைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. சில இடங்களில் மாணவர் விடுதிகளும், கழிவறைகளும் இடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.இந்த சேதங்களை விரைவில் சரி செய்து, மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்த, அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். புயல் பாதித்த மாவட்டங்களுக்கு சென்றுள்ள, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பள்ளி கட்டடங்களை சீரமைக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அறிவிப்பு :

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிச., 4 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்' என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துஉள்ளது.'ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பாக, தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டங்களுக்கு பலன் இல்லாததால், நவ., 27 முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. ஆனால், சங்க நிர்வாகிகள் இடையே, கருத்து ஒற்றுமை ஏற்படாததால், போராட்ட தேதி மாற்றப்பட்டது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நவ., 16ல் கூடி ஆலோசனை நடத்தினர். அதில், நவ., 27க்கு பதில், டிச., 4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.இதற்காக, மாநில அளவில், 20 ஒருங்கிணைப்பாளர்கள் இடம் பெறும் குழுவும், மாவட்ட வாரியாக, ஆறு பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட உள்ளது. இன்றும், நாளையும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தப்பட உள்ளது; 25ல், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுகிறது.வரும், 26 முதல், 30ம் தேதி வரை, மாவட்ட அளவில் போராட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பின், ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக, ஜாக்டோ - ஜியோ அறிவித்து உள்ளது.