யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/3/17

ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா
குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் ரெ.இளங்கோவன், க.அறிவொளி, ச.கண்ணப்பன், கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடக்கத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார்.அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–


  ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும். போதிய ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டுக்குள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாள் விடுப்பு!

பணியிடங்களில் பணிபுரியும் பெண்கள் ஊழியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அது குறித்து விசாரிக்க அந்தந்த
நிறுவனங்களில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தவிசாரணை காலத்தில் குற்றம் இழைத்த நபர்கள் தரப்பில் இருந்து அந்த பெண்களுக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருவதாக புகார் வந்தது. இதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


 மேலும், அந்த குற்றத்தை விசாரிக்கும் கமிட்டியினுடைய பரிந்துரையின்படி, விடுப்பு வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுப்பு காலம் இதில் இருந்து கழிக்கப்படாது என்றும் அறிவித்து உள்ளது.

கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்

பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு,
பார்லிமென்ட் குழு வலியுறுத்தியுள்ளது.பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், லோக்சபா, பா.ஜ., - எம்.பி., பகவத் சிங் கோஷ்யாரி தலைமையிலான, பார்லிமென்ட் மனுக்கள் நிலைக் குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில் கூறியுள்ளதாவது: கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்; அதே நேரத்தில், தேசிய கல்வி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்.

மூன்று மாதங்களுக்குள் இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.ஐந்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி குறித்து, அவ்வப்போது தேர்வு நடத்தி மதிப்பிட வேண்டும். அதேபோல், ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் மதிப்பிட வேண்டும். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், அங்குள்ள வசதிகள் குறித்தும் கண்காணிக்க வேண்டும்.


ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறியும் வகையில், புதிய முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறு பார்லி., குழு பரிந்துரை அளித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் 571 இடங்களில் வழிகாட்டி முகாம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2
படித்துவிட்டு தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பதை தெரிந்துகொள்ள அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வழிகாட்டி முகாம்கள் 571 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்தமுகாம்கள் மாநகராட்சிகள், மாவட்ட தலைநகரங்கள், நகராட்சிகளில் ஏப்ரல் 6–ந் தேதி நடத்தப்படுகிறது. அனைத்து ஒன்றியங்களிலும் ஏப்ரல் 7–ந் தேதி முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்தமுகாம்களில் அந்த பகுதியில் உள்ள மாணவ–மாணவிகள்கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனைநேற்று சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடத்தப்பட்டது. வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி மற்றும் பலர் பேசினார்கள்.இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். மேலும் இணையதளத்திலும் அதை (www.tnscert.org) வெளியிட்டார். கையேட்டின் முதல் பிரதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன தலைவர் பா.வளர்மதி பெற்றுக்கொண்டார்.விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–ஏப்ரல் 6 மற்றும் 7–ந் தேதிகளில் நடக்கும் வழிகாட்டும் முகாம்களில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன் அடையவேண்டும். இந்த அரசு நேர்மையான முறையில், வெளிப்படையான முறையில் நடக்கிறது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டும் போதாது.அவர்களுக்கு வேலைவாய்ப்பும் தேவைப்படுகிறது.

அதற்கானஉயர் கல்வியை தேர்வு செய்ய இந்த வழிகாட்டும் முகாமில்மாணவர்களும், மாணவிகளும் கலந்துகொள்ள வேண்டும். எப்படியும் 15 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து குறைகளும் களையப்படும். வருகிற 6 மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்கும்.இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்தநிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் தலைமை தாங்கினார்.அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் ரெ.இளங்கோவன், க.அறிவொளி, ச.கண்ணப்பன், கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தொடக்கத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார்.


அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:–ஆய்வக உதவியாளர்கள் நியமிப்பதற்கான தேர்வு முடிவு 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கப்படும். போதிய ஆசிரியர்கள் வரும் கல்வி ஆண்டுக்குள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை!!!


ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.

தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் 
கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.

10 லட்சம்

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம் கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.

அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.

சென்னையில் எப்போது?

ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும். சென்னையில் மட்டும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன இருக்கும்?

ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.
அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.

முன்னுரிமை

ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை. முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்; மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.

எத்தனை வகை?

ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

94 பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு - அலுவலர்கள் போராட்டம் எதிரொலி!!!

ஊரக வளர்ச்சி அலுவலர்களின் போராட்டத்தை தொடர்ந்து, 94 பி.டி.ஓ.,க்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஊராட்சி செயலர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணிமாறுதல்கள் வெளிப்படைத்தன்மையுடன் பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி 
அலுவலர்கள், கடந்த, 14ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நேற்று, அவசர அவசரமாக, ஊரக வளர்ச்சித் துறையில், 94 பி.டி.ஓ.,க்களுக்கு, உதவி இயக்குனருக்கான, பதவி உயர்வு வழங்கி, முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கூறியதாவது: உதவி இயக்குனர் காலியிடங்களை நிரப்பாததால், சில, பி.டி.ஓ.,க்கள், பதவி உயர்வு பெறாமல், ஓய்வுபெறும் நிலை உள்ளது. காலியான, 124 உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராடி வருகிறோம்.தற்போது, 94 பி.டி.ஓ.,க்களுக்கு, பதவி உயர்வு பட்டியலை, தமிழக அரசு, தாமதமாக அறிவித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமனம்!!!

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் அதிகாரியாக இருந்த டி.என்.பத்மஜாதேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் சனிக்கிழமை 
வெளியிட்ட உத்தரவு: பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையாளராக (வடக்கு) இருப்பவர் பிரவீண் பி.நாயர். அவர் ஆதிதிராவிடர் நலத் துறையின் இணை இயக்குநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார். ஆதிதிராவிடர் நலத் துறையின் இணை இயக்குநர் பொறுப்பை வகித்து வந்த டி.என்.பத்மஜாதேவி, தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் பொறுப்பை வகிப்பார் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியும் மாற்றம்: ஆதிதிராவிடர் நலத் துறையின் இணை இயக்குநர் பொறுப்புடன், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் பத்மஜாதேவி செயல்பட்டு வந்தார். இப்போது, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மருத்துவக் கல்வித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவீண் பி.நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர் நிலையை வகிக்கக் கூடிய அதிகாரிகளே, சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் பொது அல்லது இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருப்பர். ஆனால், இப்போது நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தும் பொறுப்பு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரியிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல்: இடைத் தேர்தலில் போட்டியிட மனு செய்பவர்களின் வேட்புமனுக்களை பரிசீலிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்வது, நிராகரிப்பது போன்ற பணிகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொள்வர். கடந்த 16-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, இரண்டு நாள்கள் ஆகியுள்ளன. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலால் தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மஜாதேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார். இது ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை: ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பத்மஜாதேவி இருந்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலிலும், இப்போது அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலிலும் அவரே தேர்தல் நடத்தும் அதிகாரியாகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவரை மாற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பான புகார் மனுவை தேர்தல் ஆணையத்திடமும் அளித்தன.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் அதன் மீது இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆசிரியர் பணியில் உள்ள குறைகளை நீக்க,ஒருவாரத்திற்குள் பேசி தீர்க்கப்படும் ,என கல்வி அமைச்சர் தகவல் !!

தபால் துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, விபத்து காப்பீடு !!

தபால் துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, விபத்து காப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தபால் அலுவலக கணக்குகளில் குறைந்த பட்சமாக, 50 ரூபாய் இருப்பு தொகை வைத்திருந்தாலே, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படுகிறது.



 இந்த வசதி, தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்களில் துவக்கப்படும் கணக்குகள்

அனைத்துக்கும்வழங்கப்படுகிறது.சேமிப்புக்கணக்கு துவங்குவோர், 12 ரூபாயை கூடுதலாக செலுத்தினால், இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பாலிசியும் கிடைக்கிறது.தபால் நிலையங்களில்வழங்கப்படும் ஏ.டி.எம்., கார்டுகளை, அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களிலும், சேவை வரி இல்லாமல் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.

10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்தவர்களுக்கு ,வருமான வரித்துறை நோட்டீஸ் !!

10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில் டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, கடந்தாண்டு நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பொதுமக்கள், தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் செலுத்தி, புதிய நோட்டுகளை பெற்றனர்.


இந்நிலையில், வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்களின் பட்டியல், வங்கிகள் சார்பில், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வருமான வரித்துறையினர், 18ம் தேதி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வேலுார் மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:வேலுார் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தவர்கள் விபரம் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100 பேருக்கு, இந்த பணம் எப்படி வந்தது என, விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அவர்களிடம் இருந்து உரிய பதில் வராத பட்சத்தில், அவர்கள் டிபாசிட் செய்த பணத்திற்கு, வருமான வரி கட்ட வேண்டும் என்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் !!

பள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி,


 2011 முதல், தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, தமிழகத்தின், 'டெட்' தேர்வு அல்லது மத்திய அரசின், 'சிடெட்' 
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.'டெட்' தேர்வுக்கான மதிப்பெண் நிர்ணயம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்ததால், மீண்டும் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏப்., 29; பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30ல், தேர்வு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., இதற்கான அறிவிப்பை, பிப்., 24ல் வெளியிட்டது. விண்ணப்பங்கள் வழங்கும் பணி, மார்ச், 6ல்துவங்கி, வரும், 22ல் முடிகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 23, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல்!.

பாரதியார் பல்கலை, தொலைதுார கல்வி மையத்தின் கீழ் செயல்படும், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்களின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்பு எழுந்துள்ளது.


 நீதிமன்ற வழக்கு குறித்த, முழு தகவல்களை, பல்கலை மாணவர்களிடம் தெளிவுபடுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் வரையறைப்படி, தொலைதுார கல்வி முறையில், தொழில்கள் மற்றும் 
நிறுவனங்களின் கூட்டு மையமான, சி.சி.ஐ.ஐ., பங்கேற்பு திட்டங்கள் மையமான, சி.பி.பி., பங்கேற்பு மற்றும் ஆன்லைன் திட்டங்கள் மையமான, சி.பி.ஓ.பி., ஆகிய பிரிவுகள் செயல்படுத்த, அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இவை, பல்கலை அங்கீகாரத்துடன், தனியார் கல்வி மையங்களால் நடத்தப்படுகின்றன.

பாரதியார் பல்கலையின் கீழ், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில், 300க்கும் மேற்பட்ட கல்வி மையங்கள், இவ்வாறு செயல்பட்டு வருகின்றன.அங்கீகாரம் இல்லாத பாடங்கள் நடத்துதல், கூடுதல் கட்டணம், அடிப்படை வசதியின்மை போன்ற பல புகார்கள் கிளம்பியதால், இப்பிரிவுகளுக்கு, யு.ஜி.சி., தடைவிதித்துள்ளது. இருப்பினும், பாரதியார் பல்கலை தடைஉத்தரவை மீறி, பாடப் பிரிவுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், தனியார் கல்லுாரிகள் நலச்சங்கம் சார்பில், கடந்த ஓராண்டுக்கு முன், உயர் நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்தும், 'ரிட்' மனுவுக்கு, பாரதியார் பல்கலை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், நீதிமன்ற வழக்கு குறித்த முழு தகவல்களை, மாணவர்களிடம் பல்கலை தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்துள்ளது.தனியார் கல்லுாரிகள் நலச்சங்க மாநில பொதுச் செயலர் கலீல் கூறுகையில், ''உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, ஓராண்டு கடந்தும், பாரதியார் பல்கலை பதில் மனு தாக்கல் செய்யாமல் அலட்சியமாக உள்ளது.

 தற்போது, வழக்கு உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.''தீர்ப்பின் முடிவில், இம்மையங்களின் அங்கீகாரம் ரத்தாகும் வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, வழக்கு விபரங்களை, மாணவர்களிடம் தெளிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

ஆய்வக உதவியாளர்கள் நியமனம் தொடர்பாக அரசாணை விரைவில் !!