யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

5/1/18

BIG BREAKING NEWS தடைகளை தகர்த்து 2009&TET போராட்டக்குழு பெற்ற 10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து பெற்று கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர் ஆணை கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்.பணியில் சேர ஆணை பிறப்பிப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் - மாண்புமிகு நீதியரசர் திரு. கிருபாகரன் அவர்களின் கருத்துக்கு எதிராக செயல்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு 
வழக்கில் சம்பந்தப் பட்ட  ஆசிரியர்கள்  அனைவரும் நாளை வெள்ளிக்கிழமை பணியில் சேர பள்ளிக்கல்வித் துறை ஆணை வழங்கியுள்ளது

ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்கள் வேலையிழக்கும் அபாயம்!

தொடக்கப் பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி முடிக்காவிட்டால் வேலையிழக்க
நேரிடும்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கட்டாயக் கல்வி சட்டம் 2009இன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சியைக் கட்டாயம் முடிக்க வேண்டும். இரண்டாண்டு டிப்ளோமா ஆசிரியர் (டிஎல்ஈடி) பயிற்சியை முடிக்காதவர்கள் வேலையிழக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி மண்டல இயக்குநர் ரவி, “தேசிய திறந்தநிலைப் பள்ளி மூலம் ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஸ்வயம் பிரபா என்கின்ற சேனல் மூலம் இதற்கான பாடங்களை கற்க முடியும். பணியில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் பயிற்சிக்கான டிப்ளோமா படிப்பை பயில முடியும். மேலும், மொபைல் ஆப் மூலமாகவும் படிக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

நாடுமுழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களும், தமிழகத்தில் 25,600 பேரும் டிஎல்ஈடி பயிற்சியில் சேர்ந்துள்ளனர். 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்குத் தேர்வு நடக்க இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு!!!

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2ல் அடங்கிய, துணை வணிக வரி அதிகாரி, சார் பதிவாளர் நிலை- - 2, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்பட, 18 வகை பதவிகளுக்கு, 2016 ஆக., 21ல் முதன்மை தேர்வு நடந்தது.
தமிழகம் முழுவதும், 1,094 காலியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடந்தது. தேர்வில், 9,833 பேர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதிபடி, 2,166 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஜன., 22 - பிப்., 19 வரை நேர்காணல் நடக்கும். தேர்வர்களின் விபரங்கள் www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்!!!

அரசுபள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட
இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில்,
ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படும். இதில், அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்பட்டு, அவற்றில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும்.
பின், காலியாக உள்ள இடங்களுக்கு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜூன் முதல் செப்., வரை இடமாறுதல் ஜரூராக நடந்தது. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் நிலையில், ஆசிரியர்களை மாற்றுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனால், இடமாறுதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, பருவ தேர்வு விடுமுறையில் மாறுதல் வழங்கி, வகுப்புகள் துவங்கும் போது, ஆசிரியர்களை மாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இடமாறுதல் நடவடிக்கை துவங்கி உள்ளது.
இந்தமுறை இடமாறுதல் நடவடிக்கை, நேரடியாக பள்ளிக்கல்வி அமைச்சகம் மற்றும் முதன்மை செயலரின் மேற்பார்வையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதனால், இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் வழியே, நேரடியாக செயலகத்தில் மனுக்களை குவித்து வருகின்றனர்.

ஆங்கிலம் கற்பித்து அசத்தும் பார்வையற்ற பெண் ஆசிரியை!!!

பெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை
, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி
வருகிறார்.


பெரம்பலுார் மாவட்டம், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை, 107 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை உட்பட, எட்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, பாப்பாத்தி, 29, என்பவர், ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக, 2012 முதல், பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில், எம்.ஏ., - பி.எட்., முடித்துள்ள பாப்பாத்தி, பார்வையற்றவர். துவக்கப் பள்ளி முதல், 'பிரெய்லி' முறையில் படித்தவர். தற்போது, எம்.பில்., பட்டப் படிப்பும் படித்து வருகிறார். ஆறு ஆண்டுகளாக, இங்கேயே பணியாற்றி வருகிறார்.

பாப்பாத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆங்கில பாடம் நடத்துகிறார். மாணவ - மாணவியருக்கு எளிதில் புரியும் படியும், ஆடிப் பாடியும் எளிமையாக பாடம் நடத்துகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், உரையாடவும் பயிற்சி அளிக்கிறார்.

'தனியார் பள்ளி மாணவர்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் வகையில், இவரது ஆங்கிலம் போதிக்கும் திறன் உள்ளது' என, அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்களே பெருமிதம் கொள்கின்றனர்.

ஆசிரியை பாப்பாத்தி கூறியதாவது: எனக்கு ஒன்றரை வயதில், மூளைக் காய்ச்சலால் பார்வை பறிபோனது. கலெக்டராக வேண்டும் என்பதே என் ஆசை. பார்வையற்றவர், ஐ.ஏ.எஸ்., ஆக முடியாது என்பதால், என் ஆசிரியை ரூபி என்பவரின் வழிகாட்டுதலின்படி, ஆங்கில பாடப்பிரிவு எடுத்து படித்தேன். பெற்றோர் இறந்து விட்டனர். இரண்டு அண்ணன், அக்கா உள்ளனர். என் முயற்சிக்கு, பெரிய அண்ணன் குடும்பத்தினர், மிகவும் உறுதுணையாக இருந்தனர்.

பாடப் புத்தகங்களை, பிரெய்லி முறையில் தான் வைத்துள்ளேன். ஆங்கிலம் வாசித்தல் மற்றும் உச்சரிப்பு, உரையாட பயிற்சி கொடுக்கிறேன். மதிய உணவு இடைவேளை உட்பட, நேரம் கிடைக்கும் போதெல்லாம், மாணவர்களுக்கு, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பும் எடுக்கிறேன். என் ஊரிலிருந்து, 15 கி.மீட்டரில் உள்ள பள்ளிக்கு, பஸ்சில் தனியாகவே வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



பாடம் நடத்துவதில் மட்டுமின்றி, பள்ளிக்கு சரியான நேரத்தில், வந்து செல்வதையும் பாப்பாத்தி வழக்கமாக வைத்து உள்ளார்.

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம்! : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என,பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.


 கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:படித்து முடித்ததும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.மூன்று ஆண்டுகளுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

 இதில், 72 பாடங்கள், தொழில்கல்வி கற்றுத்தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தைவிட சிறந்ததாக இருக்கும்.அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக, பகுதி நேர ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய அரசு நிதியிலிருந்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரத்து500 பேர் நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்களுக்கு, அரசு உதவி செய்யும் வகையில், பகுதி நேர ஆசிரியர்களை அருகேயுள்ள பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர்நிலை முடித்தவர்கள் மேல்நிலையில் என்ன படிக்கலாம் என்றும், மேல்நிலை முடித்தவர்கள், கல்லுாரியில் என்ன படிக்கலாம் என ஆலோசிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்த பள்ளிகளில், 'படிக்காலம் பாடங்களை' என்ற தலைப்பில், 256 பாடங்களை பெயர் பலகையில் எழுதி ஒரு வார காலம் வைக்கப்படும்.


பெற்றோர், மாணவர்கள் கலந்து பேசி படிப்பதில் ஏற்படும்சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, ஒரு வழிகாட்டியாக இந்த பெயர் பலகை வைக்கப்படும்.மரக்கன்றுகளை நட்டு, ஓராண்டுக்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர்களை குழப்பும் எமில் (EMIS) செயலி -ஸ்மார்ட் -சோதனையால் தவிப்பு -போட்டோ -ரத்த குரூப் விவரம் மாயம்

2018 ஆம் ஆண்டிற்கான தொடர் விடுமுறை காலண்டர்

ஜனவரி - 2018    (13-16),(26-28)
ஜனவரி 13 - சனி
ஜனவரி 14 - பொங்கல்
ஜனவரி 15 - மாட்டுப்பொங்கல்
ஜனவரி 16 - உழவர் திருநாள்
ஜனவரி 26 - 69 வது குடியரசு தினம்
ஜனவரி 27 - சனி
ஜனவரி 28 - ஞாயிறு

மார்ச் - 2018 (01-04),(29-1)
மார்ச் 01 - ஹோலிப் பண்டிகை
மார்ச் 02 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மார்ச் 03 - சனி
மார்ச் 04 – ஞாயிறு



மார்ச் 29 - மஹாவீர் ஜெயந்தி
மார்ச் 30 - புனித வெள்ளி
மார்ச் 31 - சனி
ஏப்ரல் 01 - ஞாயிறு

ஏப்ரல் - 2018 (13-25),(28-01)
ஏப்ரல் 13 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஏப்ரல் 14 - தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 15 – ஞாயிறு

ஏப்ரல் 28 - சனி
ஏப்ரல் 29 - ஞாயிறு
ஏப்ரல் 30 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
மே 01 - மே தினம்

ஜூன் - 2018  (14-17)
ஜூன் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
ஜூன் 15 - ரம்ஜான் பண்டிகை
ஜூன் 16 - சனி
ஜூன் 17 - ஞாயிறு

செப்டம்பர் - 2018 (13-16),(21-23)
செப்டம்பர் 13 - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 14 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
செப்டம்பர் 15 - சனி
செப்டம்பர் 16 – ஞாயிறு

செப்டம்பர் 21 - முஹரம்
செப்டம்பர் 22 - சனி
செப்டம்பர் 23 - ஞாயிறு

அக்டோபர் - 2018  (SEP29-02) (18-21)
செப்டம்பர் 29 - சனி
செப்டம்பர் 30 - ஞாயிறு
அக்டோபர் 1 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 18 - ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை
அக்டோபர் 19 - விஜயதசமி
அக்டோபர் 20 - சனி
அக்டோபர் 21 - ஞாயிறு

நவம்பர் - 2018  (03-06)
நவம்பர் 03 - சனி
நவம்பர் 04 - ஞாயிறு
நவம்பர் 05 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
நவம்பர் 06 - தீபாவளி                                                                                      

டிசம்பர் - 2018  (22-25)
டிசம்பர் 22 - சனி
டிசம்பர் 23 - ஞாயிறு
டிசம்பர் 24 - விடுப்பு எடுக்க வேண்டிய நாள்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்

அண்ணாமலைப் பல்கலையில் நிலுவைச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் :