யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/2/17

31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவையின் பெயர் பட்டியல் வெளியீடு

எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர். 

திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை. 

செங்கோடையன் - பள்ளிக்கல்வித்துறை. 

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை. 

தங்கமணி - மின்சாரத்துறை 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை 

நிலோபர் - தொழிலாளர் துறை 

எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்துத் துறை 

மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை. 

பாஸ்கரன் - காதித்துறை. 

ராமச்சந்திரன் - இந்து அறநிலையத்துறை. 

பெஞ்சமின் - ஊரக தொழில்துறை. 

வேலுமணி - உள்ளாட்சித்துறை. 

ஜெயக்குமார் - மீன்வளத்துறை. 

சி.வி.சண்முகம் - சட்டத்துறை. 

அன்பழகன் - உயர்கல்வித்துறை. 

சரோஜா - சமூக நலத்துறை. 

எம்.சி.சம்பத் - தொழில்துறை. 

கருப்பண்ணன் - சுற்றுச்சூழல். 

காமராஜ் - உணவுத்துறை. 

ஓ.எஸ்.மணியன் - கைத்தறி துறை. 

உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறை. 

விஜயபாஸ்கர் - நல்வாழ்வுத்துறை. 

துரைகண்ணு- வேளாண் துறை 

கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் மக்கள் தொடர்பு. 

உதயகுமார் - வருவாய்துறை. 

நடராஜன் - சுற்றுலாத் துறை. 

கே.சி.வீரமணி - வணிவரித்துறை. 

ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை. 

ராஜலட்சுமி - ஆதி திராவிடர் நலத்துறை. 

எஸ்.வளர்மதி - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை. 

பாலகிருஷ்ண ரெட்டி - கால்நடைத்துறை. 

பிளஸ் 2 ஹால்டிக்கெட் தராமல் இழுத்தடிப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள் தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 2ல் துவங்குகிறது. இதற்கான அறிவியல் செய்முறை தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், மாணவ, மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகள், அரசு தேர்வுத்துறை கடந்த வாரத்தில் இணையதளம் மூலம் வெளியிட்டது. 

அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு மூலம், ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, சரிபார்த்து மாணவர்களிடம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களுக்கு இதுவரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் கூறியதாவது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி வீதம் அதிகரிக்க பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து வருகின்றனர். இவற்றில், பலவற்றுக்கு நடப்பு கல்வியாண்டில் தேர்வுத்துறை தடை விதித்துள்ளது. 

உதாரணமாக, பள்ளி வருகை பதிவேட்டில் இருந்த அனைவரும், தேர்வெழுதும் மாணவர்கள் பட்டியலில் இடம்பெற உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆண்டுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ச்சி பெற முடியாது என, கருதும் மாணவர்களை தனித்தேர்வராக விண்ணப்பிப்பது பள்ளிகளின் வழக்கமாக இருந்தது. 

இம்முறை அதற்கான வாய்ப்புகளை தேர்வுத்துறை தடுத்துவிட்டது. இதனால், அடுத்த கட்டமாக, சராசரி மாணவர்களை தேர்வெழுத விடாமல், முழுமையாக ஆப்சென்ட் ஆகும் வகையில், பல பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதற்காக, ஹால்டிக்கெட்டுகளை தராமல் இழுத்தடித்து வருகின்றன. இவற்றை உடனடியாக கொடுத்து, அனைத்து மாணவர்களும் தேர்வெழுதுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது

பிப்.,20க்குள் பிளஸ் 2 ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், ஹால்டிக்கெட்டுகளை வழங்கிவிட்டால், அதற்கு பின் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை. 

ரிவிஷன் முறையாக நடக்காததால், தேர்ச்சி வீதம் பாதிக்கப்படுகிறது என, மாணவர்கள் நலன்கருதி பல பள்ளிகள் ஹால்டிக்கெட்டுகளை நிறுத்தி வைத்துள்ளன. மற்றபடி, தேர்வெழுத தடுக்கும் வகையில், ஹால்டிக்கெட் தராமல் இருப்பின், அவர்கள் உடனடியாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பீஹாரில், கடந்த ஆண்டு நடந்த தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு மாணவர்கள், மோசடி செய்து, தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

’தேர்வு மையத்துக்கு கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் தீவிரமாக சோதிக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இன்று துவங்க உள்ள, இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு தேர்வு எழுதும், 12.61 லட்சம் பேரில், 5.56 லட்சம் பேர் மாணவியர். 25 பேருக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும், தலா, இரண்டு முதல், நான்கு மையங்கள் மாணவியருக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மாணவியரை சோதனை செய்வதில் தர்மசங்கடம் ஏற்படுவதுடன், தங்கள் மீது பொய் புகார்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். மேலும் மாணவியர், ’பிட்’ அடித்து சிக்கினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் உள்ளதையும் அரசுக்கு எடுத்துச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து, ’தேர்வு மையங்களில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆண் ஆசிரியர்கள், மாணவியரை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. 

அது குறித்தும், தங்கள் உறுதிமொழியில் குறிப்பிடலாம்’ என, மாநில அரசு விலக்கு அளித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது; இது ஆண் ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், நிம்மதி பெருமூச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 


மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு, எட்டாவது ஊதியக்குழுவை அமைத்து, ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

20 ஆண்டு பணிக்காலத்திற்கு மத்திய அரசு போல மாநில அரசும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தர வரிசையில் இடம் பெற ஆதரவு அளியுங்கள்; துணைவேந்தர்!

தேசிய தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை இடம்பெற, இணையதளம் மூலம் ஆதரவு அளியுங்கள்,” என, துணைவேந்தர் சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து, சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் பெரியார் பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில், 1.50 லட்சம் பேர் படிக்கின்றனர். 

பல்கலையில், மத்திய அரசின் தேசிய தர நிர்ணய மற்றும் மதிப்பீட்டுக்குழு, 2015ல் ஆய்வு மேற்கொண்டு, ’ஏ’ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை, 2016ல் வெளியிட்ட தரவரிசை பட்டியலில், பெரியார் பல்கலை, தேசிய அளவில், 46ம் இடம், மாநில அளவில், அரசு பல்கலைக்கழகங்களில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. 

தற்போது, அப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் அடைய, பல்கலையில் படித்த மாணவ, மாணவியர், அவர்கள் பெற்றோர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், இப்பல்கலை குறித்து, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதனால், http://www.nirfindia.org/perception என்ற இணையதள முகவரியில், தங்கள் மின்னஞ்சல், சுயவிபரங்களை பதிவு செய்து, பல்கலைக்கு ஆதரவு தெரிவிக்கலாம். 

இதன் மூலம், பல்கலையை, தேசிய அளவில், முதல் பத்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். இன்றைக்குள் (பிப்.,15), பல்கலைக்கு ஆதரவாக ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல்துறை - பசுமை தினங்கள் கொண்டாடுதல் - சுற்றுச்சூழல் பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக

CPS NEWS: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் கவனத்திற்கு.....

`CPS NEWS:```

ஆளேயில்லாத கடைல டீ ஆத்துறதக் கூட பொறுத்துக்கலாம்.


ஆனா,

பால். . . டீத்தூள். . . . சுடு தண்ணீ. . . அட கிளாஸே இல்லாம டீ ஆத்துனா பொறுத்துக்க முடியுமா?

அத ஊத்தித்தரேன் குடிடானா குடிச்சுற முடியுமா?

முடியாதுல. . .

ஆனாநாம குடிப்போம்னு ஆட்சியாளர்கள் நம்புறாங்க. அதுனாலதேன் அவுக டீ ஆத்துறதா நம்பவச்சிக்கிட்டே இருக்காங்க. நாமலும் நம்பித் தொலஞ்சுக்கிட்டே இருக்கோம். . .

எப்படீங்கிறீங்களா❓

👇🏼இப்படித் தான்👇🏼

*ஓய்விற்குப் பின் சல்லிப் பைசா ஊதியமே வழங்காத* புதுமையான *ஓய்வூதியத் திட்டத்தில்*நம்மைச் சிக்க வைத்து சீரழித்து வருகின்றனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர்

❌ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,

❌ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (ரூ.2,00,000)

❌பணிக்கொடை,

❌தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978

ஆகியவை பொருந்தாது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழித் தகவல் : *திண்டுக்கல் எங்கெல்ஸ்.*

இனி 'ஆதார்' இருந்தால், 'பான் கார்டு' பெறுவது எளிது..!

ஒருவர் வங்கிகளில் ரூ.50,000 மேல் ரொக்கமாக செலுத்த,மற்றும் பெறுவதற்கும் 'பான் கார்டு' எண் குறிப்பிடவேண்டும். ரூ.2,00,000-
த்துக்கு மேல் எந்தவொரு பொருள் வாங்கும்போதும் 'பான் கார்டு' எண்ணை சொல்லவேண்டும்.
இந்நிலையில் ஒருவரிடம் 'ஆதார் கார்டு' எண் இருந்தால், அந்த ஆதாரில் இருக்கும் அடிப்படை விவரங்களின் அடிப்படையில், ஒரு சில நொடிகளில் வேண்டுவோருக்கு 'பான் கார்டு' வழங்க வருமான வரித்துறை தீர்மானித்து உள்ளது. இதன் மூலம் எளிதில் வருமான வரியை ஒருவர் கட்ட இயலும். பான் கார்டு பெறுவதில் இருக்கும் காலதாமதம் குறைக்கப்படும் என மத்திய வருவாய்த்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவை ஒரு சில மாதங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.