யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

16/2/17

மாணவியரை சோதிக்க வேண்டாம்; ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு

10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்க உள்ள நிலையில், ’மாணவியரை, ஆண் தேர்வு கண்காணிப்பாளர்களாக உள்ள ஆசிரியர்கள் சோதிக்க தேவையில்லை’ என்ற உத்தரவு, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.


ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ்குமார் முதல்வராக உள்ள பீஹாரில், கடந்த ஆண்டு நடந்த தேர்வில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி, மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனைகளில், பல்வேறு மாணவர்கள், மோசடி செய்து, தேர்ச்சி பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு தேர்வுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

’தேர்வு மையத்துக்கு கண்காணிப்பாளராக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் தீவிரமாக சோதிக்க வேண்டும். அது தொடர்பான உறுதிமொழியையும் அவர்கள் அளிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இன்று துவங்க உள்ள, இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு தேர்வு எழுதும், 12.61 லட்சம் பேரில், 5.56 லட்சம் பேர் மாணவியர். 25 பேருக்கு ஒரு தேர்வு கண்காணிப்பாளர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள, 38 மாவட்டங்களிலும், தலா, இரண்டு முதல், நான்கு மையங்கள் மாணவியருக்காக மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மாணவியரை சோதனை செய்வதில் தர்மசங்கடம் ஏற்படுவதுடன், தங்கள் மீது பொய் புகார்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆசிரியர்கள் கூறினர். மேலும் மாணவியர், ’பிட்’ அடித்து சிக்கினால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் உள்ளதையும் அரசுக்கு எடுத்துச் சென்றனர். 

அதைத் தொடர்ந்து, ’தேர்வு மையங்களில் கண்காணிப்பாளராக இருக்கும் ஆண் ஆசிரியர்கள், மாணவியரை சோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. 

அது குறித்தும், தங்கள் உறுதிமொழியில் குறிப்பிடலாம்’ என, மாநில அரசு விலக்கு அளித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது; இது ஆண் ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதுடன், நிம்மதி பெருமூச்சையும் ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக