யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/12/18

School Morning Prayer Activities - 17.12.2018




பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

பழமொழி:

Every man is mad on some point

சில விஷயங்களில் எல்லா மனிதர்களும் முட்டாள்களே

பொன்மொழி:

பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
ரஷ்யா

2) கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?
டென்மார்க்

நீதிக்கதை :

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.


ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2.பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது

3.கஜா புயலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் எவை? அதிகாரப்பூர்வ பட்டியலை அரசு வெளியிட்டது

4.பெய்ட்டி புயல்: ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

5.உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

L.K.G மாணவர் சேர்க்கை தொடக்கம் -அரசு பள்ளியில் முதல் நாளிலேயே 52 பேர் சேர்ந்து சாதனை

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு

உயர்நிலைப்பள்ளிகளில் 295 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம் திட்டமிட்டு குறைத்துக் காட்டுவதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான 387 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்தேர்வு செய்வதற்கான அறிவிக்கை 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

முதுகலை வேதியியல், பி.எட்  படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்காக எழுத்துத்தேர்வு 2017ம் ஆண்டு நடந்தது. தேர்வு நடந்து ஒரு வார காலத்துக்குபின், தற்காலிக விடைக்கையேடு வெளியிடப்பட்டது. அதில் 6 கேள்விகள் தவறாக உள்ளது  தொடர்பாக தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்திடம் ஆட்சேபனை தெரிவித்தனர். 


குறிப்பிட்ட கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க டிஆர்பி நிர்வாகம் மறுத்த நிலையில், தென் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை  நடந்து வந்தபோதே, சமுதாய பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி பெற்ற, 92 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்த விசாரணையில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது உறுதியானது. அதற்கு உரிய மதிப்பெண் வழங்குவதாக டிஆர்பி அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து  குறிப்பிட்ட 6 தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் டிஆர்பிக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தில் முறையிடுமாறும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக குறிப்பிட்ட தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தை தொடர்புகொண்டபோது, குறிப்பிட்ட வழக்கில் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த தேர்வர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க முடியும் என்று அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். 


அனைத்து காலிப்பணியிடங்களும் நிரம்பிவிட்டதாக டிஆர்பி தேர்வர்களுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளது. வெறும் 92 இடங்கள் மட்டுமே நிரப்பிவிட்டு, மீதமுள்ள 295  இடங்களை காலிப்பணியிடங்கள் பட்டியலில் டிஆர்பி  நிர்வாகம் காட்டவில்லை.
இதனால் தங்களுக்கான பணியிடங்களை வேறு நபர்களுக்கு டிஆர்பி அதிகாரிகள் முறைகேடாக விற்பனை செய்திருக்கலாம் என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்கனவே பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட தேர்வு சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதோடு, அதுதொடர்பாக  விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்வாணையத்தின் விடை கையேடு இறுதியானதா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தை போல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் தேர்வு முடிந்ததும், தற்காலிக விடைக்கையேடு வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்று இறுதி விடைக் கையேடு வெளியிடுகிறது. அதற்கு இணையதளம் மூலம்  மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வாணையத்தின் 2வது விடைக்கையேடே இறுதியானது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் உள்ள பள்ளிகளை தத்தெடுக்க அதிகாரிகளுக்கு CEO அறிவுரை

தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி: அரசு பள்ளி ஆசிரியர்கள் அவதி

ஆசிரியர்களுக்கு நடக்கும் தொடர் பயிற்சிகளால், அரையாண்டு தேர்வு நடத்த, ஆசிரியர்கள் இல்லாமல், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில், பிளஸ் 1 வகுப்பு இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்களுக்காக, ஒவ்வொரு பாட ஆசிரியர்களுக்கும், இரண்டு நாள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. டிச., 13, 14 மற்றும் 17,18 தேதிகளில், வேதியல் பாட ஆசிரியர்களுக்கு மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் பயிற்சி நடைபெறுகிறது.

மாணவியரிடையே சத்தான உணவு மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு பள்ளியிலிருந்து இரண்டு பெண் ஆசிரியர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சியளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, கற்றல் அடைவு மற்றும் தேசிய அடைவு ஆய்வுக்கான செயல்பாடுகள் குறித்து, பாடவாரியாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் தலா இரண்டு நாள் பயிற்சி, டிச., 13 முதல் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட அத்தனை பயிற்சிகளும், அரையாண்டு தேர்வு நடத்தப்படும், டிச., 11 முதல், 22 வரை, நடக்கிறது. இதனால், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும்,குறைந்தது நான்கு ஆசிரியர்கள் வரை பயிற்சிக்குசெல்ல வேண்டியுள்ளது. அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாமல், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தவிப்புக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வு நடக்கும் நேரத்தில், தொடர் பயிற்சிகள் திட்டமிட்டிருப்பது கடும் அவதியை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி ஆசிரியர்களையும், பகுதிநேர பணியாளர்களையும் வைத்து, பலரும் தேர்வு நடத்துகின்றனர்.

தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களுக்கான சந்தேகங்களுக்கு விளக்கம் தர முடியாத நிலை உள்ளது. தேர்வு முடிந்த பின், இப்பயிற்சிகளை திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்

NMMS தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து

தேசிய வருவாய்வழி மற்றும் படிப்புதவித் தொகைக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கப்படுவதற்காக நடத்தப்படும் என்.எம்.எம்.எஸ். தேர்வு தமிழகம் முழுவதும் 521 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்க 1 லட்சத்து 44,427 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அதில் 96 சதவீத மாணவர்கள் தேர்வெழுதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


என்.எம்.எம்.எஸ். தேர்வு காலை, முற்பகல் என இரு கட்டங்களாக நடைபெற்றது.  முதல் கட்டமாக நடைபெற்ற மனத்திறன் தேர்வில் (ஙஅப) எண் தொடர்கள்,எழுத்து தொடர்கள்,ஆங்கில அகராதிப்படி எழுத்துகளை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணை கண்டறிதல்,வெண் படங்கள் தொடர்பாக 90 வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  ஒவ்வொரு வினாவுக்கும்  ஒரு மதிப்பெண்.


இதைத் தொடர்ந்து முற்பகலில் படிப்பறிவுத் தேர்வில் (நஅப) ஏழாம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் இருந்தும்,  8-ஆ ம் வகுப்பு அறிவியல், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் முதல் இரு பருவங்களிலிருந்தும் 90 வினாக்கள் இடம்பெற்றிருந்தன.  இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில் மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தேர்வெழுதினர்.  தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் கிடையாது.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில்,  என்.எம்.எம்.எஸ். தேர்வில் கணிதம்,  ஆங்கிலப் பகுதியில் இடம்பெற்றிருந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்தன.  பல வினாக்கள் நன்கு யோசித்து பதிலளிக்கக் கூடிய வகையில் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும் சமூக அறிவியல்,  அறிவியல் போன்ற பகுதிகளில் இடம்பெற்றிருந்த கேள்விகள் ஏற்கெனவே படித்தவை என்பதால் ஓரளவுக்கு எளிதாக பதிலளிக்க முடிந்தது என்றனர்

உயர்கல்வி முன் அனுமதி வழங்குவதில் தாமதம் 4 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் பள்ளி ஆசிரியர்கள்

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ரொக்கப்பரிசு… :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரில், அரசு உதவி பெரும் மேல்நிலை பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வளர்ச்சிக்காக, 1 கோடியே 20 லட்ச ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கை திறந்து வைத்து பேசினார்.

 அப்போது, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள், ஆங்கில மொழியை கற்கும் வகையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் திறக்கப் பட உள்ளதாக தெரிவித்தார்.

 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதும், மத்திய அரசு சார்பில் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருவதாக கூறினார். விடுப்பு இல்லாமல் பணியாற்றும் ஆசிரியரை ஊக்கப்படுத்த, பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நற்சான்றிதழும் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

பள்ளி ஆய்வு குறித்து BEO க்கு தெரிவிக்கும் புதிய நடைமுறை வேண்டாம் - BRTE வலியுறுத்தல்

மதுரையில் பள்ளிகள் ஆய்வில் புதிய நடைமுறை வேண்டாம் என ஆசிரியர் பயிற்றுனர்கள் (பி.ஆர்.டி.இ.,) வலியுறுத்தினர். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் கற்றல் கற்பித்தலை பி.ஆர் டி.இ.,க் கள் ஆய்வு செய்கின்றனர்.


தேசிய அடைவு ஆய் வில் (நாஸ்) மாநிலத்தில் மதுரை 27வது இடத்தில் இருப்பதால் பி.ஆர்டி.இ., ஆய்வை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி அவர்கள் ஆய்வுக்கு சென்றவுடன் சென்ற நேரம், பள்ளியில் இருப்பது போன்ற போட்டோவை வாட்ஸ்ஆப்பில் மேற்பார்வையாளர் மற்றும் பி.இ.ஓ.,க்களுக்கு அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உத்தரவிட்டார்.
  
பி.ஆர்.டி.இ.,க்கள் கூறுகையில், "நாஸ் தேர்வு தேர்ச்சி குறைய ஆசிரியர், பி.இ.ஓ.,க்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஆய்வு அறிக்கை மேற்பார்வையாளரிடம் அளிக்கிறோம். துறைக்கு தொடர்பில்லாத பி.இ.ஒ.,க்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை வேண்டாம்," என்றனர்.
  
சி.இ.ஓ., கூறியதாவது:'நாஸ்'ல் முதல் ஐந்து இடத்திற்குள் மதுரை வர ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியம். பி.ஆர்.டி.இ.,கள் அனைத்து பள்ளிக்கும் செல்கின்றனர். இதனால் ஆசிரியர்களும் சரியான நேரத்திற்கு வருவர். 1- 5ம் வகுப்பு வரை பி.இ.ஓ.,க்களுடன் தொடர்பு ஏற்படுத்த அவர்களிடம் ஆய்வு விவரம் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. குறைகள் குறித்து பி.ஆர்.டி.இ., நேரில் தெரிவிக்கலாம். உரிய மாற்றம் செய்யப்படும் என்றார்.

Team visit Review meeting news : 'டீம் விசிட்' போது என்னென்ன செய்ய வேண்டும்?

1. 4ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை பாடக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்க வேண்டும்

2.Dictionary பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

3.எழுதபடிக்க தெரியாத மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

4.நாளிதழ் செய்திகள் கொடுத்து வாசிக்கச்சொல்ல வேண்டும்.

5.TEAM VISIT ன் போது model class எடுக்க வேண்டும்.

6.NAS Exam ல் திருச்சி மாவட்டம் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும்.


7.QR code பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டும்.

8.Remedial planning வைத்திருக்க வேண்டும்.

9.Learning out comes நிறைய உருவாக்க வேண்டும்.

10.Periodical Assessment report ல் அனைத்து ஆசிரியர்களிடமும் விளக்கி கையொப்பம் பெற வேண்டும்.

அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப படுமா?

தமிழகத்தின் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல்காலியாக உள்ள அலுவலக உதவியாளர்,
இரவுக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகள்உள்ளன.6 ஆயிரம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உயர்நிலைப் பள்ளிகளில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 322 மாணவர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 68 லட்சத்து 12 ஆயிரத்து 953 மாணவர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 8 லட்சத்து 95 ஆயிரத்து 29 மாணவர்களும், ஆரம்ப பள்ளிகளில்29 லட்சத்து 10ஆயிரத்து 351 மாணவர்கள் தொடக்கப்பள்ளி, அரசு நிதி உதவிப்பள்ளி, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 526 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்று உயர்கல்வி கற்கவும், போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும் தனித்தனி அலகுகளாக பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு எளிதாக கல்வியை கற்பிக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்வி கற்கும் மாணவர்களுக்கான பாடங்களைதிரைவடிவில் செயல்முறை விளக்கத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படிக்கும் வசதி, அங்கன்வாடி மையங்கள் நர்சரி பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பிடித்துள்ள மாநகராட்சி பள்ளிகளில் வகுப்பறைகளை டிஜிட்டல் வகுப்பறைகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்ற அரசின் முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அரசு பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளில் இன்னும் குறைபாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் 3,688 அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட 3000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி அலுவலகம் தொடர்பான பணிகள் செய்து முடிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. பள்ளி வளாகத்தின் தூய்மை, மாணவர் வருகைப்பதிவேடு, வகுப்பறைகள் பராமரித்தல், அரசின் உத்தரவுகள் தொடர்பான சுற்றறிக்கைகளை வகுப்புவாரியாக கொண்டு செல்லுதல் உட்பட 14 வகையான பணிகள் பாதிக்கப்படுகிறது.
காலை பள்ளி தொடங்கும் நேரம், இறை வணக்கம், பாடவாரியான வகுப்புகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்வது, உணவு இடைவேளை, பள்ளி முடியும் நேரம் போன்ற காலநேரங்களில் மணி அடிப்பதற்கும் பணியாளர்கள் இல்லை. இதனால் தலைமை ஆசிரியர்களும், மாணவர்களும் அனைத்து பணிகளை செய்ய வேண்டிய அவல நிலை தொடர்கிறது. அதேபோல், பள்ளிகளுக்கான பகல், இரவு காவலுக்கான பணியாளர்கள் இல்லாததால் யாரும், எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்குள் நுழையும்நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதனால் வெளிநபர்கள் நடமாட்டம் காணப்படுவதோடு மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல் இரவுக் காவலர்கள் இல்லாத பள்ளிகளில் இரவு நேரங்களில் அத்துமீறி சுவர் ஏறி குதிக்கும் மர்ம நபர்கள் கல்விக்கூடத்தை இலவச மதுகுடிக்கும் கேளிக்கை விடுதியாக மாற்றி வருகின்றனர். மதுபோதையில் இறைச்சிக்கழிவுகளை வகுப்பறைகளில் வீசுவது, காகிதக் குப்பைகளை தீயிட்டு எரிப்பது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும், தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்துஒலிப்பெருக்கி சாதனம், கேடயம், இரும்பு பெட்டகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம், சத்துணவு கூடத்தில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடந்தேறுகிறது.


இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் உடமைகளுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்த திட்டமில்லைஅரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், பள்ளிகளில் இருபாலருக்கும் தேவையான கழிப்பறைகள் அமைக்கவும் உரிய ஆய்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இன்றுவரை போர்வெல் கிணற்றில் உள்ள தண்ணீரையே மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. அதேபோல், கழிப்பறைகளை தூய்மையாக பராமரிப்பதற்கு போதியளவில் பணியாளர்கள் இல்லாததால் தொற்றுநோய் கூடாரமாகவே அரசு பள்ளி கழிப்பறைகள் காட்சி அளிக்கிறது.


ஒருசில பள்ளிகளில் கழிப்பறைகள் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனை சீரமைக்கும் முயற்சிகள் இல்லாததால் திறந்தவெளி மைதானம் கழிப்பிடமாக மாறியுள்ளது. மொத்தத்தில் அரசு பள்ளிகள் கல்வித் தரத்தில் சற்று முன்னேறினாலும், சுகாதாரம், பள்ளிகள் சீராக இயங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மேலும் ஒரு முறைகேடு குறைத்துக் காட்டப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை: தேர்வர்கள் குற்றச்சாட்டு

உயர்நிலைப்பள்ளிகளில் 295 வேதியியல் ஆசிரியர்பணியிடங்களின் எண்ணிக்கையை டிஆர்பி நிர்வாகம் திட்டமிட்டு குறைத்துக் காட்டுவதாக
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பிளஸ்1, பிளஸ் 2 மாணவர்களுக்கான 387 வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்தேர்வு செய்வதற்கான அறிவிக்கை 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

முதுகலை வேதியியல், பி.எட் படித்தவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இதற்காக எழுத்துத்தேர்வு 2017ம் ஆண்டு நடந்தது. தேர்வு நடந்து ஒரு வார காலத்துக்குபின், தற்காலிக விடைக்கையேடு வெளியிடப்பட்டது. அதில்6 கேள்விகள் தவறாக உள்ளது தொடர்பாக தேர்வர்கள்டிஆர்பி நிர்வாகத்திடம் ஆட்சேபனை தெரிவித்தனர். குறிப்பிட்ட கேள்விகளுக்கு மதிப்பெண் அளிக்க டிஆர்பி நிர்வாகம் மறுத்த நிலையில், தென் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணை நடந்து வந்தபோதே, சமுதாய பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி பெற்ற, 92 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்த விசாரணையில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது உறுதியானது. அதற்கு உரிய மதிப்பெண் வழங்குவதாக டிஆர்பி அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட 6 தேர்வர்களுக்குமதிப்பெண் வழங்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்வர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் டிஆர்பிக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தது. தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தில் முறையிடுமாறும் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக குறிப்பிட்ட தேர்வர்கள் டிஆர்பி நிர்வாகத்தை தொடர்புகொண்டபோது, குறிப்பிட்ட வழக்கில் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்த தேர்வர்களுக்கு மட்டுமே மதிப்பெண் வழங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து காலிப்பணியிடங்களும் நிரம்பிவிட்டதாக டிஆர்பி தேர்வர்களுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளது. வெறும் 92 இடங்கள் மட்டுமே நிரப்பிவிட்டு, மீதமுள்ள 295 இடங்களை காலிப்பணியிடங்கள் பட்டியலில் டிஆர்பி நிர்வாகம் காட்டவில்லை.

இதனால் தங்களுக்கான பணியிடங்களை வேறு நபர்களுக்கு டிஆர்பி அதிகாரிகள் முறைகேடாக விற்பனை செய்திருக்கலாம் என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்கனவே பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டு, குறிப்பிட்ட தேர்வு சில மாதங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்டதோடு, அதுதொடர்பாக விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்வாணையத்தின் விடை கையேடு இறுதியானதா?
ஆசிரியர் தேர்வு வாரியத்தை போல் டிஎன்பிஎஸ்சி நிர்வாகமும் தேர்வு முடிந்ததும், தற்காலிக விடைக்கையேடு வெளியிட்டு, ஆட்சேபனைகளை பெற்று இறுதி விடைக் கையேடு வெளியிடுகிறது. அதற்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வாணையத்தின் 2வது விடைக்கையேடே இறுதியானது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி உபரியாக இருந்தவை 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் சரண் செய்யப்பட்டது

ஆசிரியர்களின்றி உபரியாக இருந்த 3894 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1.8.2017 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நியமனம் மேற்கொள்ளப்பட்டதில் பாடவாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட பணியிடங்களை சரண் செய்து இயக்குநரின் பொது தொகுப்பிற்கு ஒப்படைக்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.அதன் அடிப்படையில் ஆசிரியர்களின்றி உள்ள உபரி காலி பணியிடங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் ஒப்படைக்கப்பட்டு பள்ளி கல்வி இயக்குநரின் பொது தொகுப்பிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்டு பள்ளி கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு, நகராட்சி,உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களின் உபரி காலி பணியிடங்கள் 3894 என பட்டியலிடப்பட்டு சரண் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் 686, ஆங்கிலம் 334, கணிதம் 676, அறிவியல் 1177, சமூக அறிவில் 690, இதர பாட பிரிவுகள் 66 ஆசிரியர் பணியிடங்களும் உபரியாகியுள்ளன. மேலும் இடைநிலை ஆசிரியர் பிரிவில் 265 ஆசிரியர்கள் உபரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 465, திருவண்ணாமலை மாவட்டத்தில் 439 பணியிடங்கள் ஆசிரியர்கள் இல்லாமல் உபரி என்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த காலி பணியிடங்களை இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறுகின்ற ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வின்போது காலி பணியிடங்களாக காண்பிக்ககூடாது என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநரால் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வதுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பராமரிக்கப்படுகின்ற அளவை பதிவேட்டில் (ஸ்கேல்ரெஜிஸ்டர்) திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சரண்டர் செய்யப்பட்ட பணியிடங்களை புதியதாக நியமிக்கப்படும் கணினி ஆசிரியர் பணி நியமனத்திற்கு பயன்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 800க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சார அடிப்படையில் இந்த பணியிடங்கள் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

EMIS - School Information Form PPT Material :

ஆசிரியர்களுக்கு Super annuation ரத்தாகிறது.

இனி வரும் காலங்களில் ஆசிரியப் பணியில் ஒய்வு பெற்ற பிறகு அக்கல்வியாண்டு முழுவதும் பணி நீட்டிப்பு வழங்கும் முறை கைவிடப்படுகிறது. உபரி ஆசிரியர்களை வைத்துக்கொண்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதால் கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது என நிதித்துறை கருத்து

தமிழக அரசுக்கும்,பள்ளிக் கல்வித்துறைக்கும்,SCERT க்கும் ஒரு வாழ்த்துஉ சொல்லுங்க!

கிராமப்புற ஏழைப் பிள்ளைங்களுக்கும்,தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும் இப்ப நல்லாவே chemistry work out ஆகுது.


என்னான்னு கேக்குறீங்களா..11-வது chemistry new bookல உள்ள கடினமான,முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா,புரியும் படியா video lessons பண்ணிருக்காங்க.

sema work.extraordinary plan.conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

English,தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

இந்தாப்பா...இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

வாத்தியார் இல்லன்னாலும் சரி,நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும்,தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT ..அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விசயம் போய்ச் சேரவேயில்ல.

Tuition வருமானத்திற்காக பல பேர் இதைச் சொல்லுறதேயில்ல.

ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

what's app,face book media வுல share பட்டன அழுத்துங்க.

பிடிச்சதோ,பிரச்சனையோ உடனே share பண்ணுறோம்ல.
அதே போல இதையும் share பண்ணுங்க.

இனி பணக்காரர்களுக்கு மட்டுமல்ல நல்ல கல்வியும்,மருத்துவமும்,பொறியியலும்,உயர் கல்வியும்.

ஒவ்வொரு ஏழை மாணவனுக்கும் இதைக் கொண்டு போய்ச் சேர்ப்போம்.

Kindly SHARE to all students

https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/playlists

உழைப்போம் நேர்மையாக , பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் ! கடமையைத் துணிவோடு செய்வோம் பாரபட்சம் இல்லாமல் ! நிச்சயமாக மன நிறைவான வாழ்க்கை அமைந்தே தீரும் !

அந்தக் காலத்தில்   TVS  பஸ் நிறுவனம்  தான்  தமிழகமெங்கும்    பஸ்  போக்குவரத்தை   நடத்தி  வந்தார்கள்  என்று   கேள்விப்பட்டதோடு    TVS   பஸ்  முதலாளியைப்  பற்றி   கடந்த   வாரம்   எனது  மரியாதைக்குரியவர்   மூலம்   மிகவும்    அற்புதமான   விஷயம்  ஒன்றைக்  கேட்டேன்  !
அந்த  நிறுவனம்   இத்தனை  நூற்றாண்டுகளாகப்   புகழ்  வாய்ந்து    பெரிய  அளவில்   உயர்ந்து  நிற்க  அது  தான்  காரணம்  !

ஒரு  முறை   TVS   பஸ்   முதலாளியின்   மகன்    அந்த  பஸ்ஸில்   பயணம்   செய்தபோது    அவரிடம்    டிக்கெட்   எடுக்க   அந்த   பஸ்ஸின்   கண்டக்டர்    வந்த  போது    TVS  முதலாளியின்  மகன்   மிகவும்   கோபப்பட்டாராம்  !

நான்   இந்த  பஸ்   முதலாளியின்   மகன்   என்பது   உனக்குத்  தெரியுமா  ?  என்று  கேட்டவரிடம்   அந்தச்  சாதாரண    கண்டக்டர்    சொன்னாராம்   மிகவும்   அமைதியாக  "   தெரியும்   அய்யா  !   ஆனால்    பஸ்ஸில்   பயணம்  செய்யும்   அனைவரிடமும்   டிக்கெட்   வாங்க  வேண்டும்   என்பது   எனக்கு   வழங்கப்பட்ட   சட்டம்  !

டிக்கெட்  வாங்காவிட்டால்    தங்களை   இங்கேயே  இறக்கி  விட  வேண்டியிருக்கும்  "  ,      என்ற  கண்டக்டரிடம்    கோபமாக  டிக்கெட்   வாங்கி  விட்டு    பயணம்  செய்தாராம்   அந்த  பஸ்  கம்பெனியின்   முதலாளி  மகன் !

நடந்த   விஷயங்களைக்  கேள்விப்பட்ட    TVS  முதலாளி   மிகுந்த   கோபத்தோடு   அந்த  கண்டக்டரை   நாளை   அலுவலகத்தில்   வந்து  என்னைப்  பார்க்கச்  சொல்லுங்கள்   என்று   உத்தரவிட்டிருக்கிறார் !

அன்று  இரவு    மிகவும்   கவலையோடு   வீட்டுக்கு   வந்த  அந்தக்  கண்டக்டர்   தனது   ஏழைத்  தாயின்  மடியில்  தலை  சாய்த்துக்  கொண்டு   "  நாளை  முதல்  எனக்கு   இந்த   வேலையும்  போய்விடும்  !  என்ற  மகனிடம்   அந்த  ஏழைத்  தாய்  சொன்னார்கள்  "  மகனே   எந்த  நிலை  வந்தாலும்   கடமையை  நேர்மையாகச்  செய்  ,    என்று  !

மறுநாள்   மிகுந்த  பயத்தோடு    முதலாளியின்   அறைக்கு  சென்றவரை   மிகவும்   அன்பாகத்   தன்னோடு  அணைத்துக்  கொண்ட  TVS  முதலாளி  "   இன்றிலிருந்து   என்  பஸ்  கம்பெனியின்   Checking Inspector  ஆக  (  செக்கிங்  இன்ஸ்பெக்டர்  )  உன்னை  நியமிக்கிறேன்  !  முதலாளியின்   மகன்  என்று  கூட  பயப்படாமல்    உனது  கடமையைச்  சரியாகச்  செய்த  உன்னைப்  போன்றவர்கள்  தான்   இங்கே  அதிகாரியாக  இருக்க வேண்டும்  "   என்ற  போது   தனது  தாயின்   வார்த்தைகள்  எத்தனைப்பெரியது என்று  மகிழ்ந்த   அவர்  பின்னாளில்   பல   பஸ்  கம்பெனிகளுக்கு   முதலாளியானார்  !

           " ஆளைப்  பார்த்து   வேலை  செய்வதும்  ,   அதிகாரங்களைக்  கண்டு   நேர்மையைக்   கைவிடுவதும்  ,  அல்லது  கண்டு  கொள்ளாமல்    நமக்கென்ன    நம்ம   குடும்பம்   வாழ்ந்தால்   போதும்   என்று   அவர்களுக்குக்  கும்பிடு   போட்டு       வேலை  செய்கிறவர்கள்    சுயநலவாதிகள்  !

நேர்மையாகத்  தங்களது   பணியைச்  செய்பவர்களை   பணிசெய்ய  விடாமல்   தங்களது   அதிகாரத்தை   பயன்படுத்தி   ஆணவம்   கொள்பவர்கள்    உயிரோடு   நடமாடும்   பிணங்கள்  !

கோடிகோடியாக    பணம்  இருந்தாலும்    வனளாவிய  அதிகாரங்கள்   இருந்தாலும்    உள்ளுக்குள்   நிம்மதியை   இழந்து   வாழும்   பரிதாபத்துக்குரியவர்கள்  !

 தங்கள்   கடமையை  நேர்மையாகச்   செய்பவர்கள்   கெட்டுப்  போனதாக  வரலாறுகள்   இல்லை  !

உழைப்போம்  நேர்மையாக  ,    பிறர்  பொருளுக்கு   ஆசைப்படாமல்  !
கடமையைத்  துணிவோடு   செய்வோம்    பாரபட்சம்   இல்லாமல்  !
நிச்சயமாக     மன நிறைவான   வாழ்க்கை   அமைந்தே  தீரும்  !

அரசு, தனியார் பள்ளிகள், ஆசிரியர் விபரங்கள், 'எமிஸ்' என்ற இணையதளத்தில் பதிவு செய்ய, கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி முகாம்

                                              
அரசு, தனியார் பள்ளிகள், ஆசிரியர் விபரங்கள், 'எமிஸ்' என்ற இணையதளத்தில் பதிவு செய்ய, கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி முகாம், தர்மபுரியில் நடந்தது. அரசு, தனியார் பள்ளிகள், கட்டடங்கள், பள்ளிக்கு சொந்தமான பொருட்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை, www. emis. tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமுக்கு, அரூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொ) குழந்தைவேலு தலைமை வகித்தார். சி.இ.ஓ., ராமசாமி முகாமை துவக்கி வைத்தார். எஸ்.எஸ்.ஏ., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனப்பிரியா பயிற்சி அளித்தார். இதில், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, மொரப்பூர் யூனியன்களை சேர்ந்த கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என, 100 பேர் பங்கேற்றனர். இதில், பயிற்சி பெற்றவர்கள், நாளை மறுதினம் அனைத்து வட்டார வள மையங்களில், மேல்நிலை, மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

ஜனவரி 7- ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் : ஜாக்டோ ஜியோ

கோரிக்கைகளை ஜனவரி 7- ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் அடுத்தநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஈடுபடுவார்கள் என அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
திருவாரூரில், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் உயர்நீதிமன்றம் நிகழ்வுகள் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.ஈவேரா, வி.சோமசுந்தரம், எஸ்.துரைராஜ், பெ.ரா.ரவி, ஆர்.சத்தியமூர்த்தி, சிவகுரு ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் பங்கேற்றுப் பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் அளித்த உறுதிமொழியை அரசு செயல்படுத்தவில்லை என்பதால் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் அவகாசம் கேட்டதற்கு நீதிபதி மறுத்து, ஜனவரி  7-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிபதி கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஜனவரி  7-ஆம் தேதி வரை ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஜனவரி  7-ஆம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அன்றைய தினமே காலை வரையற்ற போராட்டத்தின் அறிவிப்பை வெளியிடுவோம் என்றார்.

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு: தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி! சம்பளம் : ரூ.25,500 - 81,100

சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி : Stenographer

காலியிடங்கள் : 1

கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி, நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதும் திறன்.

வயது : 18 - 27

சம்பளம் : ரூ.25,500 - 81,100

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

விண்ணப்பக் கட்டணம் : ரூ.300

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : 29.01.2019

அனுப்ப வேண்டிய முகவரி :

The Director,

National Institute For Research In Tuberculosis (Formerly Tuberculosis Research Centre),

No.1, Mayor Sathyamoorthy Road,

Chetpet, Chennai - 600031