யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/11/18

நீதிக்கதை



தந்திர நரி


ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று தனியாக பசியின் காரணமாக மானை தொரத்துகிறது.

சிங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் மான் எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டது. சிங்கம் ஏமாற்றத்துடன் திரும்பியது. ஓடும்போது மானுக்கு பல இடங்களில் காயம் பட்டு ஒரு இடத்தில் விழுந்தது.

இதை பார்த்த நரி ஒன்று இதை எப்படியாவது உண்ண வேண்டும் என்று எண்ணியது.

தன் தந்திரத்தால் மானிடம் சிறிது தொலைவில் இருந்து பேச்சு கொடுத்தது. மானை எப்படியாவது நம்ப வைத்து உண்ண வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்கியது.



தொலைவில் இருந்தே உடல்நிலை சரியில்லையா! என்று இதேபோன்று அன்பாக பேசிக்கொண்டே சிறிது சிறிதாக அருகில் சென்றது. மானும் உதவி தான் செய்கிறது என்று எண்ணி நம்பிவிட்டது.

நரி மகிழ்ச்சியுடன் அருகில் சென்றது. மான் தனக்கு உதவி செய், என்னை தூக்கிவிடு என்று கூறும்போதே நரி அதன் தொண்டை பகுதியை கடித்து மான் இறந்து போனது. தன் பசியினை தீர்த்துக்கொண்டது நரி. அறவணைப்பது போல அன்பாக பேசி தன் எண்ணங்களை நிரவேற்றிக்கொண்டது.


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.


விளக்கம்: தீய குணமுடையவர் அன்பின் மிகுதியினால் விழுங்குபவர் போல் பார்த்தாலும் அவருடைய நட்பு வளர்வதை விடக் குறைவது நல்லது.

பள்ளி திறந்ததுமே, 'லேப்டாப்' : செங்கோட்டையன் உறுதி

கோபிசெட்டிபாளையம்: ''பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், சிறுவலுாரில் நேற்று நடந்த ஒரு விழாவில், அவர் பேசியதாவது:தமிழகத்தில் நடுநிலைப் பள்ளிகள் வரை, உள்ளாட்சி துறை மூலம், பராமரிப்பு பணி மேற்கொள்ள, ஓரிரு நாளில் முதல்வர் உத்தரவிட உள்ளார். டிசம்பர் இறுதிக்குள், கல்வி துறையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும்.'நீட்' தேர்வுக்காக, கடந்தாண்டு, இரண்டரை மாதம் மட்டுமே இடைவெளி கிடைத்தது. நடப்பாண்டில், 412 மையங்களில், 26 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். இவர்களில், 1,000 பேர் மருத்துவராக வருவர். இனி எதிர்காலத்தில், பள்ளிகள் திறந்ததும், இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப், மாணவர்கள் கையில் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:மாணவர்கள், முறையாக பள்ளிக்கு வருவதை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும், 'பயோ மெட்ரிக் திட்டம்' தற்போது, 50 பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. 1,000 பள்ளிகளில், டிசம்பர் இறுதிக்குள் கொண்டு வரப்படும். தனியார் பங்களிப்புடன் இப்பணி நிறைவேற்றப்படும். 82 லட்சம் மாணவர்களுக்கும், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அமேசான், பிளிப்கார்ட்’டுக்கு போட்டி ‘ரிலையன்ஸ் ஜியோ’ திட்டம்

புவனேஸ்வர்: முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் ஜியோ’ மூன்று கோடி வர்த்தகர்களின் வியாபாரம் செழிக்க, தொழில்நுட்ப உதவியுடன் கூடிய புதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது.


இது குறித்து, முகேஷ் அம்பானி கூறியதாவது:வலைதளம் வாயிலான விற்பனையை, கடைகளில் மேற்கொள்ளும் விற்பனையுடன் இணைக்கும் புதிய மின்னணு வர்த்தக நடைமுறையை, நிறுவனம் உருவாக்கி வருகிறது.வேலைவாய்ப்புஇது, உலகிலேயே மிகப் பெரிய வர்த்தக வடிவமாக விளங்கும்.


இத்திட்டம், மூன்று கோடி வணிகர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். அவர்கள், புதிய தொழில்நுட்ப உதவியுடன், பெரிய நிறுவனங்கள் மற்றும் ‘மெகா’ மின்னணு வர்த்தக நிறுவனங்கள் செய்யும் அனைத்து விதமான வர்த்தக நடைமுறைகளை சுலபமாக மேற்கொள்ள முடியும்.ஒவ்வொரு மனிதரின் வாழ்வையும் சுலபமாக்க வேண்டும். சிறு, நடுத்தர நிறுவனங்கள் சுலபமாக தொழில் புரிய வேண்டும்.


இந்த கொள்கைகளை, ரிலையன்ஸ் மற்றும் ஆர்ஜியோ நிறைவேற்றும் என, உறுதி கூறுகிறேன்.ஆர்ஜியோவின் புதிய திட்டம், ஒடிசாவைச் சேர்ந்த, லட்சக்கணக்கான திறமையான இளைஞர்களுக்கு, சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்புகளை வழங்கும்.ரிலையன்ஸ் ஜியோ மூலம், 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.


ஆர்ஜியோ சேவை துவங்கிய பின், உலகளவில், மொபைல் போன் வாயிலான இணைய பயன்பாட்டில், இந்தியா, 150வது இடத்தில் இருந்து, முதலிடத்திற்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.அடுத்த இலக்குதொலை தொடர்பு துறையில், ‘ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பி.எஸ்.என்.எல்.,’ ஆகிய நிறுவனங்களை ஓரங்கட்டி, ஆர்ஜியோ, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அடுத்த சில மாதங்களில், ஏர்டெல்லை விஞ்சி, இரண்டாவது இடத்தை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், மின்னணு வணிகத்தில், முதலிரண்டு இடங்களில் உள்ள, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய தொழில்நுட்பத்தில் மின்னணு வணிகத்தில் களமிறங்க, ஆர்ஜியோ தயாராகி வருகிறது

டிச., 10ல் அரையாண்டு தேர்வு: பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: ''தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.
டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.10ம் வகுப்புடிச., 10 - தமிழ் அல்லது மொழி பாடம் முதல் தாள்; டிச., 11 - தமிழ் அல்லது மொழி பாடம் இரண்டாம் தாள்; 13, 14ல், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள்; 17ல் கணிதம்; 18ல் விருப்ப பாடம்; 19ல், அறிவியல்; டிச., 22ல், சமூக அறிவியல்பிளஸ் 1 வகுப்புடிச., 10 - மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்வி; 17ல், இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செயலக பணி மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 22 - வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்பிளஸ், 2 வகுப்புடிச., 10 - மொழி பாடம்; 11ல், ஆங்கிலம்; 12ல், தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல் மற்றும் புள்ளியியல்டிச., 14 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டசத்து மற்றும் உணவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் பொது மற்றும் தொழிற்கல்விடிச., 17 - இயற்பியல், பொருளியல், பொது இயந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்ட் அப்ளைன்சஸ், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்டிச., 19 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கருத்தியல்; டிச., 22 - வேதியியல் கணக்கு பதிவியல் மற்றும் புவியியல்.இவ்வாறு தேர்வு அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.இந்த தேர்வுகள் முடிந்ததும், அனைத்து பள்ளிகளுக்கும், டிச., 23 முதல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்படும். ஜன., 2ல், மீண்டும் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும்.

கஜா புயல் எதிரொலி - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

                                              
தஞ்சை, மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர்,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
நாகை,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
காரைக்கால்,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூர்,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுச்சேரி,  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
விழுப்புரம்  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நவம்பர் 15-ஆம் தேதி முற்பகலில் கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
கஜா புயலானது தற்போது நாகைக்கு கடகிழக்கே 770 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது சென்னை - நாகை இடையே நவம்பர்-15 அன்று கரையை கடக்கும். இதன் கரணமாக நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் புயல் கரையை கடக்கும் வரை கனமழை பெய்யக் கூடும்.

கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுக்கூடும். சில சமயங்களில் 100 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இந்த பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 

தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடல் அலையின் உயரம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். மீனவர்கள் வரும் 15-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல், வரும் 15ஆம் தேதியன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு:

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், டிசம்பர், 10ல், அரையாண்டு தேர்வு துவங்கும்,'' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.

டிச., 23 முதல் ஜன., 1 வரை விடுமுறை விடப்படுகிறது.

இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட தேர்வு அட்டவணை:பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ், 1 மற்றும் பிளஸ், 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை மாணவர்களுக்கு அறிவித்து, உரிய பயிற்சிகளை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். காலை, 10:00 முதல், 12:45 மணி வரை தேர்வு நடக்கும். முதல், 15 நிமிடங்கள், வினாத்தாள் படித்தல், மாணவர் விபரங்களை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்படும்.

Best Science Teacher Award 2018 - Instructions And Application Form

ஆபரேஷன் இ' திட்டத்தை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்*


*வாரம் ஒரு நாள் முன்னறிவிப்பின்றி பத்து அதிகாரிகள் குழு ஒரே நேரத்தில் பள்ளிகளில் ஆய்வு செய்யும் இத்திட்டத்தை சி.இ.ஓ.,வாக இருந்த கோபிதாஸ் துவக்கினார்*



*இத்திட்டம் ஆசிரியர் மற்றும் பள்ளி நற்செயல்பாடுகளை விட குறைபாட்டை அதிகம் சுட்டிக்காட்டுவதாகவும், ஆசிரியரை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்*


*மாநகராட்சி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ''ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் 'கழுகு பார்வை' கொண்டு ஆசிரியரை பார்க்கின்றனர்*


*எந்த மாவட்டத்திலும் இத்திட்டம் இல்லை. மாநகராட்சி பள்ளிகள் நல்ல தேர்ச்சியை பெற்றுள்ளன. இத்திட்டம் தேவையில்லை,'' என்றார்*


*முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சந்திரன் கூறுகையில், 'பள்ளிகள் கல்வி கற்பிக்கும் இடம். அங்கு 'ஆபரேஷன்-இ' என ஏதோ தீவிரவாதியை பிடிப்பதாக பெயர் வைக்கப்பட்டுள்ளது*


 *இதை ரத்து செய்ய வேண்டும். அல்லது கல்வி ஆலோசனை குழு என பெயர் மாற்றம் வேண்டும்,' என்றனர்

கற்றல் விளைவுகள்' பயிற்சி

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', பயிற்சி நடத்தப்பட உள்ளது

மாணவர்களுக்கு எளிமையான கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்வியாண்டுதோறும் பயிற்சி அளிக்கப்படுகிறது

நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்ககம், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை இணைத்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது
இதனால், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடக்கிறது. மாணவர்களின் கற்றல் திறன்களை அளவீடு செய்வதற்கு, மாநில மற்றும் தேசிய அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது
இந்தத்தேர்வுகளில், மாணவர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில், கற்றல் மற்றும் கற்பித்தல் பயிற்சிகள் வழங்கப்படுகிறது
நடப்பாண்டில், இத்தகைய தேர்வுகளை கையாள்வதற்கும், அடைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தவும், ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்', புதிய பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

கொதிக்கும் சூரியனை ஆராய புறப்பட்ட தி பார்கர் சோலார் ப்ரோப்: தாங்குமா?

                                   
தொடர்ந்து பல்வேறு நாடுகள் பல விண்கலன்களை விண்ணில் அனுப்பிக் கொண்டே தான் இருக்கிறது, இந்நிலையில் நாசா தனது புதிய யோசனையை செயல்படுத்தி உள்ளது, அது என்னவென்றால் நாசா உருவாக்கியுள்ள பார்கர் சோலார் விண்கலம், சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது.

நாசா அமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த பார்க்கர் சோலார் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது, அதன்படி ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து தான், இந்த பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 612கிலோ எடை
இந்த விண்கலம் சுமார் 612கிலோ எடை, 9அடி 10-இன்ச் நீளமும் கொண்டுள்ளது, பின்பு சூரியனின் மேற்பரப்பு வரை சென்று சூரியனை ஆய்வு செய்து இதுவரை தெரியாத பல தகவல்கள் வழங்கியுள்ளது.


 1400 டிகிரி செல்சியஸ்
இதற்குவேண்டி 1400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் கார்பனால் உருவாக்கப்பட்ட வெளித்தகடு இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக வெப்பச் சலனம், வெப்பக் கடத்தல் வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்படாத அளவுக்கு பார்கர் விண்கலம் தயார் செய்து பாதுகாப்பாக சென்றுள்ளது.


ஜெர்மனி-அமெரிக்கா
இதேபோன்று கடந்த 1976-ம் ஆண்டு ஜெர்மனி-அமெரிக்கா கூட்டனியில் ஏவப்பட்ட ஹீலியோஸ் 2 என்ற விண்கலம் 42.73 மில்லியன் கிலோ மீட்டர் சூரியனை நெருங்கி சென்றது. இப்போது அனுப்பபட்ட பார்க்கர் சோலார் விண்கலம் 42.73 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து சென்று ஹீலியோஸ் 2 விண்கலத்தின் சாதனை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 3.8மில்லியன்
விரைவில் (2024) இந்த பார்க்கர் சோலார் விண்கலம் சூரியனை நெருங்கிவிடும் என்றும், பின்பு 3.8மில்லியன் தொலைவில் சூரியனின்
மேற்பரப்புக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டு, 24மணி நேரமும் கண்காணித்து தகவல்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி வளாகத்தில் கொசு:- பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

பள்ளி வளாகத்தில் கொசு அதிக அளவில் இருப்பதால்
ஒரு வார காலம் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளிக்கு ஒரு வாரம் காலம் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில், பெருந்துறை அடுத்த சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளி வளாகத்தில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால், மாணவர்களின் நலன் கருதி ஒரு வார காலம் விடுமுறை அளிக்கப்படுகிறது

பணிக்கொடைக்கான காலவரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்க மத்திய அரசு பரிசீலனை

பணிக்கொடை பெறுவதற்கான காலவரம்பை ஐந்தாண்டுகளில் இருந்து மூன்றாண்டுகளாகக் குறைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 1972ஆம் ஆண்டின் பணிக்கொடைச் சட்டப்படி ஒருவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்றியிருந்தால்அவருக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும்



இந்தப் பணிக்கொடைக்கான காலவரம்பைக் குறைப்பது பற்றித் தொழில்துறையினரிடமிருந்து தொழிலாளர் நல அமைச்சகம் கருத்துக்களைக் கேட்டிருந்தது. அதன்படி பணிக்கொடைக்கான காலவரம்பை 5ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறைக்கச் சட்டத்திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இதனால் அமைப்புச்சார்ந்த பிரிவில் பணியாற்றும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைவர்.3ஆண்டுக் காலத்துக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளவர்களும் இதன்மூலம் பயனடைவர். இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை கிடையாது

துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி: 'மாத்தி யோசித்த' மாணவியர்!

                                         எம்.சாண்டுக்கு பதிலாக கட்டட கழிவில் இருந்து மாற்று மணல், துணிக்கழிவில் இருந்து தீக்குச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், பள்ளி மாணவ, மாணவியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.

அரசூர் கே.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. 'கழிவில் இருந்து வளம்' (வேஸ்ட் டூ வெல்த்) என்ற தலைப்பில் மாணவ, மாணவியரின் ஆய்வு கட்டுரைகள், புதிய கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டன.திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த செஞ்சுரி பவுண்டேஷன் மெட்ரிக் பள்ளி ஒன்பதாம் வகுப்பு தமிழ் பிரிவு மாணவியர் தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீசக்தி சிநேகா ஆகியோர் தங்களது ஆய்வை சமர்ப்பித்தனர்.

அதில், பின்னலாடை கழிவுகளில் இருந்து கட்டிங் வேஸ்ட், அயர்னிங் வேஸ்ட், பஞ்சு வேஸ்ட்டுகளில் இருந்து காட்டன் தீக்குச்சி, சானிடரி நாப்கின், பை, கால்மிதி கார்பெட் மற்றும் ஒலித்தடுப்பு பலகைகள் செய்திருந்தனர். இந்த மறுசுழற்சி பொருட்களின் விலை, சந்தையில் அதே வகையான பொருட்களை விட, 50 சதவீதம் குறைவாகவும், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கலக்காத சுற்றுச்சூழல் காக்கும் விதமாகவும் இருக்கும் என்பதை விளக்கி, பாராட்டு பெற்றனர்.இதே பள்ளி ஆங்கிலப்பிரிவு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிஷோர் மற்றும் அஸ்வின் ஆகியோர், கட்டட கழிவுகளில் இருந்து டைல்ஸ், கான்கிரீட் கல், கிராதிகளை தயாரித்திருந்தனர். சிப்ஸ், ஜல்லிக்கு பதிலாக, 4.75 மி.மீ., அளவுள்ள மாற்று ஜல்லியை பயன்படுத்தலாம். 2.36 மி.மீ., அளவிலான மணலை, ஆற்று மணலுக்கும், எம்.சாண்டுக்கும் மாற்று மணலாக பயன்படுத்த முடியும் என்று விளக்கினர்.

அம்மாணவர்கள் கூறுகையில், 'எங்கள் பள்ளி கேண்டீனில் தரைத்தளம் அமைக்க இவற்றை பயன்படுத்தினோம். தமிழக அரசு திட்ட வடிவமைப்பு பொறியாளர் அருண் தம்புராஜ் மற்றும் பொதுப்பணித்துறை மாநில உதவி நிர்வாகப்பொறியாளர் பொதுப்பணித்திலகம் போன்றோர் இந்த ஆய்வு குறித்து விசாரித்துள்ளனர்' என்றனர்.அறிவியல் ஆசிரியர்கள் பாரத் மற்றும் கலைவாணி ஆகியோர் ஆய்வறிக்கை சமர்ப்பித்த, தங்கள் பள்ளி மாணவர்களை பாராட்டினர்

ரெட் அலர்ட் வாபஸ்!!

கஜா புயல் காரணமாக விடுக்கப்பட்ட
'ரெட் அலர்ட்' எச்சரிக்கையானது தமிழக மக்களுக்கு இல்லை, நிர்வாகத்திற்கு மட்டுமே என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சற்றுமுன் புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாக்கி உள்ள காஜா புயல் வரும் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, கரையை கடக்கும் போது, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை மையம்,



இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
கஜா புயல் அடுத்த12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். நவம்பர் 15ஆம் தேதி முற்பகல் கடலூர்-பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 840கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 750கி.மீ. தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தை நோக்கி 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வடகடலோர மாவட்டங்களில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மழை பெய்யும் என்றும், தமிழக கடலோர பகுதிகளில் 15ம் தேதி 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 20 செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



இன்று மாலையில் இருந்து தமிழகத்தில் புயலுக்கான அறிகுறி தெரியும், அதாவது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. 10 தேசிய பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்ததந்த பகுதிகளுக்கு சென்று முன்னெச்சரிக்ககை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வானிலை மையம், தமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையானது, பொது மக்களுக்கு இல்லை எனவும், அது அரசு நிர்வாகத்திற்கு மட்டும் தான் என வானிலை மையம் அந்தர் பல்டி அடித்துள்ளது. மேலும், கடந்த வருடங்களில் வந்த தானே புயல், வரதா புயல் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை இருக்காது எனவும் தெரிவித்துள்ளது

டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை வருகை பதிவு-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் ஈரோடு நம்பியூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களின் வருகை பதிவு தொடர்பான பயோ மெட்ரிக் முறை டிசம்பருக்குள் 1000 பள்ளிகளில் தொடங்கப்படும். விரைவில் 1.50 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடத்தப்படும்.


சென்னை, காஞ்சிபுரம் கோவை போன்ற இடங்களில் கேபிள் மூலம் 300 பள்ளிகளுக்கு இலவச இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்படும். கேபிள் மூலம் ஸ்மார்ட் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார் 

CPS திட்டம் - கணக்குகளை பராமரிக்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு முடிவு - ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

ஆசிரியர்களுக்கு சேரவேண்டிய பணப்பலன்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க அனைத்துக் கல்வி அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் முகாம் நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

TNPSC GROUP -2 தேர்வு உத்தேச விடைகள் இன்று வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 11-ந்தேதி குரூப்-2 தேர்வினை தமிழகம் முழுவதும் 116 மையங்களில் நடத்தியது. மேற்படி தேர்வுக்கான உத்தேச விடைகள் 14-ந் தேதி(இன்று) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.



இவ்வாறு வெளியிடப்படும் உத்தேச விடைகளில் தவறு இருப்பின் விண்ணப்பதாரர்கள் அதனை தேர்வாணையத்திற்கு தெரிவித்து சரியான விடைகளைக் கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு வந்தன. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதை குறைக்க தேர்வாணையம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

வினாத்தாள் குறித்த கோரிக்கைகள் இந்த குரூப்-2 தேர்வு முதல் இணையவழியில் மட்டுமே பெறப்படும். தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே அத்தேர்வுக்குரிய உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும். தேர்வர்கள் எந்த வரிசை கேள்வித்தாளை பயன்படுத்தி விடையளித்திருந்தாலும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி கேள்வித் தாள் வரிசையில் உள்ளபடி மட்டுமே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுத்து சரியான விடைகளை கோர முடியும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்ய வேண்டும். பதிவு எண், விண்ணப்ப எண் ஆகிய இரண்டும் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டிலேயே (ஹால் டிக்கெட்) இருக்கும். தேர்வர்கள் தேர்வு எழுதிய பாடத்தினை தேர்வு செய்து பின்னர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கேள்வித்தாள் வரிசையில் உள்ளபடி வினா எண்ணை தேர்வு செய்தால் அதற்கான கேள்வி மற்றும் சரியான விடைக்குறிப்பு திரையில் தோன்றும். விடைக்குறிப்பில் விடைகளில் மாறுபட்ட கருத்து இருப்பின் அதன் கீழே தோன்றும் சரியான விடை, விடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் அதன் கீழே இருக்கும் குறிப்பு காலத்தில் தேர்வர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம். அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது, அதன் ஆசிரியர், பதிப்பு வருடம், பதிப்பாளர், பக்க எண் ஆகிய தகவல்களை உள்ளடு செய்ய வேண்டும்.

தேர்வர்கள் தெரிவித்த விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங்களை ‘பி.டி.எப்.’ கோப்புகளாக பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் தெரிவிக்கும் விடைகள் எந்த புத்தகத்தில் உள்ளது என்பதற் கான தகவல்களும் விடைக்கு வலுசேர்க்கும் உரிய ஆவணங் களும் இல்லாத கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

ஒருவர் எத்தனை விடைகளுக்கு வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கலாம். கையால் எழுதப்பட்ட குறிப்புகள் விடைக்கான ஆதாரமாக கருதப்படமாட்டாது. அஞ்சல், மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. வருகிற 20-ந்தேதிக்குள் தேர்வர் கள் இதை செய்ய வேண்டும். அதற்கு மேல் வரும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்

நீதிக்கதை



பொறுப்பு

ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.

யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.

ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.

மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆறுமாதம் சென்றது.

குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.

""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.

""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.

""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.

""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.

ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.

""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லா  பம் கிடைக்குமே என்று நினைத்தேன்.

நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.

பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.

அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.