யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

10/8/16

" கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம்-1992 "

என்றால் என்ன? "  சட்ட எண் :57 /1992 "
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாய நன்கொடையாக. வசூலிப்பதை தடை செய்வதற்காக. 20.08.1992. ஆம் ஆண்டு  "கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் "கொண்டு வரப்பட்டது.

இசசட்டப்பிரிவு -2 (b) ன் படி
பல்கலை கழகங்கள், சட்டம், மருத்துவம் , பொறியியல் கல்லூரிகள்,  பட்டயபடிப்பு கல்வி நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், தனியார் அமைப்பை சார்ந்த கல்வி நிலையங்களில் சட்டப்பிரிவு 3 (a)  மற்றும் (b)  ன் கீழ் கட்டாய நன்கொடை (Capitation Fee)  வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டப்பிரிவு -4 (3)  ன் படி ஒவ்வொரு கல்வி நிலையமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் வைப்பீட்டு தொகைக்கு  அதிகார முறை பற்றுச்சீட்டு (Recept)   கண்டிப்பாக வழங்க வேண்டும்.

 இச்சட்டப்பிரிவு 7 (1)  கீழ் கட்டாய நன் கொடை வசூலித்தது  தெரிய வந்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும், ஐயாயிரம் ருபாய் அபராதமும்  விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

இச்சட்டப்பிரிவு 7 (2)  b ன் படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை  மாணவர்களுக்கு திருப்பி  கொடுக்க வேண்டும்.

கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டப் பிரிவு  -   9 (1)  ன் படி புகாருக்குள்ளாகும் கல்வி நிலையகளை முன்னறிவிப்பின்றி சோதளை இடவும், ஆவணங்களையும், பதிவேடுகளையும் கைப்பற்றும் அதிகாரம் மாவட்ட. கல்வி அலுவலர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே  கட்டாய நன் கொடை கேட்பவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புங்கள்.

  அரசியலமைப்புச்சாசனம் - 19 ( 1)  அ. வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "

அதிகாலையில் கண் விழித்தால் ஸ்லிம் ஆகலாம்..!

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு.
1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர்.
ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.

DEE ERODE DISTRICT VACANT LIST 2016:

இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்



இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. 


பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர். இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



அதில், 'இடைநிலை ஆசிரியர்களை, ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யும் போது, பள்ளியளவில் பணிமூப்பில் இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும், இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்ய வேண்டிய ஆசிரியர் பட்டியலை தயார்  செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

BRC Training(Tentative):*



*Primary
 2 Days on
 Aug'29 & 30
Topic:
Maths kit Box Training....

*Upper Primary 
3 Days on 
Sep'6, 7 & 8
Science Training..

விழிப்புணர்வு செய்திகள்



ஈரோடு ஒன்றியத்தில் 31.8.2015 ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிட்டுப்பார்த்ததில் 42 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.31.7.2016 தேதிப்படி கணக்கிட்டால் 60 ஆசிரியருக்கு மேல் உபரியாக உள்ளனர்.காரணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.இதனால் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் உள்ள 42 ஆசிரியர்கள் தாளவாடி,சத்தியமங்களம்,அந்தியூர் போன்ற ஒன்றியங்களுக்கு கட்டாய மாறுதலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாநகராட்சியில் 8 பணியிடங்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இச்சூழ்நிலையில் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி உங்கள் பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைத்தொழிலாளர்கள்,பள்ளிக்குச் செல்லாமல் விளையாடுபவர்கள்,மெட்ரிக்குலேசன் ,தனியார் ஆங்கில வழி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை குறி வைத்து நேரில் சென்று பேசி பள்ளியின் சிறப்புக்களையும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.நமக்குப் பாதிப்பு இல்லையே,யாரைத்தூக்கி எங்கு மாற்றினால் என்ன என்ற குறுகிய மனதோடு இருந்து விடாதீர்கள்.நீங்கள் (Hm or Teacher) பணியாற்றுகின்ற காலத்தில் ஒரு பணியிடத்தை ஒழித்துக்கட்டுவது என்பது வேதனைக்கறிய மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழையாகும்.இதே பணிநிரவலால் நாம்  ஒவ்வொருவரும் பாதிக்கின்ற காலம் தொலைவில் இல்லை என்பதை மனதில் வையுங்கள்.ஆகவே இப்பொழுது நாம் செய்ய வேண்டுய பணி நாளை உங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை AEO வை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.அப்படி பாதித்திருந்தால் உங்கள் பள்ளியில் உள்ள மொத்த ஆசிரியர்களும் எட்டுத்திசையும் சென்று மாணவர்களைச் சேர்த்துங்கள்.VEC,PTA,SMC உதவியை நாடுங்கள்.கடைசி வாய்ப்பு பணி நிரவல் நடைபெறும் நாளுக்கு முன்பாக 12.8.2016 ல் மாணவர் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.ஆகவே இது வேகமாக செயல்படும் நேரம்.நமது சந்ததி நமக்கு விட்டுச்சென்ற நாற்காலியில் அமர்ந்து லட்சக்கணக்கில் பணப்பயனை அனுபவித்துவிட்டு அதை உடைத்து நொறுக்கி சமாதிகட்டிவிட்டு யாருடைய வியர்வையாலோ மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிக்குச்சென்று பாதுகாப்புத்தேடலாம் என நினைக்க வேண்டாம்.மாணவர் குறைவுக்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நாம் காரணமாக இருக்க வேண்டாம்.(மேலே உள்ளவை என் கருத்தல்ல போதி மரத்தின் அடியில் நின்று ஒரு பெரியவர் சொன்னது என் செவியில் விழுந்தது).நான் கூறிய பணி நிரவல் புள்ளி விபரங்கள் மிகத்துள்ளியமானதல்ல நீங்கள் அலுவலகத்தில் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்று ஈரோடு ஒன்றியத்துக்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் ஏற்படலாம். விழித்துக்கொள்வோம் இனிமேலாது.