ஈரோடு ஒன்றியத்தில் 31.8.2015 ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிட்டுப்பார்த்ததில் 42 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.31.7.2016 தேதிப்படி கணக்கிட்டால் 60 ஆசிரியருக்கு மேல் உபரியாக உள்ளனர்.காரணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.இதனால் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் உள்ள 42 ஆசிரியர்கள் தாளவாடி,சத்தியமங்களம்,அந்தியூர் போன்ற ஒன்றியங்களுக்கு கட்டாய மாறுதலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாநகராட்சியில் 8 பணியிடங்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இச்சூழ்நிலையில் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி உங்கள் பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைத்தொழிலாளர்கள்,பள்ளிக்குச் செல்லாமல் விளையாடுபவர்கள்,மெட்ரிக்குலேசன் ,தனியார் ஆங்கில வழி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை குறி வைத்து நேரில் சென்று பேசி பள்ளியின் சிறப்புக்களையும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.நமக்குப் பாதிப்பு இல்லையே,யாரைத்தூக்கி எங்கு மாற்றினால் என்ன என்ற குறுகிய மனதோடு இருந்து விடாதீர்கள்.நீங்கள் (Hm or Teacher) பணியாற்றுகின்ற காலத்தில் ஒரு பணியிடத்தை ஒழித்துக்கட்டுவது என்பது வேதனைக்கறிய மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழையாகும்.இதே பணிநிரவலால் நாம் ஒவ்வொருவரும் பாதிக்கின்ற காலம் தொலைவில் இல்லை என்பதை மனதில் வையுங்கள்.ஆகவே இப்பொழுது நாம் செய்ய வேண்டுய பணி நாளை உங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை AEO வை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.அப்படி பாதித்திருந்தால் உங்கள் பள்ளியில் உள்ள மொத்த ஆசிரியர்களும் எட்டுத்திசையும் சென்று மாணவர்களைச் சேர்த்துங்கள்.VEC,PTA,SMC உதவியை நாடுங்கள்.கடைசி வாய்ப்பு பணி நிரவல் நடைபெறும் நாளுக்கு முன்பாக 12.8.2016 ல் மாணவர் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.ஆகவே இது வேகமாக செயல்படும் நேரம்.நமது சந்ததி நமக்கு விட்டுச்சென்ற நாற்காலியில் அமர்ந்து லட்சக்கணக்கில் பணப்பயனை அனுபவித்துவிட்டு அதை உடைத்து நொறுக்கி சமாதிகட்டிவிட்டு யாருடைய வியர்வையாலோ மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிக்குச்சென்று பாதுகாப்புத்தேடலாம் என நினைக்க வேண்டாம்.மாணவர் குறைவுக்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நாம் காரணமாக இருக்க வேண்டாம்.(மேலே உள்ளவை என் கருத்தல்ல போதி மரத்தின் அடியில் நின்று ஒரு பெரியவர் சொன்னது என் செவியில் விழுந்தது).நான் கூறிய பணி நிரவல் புள்ளி விபரங்கள் மிகத்துள்ளியமானதல்ல நீங்கள் அலுவலகத்தில் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இன்று ஈரோடு ஒன்றியத்துக்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் ஏற்படலாம். விழித்துக்கொள்வோம் இனிமேலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக