யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/5/17

GPF/TPF Account Statement-Now Available for the year 2014-15 & 2015-16

உங்கள்  TPF  கணக்கை  
நீங்களே   சரிபார்க்க  வேண்டும்.நீங்கள்உடனடியாக 
செய்யவேண்டியவை :



www.agae.tn.nic.in   என்ற   முகவரிக்குச்   சென்று ,

download TPF account statements for the year 2014-15 /2015-2016 என்ற option  ஐ  click  செய்யுங்கள் .


Log in page  வரும் ,  அதில்

GPF no : ( உங்கள்  TPF  எண் .)

Dob :(  உங்கள்   பிறந்த   தேதி ).

Suffix : PTPF

என   கொடுத்து  login  செய்யுங்கள் .


உங்கள்   பெயருடைய  AG  பக்கம்   தோன்றும் .  அதில்

view account slip  ஐ  click  செய்தால்  financial year கேட்கும் ,  அதில் 2014-15 / 2015-16 select  செய்து  view account slip ஐ  click  செய்தால் 2014-15 / 2015-16 ஆம்   ஆண்டிற்கான  account slip download ஆகிவிடும் .  அதை  print  எடுத்துக்கொள்ளுங்கள் .


Print out  செய்த  account statement  ல்  -

1)  உங்கள்   பெயர்

2) TPF  கணக்கு   எண்

3)  பிறந்த   தேதி

4)  கருவூலத்தின்   பெயர்

5)  வட்டிவீதம்

6) 12  மாத   சந்தா   பிடித்தம்   பதிவுகள் ,  கடன்  செலுத்தியபதிவுகள் ,  பெற்ற   கடன்   பதிவுகள்

7) opening/closing balance

8)  விடுபட்ட   சத்தா   விவரங்கள்

9)  கணக்கு   அதிகாரியின்   கையொப்பம் .

என   எல்லா   விவரங்களையும்  சரிபார்த்துக்கொள்ளுங்கள் .



Mobile update  சென்று   உங்கள்  mobile  எண்ணை  பதிவுசெய்யுங்கள் .   கடைசியாக  logout  கொடுத்து  வெளியேறுங்கள் .

நீட்’ தேர்வு; மூக்குத்தி, மோதிரம், பைஜாமாவுக்கு தடை

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, ’நீட்’ நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்போர், மூக்குத்தி, மோதிரம் போன்ற ஆபரணங்களும், குர்தா, பைஜாமா போன்ற உடைகளும் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், ’நீட்’ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்நிலையில், ’நீட்’ தேர்வு நாடு முழுவதும், நாளை நடக்கிறது. 

தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார், திருநெல்வேலி உட்பட, நாடு முழுவதும், 103 நகரங்களில், ’நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

 காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, பகல், 1:00 மணிக்கு முடியும்; 9:30 மணி வரை மட்டுமே, தேர்வறைக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். தாமதமாக வருவோருக்கு அனுமதி இல்லை. தேர்வு மைய வாசலில், ’நீட்’ இணையதள நேரப்படி இயங்கும் கடிகாரம் இருக்கும். 

அந்த நேரப்படியே தேர்வுகள் நடக்கும் தேர்வறைக்குள், பாஸ்போர்ட் வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ஹால் டிக்கெட்; போஸ்ட்கார்டு வடிவில் புகைப்படம் ஒட்டப்பட்ட, ’புரோபர்மா’ படிவம் மற்றும் தேர்வறையில் பதிவேட்டில் ஒட்டுவதற்கு, ஒரு பாஸ்போர்ட் வடிவ புகைப்படம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

தேர்வறையில் பேனா வழங்கப்படும்  காலை, 7:30 மணி முதல், 9:30 மணி வரை, தேர்வறையில் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9:30 முதல், 9:45 மணி வரை, ஹால் டிக்கெட் சோதனை நடக்கும். 9:45க்கு வினா, விடைத்தாள் உறை வழங்கப்படும். 

9:55க்கு உறையை பிரித்து, 10:00 மணிக்கு தேர்வை எழுதலாம் 
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அசாமி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில், வினாத்தாள்கள் வழங்கப்படும். 

எந்த மொழிக்கு, தேர்வர்கள் விண்ணப்பித்தார்களோ, அதில் வினாத்தாள் வழங்கப்படும்; அதே மொழியில் பதில் எழுதலாம்.
பேனா, பென்சில், எழுத்தை அழிக்கும் ரப்பர், எந்த விதமான வெற்று அல்லது எழுத்துகள் கொண்ட காகிதம், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள். 

மொபைல்போன், பேஜர், இயர்போன், ஹெல்த் பேண்ட் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை 
தொப்பி, கைப்பை, தோள் பை, பெல்ட், கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட அனைத்து வகை ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவற்றையும் கொண்டு செல்லக்கூடாது 
’ஹாப் ஸ்லீவ்ஸ்’ என்ற, அரை கை உடைய, மெல்லிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். 

பெரிய பொத்தான், பேட்ஜ், பூ போன்ற சிறப்பு அலங்காரம் கூடாது. சல்வார் மற்றும் பேன்ட் அணிந்து வர வேண்டும். ஹீல்ஸ் அதிகம் இல்லாத சாதாரண வகை, செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். ஷூ, சாக்ஸுக்கு அனுமதி கிடையாது.

அடையாள அட்டை அவசியம்

’நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் சிலர், புகைப்படம் மற்றும் கையெழுத்தை மாற்றி பதிவேற்றியுள்ளனர். எனவே, ஹால் டிக்கெட்டில் புகைப்படம் மாறி வந்த தேர்வர்கள், தங்களின் அசல் ஆதார் அட்டை அல்லது அரசு வழங்கிய ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தேர்வு மையத்துக்கு கட்டாயம் எடுத்து வரவேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

ஏழை மாணவர்களுக்கு இலவச ’அட்மிஷன்’;அலட்சியத்தால் ரூ.320 கோடி நஷ்டம்

இலவச மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு உத்தரவை, தனியார் பள்ளிகள் பின்பற்றாததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2010 ஆகஸ்டில் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, ஏழை மாணவர்கள், தனியார் பள்ளிகளில்,கட்டணமின்றி சேர்க்கப்பட வேண்டும்.


தனியார் பள்ளியில் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை, இத்தகைய ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டியது கட்டாயம். ஐந்து வயது முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணமின்றி கல்வி வழங்க வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கும். 

தமிழக அரசு, அந்த நிதியை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும். மத்திய அரசு சட்டப்படி, ஐந்து வயது முடிந்த குழந்தைகள், ஒன்றாம் வகுப்பில், இலவசமாக சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை செயல்படுத்துவதில், தமிழகத்தில் மட்டும் குளறுபடியான நடைமுறை உள்ளது.

அதாவது, தமிழக தனியார் பள்ளிகளில், மழலையர் வகுப்பு என்ற பெயரில், எல்.கே.ஜி.,யில், இலவசமாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதிலும், மூன்று வயது நிரம்பிய குழந்தைகள் தான் சேர்க்கப்படுகின்றனர். 

இது, மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக, மத்திய மனிதவள அமைச்சகம், பலமுறை எச்சரித்துள்ளது. ஆனாலும், தமிழக பள்ளிக் கல்வித் துறை கண்டுகொள்ளவில்லை. அதனால், 2011 முதல், மத்திய அரசு நிதி வழங்கு வதை நிறுத்தியது. எனவே, ஒவ்வொரு ஆண்டும், இலவச மாணவர் சேர்க்கைக்காக, தமிழக அரசுக்கு, 120 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. 

இது குறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது

மத்திய சட்டப்படி, ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதன்பின், இலவச மாணவர்சேர்க்கைக்கான நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற முடியும். ஆனால், தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. அதனால், இதுவரை, 320 கோடி ரூபாயை இழந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி!

நான்காக பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு கை காட்டி நான்கு திசைகளையும் காட்டிக் கொண்டு நிற்கும்! இந்த திசையில் போனால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் போனால் அந்த ஊருக்குப் போகலாம் என்று, நமக்கு நான்கு திசைகளில் எங்கு, எங்கு போக முடியும் என்று நமக்கு வழி காட்டும்!


அது ஒரு தகவல் பலகை... நமக்கு வழி காட்டுவது தான் அதன் வேலை!  அதே, நம்மை அந்தந்த ஊர்களுக்கு கூட்டிக்கொண்டு போய் விடாது; அது போல் தான் புத்தகமும்!  நல்ல புத்தகம் ஒரு வழிகாட்டி! அதுவும் ஒரு தகவல் பலகை தான்!

மனிதன் சுயமாக எப்படி முன்னேறுவது என்று ஆயிரம் புத்தகங்கள் வந்து விட்டன. பல வீடுகளில் அலமாரி நிறைய இது போன்ற புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பார்கள்.

கோடீஸ்வரன் ஆவது எப்படி?
சுலபமாக தொழிலதிபர் ஆக வேண்டுமா?
ஆட்சியைப் பிடிப்பது எப்படி?
நீங்கள் டாக்டர் ஆக வேண்டுமா?
என்ற பல தலைப்புகளில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தப் புத்தகங்களில் பல அறிஞர்கள் தங்கள் வாழ்நாளில் பட்ட அனுபவங்களை, நமக்கு வழி காட்ட எழுதி வைத்திருப்பார்கள். அது நிச்சயம் நமக்குப் பயன்படும்!

எவ்வளவு நல்ல புத்தகமாக இருந்தாலும், நாம் அதைப்  படிப்பதினால் மட்டும் எந்த பயனும் இல்லை. அந்த புத்தகத்தில், அறிஞர்கள் சொன்ன, நல்ல கருத்துகளை நாம் செயல்படுத்த தொடங்கினால் மட்டுமே, அது நமக்கு பலன் தரும்!

அதில் சொல்லப்பட்ட வழிகளைப் பின்பற்றி அயராது பாடுபட வேண்டும். எந்த தடை குறுக்கிட்டாலும் அஞ்சாமல் அதை தகர்த்து எறிந்து விட்டு முன்னேற வேண்டும். கோடிஸ்வரன் ஆக வேண்டுமா? என்ற புத்தகத்தை வாங்கி, அதைப்படித்து விட்டு அட்டை போட்டு புத்தக அலமாரியில் அடுக்கி வைத்து விட்டு, பக்கத்து தெருவில் இருக்கும் ஏ.டி.எம்., மிஷினில் போய் கார்டை சொருகி பணத்தை அள்ளிக் கொண்டு வந்து விட முடியாது!

அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழி முறைகளை கடைப் பிடிப்பதற்காக, நம்மையே நாம் அர்ப்பணிக்க வேண்டும். ‘ஏட்டுச் சுரைக் காய் கறிக்கு உதவாது’ என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதைப் பலர் தவறாக இன்று வரை பொருள் கொண்டிருக்கிறார்கள். ‘இது போன்ற புத்தகங்கள் எல்லாம் நம் வாழ்க்கைக்கு உதவாது’ என்ற அர்த்தத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான சுரைக்காய் மட்டும் கறி ஆகி விடுமா? அதே பொரியலாக மாறி உங்கள் தட்டிற்கு வந்து விடுமா? நிச்சயம் வராது. அதை சுத்தம் செய்து பொடிப் பொடியாக அரிந்து அதற்கு தேவையான பொருட்களைச் சேர்த்து அடுப்பில் வைத்து சமைத்தால் மட்டுமே அதை கறியாக, நம்மால் சாப்பிட முடியும்!

அது போல் தான் இந்த வகை புத்தகங்களும், நிச்சயம் கறிக்கு உதவும்! எப்பொழுது? அதைப் படித்தவுடன், அதில் சொன்ன விஷயங்களை, புரிந்து கொண்டு, செயல்படுத்தி பாருங்கள்! நிச்சயம் உங்கள் வாழ்க்கை பிரகாசமாக அமையும்! 

-துடுப்பதி ரகுநாதன்

இடைநின்ற குழந்தைகள் அதிகாரிகள் கள ஆய்வு

அருப்புக்கோட்டை வட்டார வளமையத்தில், 6-14 வயதுள்ள இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் கள ஆய்வு நடந்தது. 


பாலவநத்தம், குல்லுர்சந்தை, செம்பட்டி, பாலையம்பட்டி, பந்தல்குடி, சுக்கிலநத்தம் ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு திட்டம், சைல்டு லைன் (1098), உமன் தொண்டு நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தியது.

இதுவரை 45 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திட்ட அலுவலர் நல்லதம்பி, ஒருங்கிணைப்பாளர் ஜெயஅனிட்டா ஆலோசனை வழங்கினர். 

ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், சைல்டு லைன், உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சங்கீதா செய்தனர்.

முதுகலை மருத்துவ வழக்கு; 3வது நீதிபதி இன்று உத்தரவு

முதுகலை மருத்துவப் படிப்பில் சேர, அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் நடைமுறை குறித்த வழக்கில், மூன்றாவது நீதிபதி, இன்று உத்தரவு பிறப்பிக்கிறார்.


இந்திய மருத்துவ கவுன்சில் வகுத்த விதிகளின்படி, முதுகலை மருத்துவப் படிப்பில், அரசு டாக்டர்களை சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுக்களை விசாரித்த, நீதிபதிகள், சசிதரன், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, ’சிறப்பு பெஞ்ச்’ மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. அதனால், இந்த வழக்கு, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு சென்றது.

நீதிபதி சத்தியநாராயணன், இந்த வழக்கை விசாரித்தார். நேற்று, மருத்துவப் கவுன்சில் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதாடினார். அனைத்து தரப்பு வழக்கறி ஞர்களின் வாதங்களும் நேற்று முடிந்தது. 

இதையடுத்து, மனுக்கள் மீதான உத்தரவை, இன்று பிறப்பிப்பதாக, நீதிபதி சத்திய நாராயணன் தெரிவித்தார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மதுரையில் பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திவ்யநாதன் தலைமையில் நடந்தது.


செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் கணேசன், ஜான்சிராணி, ஜெசின்தாமேரி முன்னிலை வகித்தனர். 
தலைவர் பொன்செல்வராஜ், துணை தலைவர் முகிலன், பொருளாளர் தமிழ்மணியன் பேசினர். 

கூட்டத்தில், பொது மாறுதல் கலந்தாய்விற்கு முன் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் உள்ள சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டும், அரசாணை 720ல் மாற்றமோ, திருத்தமோ செய்யக் கூடாது, ஆசிரியர்களுக்கு தற்போதுள்ள தன் பங்களிப்பு திட்டத்திற்கு (சி.பி.எஸ்.,) பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை (ஜி.பி.எஸ்.,) அமல்படுத்த வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதுகலை பட்ட படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும்,‘ என பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள முதுகலை பட்டப் படிப்புகளில், சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.எஸ்.சி., பயோ டெக்னாலஜி, மரபணுவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு அதிக போட்டி ஏற்படுகிறது. திறமையான மாணவரை தேர்வு செய்யும் வகையில், 
அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மே 27, 28 ல் தேர்வு நடக்கும். மே 15க்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுபோல் எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், எம்.ஏ., ஆங்கிலம், தமிழ் உட்பட சில படிப்புகளுக்கு மாநில அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படும். 

இதற்கான தேர்வு ஜூன் 18 ல் நடக்கிறது. இதற்கு மே 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள படிப்புகளுக்கு நுழைவு தேர்வு இல்லை, என்றார்.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் நாளை மாலை தீர்ப்பு

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை வழக்கில் பின்பற்றும் விதிமுறை குறித்து நாளை (மே -6 ) மாலை 4.30 தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 


இதில் எம்.சி.ஐ விதிகளா ? தமிழக அரசு விதிகளா என்பது குறித்து நாளை மே 6 மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க கிராமப்புற பள்ளி அசத்தல்மே 06,2017,10:29 IST

அவிநாசி அருகே கிராமப்புற அரசு பள்ளி நிர்வாகத்தினர், அதிகளவில், மாணவரை பள்ளியில் சேர்க்க, ‘பிளக்ஸ்’ வைத்து, விளம்பரம் செய்து அசத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பஞ்சலிங்கம்பாளையத்தில், அரசு துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. கிராமப்புற பள்ளியாக உள்ளதால், குறைந்தளவிலேயே மாணவர் எண்ணிக்கை உள்ளது. 


இதை அதிகரிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு, மேலாண்மை மற்றும் கிராமக்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டனர்.

அதற்காக, பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டமைப்பு வசதி உள்ளிட்டவை குறித்து, ‘பிளக்ஸ்’ பேனர் அச்சடித்து, அருகிலுள்ள கிராமங்களில் வைத்துள்ளனர். 

அதில், ‘திறமையான, கனிவான ஆசிரிய, ஆசிரியைகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி, தமிழக அரசின், 14 நலத்திட்டங்கள், முற்றிலும் இலவச கல்வி, மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி வகுப்பு.

புரொஜெக்டர் முறையில் கற்றல் செயல்பாடு, யோகா மற்றும் கணிப்பொறி கல்வி, சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள், அறிவியல் அரங்கம், தரமான மதிய உணவு, குழந்தை நேயப்பள்ளி,’ உள்பட பல வசதிகள் குறி த்து விளக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘கல்வித்துறையின் அறிவுரைப்படி, எங்களது பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதற்காக, அனைத்து வசதிகள் குறித்து, பேனரில் அச்சடித்து, பல இடங்களில் வைத்துள்ளோம். 

ஊர் மக்களின் ஒத்துழைப்போடு, சிறந்த முறையில் பள்ளியை செயல்படுத்தி வருகிறோம். பொதுத்தேர்விலும், 100 சதவீத தேர்ச்சி, நல்ல மதிப்பெண் பெற்று வருகிறோம்,’ என்றார்.