யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

8/10/17

போட்டித் தேர்வுமூலம் உதவிப் பேராசிரியர்கள் தேர்வு!!!

521 அரசுப் பள்ளிகட்டிடங்கள் இடிப்பதற்கு இயக்குனர் மற்றும் கலெக்டர்களிடம் பரிந்துரைக்கடிதம்!!

பள்ளி மாணவர்களுக்குவழங்கிய இரண்டாம் பருவபாடபுத்தங்களில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' !!!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 11, 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (அக்.6) நடைபெற்றன.
சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ,5 ஆயிரமும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்பாளர் ஆனைவாரி ஆனந்தன், புலவர் கி.த.பச்சையப்பன், பாக்கம் தமிழன், தமிழ் வளர்ச்சி கண்காணிப்பாளர் பவானி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

ஒரு முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் இந்துப்பண்டிகையான தீபாவளிக்கு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது !!

பொது மக்கள் கவனத்திற்கு- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தும் -2018-அக்டோபர் 3 முதல் அக்டோபர் 31 2017 வரை நடைபெறுகிறது

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு

'பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்' என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 
பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது:

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது புகைப்படங்களை கண்டிப்பாக வைத்திருக்கும் படி உத்தர விட்டுள்ளது. இவர்களை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்கள் கூட தெரியாமல் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து கோவாவில் அரசு மற்றும் அரசு நிதியுதவியுடன் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் ஜனாதிபதி,பிரதமர் புகைப்படங்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இலவச, 'செட் - டாப் பாக்ஸ்' ரூ.1,200க்கு விற்பனை

தமிழக அரசு, இலவசமாக வழங்குவதாக அறிவித்த, 'செட் - டாப் பாக்ஸ்'களை, சில ஆப்பரேட்டர்கள், 500 - 1,200 ரூபாய் வரை விற்பதாக, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
'தமிழகத்தில், 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தில் கேபிள், 'டிவி' ஒளிபரப்புக்காக, 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக வழங்கப்படும்' என, சட்டசபை தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
தற்போது, அதற்கான உரிமம் கிடைத்து விட்டதால், செட் - டாப் பாக்ஸ் வினியோகத்தை, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் துவங்கியுள்ளது. பொது மக்களிடம் இருந்து, ஒரு பாக்சுக்கு, 175 ரூபாய் வசூல் செய்ய, ஆப்பரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.ஆனால், செட் - டாப் பாக்ஸ்களை, ஆப்பரேட்டர்கள், அதிக தொகைக்கு விற்பதாக, புகார் கூறப்படுகிறது.

 சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கூறும்போது, 'எங்கள் ஆப்பரேட்டர், 1,200 ரூபாய் கேட்கிறார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை' என்றார். இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 500 - 800 ரூபாய் வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள், 'பொதுமக்கள், 175 ரூபாய்க்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை' என, தெரிவித்தனர்.

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி: தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.220 ஆகிறது

சினிமா டிக்கெட் கட்டணத்தை, 25 சதவீதம் உயர்த்த,தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜி.எஸ்.டி., மற்றும், கேளிக்கை வரி என, இரட்டை வரி விதிக்கப் பட்டதற்கு, எதிர்ப்பு கிளம்பியதால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி, தியேட்டர் உரிமையாளர்களுக்கு, அரசு சலுகை வழங்கி உள்ளது.

 இதனால், தியேட்டர்களில், அதிகபட்ச டிக்கெட் விலை, 220 ரூபாயாகிறது.
சினிமா டிக்கெட்டிற்கு, சரக்கு மற்றும் சேவை
வரியான, ஜி.எஸ்.டி., 28 சதவீதம், கேளிக்கை வரி, 10 சதவீதம் என, இரட்டை வரி விதிக்கப்பட்டது. இதனால், பாதிக்கபட்ட தியேட்டர் உரிமையாளர்கள், 'இரட்டை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் விலையை உயர்த்த, அனுமதிக்க வேண்டும்' என, அரசை வலியுறுத்தினர்.

வாக்காளர் சேர்ப்பு இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.அடுத்த ஆண்டு, ஜன., 1ம் தேதியை, தகுதி நாளாக கொண்டு, வாக்காளர்பட்டியல் திருத்தப் பணி, தமிழகம் முழுவதும், இம்மாதம் துவக்கப்பட்டது.

வாக்காளர்களுக்காக, தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, இடமாற்ற விரும்புவோர், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
மற்ற நாட்களில், ஓட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில், மனு அளிக்கலாம்.
பெயர் சேர்க்கும்விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும். 25 வயதிற்கு கீழ் உள்ள மனுதாரர்களுக்கு, வயது சான்றிதழ் கட்டாயம்.
மேலும், www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.வரும், 2018 ஜன., 1ல், 18 வயது நிறைவடைவோரும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


18 - 25 வயதிற்குட்பட்டோர் தவிர, மற்றவர்கள், தங்களுடைய முந்தைய முகவரி, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் ஆகியவற்றை, படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தால், தற்போதைய முகவரியில் வசித்து வரும் கால அளவையும், முன்னர் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க இயலவில்லை என்பதையும், குறிப்பிட வேண்டும். 'விண்ணப்பதாரர், படிவம் - 6ன் உறுதிமொழியில், முந்தைய முகவரியை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க146 மாணவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு

தனியார் மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு முடித்த, 146 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். விசாரணை, 10 க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை அடுத்த, ஸ்ரீபெரும்புதுார் அருகில், பென்னலுாரில், அன்னை மருத்துவக் கல்லுாரிஉள்ளது.இங்கு, முதலாம் ஆண்டு படிப்பை முடித்த, 146 மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு அடிப்படையில், நாங்கள் தேர்வு செய்யப்பட்டோம். மாணவர்கள் சேர்க்கைக்கான ஒப்புதலை, மருத்துவ கவுன்சில் வழங்கி உள்ளது.தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தில், 'மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாவிட்டால், புதிதாக சேர்க்கை நிறுத்தப்படும்.'ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான பொறுப்பை, மாநில அரசு எடுத்து கொள்ளும்' என, கூறப்பட்டுள்ளது.நாங்கள், முதலாம் ஆண்டு பூர்த்தி செய்து விட்டோம். இரண்டாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை, நாங்கள் செலுத்த வேண்டும். இந்நிலையில், மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை, கல்லுாரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்பதால், இரு ஆண்டுகளுக்கு, மாணவர்கள் சேர்க்கையை நடத்தக் கூடாது என, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தற்போது, கல்லுாரியின் மருத்துவமனை மூடப்பட்டு விட்டது; அங்கு, ஊழியர்கள் இல்லை. கல்லுாரியில் இருந்தும், ஊழியர்கள் பலர் விலகி விட்டனர்.கல்லுாரியை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இடையே, பிரச்னைகள் உள்ளன. எனவே, மாநில அரசு அளித்த உத்தரவாதத்தின்படி, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் அனுமதியுடன், மாணவர்களாகிய எங்களுக்குரிய பொறுப்பை, அரசு எடுத்து கொள்ள வேண்டும்.எங்களை, அரசு மருத்துவக் கல்லுாரிளுக்கு மாற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டாம் ஆண்டை தொடர, இடைக்கால உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளது.மனுக்கள், நீதிபதி, கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தன. மாணவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், சிராஜுதீன் உள்ளிட்ட, வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையை, ௧௦க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 996 JAO வேலை: 15க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி (Junior Accounts officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து அக்டோபர் 15க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 996

பணி: Junior Accounts officer

தகுதி: 01.01.2017 தேதியின்படி M.Com., CA. ICWA, CS முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

வயதுவரம்பு: 01.01.2017 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.externalexam.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.externalbsnlexam.com/advertisement/NOTIFICATION_DRJAO_2017.pdf என்ற லிங்கை கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.

*அகவிலைப்படி உயர்வு எப்போது : காத்திருக்கும் அரசு ஊழியர்கள்*

உயர்நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கான சம்பள உயர்வு பரிந்துரைக் குழு தன் அறிக்கையை சமர்பித்துள்ள நிலையில் 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். 'புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சம்பள குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என அரசு ஊழியர், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தத்தை திரும்ப பெற உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதற்கிடையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்காக ஐந்து பேர் குழு, முதல்வர் பழனிசாமியிடம் செப்., 27ல் அறிக்கையை தாக்கல் செய்தது. இதில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகளை களையவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தப்படும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்கவும் பரிந்துரைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

'சம்பள மாற்ற பரிந்துரைகள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டாலும் கூட, இடைவிடாத போராட்டங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி' என அரசு ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலர் அன்பரசு கூறியதாவது: மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு 7வது சம்பள குழு பரிந்துரைகளை 1.1.2016 முதல் அமல்படுத்தியது.

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள மாற்றத்தையும், அதற்கான நிலுவை தொகையையும் பெற்று விட்டனர். அவர்களுக்கு 1.7.2017 முதல் சம்பள மாற்றத்திற்கான அகவிலைப்படி உயர்வு ஒரு சதவீதத்தையும் அரசு வழங்கி விட்டது. மத்திய அரசின் 8 வது சம்பள மாற்றத்திற்கான சம்பள விகிதங்களை பெறாத தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு, பழைய சம்பள விகிதத்தில் 3 சதவீத அகவிலைப்படியை 1.7.2017 முதல் உயர்த்தி செப்., 26ல் மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் 1.1.2016 முதல் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் சம்பள மாற்றத்தையோ, நிலுவைத் தொகையையோ 21 மாதங்களாக பெறாமல் நிதி சுமைக்கு ஆளாகி உள்ளனர்.

மத்திய அரசு பழைய சம்பள விகிதத்தில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது போல், அரசு ஊழியர்களுக்கு 1.7.2017 முதல் பழைய சம்பள விகிதத்தின்படி அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை, அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்று கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

வாட்ஸ் அப்- ல் வைரலாகப் பரவும் ஆசிரியர்களுக்கான LOGO - உண்மைச் செய்தியா? வதந்தியா

வலைத்தள வதந்தி - ஆசிரியர்  LOGO-விற்கு உச்சநீதி மன்றம் அனுமதித்ததா?


வலைத்தள வதந்தி


🌺தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களுக்கு என்று தனி LOGO-ஐ பயன்படுத்த உச்சநீதி  மன்றமே அனுமதி அளித்துவிட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.


🌺இதன் உண்மைத் தன்மைக்கான எவ்வித சான்றும் அதில் இல்லை.


🌺மேலும் அதில், "மருத்துவர் & வழக்கறிஞர்கள் பயன்படுத்த அனுமதித்தது போல" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


🌺உண்மையில் இவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததா? அளிக்க முடியுமா? அளிக்க வேண்டிய அவசியமுண்டா? என பல கேள்விகள் எழுகிறது.


🌺மருத்துவர் & அவசரச் சிகிச்சை வாகனங்களில் சிவப்பு நிற '+' குறி LOGO இடம்பெற்றிருக்கும். உண்மையில் இது இவர்களுக்கானதே அல்ல.


🌺செஞ்சிலுவை இயக்கத்திற்காக, 1949-ம் ஆண்டு ஜெனீவா மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட LOGO அது.


🌺இதை மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதை மருத்துவர் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.


🌺2007-ல் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) இந்திய மருத்துவக் குழுமத்திற்கு(IMC) இது குறித்து அறிவுறித்தி, தங்களின் LOGO-வை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியது.


🌺அதன்பின்னரே, சிவப்பு நிற (90%) '+' குறியினுள் Dr அல்லது Rx என்று குறியிட்ட LOGO-ஐ பயன்படுத்த IMC முடிவெடுத்தது.


🌺இந்த LOGO-வையும் MBBS மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதியுண்டு என IMC கூறியுள்ளது.


🌺இதனை சித்தா, ஆயுர்வேதா, கால்நடை மருத்துவர்களோ, மருந்தகங்களோ பயன்படுத்தக் கூடாது.


🌺ஒரு LOGO- வைப் பயன்படுத்துவதில் இத்தனை வில்லங்கங்கள் உள்ள சூழலில்,


🌺ஏதோ ஒரு LOGO-ஐ  அடிப்படை ஆதாரங்கள் ஏதுமின்றி உச்சநீதி மன்றம் அனுமதி அளித்தது என்று அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களே பகிர்ந்து வருவது வியப்பை அளிப்பதாகவே உள்ளது.


🌺ஒரு திறமைமிக்க ஆசிரியர் எனில் இது போன்ற தகவலைப் பார்த்தவுடன் உங்களின் மனதில்,


🌺உச்சநீதி மன்றத்தில் இதுக்காக வழக்காடியது யார்?


🌺இதை வடிவமைத்தது யார்?


🌺தீர்ப்பளித்தது யார்?


🌺தீர்ப்பின் விபரம் என்ன?


என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்க வேண்டும் அல்லவா!?


🌺மற்ற குழுக்களுக்கு Forward செய்யும் முன் செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்து செயல்படுங்கள்.

அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை