யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/7/18

ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம்! நடவடிக்கை எடுக்க கலெக்டர் அதிரடி உத்தரவு!


சிரியர்கள் வருகைப்பதிவை தினசரி
எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில் மெத்தனம் காட்டிவரும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தின் பழமையான கடலுார் மாவட்டத்தில் புகழ் வாய்ந்த பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.
 இங்கு படித்த பலர் நாட்டின் பல்வேறு உயர் பதவிகளில் பணி புரிந்து வருகின்றனர். அந்தளவிற்கு கல்வியில் சிறந்த விளங்கிய கடலுார் மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற அரசின் உத்தரவால்,பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஆர்வம் காட்டுவதில்லை.
இதன் காரணமாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து போதிய கற்றல் திறனின்றி உயர்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் காட்டுவதில்லை.இதனால், பொதுத் தேர்வுகளில் தேர்ச்சிசதவீதம் மாவட்டத்தில் வெகுவாக குறைந்து மாநில பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் பணி நேரத்திற்கு சரிவர வராததே இதற்கு முக்கிய காரணம் என்பதை கடந்த 2010ம் ஆண்டு கலெக்டராக இருந்த அமுதவல்லி கண்டறிந்து, ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்திட எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.அதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி துவங்கும் நேரம் முடிந்ததும் ஆசிரியர்கள் வருகை விபரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திற்கு (நிக்) மொபைல் போனில் இருந்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.
இந்த திட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு கட்டாயம் வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் செயல்பாட்டினால், மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் திறன் படிப்படியாக உயர்ந்து வருவதால், பொதுத்தேர்வில் கடைசி இடத்தில் இருந்த கடலுார் மாவட்டம் தற்போது 27ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர்களின் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அனுப்புவதில் பல தலைமை ஆசிரியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மாவட்டத்தில் 1,082 தொடக்கப் பள்ளிகள், 341 நடுநிலைப் பள்ளிகள், 146 உயர்நிலைப் பள்ளிகள், 135 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1,704 அரசு மற்றும்அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டு துவக்கத்திலேயே 208 தொடக்கப் பள்ளி, 47 நடுநிலைப் பள்ளி, 24 உயர்நிலைப் பள்ளி, 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்த 296 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வருகைப் பதிவை எஸ்.எம்.எஸ் அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர். எஸ்.எம்.எஸ்., அனுப்பிய தலைமைஆசிரியர்களில் 115 பேர் வருகைப்பதிவை தவறாக அனுப்பியுள்ளதால், பதிவு ஏற்கப்படவில்லை.பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை ஆய்வு செய்த, கலெக்டர் தண்டபாணி, வருகைப்பதிவு எஸ்.எம்.எஸ்., பதிவுநாளுக்கு நாள் குறைந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (பொறுப்பு) முனுசாமி, ஆசிரியர்கள் வருகைப்பதிவை தினமும், குறித்த நேரத்தில் எஸ்.எம்.எஸ்., அனுப்பவும், தவறும் பட்சத்தில், அதற்கான விளக்கத்தை அன்று மாலைக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை 2018 மாத பள்ளி நாள்காட்டி & Training Days


BEO அலுவலக குறைதீர் நாள் : 7.7.18
 சனிக்கிழமை வேலை நாள் : 21.07.18 & 28.7.18
 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி
(I STD)
 1 batch: 13&14.7.18
2 batch: 16&17.7.18
3 batch: 18&19.7.18
4 batch: 20&21.7.18
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி (VI std)
Maths&social : 
1 batch: 9&10.7.18
2 batch : 11&12.7.18
Tamil& Science
1 batch : 13&14.7.18
2 batch: 16&17.7.18
  English 
1 batch:18&19.7.18
2 batch: 20&21.7.18
 R.L : இல்லை
 அரசு விடுமுறை இல்லை
 CRC - இல்லை
 கல்வி வளர்ச்சி நாள் : 15.7.18
 ஜூலை மாத வேலை நாள்கள் : 24
 இதுவரை மொத்த
வேலை நாள்கள் :45

அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு

லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். 
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அதன் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கும் விழா நடந்தது. திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் பாராட்டு சான்றுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, டாக்டர் சரோஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு ரூ.27 ஆயிரத்து 205 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த மாதம் லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வருகிறார்கள். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் 6 வாரம் தங்கியிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த ஆங்கிலத்தை கற்றுத்தர இருக்கிறார்கள்.

அங்கன்வாடியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் சரளமாக பேசக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கிற மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ 3 ஆயிரம் பள்ளிகளில் கொண்டுவர டெண்டர் விடப்பட்டுள்ளது.

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறைக்கு 10 கணினி, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 20 கணினி என வழங்கி இணையதள பயிற்சி அளிக்கப்படும். ஒரு சிறந்த ஆசிரியர் 100 பள்ளிக்கு காணொலி காட்சி மூலமாக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 15 இடங்களில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. ஆடிட்டர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். 20 ஆயிரம் மாணவர்கள் இதன்மூலம் தணிக்கை பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியீடு

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கலந்தாய்வு நடைபெறுகிறது. மருத்துவ படிப்பு தரவரிசை
பட்டியல் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியிடப்பட்டது. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பு கலந்தாய்வு ஜூலை 1-ந்தேதி (இன்று) தொடங்கும் என்று தெரிவித்தார். அதன்படி, கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பான கால அட்டவணை மருத்துவ தேர்வுக்குழு இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு - சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

2-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1 முதல் 100 வரையிலும், 11 மணிக்கு 101 முதல் 356 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 357 முதல் 597 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

3-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 598 முதல் 848 வரையிலும், 11 மணிக்கு 849 முதல் 1103 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1104 முதல் 1417 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

4-ந்தேதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 1418 முதல் 1667 வரையிலும், 11 மணிக்கு 1668 முதல் 1872 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 1873 முதல் 2380 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

5-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 2381 முதல் 2738 வரையிலும், 11 மணிக்கு 2739 முதல் 3164 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 3165 முதல் 4312 வரையிலும் இடம்பிடித்த அனைத்து பிரிவு மாணவர்களுக்கு நடைபெறுகிறது.

6-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு பொது தரவரிசை 4313 முதல் 4905 வரையிலும், 11 மணிக்கு 4906 முதல் 5203 வரையிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு, பிற்பகல் 2 மணிக்கு சாதி தரவரிசை 241 முதல் 389 வரை இடம்பிடித்த தாழ்த்தப்பட்ட முஸ்லீம் பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 961 முதல் 1128 வரை இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு சாதி தரவரிசை 1129 முதல் 1389 வரையில் இடம்பிடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், 11 மணிக்கு சாதி தரவரிசை 263 முதல் 566 வரையிலும், பிற்பகல் 2 மணிக்கு 567 முதல் 867 வரையில் இடம்பிடித்த எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கும், 3 மணிக்கு சாதி தரவரிசை 26 முதல் 184 வரையில் இடம்பிடித்த எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கும், 4 மணிக்கு சாதி தரவரிசை 5 முதல் 96 வரையில் இடம்பிடித்த எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு சில அறிவுரைகள், நிபந்தனைகளை மருத்துவ தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்துக்கு சென்று கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பிரத்தியேகமாக அழைப்பு கடிதம் யாருக்கும் அனுப்பவில்லை.

* கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மாணவர்கள் கலந்தாய்வு அறையில் இருக்க வேண்டும்.

* கலந்தாய்வுக்கு வரும்போது, மாணவர்கள் அதற்கான கட்டணமான ரூ.500-ஐ ‘ secretary, selection committee, chennai100 ’ என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுத்து வரவேண்டும்.

* கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் நீட் ஹால்டிக்கெட், நீட் மதிப்பெண் அட்டை, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆளறி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

* தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளிமாநிலத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து இருந்தால், அந்த மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க எஸ்.எஸ்.எல்.சி, 12-ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, தொழிற்சார்ந்த படிப்புகள் தொடர்பான சான்றிதழ்களில் ஏதாவது ஒன்றும், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

* கலந்தாய்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அனைவருக்கு ஒதுக்கீடு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. கலந்தாய்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை நன்றாக வாசிக்க வேண்டும்.

* அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றாலும், கலந்தாய்வு குறிப்பிடப்பட்டு இருக்கும் நேரத்தில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

* அழைப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால், அடுத்து வரும் கலந்தாய்வில் அனுமதிக்க இயலாது.

* கலந்தாய்வு நடைபெறும் அறைக்கு செல்போன் எடுத்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருடன் அவருடைய பெற்றோரில் ஒருவர் மட்டுமே கூட செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு

திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்,'' என, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், காணொளிக்காட்சி மூலம், சி.இ.ஓ., ஜெயக்குமார் பேசியதாவது:

பள்ளி வளாகத்தில், தினமும் இறைவணக்க கூட்டத்தில், பசுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும், ஜூலை, 31க்குள் முற்றிலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்.

100 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடில்லாத சிறந்த பள்ளிக்கு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில், ஒரு லட்சம் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை, பள்ளி முகப்பில் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்

ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் நடத்துவதில் தனி சிக்கல்கள்!!

ஒரு ஆசிரியர் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு பாடம் !

No automatic alt text available.