யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/10/16

டிபாசிட்' பணம் கிடைக்குமா? : நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, அக்., 17, 19ல், நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. வேட்பு மனு தாக்கல் மறுநாள் துவங்கி, அக்., 3ல் முடிந்தது. தேர்தலில் போட்டியிட, 4.97 லட்சம் பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கோடி ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தலை ரத்து செய்தது. அதனால், ஏற்கனவே மனு தாக்கல் செய்தவர்கள், டிபாசிட் பணம் திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.


இதுகுறித்து, மாநில தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சி தேர்தல் வழக்கை, சுமுகமாக முடிக்க கவனம் செலுத்தி வருகிறோம். மனு தாக்கல் செய்தவர்களுக்கான டிபாசிட் பணம் திரும்ப தருவது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.

அறிவித்த தேதியில் குரூப் - 4 தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., உறுதி

அரசு துறையில் காலியாக உள்ள, 5,451 இடங்களுக்கான, குரூப் - 4 தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், வரைவாளர், தட்டச்சர் உட்பட, 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 எழுத்து தேர்வு, நவ., 6ல் நடக்கிறது. 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தேர்வுக்கு, 15 நாட்களுக்கு முன், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியாகும். தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியிடப்படாததால், தேர்வு தள்ளிப்போகுமா என, தேர்வர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா கூறுகையில், ''தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால், விண்ணப்ப பரிசீலனை காலம் நீண்டு விட்டது. திட்டமிட்டபடி, நவ., 6ல் தேர்வு நடக்கும். இரு தினங்களில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்,'' என்றார். 

தொடக்கக் கல்வி - சேலம் மாவட்டம் - 28.10.2016 அன்று அனைத்து தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

கருவூலக் கணக்குத்துறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை 28.10.2016 அன்று வழங்க அரசு உத்தரவு

சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. காலையில் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.

வெந்நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நாம் தினமும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபட்டு தொண்டையில் புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
தேன் கலந்த சுடுநீரை தினமும் குடித்து வந்தால், நம் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது.
தேன் கலந்த நீரில் நொதிகள், விட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.
வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து தொடர்ந்து குடித்து வருவதால், நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
தேன் கலந்த நீரில் உள்ள சத்துக்கள் நம் உடலின் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு!

தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசாணை செல்லும்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபாலமுருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்? அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு 'ஆதார்' விபரம் தர 'கெடு'

ரேஷன் கடைகளில், 'ஆதார்' விபரம் தர, காலக்கெடு நிர்ணயிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன.
மொத்தம் உள்ள, 2.04 கோடி ரேஷன் கார்டுகளில், 7.76 கோடி பயனாளி கள் உள்ளனர். நேற்று வரை, 4.76 கோடி மட்டுமே, ஆதார் விபரங்களை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த விபரத்தை தராததால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.


இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் சிரமப்படுவர் என்பதால், ஆதார் விபரம் தர காலக்கெடு நிர்ணயிக்காமல் இருந்தோம். ஆனால், ஆதார் கார்டு வைத்துள்ள பலரும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர, நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு நிர்ணயிக்க உள்ளோம். இதற்கு, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

அதன்பின், ஆதார் விபரம் தருவதற்கு ஏற்ப, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். தற்போது, ஆதார் மையங்களில் கூட்டம் குறைவாக உள்ளதால், இதுவரை ஆதார் கார்டு பெறாதோர், விண்ணப்பித்து, ரேஷனில், விரைவாக பதிய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

G.O.NO:277- தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று வழங்க - அரசு உத்தரவு

ஊதிய அரசாணை;277 செல்லாது. வழக்கம் போல் இம்மாதம் 31 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.---கருவூலத்துறை அறிவிப்பு

புதிய கல்விக் கொள்கை - தில்லியில் தமிழக அரசு எதிர்ப்பு!

மத்தியஅரசின் புதிய கல்விக் கொள்கைகுறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி
ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது.


புதிய வரைவு கல்விக் கொள்கையைஉருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன்தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக்குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதியகல்விக் கொள்கை வரைவு” ஒன்றைமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்குஅனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்துவிவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக்குழு கூட்டம் தலைநகர் தில்லியில்இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்துமாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமுக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம்வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்பபெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையைகொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம்மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளிஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில்8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்குதமிழக அரசின் சார்பில் கலந்துகொண்டதமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும்எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம்பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள்இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாகஇந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்துஎன்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினைதொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்கமுடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி2015 டிசம்பர் வரை மட்டுமே முறையானகல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில்அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும்2020-ம் ஆண்டு வரை அப்படியானஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருதபாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன்வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதிமுடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள்எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது

வங்கக் கடலில் விசாகப்பட்டினம் அருகே உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தமிழகத்துக்கு மிக அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி வடமேற்காக நகர்ந்து சென்று தற்போது உருவாகியுள்ள புயலுக்கு கியான்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.


இது வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதனால் இந்தியாவின் ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில் பூரி - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாக இந்த புயலுக்கு மியான்மரின் கியான்ட் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதன் முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா வாய்ப்பாடு.இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு

அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது வகுப்பு, 4–வது வகுப்பு, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம், விலை இன்றி முதல் முதலாக வழங்கப்படுகிறது. இந்த புத்தக வினியோகம் தொடங்கியது. இந்த மாத இறுதிக்குள் கொடுத்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாடு

தமிழக அரசு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்பட14 வகையான கல்வி கற்க தேவையானவற்றை விலை இன்றி தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3–வது, 4–வது, 5–வது வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு வாய்ப்பாடு புத்தகம் விலை இன்றி வழங்க முடிவு செய்யப்பட்டது.அந்த வாய்ப்பாடு புத்தகத்தில் பெருக்கல் வாய்ப்பாடு, கூட்டல் வாய்ப்பாடு, கழித்தல் வாய்ப்பாடு, பெருக்கல் அட்டவணை, வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், அறுகோணம், உருளை, கனச்சதுரம், கனச்செவ்வகம், கூம்பு ஆகியவை இடம் பெற்றுள்ளன. மேலும் அடிப்படை அளவுகள், கொள்ளளவு, நிறுத்தல் அளவு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.மேலும் வருடத்திற்கு எத்தனை நாட்கள், லீப் வருடத்திற்குஎத்தனை நாட்கள், வருடத்திற்கு எத்தனை மாதங்கள், எத்தனை வாரங்கள், வாரத்திற்கு எத்தனை நாட்கள் உள்ளிட்ட காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்பாடு புத்தகங்கள் அரசு பள்ளிகளில் 3–வது, 4–வது, 5–வது படிக்கும் மாணவ–மாணவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. அதற்காக அனைவருக்கும்கல்வி திட்டத்தின் கீழ் 7 லட்சத்து 70 ஆயிரம் வாய்ப்பாடு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பணி தொடங்கியது

அனுப்பப்பட்ட பள்ளிகளில் இந்த வாய்ப்பாடு கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் நடுநிலைப்பள்ளியில் நேற்று வாய்ப்பாடு வினியோகம் தொடங்கியது. அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அதிகாரி லட்சுமிபதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.பரமேஸ்வரி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சாவித்ரி ஆகியோர் வழங்கினார்கள்.அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டு விடும் என்றார்.

G.O.276 Dated 24.10.2016 PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period01.10.2016 to 31.12.2016 – Orders – Issued.

கேரளாவில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்த திட்டம்.

கேரளாவில் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தி தரும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதே போல், 5 ஆயிரம் உயர்நிலை பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் வசதி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வியை மேம்படுத்த புதிய திட்டங்களை செயல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, பள்ளிகளில் வைபை வசதி, இணையதள வசதியை ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கேரளாவில் உள்ள 10 ஆயிரம் ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் வைபை வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் தொடங்க உள்ளது. கேரள மாநிலம் உருவான நாளான நவம்பர் 1ம் தேதியன்று இத்திட்டம் தொடங்கப்படுகிறது. 

இதுகுறித்து கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் கூறுகையில், ''ஆரம்ப பள்ளிகளில் டிஜிட்டல் வசதியை மேம்படுத்தவும், உயர்நிலை பள்ளிகளில் அதை விரிவாக்கவும் செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது. 8 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்பறைகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பள்ளி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணத்தில் சேவை வழங்கப்படும்'' என்றும் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ: இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஏராளமான சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜியோ சிம்மால்மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கமடைந்தன. 
அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை: அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் வரும் 28ம் தேதியே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அரசாரணையை வெளியிட்டுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அக்டோபர் மாத ஊதியம் 28ம் தேதியே வழங்கப்பட உள்ளது.

அக்டோபர் மாத சம்பளம் 28.10.2016 அன்று கிடைக்காததற்கு காரணம்?

31.10.2016. அன்று சம்பளம் வழங்குவதற்கு Reserve Bank of India வங்கிகளுக்கு Cutt of date நிர்ணயித்த நாள் 26.10.2016. காலை 10 மணி.அதாவது இன்று மாலை ECS கணக்கினை TREASURY முடித்தால் மட்டுமே 26.10.2016 காலை யில் BATCH அனுப்ப இயலும்.
ஆனால் அரசாணை 25.10.2016 மதியத்திற்கு மேல் தான் கிடைக்கப்பெற்றது.

நேற்றே GO வந்திருந்தால் இது சாத்தியம்.