யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/10/16

பட்டதாரிகளுக்கு இந்திய அஞ்சல் துறை வங்கியில் 650 உதவி மேலாளர் பணி இந்திய அஞ்சல் பண அளிப்பு வங்கியில் (IPPB) நிரப்பப்பட உள்ள 650 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பதவி: Assistant Manager (JMGSI-I) - 650

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2016 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700, மற்ற பிரிவினருக்கு ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: http://www.indiapost.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2016

எழுத்துத் தேர்வு: டிசம்பர் 2016, ஜனவரி 2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://govtjobsdisk.com/wp-content/uploads/2016/10/IPPB-650-Assistant-Manager-Officer-Scale-Notification-PDF.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வாக்காளர் அடையாள அட்டையில் அழகான உருவத்தை பதிவு செய்யலாம்

தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம்.


இது குறித்து, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், தற்போது, 100 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன; இந்த ஆண்டுக்குள், சேவைகளின் எண்ணிக்கை, 300 ஆக உயர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வழங்கப்பட உள்ளது. அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின் கீழ், 486 இ - சேவை மையங்கள் உள்ளன.

இந்த நிறுவனத்தின் சார்பில், சென்னையில், சில இடங்களில், இந்த சேவை நேற்று துவங்கியது. அதற்காக, வாக்காளர்களின் புகைப்படம் உள்ளிட்ட முழு விபரங்கள், தகவல் தொழில்நுட்ப துறையிடம், தேர்தல் துறை வழங்கி உள்ளது. வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்; 25 ரூபாய் செலுத்த வேண்டும். வாக்காளர் அட்டை தொலைந்தாலும், இந்த மையத்தில், அடையாள அட்டை எண்ணை தெரிவித்து, புதிய அட்டை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அழகாக தெரிய வேண்டுமா? : வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படங்கள், மிக மோசமாக தெரிவதாக புகார்கள் உள்ளன. இ - சேவை மையங்களில், வாக்காளர்களை புகைப்படம் எடுத்து, அதை, வண்ண அடையாள அட்டையில் பதிந்து தர வசதிகள் உள்ளன. தேர்தல் கமிஷன் தந்த அட்டையில் உள்ள புகைப்படத்தை, விருப்பம் உள்ளோர், இந்த மையங்கள் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம்.

Epayslip வழங்கப்படுமா? - முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

THANKS : MR.JAYAPRAKASH
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி மேலாவது
நடைமுறைப்படுத்துவார்களா?

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி க/பெ ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப் படுத்தாமல் உள்ள
DDOக்களுக்கு, நடைமுறைப்படுத்த உத்திரவிட வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (TN CM SPECIAL CELL) அனுப்பிய கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
அரசு ஊழியர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் ஊதியம் வழங்கும் அலுவலர்களை (DDO) வலியுறுத்தவில்லை என்பதும் உண்மை. கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!
தமிழகத்தின் முதல்வரான மாண்புமிகு அம்மா அவர்களின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டிசம்பர்-15ல் அவர்கள் இட்ட உத்தரவின் பேரில் கருவூலம் & கணக்குகள் துறையானது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் மாதாந்திர ஊதிய விவரத்தை இருக்குமிடத்திலிருந்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதியாக http://epayroll.tn.gov.in/epayslip/ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இந்த தளத்தில் அரசு ஊழியர் ஒருவரின் Employee Code & Date of Birth உள்ளீடு செய்தால் அவரின் ஊதிய விவர பக்கம் open ஆகும். அதில் PaySlip , Annual Income Statement, Pay Drawn Particulars என காட்டும்.
இதிலுள்ள 2&3ல் மாதாந்திர ஊதியம்,அரசு பிடித்தங்கள் மட்டும் எவ்வளவு என்பதை ஒரு ஆன்டிற்கு தொகுத்து வழங்குகிறது.இதில் முக்கியமானது PaySlip. அதில் தான் அனைத்து பிடித்தங்களின் (சொசைட்டி தொகை உள்பட)
விவரங்களும்,அது போக வழங்கப்பட்ட சம்பளத்தின் விவரம் இருக்கும். இந்த
PaySlip திட்டமானது இந்தியாவிலே இராணுவத் துறைக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை நமது மாநில அரசு, ஊழியர்களின் நலன் கருதி
நடைமுறைப்படுத்தியுள்ளது.இந்த மகத்தான திட்டமானது தமிழக
அதிகாரிகளின் அலட்சியத்தால்முடங்கியுள்ளது.அதாவது PaySlip டவுன்லோடு
செய்ய அந்தந்த DDOக்கள், கருவூலம் வழங்கும் டோக்கன் நெம்பரை மாதந்தோறும் UPDATE செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவரின் PAY DETAILSஐ ஒரு நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர, அடுத்த கல்வி ஆண்டில், 'நீட்' என்ற, தேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில், அனைத்து மாநில மாணவர்களும்,
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசின் சார்பில், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில், நடப்பு கல்வி ஆண்டான, 2016 - 17க்கு மட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், நீட் தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத்தேர்வு முடித்ததும், நீட் இல்லாமல், அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, இந்திய மருத்துவ கவுன்சிலோ, இத்தேர்வை நடத்தும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நிர்வாகமோ, இதுவரை விளக்கம் அளிக்கவில்லை; அதனால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில், தனியார் மெட்ரிக் பள்ளிகளில், மாணவர்களிடம் தனி கட்டணம் பெற்று, நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப தேர்வு முடிவு : கலை ஆசிரியர்கள் சந்தேகம்

ஓவியம், கலை படிப்புகளுக்கான, தேர்வின் விடைத்தாள் நகல்களை வழங்க வேண்டும்' என, கலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியம், கலை, தையல், கைவினை உள்ளிட்ட, பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கு, அரசு தேர்வுத்துறை சார்பில், 2015 நவம்பரில் தேர்வு நடந்தது.
இதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு, தேர்வு மையங்களில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; இதில், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தவர், அதிக தேர்ச்சி பெற்றுஉள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என, தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு, விடைத்தாள் சரியாக திருத்தம் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், விடைத்தாள் நகல்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கலை ஆசிரியர் நல சங்க தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் கூறுகையில், ''விடைத்தாள் நகல்கள் வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். 

பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முறை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ., திட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை ரத்து செய்ய, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத் தேர்வில், 2014ல் விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டம் அமலானது.
வழக்கமான மதிப்பீட்டில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்தால், மறு மதிப்பீட்டுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த, இரு கல்வி ஆண்டு களில் மறுமதிப்பீட்டுக்கு, இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே விண்ணப்பித்தனர். அத்துடன், மறுமதிப்பீட்டில், பலரது மதிப்பெண்கள் மாறவில்லை. சொற்ப அளவிலான மாணவர்களுக்காக, பல ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மூன்று வகை மேற்பார்வையுடன், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவதால், பெரிய அளவில் புகார்கள் எழவில்லை.
எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யவும், தற்போதுள்ள திருத்த முறையை தொடரவும், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'

சென்னை: மவுலானா ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை என்ற இத்திட்டத்தில், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 1ல் துவங்கியது; நவ., 30 வரை பதியலாம். மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின், http://www.maef.nic.in இணையதளத்தில், நேரடியாக விண்ணப்பித்து, அதன் நகலை, கல்வி அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் பரவும் வைரஸ்!

கூகிளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும்  மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேரினால்  பாதிக்கப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யும்பொழுது, அவற்றின் மூலமாக நமது அலைபேசி அல்லது மற்ற கருவிகளில் 'த்ரெட் ஆக்டர்ஸ்கள்' உட்புகுகின்றன.
இத்தகைய கருவிகள் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கப்படும் பொழுது, அங்கிருக்கும் உட்புற சர்வர் கணினியை தாக்கும் அல்லது முக்கியமான தகவல்களை திருடும்.
இந்த தகவலை மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனமான 'ட்ரெண்ட் மைக்ரோ' தெரிவித்துள்ளது. 
கூகிள் ப்ளே ஸ்டோரில் அதிகமாக தரவிறக்கப்படும், விளையாட்டுகள், ஸ்கின்ஸ் மற்றும் அலைபேசியை மேம்படுத்த உதவும் பல்வேறு வகையான 'தீம்'கள்  ஆகியவையே இந்த மால்வேரின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. 
செயலியின் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இந்த மால்வேர்கள் செயல்படுவதால் அவற்றை அடையாளம் காண்பது அத்தனை எளிதானதாக இல்லை.

தற்போது பெரும்பாலான அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களின் அலைபேசி மற்றும் டேப்லெட் உள்ளிட்ட கருவிகளை அலுவலக கணினி வலைப்பிபின்னலில் இணைத்து
பயன்படுத்த அனுமதி அளித்து வருவதால், இந்த மால்வேர் தாக்குதலின் பாதிப்பு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
இது பற்றி 'ட்ரெண்ட் மைக்ரோ' நிறுவனம் கூகிளுக்கு தெரியப்படுத்தி விட்டதால், கூகிள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் !

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை முதல்வர் வி.நாராயணசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 4-ம் தேதி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் தீபாவளி போனஸ் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.


அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அதாவது பிரிவு சி மற்றும் டி மறறும் பிரிவு பி யைச் சேர்ந்த அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு போனஸாக அவர்களுக்கு ரூ.6908 வழங்கப்படும்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனஸ் வழங்கப்படும். ஓராண்டு பணிநிறைவு செய்த மற்றும் 3 ஆண்டுகளுக்குள் பணி செய்த தற்காலிக பகுதி நேர மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.1000 தரப்படும்.

மேலும் உற்பத்தி சார்ந்த போனஸாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஒரே அளவு சீருடை - புலம்பும் பெற்றோர்

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, ஒரே அளவு இலவச சீருடை வழங்கப்பட்டுள்ளதால்,பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளும் காலாண்டு தேர்வுக்கு விடுமுறைக்கு பின் கடந்த, 3ம் தேதி துவங்கின.

 அப்போது மாணவ,மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது. 

மேலும், அவர்களுக்கு இலவச சீருடையும் வழங்கப்பட்டன. வழக்கமாக, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரு அளவிலும், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அளவிலும், 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கு ஒரே அளவிலான சுடிதார் மற்றும் பேன்ட் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 

இந்த ஆண்டுக்கான இரண்டு செட் சீருடைகள், முதல் பருவத்திலேயே வழங்கப்பட்டன. இரண்டாம் பருவம் துவங்கிய நிலையில், மூன்றாவது செட் சீருடை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள சீருடைகள் அனைத்தும்,ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான அளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: இவற்றை மாணவர்களால் அணிய முடியாது. அனைத்து சீருடையும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் அளவிலேயே உள்ளது. இதே போல தான் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் காலணிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

பல்வேறு அளவுகளில் இவற்றை தயார் செய்து வினியோகம் செய்ய வேண்டும் அல்லது மாவட்டம் தோறும் சீருடை தைப்பதற்கான மையங்களை ஏற்படுத்தி மாணவ, மாணவியரின் அளவுக்கு ஏற்ப சீருடைகளை தைத்து வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை ரத்து

முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அரசு அலுவலகங்களில், இந்த ஆண்டு ஆயுத பூஜை இல்லை. அரசு ஊழியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி, ஆண்டுதோறும் ஆயுத பூஜையை கொண்டாடுவது வழக்கம். தற்போது, மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆயுத பூஜை ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 

இதுகுறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: வரும், 10ல், ஆயுத பூஜை வருகிறது; அன்று அரசு விடுமுறை. இதனால், அரசு அலுவலகங்களில், 7ம் தேதி, ஆயுத பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால், ஆயுத பூஜை கொண்டாடு வதை தவிர்த்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.