யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/10/16

ஆசிரியர் தகுதித்தேர்வு எதிர்பார்ப்பு அதிகரிப்பு

பிளஸ்2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமுல்

மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகியதொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள் உள்ளன.நாடு முழுவதும் 31 என்.ஐ.டி. கல்லூரிகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.


அவர்களுக்கு ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.இதுவரை நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பொது பிரிவினர் பிளஸ்-2 வில் 70 சதவீத மார்க்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 65 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.ஆனால், இப்போது இதில், மாற்றத்தை கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி இந்த கல்லூரியில் சேர பொது பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 70 சதவீதமும் மார்க் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சிபாரிசுகளை மத்திய இடஒதுக்கீட்டு வாரியத்துக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் இறுதி முடிவு எடுத்த பிறகு இது நடைமுறைக்கு வரும்.ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சம் மாணவர்கள் வரை ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதுகின்றனர். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நுழைவு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 2 லட்சம் வரையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின் வாரிய எழுத்து தேர்வு மதிப்பெண் இன்று வெளியீடு

மின் வாரியம், ஊழியர்கள் நியமனத்துக்கு நடத்திய, எழுத்து தேர்வு மதிப்பெண்ணை, இன்று வெளியிடுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: மின் வாரியத்தில், இளநிலை உதவியாளர், ஸ்டெனோ, வேதியர், டைப்பிஸ்ட், உதவி வரைவாளர் என, 750 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 19 மற்றும் ஆக., 27, 28ல், அண்ணா பல்கலை மூலம், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.

இதன் மதிப்பெண்கள், இன்று வெளியிடப்பட உள்ளன. தேர்வர்கள், www.tangedcodirectrecruitment.in என்ற இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். அரசு நிர்ணயம் செய்துள்ள இன,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

நவ., 2 முதல் நேர்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம், நேரம் போன்ற விபரங்கள், பின்னர் இணையதளத்தில் தெரிவிக்கப்படும். 

எழுத்து தேர்வுக்கு, 85 சதவீதம்; நேர்முக தேர்வுக்கு, 15 சதவீதம்; அதாவது, 10 மதிப்பெண் நேர்காணலுக்கு, 5மதிப்பெண் கல்வி தகுதிக்கு என, கணக்கீடு செய்து, நியமனம் செய்யப்படுவர். மதிப்பெண் குறித்த விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பின், 525 தொழில்நுட்ப உதவியாளர்கள்; 900 கள உதவியாளர் பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏழு மாவட்ட ஆசிரியர்க்கு மூன்று நாள் பயிற்சி முகாம்

சென்னை உள்ளிட்ட, ஏழு மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, சென்னை அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலகத்தில், மூன்று நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, மண்டல அளவிலான, பள்ளிகளுக்கான தர மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன.

மூன்று நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், உதவி கல்வி அலுவலர், ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் தரத்தை மேம்படுத்தவும், மதிப்பீட்டு முறைகள் சார்ந்த புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி நடந்தது. இன்றுடன், நிறைவுபெறும் இந்த பயிற்சி முகாமில், சென்னை,காஞ்சிபுரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 143 பேர் பங்கேற்றனர்.

முன் அரையாண்டு தேர்வால் பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

தமிழக தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் போதே, பிளஸ் 2 பாடங்கள் நடத்தி முடிக்கப்படுகின்றன. பின், பிளஸ் 2வில் மீண்டும், ஒருமுறை நடத்தப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில்,பிளஸ் 2 வகுப்பு துவங்கும் போது மட்டுமே,பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. 

இந்நிலையில், அரையாண்டு தேர்வுக்கு முன்,அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அதே நேரம், அரையாண்டு தேர்வுக்கு முன், நவ., 15 முதல், 25க்குள், முன் அரையாண்டு தேர்வு என்ற புதிய தேர்வை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 

இதற்கு, ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரையாண்டு தேர்வுக்கு முன், பாடங்களை நடத்தவே நாட்கள் இல்லை; மழைக் காலமும் வருகிறது. இந்நிலையில், இன்னொரு தேர்வு வைத்தால்,அதற்கு, 10 நாட்களாகும். அதனால், பாடம் நடத்துவது பாதிக்கப்படும்&' என, தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி இளங்கோ கூறியதாவது: 

ஏற்கனவே, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பயிற்சி வகுப்பு நடத்துகின்றனர். அதில் பங்கேற்பதால், ஐந்து நாட்கள் பாடம் நடத்த முடிவதில்லை. 

பண்டிகை விடுமுறைகள் வருகின்றன; அதை ஈடுகட்டவே திணறும் சூழலில், முன் அரையாண்டு தேர்வு நடத்தினால், உரிய காலத்தில் பாடங்களை முடிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

கலங்க வைக்கும் குழந்தைக் கடத்தல்! (அவசியம் அனைவரும் படிக்கவும்) நன்றி:விகடன்

குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்!

உடற்கல்வி ஆசிரியர்களின் 21 ஆண்டுகள் சிக்கலுக்கு விடிவு.

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களின், ஊக்க ஊதியத்திற்கான, 21 ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்கும் போது, அதற்கு இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

ஆனால், இந்த ஊக்க ஊதியம் வழங்குவதில், 21 ஆண்டுகளாக பிரச்னை நீடித்தது; பலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர் சங்கங்களும், அரசுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் வழங்கும் அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்து உள்ளது. இதில், சான்றிதழ் படிப்பு முடித்தோர், 1992க்கு முன், பி.எட்., படிப்பை முடித்திருந்தால், ஊக்க ஊதியம் தரப்படும். மற்றவர்களுக்கு, பி.பி.எட்., - பி.பி.இ.எஸ்., அல்லது பி.எம்.எஸ்., எம்.பி.எட்., - எம்.பி.இ.எஸ்., மற்றும் யோகாவில் முதுநிலை டிப்ளமோ முடித்தால், இரண்டு ஊக்க ஊதியம் தரப்படும்.

இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும்உடற்கல்வி இயக்குனர்கள் சங்க, மாநில பொதுச் செயலர், டி.தேவி செல்வம் கூறுகையில், ''21 ஆண்டுகள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்திய, அரசுக்கு நன்றி. ஆசிரியர்கள், உயர் கல்வி தகுதி பெற்ற நாள் முதல் கணக்கிட்டு, இந்த சலுகையை வழங்க வேண் டும்,'' என்றார்.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட செலவு அனைத்தும்"ஆன்லைன்' மயம் : மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், (ஆர்.எம்.எஸ்.ஏ.,) அனைத்து செலவினங்களை ஆன்லைன் கணக்கில் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் எஸ்.எஸ்.ஏ.,வை தொடர்ந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்க்கும் வகையில், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் 2009 முதல் அமலில் உள்ளது.


இதன் மூலம் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், நுாலகம், கணினி அறை, கழிப்பறை, குடிநீர் வசதி, பள்ளி மானியம் மற்றும் பணியிடை பயிற்சிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் சார்பில் 60:40 என்ற விகிதத்தில் நிதிஒதுக்கீடு செய்கின்றன.தமிழகத்தில் ஆண்டிற்கு 2 ஆயிரம் கோடிக்கு மேல், இத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இதற்காக, ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருக்கு முடிந்த பணிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் ரசீதுகள் அடிப்படையில்பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் எழுவதாக புகார்கள் எழுந்தன. மேலும் திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், அனைத்துபண பரிவர்த்தனைகளையும், ஆன்லைன் கணக்கு எண்களில் மட்டும் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதனால் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பொது நிதிமேலாண்மை திட்டம் (பி.எப்.எம்.எஸ்.,) மூலம் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், பள்ளிகளுக்கு வெள்ளை அடித்தால் கூட ஆன்லைன் கணக்கு மூலம் தான் ஊழியருக்கு சம்பளம் வழங்கும் நிலை ஏற்படும்.இதனால் செய்யாத திட்டப் பணிகளுக்காக போலி 'பில்'கள் மூலம் பணம் பெறுவது போன்ற முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு

கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல்கலை மற்றும்கல்லுாரிகளில், பேராசிரியராக சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

சில மாநிலங்களில், கல்லுாரி, பல்கலைகளில், பேராசிரியராக சேர, மாநில அளவிலான, செட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். தமிழக அரசு சார்பில், செட் தேர்வு, பிப்., மாதம் நடந்தது; இதில், 80 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வை நடத்திய, முன்னாள் உயர் கல்வி செயலர் அபூர்வா, வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், தேர்வு முடிவு வெளியிடப்படாமல், கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசின் நெட் தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, அக்., 17ல் துவங்கியது.

செட் தேர்வு முடிவை வெளியிட்டால், அதில் தேர்ச்சி பெறாதோர்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க லாம். அதற்கு வசதியாக, செட் தேர்வு முடிவை வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. செட் தேர்வு முடிவு வெளியான பின், நெட் தேர்வை நடத்த வேண்டும் என, வழக்கு தொடர, நெட், செட் சங்கத்தினர் முடிவு செய்தனர். இதனால், 10 நாட்களுக்குள், செட் தேர்வு முடிவை வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்து உள்ளது; அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

பள்ளிகளில் 4ஆயிரம் லேப் அசிஸ்டென்ட் நவம்பரில் நியமிக்க கல்வித்துறை முடிவு.

CPS- Double number- Old Number CPS Amount transfer to New CPS Number