யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/6/18

இன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், 'ரேண்டம்' எண், இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, இம்மாதம், 2ம் தேதியுடன்விண்ணப்ப பதிவு 
முடிந்தது. இதில், 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2017ஐ விட, இந்தாண்டு, 19 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று காலை, 9:00 மணிக்கு, அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே, 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

நீட்' தேர்வில் சென்னை மாணவிக்கு, 12ம் இடம்; கடந்த ஆண்டை விட தமிழகம் அதிக தேர்ச்சி

நீட்' தேர்வில், தேசிய அளவில், பீஹார் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஆந்திரா, தெலுங்கானா மாணவர்களும், அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா, 12ம் இடம் பெற்றுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், 13 லட்சம் பேர் பங்கேற்று, 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம், 720 மதிப்பெண்களுக்கு, அதிகபட்சமாக, 691 மதிப்பெண் எடுத்து, பீஹார் மாணவி, கல்பனா குமாரி, தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

தெலுங்கானாவை சேர்ந்த, ரோஹன் புரோஹித், டில்லியை சேர்ந்த, ஹிமாஷு ஷர்மா ஆகியோர் இரண்டாம் இடமும், டில்லியை சேர்ந்த, ஆரோஷ் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த, பிரின்ஸ் சவுத்ரி ஆகியோர், 686 மதிப்பெண் பெற்று, மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.
கீர்த்தனா சாதனை :

தமிழக மாணவி, கே.கீர்த்தனா, 676 மதிப்பெண் பெற்று, 12ம் இடம் பெற்றுள்ளார். இவர், சென்னை கே.கே.நகரில் உள்ள,பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்த மாணவி.

'சி.பி.எஸ்.இ., பாடத்தில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதும், இரண்டாண்டுகளுக்கு மேல், தொடர் பயிற்சி எடுத்ததும், வெற்றிக்கு காரணம்' என கீர்த்தனா கூறினார்.

தமிழக அரசு பள்ளிகளில், மூன்று மாதம் சிறப்பு பயிற்சி பெற்ற, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தமிழக பாட திட்டத்தில், சென்னை கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளி மாணவர் சரண், எந்த பயிற்சியும் இல்லாமல், நீட் தேர்வில், 416 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மாநில அளவிலான தேர்ச்சியை பொறுத்தவரை, 74 சதவீதத்துடன், ராஜஸ்தான் முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, 74; ஹரியானா, 73 சதவீதம் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ளன. ஆந்திரா மாநிலம், 73 சதவீதம் பெற்று, நான்காம் இடம் பெற்றுள்ளது.

மாநிலங்கள் அளவில், அதிக எண்ணிக்கையில், 1.77 லட்சம் மாணவர்கள், நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா மாநிலம், 40 சதவீதத்துடன், 34ம் இடம் பெற்றுள்ளது. தமிழகம், 33ம் இடம் பெற்றுள்ளது. 

கர்நாடகா, 64 சதவீதத்துடன், ஒன்பதாம் இடமும்; தெலுங்கானா, 69 சதவீதம் பெற்று, ஆறாம் இடமும், கேரளா, 67 சதவீதத்துடன் ஏழாம் இடமும்; புதுச்சேரி, 40 சதவீதம் பெற்று, 32ம் இடமும் பெற்றுள்ளன.

மற்ற மாநிலங்களில், பல ஆண்டுகளாக, மருத்துவ நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எழுதி வந்தனர். தமிழக மாணவர்கள், இந்த ஆண்டு தான் முழுமையாக நுழைவு தேர்வு எழுத பதிவு செய்தனர். 

முதல் ஆண்டில், பெரிய அளவில் பயிற்சி எடுக்காமல், 40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, இந்த ஆண்டு முதன்முதலாக, நீட் தேர்வில் பங்கேற்ற, புதுச்சேரி மற்றும் மஹாராஷ்டிரா மாணவர்களும், 40 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் நுழைவு தேர்வுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி, நுாற்றுக்கணக்கான மாணவர்கள், மருத்துவ நுழைவு தேர்வுக்கான, தேர்ச்சி மதிப்பெண் பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், 2017ல், 32 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதை விட, 13 ஆயிரம் அதிகமாக, 45 ஆயிரம் பேர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SCHOOL EDUCATION DEPATMENT-TAMILNADU-CENTRALLY SPONSORED SCHEME -REGISTRATION FORM 2018-19 FOR NMMS EXAM PASSED STUDENTS

அதிரடியாக அசத்தும் அமைச்சர் செங்கோட்டையன்! இன்று அதிரடியாக புதிய திட்டம் தொடக்கம்!

அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு 
இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். a

FLASH NEWS:DOWNLOAD-GPF ACCOUNT STATEMENTS FOR THE YEAR 2017-2018 RELEASED