யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/9/16

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!



* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாகச் செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். 
மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதைத் தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. 
அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராகக் குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

சருமத்திற்கு கேடு விளைவிக்கும் கிரீம்களை தவிர்த்து இயற்கை அழகை பெற்றிட முயற்சி செய்யுங்கள்.


"அழகுடன் வாழ இயற்கையான பராமரிப்பு முறைகள் அவசியம்"

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள்



1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 

7வது இடம்

2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 

23 வது இடம்

3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 

16வது இடம்

4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 

15வது இடம்

5 ) இந்தியாவின்
கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

14வது இடம்

6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது? 

மதுரை

7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

2004

8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

72993

9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

சென்னை

10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

1076 கி.மீ

11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது 

1986

12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்? 

சென்னை (23,23,454)

14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? 

சென்னை (46,81,087)

15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

68.45 ஆண்டுகள்

16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை? 

13 மாவட்டங்கள்

17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

234

18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

1

19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

12 துறைமுகங்கள்
தமிழகத்தில் உள்ளன

20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது? 

சென்னை

21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?

71.54 ஆண்டுகள்

22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

15979

23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

561

24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

146

25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

18

26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

39

27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? 

தர்மபுரி (64.71 சதவீதம்)

28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? 

பெரம்பலூர் 5,64,511

29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்? 

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? 

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

31) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?

32

32) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது? 

அரியலூர்

33) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது? 

திருப்பூர்

34 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம் 

80.33 சதவீதம்

35 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு? 

17.58 சதவீதம்

36 ) தமிழகததின் மாநில விலங்கு எது? 

வரையாடு

37 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

38 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது? 

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

39 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?
1. சென்னை 
2. கோவை 
3. மதுரை 
4. திருச்சி 
5 தூத்துக்குடி 
6 சேலம்

40 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?

999பெண்கள்(1000 ஆண்கள்)

41 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை? 

1. நீலகிரி 
2. சேலம் 
3. வேலூர் 
4. கன்னியாக்குமாரி

42 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை? 

1. திருவாரூர் 
2. இராமநாதபுரம் 
3. தூத்துக்குடி 
4. கடலூர்

43) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது? 

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

44) தமிழ்நாட்டின் இணைய தளம் எது? 

www.tn.gov.in

45) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

சென்னை

46 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு? 

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

47 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?

திருவில்லிபுத்தூர் கோபுரம்

48 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

49 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?

நீராடும் கடலுடுத்த

50 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது? 

பரத நாட்டியம்

51 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது? 

மரகதப்புறா

52 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது? 

பனைமரம்

53 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது? 

செங்காந்தர் மலா்

54 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?

கபடி

55 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?

1,30,058 ச.கி.மீ

56 ) தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?

7,21,38,958 

ஆண் 36158871  பெண் 35980087

30 ஹெல்த் டிப்ஸ்:



1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.          
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

CRC NEWS:​Primary CRC 15.10.16​​ | Upper primary 22.10.16​|Topic : ​கையெழுத்து மற்றும் ஓவியத் திறன் மேம்படுத்துதல்​

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

இன்ஜினியரிங்மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம்அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து

உள்ளது. உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்தநுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர்பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வுஉட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.

'இது, கூடுதல் பணிச்சுமையாக உள்ளதால், நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம்ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த, அடுத்த ஆண்டில், தனி ஆணையம் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத் தேர்தல் பணிபுரிந்த அலுவலர்களுக்கு மதிப்பூதியம் ஒப்பளிக்கப்பட்டு அரசாணை வெளியீடு. அரசாணை (நிலை) எண். 784. பொது (தேர்தல்கள் -3) துறை நாள். 21.09.2016.




ELECTION - மாற்று திறனாளி ஆசிரியர்களுக்காக- மாற்று திறனாளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்ல விதி விலக்கு உள்ளது... பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நீதிமன்ற ஆணை படி 2001 முதல் அரசு ஊதியம் பெறும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஒருவருக்கு pf புதிய எண் பெற படிவம்...


CPS MISSING CREDIT FORMAT - 2016 DOWNLOAD

புதிய கல்வி கொள்கை 7 நாள் மட்டுமே அவகாசம்

மத்திய அரசின், புதிய கல்வி கொள்கை குறித்த கருத்துக்களை அனுப்ப, ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கடந்த, 1968ல் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு பதிலாக, மத்திய அரசு, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகத்தை சேர்ந்த,
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில், ஐந்து பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி பரிந்துரைப்படி, புதிய வரைவு கல்வி கொள்கையை, மத்திய அரசு உருவாக்கி, ஜூனில் வெளியிட்டது. அதன் முக்கிய அம்சங்கள் குறித்து கருத்து கூற, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது; பல தரப்பிலும் கூடுதல் அவகாசம் கேட்டதால், செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளதால், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், nep.edu.@gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு, கருத்துக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து
உள்ளது. உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜி., படிப்பில் சேர, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு, மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு, பேராசிரியர் பணிக்கான, யு.ஜி.சி.,யின், 'நெட்' தேர்வு உட்பட, பல தேர்வுகளை சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.

'இது, கூடுதல் பணிச்சுமையாக உள்ளதால், நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் ஏற்படுத்தலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்து, கடிதம் அனுப்பி உள்ளது. எனவே, நுழைவுத்தேர்வுகளை நடத்த, அடுத்த ஆண்டில், தனி ஆணையம் அமைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

மொட்ட கடிதாசி' புகார்கள் : தேர்தல் ஆணையம் உத்தரவு

சிவகங்கை: 'ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது பெயர் இல்லாமல் புகார் வந்தால், அவற்றை விசாரிக்க தேவையில்லை' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மீது புகார்கள் எழுந்தன. இதில் பல புகார்களை முறையாக விசாரிக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து இந்த தேர்தலை எந்தவித புகாரும் ஏற்படாத வகையில் நடத்தி முடிக்க, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஓட்டுப்பதிவின் போது ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நடத்தை குறித்து புகார் எழுந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் முறையாக விசாரிக்க வேண்டும். அந்த புகார் எழுத்து மூலமாக பெயர், கையெழுத்துடன் இருக்க வேண்டும். விசாரணை அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.
பெயர் இல்லாமல் கொடுக்கப்பட்ட புகார்களை விசாரிக்க தேவையில்லை. விருப்பம் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர் விசாரிக்கலாம் என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊராட்சிகளில் போட்டியிடுவோர் எவ்வளவு செலவிடலாம்

சென்னை: ஊராட்சிகளில் போட்டியிடும், வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 1.70 லட்சம் ரூபாய்; ஊராட்சி

ஒன்றிய உறுப்பினர், 85 ஆயிரம் ரூபாய் செலவு செய்யலாம். மேலும், ஊராட்சி தலைவர், 34 ஆயிரம்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 9,000 ரூபாய் வரை செலவு செய்யலாம். இதை, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.

விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க தடை: நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது - தலைமை நீதிபதியை கொண்ட அமர்வு மறுப்பு.
விளை நிலங்களை அங்கீகாரமில் லாத வீட்டு மனைகளாக மாற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மறுப்பு 
தெரிவித்தது.தமிழகம் முழுவதும் உள்ள விளை நிலங்களைஅங்கீகார மில்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தால் அந்த மனைகளையோ, அவற்றில் உள்ள கட்டிடங்களையோ பத்திர மாக பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பு உத்தர விட்டது.
அதன்படி, சென்னையில் பெருநகர வளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ), பிற மாவட்டங்களில் நகர ஊரமைப்பு இயக்குநரகத்தின் (டிடிசிபி) ஒப்புதல் பெற்றால் மட்டுமே மனை இடங்களைப் பதிவு செய்ய முடியும் என பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், அகில இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலச் சங்கத்தின் தலைவர் கே.குல சேகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:எங்களது சங்கத்தில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர் களாக உள்ளனர். கடந்த 9-ம் தேதி, விளைநிலங்களில் அங்கீகாரமில்லாமல் உள்ள வீட்டுமனைகளை பதிவு செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு செய்ய மறுப்பு

இந்த உத்தரவை ஒவ்வொரு சார் பதிவாளரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக்கொண்டு கடந்த 2000-ம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய மனைகளைக்கூட தற்போது பதிய மறுக்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக வீட்டுமனைகளை வாங்கி அதற்கு பட்டா, சிட்டா அடங்கல் பெற்று வீட்டு வரிகூட செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த உத்தரவால் மனைகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடக்கும் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிக்கொள்ள எந்தத் தடையும் இல்லை என விதிகள் உள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் சொந்தமாக வீட்டு மனை வாங்கி அதில் குடியிருக்க வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. பலர் தங்களின் எதிர்காலத்தைக் கருத் தில் கொண்டு வீட்டு மனைகளில் முதலீடு செய்கின்றனர். வெள்ள அபாயம் மற்றும் விளை நிலங்களைக் காக்க வேண்டு மென்பதற்காக மட்டுமே தற் போது உயர் நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப்பிறப் பித்துள்ளது.எனவே இந்த வழக்கில் எங்களையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். கடந்த 9-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கோரி யிருந்தார்.

முன்னதாக இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசா ரிக்கக் கோரி மனுதாரரின் வழக்கறிஞர் ஜீனசேனன், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் முறையிட்டார். அதற்கு நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக எந்த உத்தரவும் தற்போது பிறப் பிக்க முடியாது. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் மாற்றி யமைக்க முடியாது. இந்தப் பிரச்சினை குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை பிரதான வழக்கோடு சேர்த்து விசாரிக்கப்படும்’’ எனக் கூறி அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!

இ - சேவை மையங்களில் இனி வரி செலுத்தலாம்!
சென்னை உள்ளிட்ட, 12 மாநகராட்சிகள் மற்றும், 51 நகராட்சிகளுக்கான வரிகளை, அரசின், இ - சேவை மையங்களில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இ - சேவை மையங்களில், 'ஆன்லைன்' மூலமாக, அரசின் சேவைகள் வழங்கப்படுகின்றன.
அவற்றுடன், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வசிப்பவர்களுக்காக, புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது.

அதன்படி, அவர்கள், தங்களது சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி போன்றவற்றை, இ - சேவை மையங்கள் மூலமாக செலுத்தலாம். இந்த சேவையை பெற, குறைந்த அளவிலான சேவை கட்டணம் உண்டு. தற்போது, 12 மாநகராட்சி மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட, 51 நகராட்சிகளில், ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன; அதனால், அங்கு வசிப்போர் மட்டும், இவ்வசதியை பெறலாம். மற்ற நகராட்சிகளில், ஆவணப்படுத்தும் பணி நிறைவடைந்ததும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்

..எஸ்அதிகாரிகள்பேரை பணியிட மாற்றம் செய்துதமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சென்னைமாநகராட்சி துணை ஆணையராக அன்புச்செல்வம்வருவாய் மற்றும் நிதி )  நியமனம்செய்யப்பட்டுள்ளார்.

சென்னைமாநகராட்சி சுகாதார துணை ஆணையராகஎம்.விஜயலட்சுமி
நியமனம் செய்யப் பட்டுள்ளார்.  


தூத்துக்குடிமாநகராட்சி ஆணையராக கே.ராஜாமணிநியமிக்கப்பட்டுள்ளார்

CPS- புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மற்றும் 6-வது ஊதிய குழு பாதிப்பில் உள்ள ஆசிரியர்களே -குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களே தயவு செய்து இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்

1.       ரூ. 5200 + 2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
2.       1.86 பெருக்கத்துடன் ரூ.2800/- பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கும்,
3.       CPS வேண்டாம்; OPS வாழ்வூதியம் மட்டுமே எங்களுக்கு உயிர்நாடியாய்வேண்டுமென்று உறுதியாய் நிற்கும் அனைத்துவகை சுமார் 55 ஆயிரம்
ஆசிரியர்களுக்கும்,

                                                - “இயக்கங்கள் கடந்து, கூட்டு நடவடிக்கைக்குழுக்கள் கடந்து, முகம் & முகவரிகடந்து; ஏன் அனைத்து மாச்சரியங்களும்கடந்து” – மிகவும் ஆக்கப்பூர்வமாக பாதிக்கப்பட்டநீங்கள் மட்டும் ஓர் அணியில்இணைந்து நின்று வெற்றிவாகை சூடிட
மனதார வாழ்த்தி வணங்குகிறேன்.
  - உங்கள் வாய்மை வழிகாட்டி,
 ம. சேவியர் ஜோசப் கென்னடி,
 துணைப் பொதுச் செயலாளர்,
  தமிழக ஆசிரியர் மன்றம்.
                                                                                 

                                    உங்களுடைய வலியும், வேதனையும், சகல சௌகரிய ஓய்வூதியத்தலைவர்களுக்கோ (அல்லது) உங்கள் பிரதானமாய்முன்னிறுத்தி உங்களை வைத்துப் போராடிஉங்களுக்கு ரூ.750/- ம், தங்களுக்கு ரூ.1100/- முதல் ரூ.1300/- (அதாவது GP ரூ.5400/- மற்றும் ரூ.5700/-) பெற்றுக்கொண்ட தலைவர்களுக்கோ ஒருவேலை புரிந்தாலும்கூட,
·         அவர்களின் ஈகோ மட்டும், ஒருநாளும்அவர்களை விட்டுப் போகப்போவதும் இல்லை.

·         அனைவரும் ஒரு குடையின்கீழ் நின்றுபிரச்சனை தீரும்வரை, தொடர்ந்து போராடி வெல்லப்போவதும் இல்லை. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு அரசா காரணம்?

·         உங்கள் வலியும், வேதனையும்நீங்கப் போவதும் இல்லை.
·         இதனால் அவர்களுக்கு ஒருகஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. மாறாக இலாபமே !

·         இந்த நிதர்சனத்தை நீங்கள்அறிவார்த்தமாய் உணரச் செய்யவே இம்மடல்என்று எண்ண வேண்டாம். அதையும்தாண்டி சரியான வழிகாட்டும் செயலேயாகும்!

“பாதிக்கப்பட்டமூன்று பிரிவு ஆசிரியர்களையும் பார்த்துநான் மிகவும் வெளிப்படையாக சிலவற்றைக்கேட்டாக வேண்டும்.”

1.     மாநில அரசின் அனைத்துவகை ஊதிய விகித நிலையினருக்கும்(ஏன் இன்னும் சிலருக்கு உயர்த்திக்கூடவழங்கிய நிலையில்) மத்திய அரசு ஊழியர்களுக்குஇணையான ஊதிய விகிதம் வழங்கிவிட்டுஉங்களுக்கு மட்டும் வழங்காதது;
                                      i.        சமூகநீதிக்கு எதிரானது
                                     ii.        நியாயமற்றசெயல்
- என்றுஉண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

2.  அப்படியானால், செய் அல்லது செத்துமடிஎன்னும் தத்துவத்தின் அடிப்படையில் நான் எனக்கெதிரான இந்தஅநீதியைக் களையாமல் ஓயமாட்டேன் என்று மிகவும் வாய்மையாய்உறுதியேற்கிறீர்களா?

3. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தங்களுக்கு OPS வைத்துக் கொண்டு எங்களுக்கு CPS-ஐகொடுக்காமல் இரத்து செய்வது,
                                      i.        தவறு
                                     ii.        அநீதி
                                    iii.        எந்தவிதியின் கீழும் நியாயப்படுத்த முடியாது.
                                    iv.        OPS என்பதுஎனது வாழ்வுரிமை,
                                     v.        அதுகொடுபடா ஊதியம்,அதை அடையாமல்நான் ஓயமாட்டேன்
-       என்று உறுதியாய் சபதம்ஏற்கிறீர்களா?

4.காலத்தே, அறவழி போராடி, குறைந்தபட்சம் முக்கியஅரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் அறிக்கையில்,

                          i.   மத்திய அரசுஊழியர்களுக்கு இணையாக, மாநில அரசுஊழியர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டைச்சரிசெய்வோம்,

                                                   ii.        CPS – ஐ இரத்து செய்து, OPS-ஐ அமல்படுத்துவோம்- என்ற வாக்குறுதி இடம்பெறவில்லையெனில்நாம் ஆட்சி அமைப்பது கடினம்.- என்ற நிலையை ஏற்படுத்தாமல் விடமாட்டேன்என்று உறுதி கொண்ட நெஞ்சினராய்இருக்கிறீர்களா? அப்படியானால், இந்த வாய்மை வழிகாட்டிசொல்வதை மனதில் போட்டு வீருநடைபோடத் தவறாதீர்கள். ஆம், முதலில் “Rescue Equality Justice” – என்ற சமூக வலைதளக்குழுவை உருவாக்குங்கள்.
5.     அதில் பாதிக்கப்பட்ட மேற்சொன்னமூன்று பிரிவினர் சுமார் 55000 பேரை மட்டும் ஒன்றிணையுங்கள். நான் உட்பட, பாதிக்கப்படாத எவரையும்கட்டாயம் உள்ளே சேர்க்காது விலக்கிவையுங்கள்.வேண்டுமானால், வெளியில் இருந்து வழிகாட்ட மட்டும்சொல்லுங்கள்.
6. காலாண்டு  விடுமுறையைப்போராட்ட நாளாகத் தேர்ந்தெடுங்கள். முற்றுகை, மறியல், வேலைநிறுத்தம் என்று யாருக்கும் இடையூறுசெய்யாது அரசு உள்ளிட்ட அனைவரின்கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிடத்தில் 55000 பேரையும்தொடர்ச்சியாகப் பல நாட்கள் கூட்டுவதுமட்டுமே இலக்காக இருக்கட்டும்.

7.     இடம், சென்னைக் கடற்கரையைமக்கள் கடற்கரையாக மாற்றுவதாகவோ அல்லது  திண்டுக்கல்மலைக் கோட்டையை மக்கள் கோட்டையாக மாற்றுவதாகவோஅல்லது சிறை நிரப்புவதற்குப் பதிலாகஸ்டேடியத்தை நிரப்புவதாகவோ இருக்கட்டும்.

8.     அங்கே, வாயில் கருப்புத்துணிகட்டியபடி பதாகைகளை ஏந்தி ஒரு மவுனப்புரட்சியை மட்டும் நிகழ்த்துவதாக அமையட்டும்.

9.     அரசு உட்பட, யார்யாரெல்லாம் இந்தக் வேள்வியின் நியாயத்தைஉணர்கிறார்களோ அவர்கள் யாவரும் வாழ்த்துரைவாருங்கள் என்று பொது அழைப்புமட்டும் விடுங்கள்.
10.  
                      i.        இப்போராட்டத்தால், மாணவர்கிளின்கல்வி பாதிக்கப் போவதில்லை.
                     ii.        அரசு எந்திரம்முடங்கப் போவது இல்லை.
                    iii.        பொதுமக்களுக்குஇடையூறு இல்லை.

ஆகவே, இப்போராட்டம் அனைவராலும் நிச்சயம் பாராட்டப்படும் ! நிச்சயம் வெற்றிபெறும் !!

Ø  செய்வீர்களா ? அல்லது
Ø  அறுப்பவன் பின்னால் செல்லும் ஆடுபோல் இருப்பீர்களா ? அல்லது
Ø  “Satisfied with what you have” என்று வசனம் பேசப் போகிறீர்களா?
சிந்திப்பீர்! செயல்படுவீர் !!
                        - இவ்வாறு எழுதுவது விரக்தியின் விளிம்பிநின்று என எண்ண வேண்டாம். நம்பிக்கை ஒளிக்கீற்றிநின்றேயாம் !!
நன்றி!
                                                                                                            இவண்,
                                      ம. சேவியர் ஜோசப் கென்னடி.
                                      துணைப்பொதுச் செயலாளர்,

                                  தமிழக ஆசிரியர் மன்றம்.திண்டுக்கல்

JACTTA NEWS- CPS வல்லுந‌ர் குழுவிடம் ஜாக்டா அளித்த மனு

ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*

📮நாடு முழுவதும்நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல்வழக்குகள் *2.7 கோடி*
📮10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளவழக்குகள் *20 லட்சம்*
📮5 - 10 ஆண்டுகள் நிலுவை - *35 லட்சம்*

📮2 - 5 ஆண்டுகள் நிலுவை - *59 லட்சம்*
📮2 ஆண்டுகளுக்கும் குறைவாகநிலுவையில் உள்ளவை *82 லட்சம்*
*📮மூத்த குடிமக்கள்சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,84,273*
_ம.பி மற்றும் டெல்லிமாநில விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்குமாற்றப்பட்டு வந்ததால் அந்த விவரங்கள் இதில்இடம்பெறவில்லை. இது சென்ற ஆண்டுநிலை மட்டுமே_ (தி இந்து)
*📮ஏப்ரல் (2016) = 2.18 கோடி.* (இந்தியன்எக்ஸ்பிரஸ்)
மேற்கண்டதரவுகளின் படி மட்டுமல்ல, நீங்கள்நாள்தோறும் கேள்விப்படும் அரசு சார் வழக்குகளிலும், தீர்ப்பு அரசின் கொள்கை முடிவில்தலையிட முடியாது என்றோ; நீதிமன்றத் தீர்ப்பைஅரசே புறம் தள்ளுவதாகவோ தான்இருக்கும் (சாலைப்பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் வழக்கு போன்று). இவைஎல்லாவற்றையும் தாண்டி அத்தி பூத்தாற்போல்சில தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தப்டுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இன்றைய சூழலில் *நாம் துய்த்து வரும்பலன்கள், 100% நமது முன்னவர்களின் வலுவானபோராட்டங்களின் பயனே!* நமக்கான முறையானஉரிமை தொடர்பான முன்மொழிவுகள், மீட்புகள் உள்ளிட்ட அனைத்துமே போராட்ட வீச்சின் அடிப்படையில்ஆட்சியாளர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
எனவே, *கோடிக்கைகள் ஒன்றிணைந்தால் தான் கோரிக்கைகள் வென்றிடமுடியும்.*
ஆனால், ஓய்வூதியப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கெடுப்பு மிகக் குறைவாகவே இருந்துவந்துள்ளது. இந்நிலை மாற,
*உரிமைபறிபோன வழியையும்*
*உடைமைபலியான வலியையும்*
*உற்றவர்உணர்ந்தாக வேண்டும்.*
எப்படியெனில்,
_வாசித்தல், அறிய வைக்கும்!_
_அறிதல், தெளிய வைக்கும்!_
_தெளிதல், உணர வைக்கும்!_
_ உணரல், வினவ வைக்கும்!_
_வினவல், கூட வைக்கும்!_
_கூடல், கோர வைக்கும்!_
_கூடிக்கோரல், அதிர வைக்கும்!_
_அதிர்வுறலே, கொடுக்க வைக்கும்!_
_எனவே, *பறித்திட்ட ஓய்வூதியத்தை*க்_
_கொடுக்கவைக்கும் நோக்கில்,_
_*கானலானஓய்வூதியம்* நூலினை_
_வாசிப்போம்! *வாசிக்க வைப்போம்!!*_

*66 பக்கங்களுக்கானஅச்சுக்கூலி ரூ.25/-*